பலகை இட்ட படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவிளையாடற் புராணத்தில் 43 வது படலமாக (செய்யுள் பத்திகள்: 2131 -2148) பலகை இட்ட படலம் உள்ளது[1]. இப்படலத்தில் சிவன் பாணபத்திரருக்கு அவர் இசையில் மயங்கி நின்று பாட பலகை இட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது.

திருவிளையாடல்[தொகு]

பாணபத்திரர் மூன்று வேளையும் தவறாது சோமசுந்தரக் கடவுளுக்கு இசை பாடி வந்தார். இவரது இசைபாடும் பக்தி நள்ளிரவிலும் நடைபெற்றது. ஒரு நாள் பெரு மழை பெய்தது. அவ்வெளையிலும் தன் பக்திக் கடமையை தவறாது ஆற்றுவதற்காக மழையில் நனைந்தவாறு ஆலயத்தை வந்தடைந்தார். உடல் நடுங்கியது. நரம்புகள் நனைந்து இசை மழுங்கியது. கால்கள் சேற்றில் புதைந்தன. பாணபத்திரர் எதையும் பொருட்படுத்தாது இசை பாடுவதிலேயே குறியாயிருந்தார். அவரின் அரிய பணியில் வியந்த சோமசுந்தரக் கடவுள் அவர் முன் பலகை ஒன்றை இட்டு "இதன் மீது இன்று பாடுக" என அசரீரி மொழிந்தார். பாணபத்திரர் அப்பலகை மீது நின்று தொடர்ந்து இறை புகழ் பாடினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 43. பலகை இட்ட படலம் (2131 -2148)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். 1998–2014. 11 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: date format (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலகை_இட்ட_படலம்&oldid=2116790" இருந்து மீள்விக்கப்பட்டது