ஏழுகடல் அழைத்த படலம்
Appearance
ஏழுகடல் அழைத்த படலம் உருவாக்கம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற ஒன்பதாவது படலமாகும்.
படலச் சுருக்கம்
[தொகு]இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்குப் பிறகு, மீனாட்சியின் அன்னை காஞ்சனை மாலை கௌதம மகரிஷியின் மூலம் ஆறும், கடலும் இருக்குமிடத்தில் நீராடல் புண்ணியம் என்று அறிதலும், அன்னையின் ஆசையை நிறைவேற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரிடம் வேண்டுதலும், மனைவியின் வேண்டுகோளுக்கு இசைந்து சிவபெருமான் மதுரைக்கு ஏழுகடல்களை வருவித்தலும் இடம்பெற்றுள்ளது. [1]