நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவிளையாடற் புராணத்தில் 48 வது படலமாக (செய்யுள் பத்திகள்: 2297 -2321) நாரைக்கு முத்தி கொடுத்த படலம் உள்ளது[1]. இப்படலத்தில் பொற்றாமரை வாவியில் மூழ்கித் தன் தீவினை ஒழித்து இறைவனின் திருவடிகளை அடைவதை உறுதிபட யாசித்த நாரைக்கு முத்தி கொடுத்த வரலாறு கூறப்பட்டுள்ளது[2].

திருவிளையாடல்[தொகு]

பாண்டிய நாட்டின் தெற்கில் தாமரைக் குளமொன்றில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. வரட்சி காரணமாக குளம் வற்றியதால் நாரை அக்குளத்தை விட்டு நீங்கி காட்டுப் பகுதி ஒன்றில் இருந்த குளக்கரையில் வாழ்ந்து வந்தது. அக்குளத்தில் முனிவர்கள் வந்து முழுகிச் செல்வர். முனிவர்கள் முழுகும் போது மீன்கள் அவர்களது சடையிலும் தோளிலும் புரள்வதை இந் நாரை அவதானித்தது. முனிவர்களைத் தொட்டதால் புனிதமடைந்த மீன்களைப் புசிப்பதில்லை என உண்பதையே நிறுத்தியிருந்தது.

அக்குளத்தில் மூழ்கிய முனிவர்கள் கரையேறிய பின் வாசித்த மதுரைப் புராணமும், சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடல் புராணமும் அந் நாரையின் காதுகளில் கேட்டன. நாரை அறியாமை நீங்கி மெய்யறிவு பெற்றது. இறைவனின் மாட்சிமையை உணர்ந்தது. அது மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி 15 நாட்கள் இடையறாது இறைவனைத் தியானித்தது.

இறைவன் அந்நாரையின் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். " ஐயனே நான் இப்பிறவி நீங்கி சிவலோகப் பயன் அடைய வேண்டும். பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வாழாத நிலை வேண்டும்" எனக் கேட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் (2297 -2321)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். 1998–2014. 11 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: date format (link)
  2. "நாரைக்கு முத்தி கொடுத்த படலம்!". தினமலர். 11 மார்ச் 2011. 11 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.