அங்கம் வெட்டின படலம்
அங்கம் வெட்டின படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 27ஆவது படலமாகும் (செய்யுள் பத்திகள்: 1575 - 1602)[1]. இப்படலம் மாபாதகம் தீர்த்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
சுருக்கம்[தொகு]
மதுரையில் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் முதியவர் ஒருவர் வாற்பயிற்சி பள்ளி வைத்திருந்தார். அவருக்கு மாணிக்கமாலை என்றொரு பெண் மனைவியாக இருந்தாள். வயது வித்தியாசத்தின் காரணமாக மாணிக்கமாலை இளமையாக இருந்தாள். முதியவரிடம் வாள் பயிற்சி பெற்ற சீடனான சித்தன் என்பவன் மாணிக்கமாலையின் மீது மோகம் கொண்டான். குருவின் மனைவியை அடைவதற்காக வித்தைகளை கற்று தேர்ந்து குருவுக்கு எதிராக மற்றொரு வாள் பயிற்சி பள்ளியைத் தொடங்கினான்.
ஒரு முறை குரு இல்லாத வேளையில் குருவின் மனைவியை தொல்லை செய்தான். அவளோ கணவனிடம் கூறினாள், சீடனை கொன்று பழியுண்டாகும், இல்லையென்றால் தன் கணவன் இறந்த வாழ்வு போகும் என வருந்தினாள். மதுரை சொக்கநாத பெருமானிடம் தன்னுடைய நிலையை எடுத்து உரைத்தால் இறைவன் குருவாக மாறி சித்தனிடம் சண்டைக்கு வந்தார். அவனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றையும் வெட்டி இறுதியாக அவனைக் கொன்று மறைந்தார். இதனால் குருவின் புகழுக்கும், குருவின் மனைவிக்கும் எவ்வித துன்பம் இல்லாமல் போனது. [2]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 27. அங்கம் வெட்டின படலம் (1575 - 1602)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். 1998–2014. 11 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: date format (link)
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2252
வெளி இணைப்புகள்[தொகு]
- மூன்றாவது - திருவாலவாய்க் காண்டம் பரணிடப்பட்டது 2016-09-21 at the வந்தவழி இயந்திரம்