வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளையானை சாபம் தீர்த்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற இரண்டாவது படலமாகும். இப்படலம் இந்திரன் பழி தீர்த்த படலத்திலின் தொடர்ச்சியாக வருகிறது.

படலச் சுருக்கம்[தொகு]

இந்திரன் சிவலிங்கத்தினைப் பூசை செய்து விஸ்வரூபனை கொன்ற பழியிலிருந்து தப்பித்தபின், இந்திரலோகத்திற்கு தேவர்களுடன் சென்றார். அவ்வாறு இந்திரன் செல்லும் வழியில் இருந்த துர்வாசக முனிவர், சிவபெருமானை பூஜை செய்து கொண்டுவந்திருந்த தாமரை மலரை இந்திரனிடம் தந்தார். அதனை வாங்கிய இந்திரன் சிவபெருமானின் பூசை மலரினை ஐராவதம் மதகத்தில் வைத்தார். அதனை எனனவென்று அறியாத ஐராவதம் காலில் இட்டு அழித்தது.

இதனால் கோபம் கொண்ட துர்வாசக முனிவர் ஐராவதத்தினை பூமியில் பிறக்கும் படி சாபமிட்டார். அதனால் பூமியில் அவதரித்த ஐராவதம், மற்ற யானைகளின் நிறத்தினை அடைந்து இந்திரன் உருவாக்கிய மதுரை கோயிலில் சிவலிங்கத்தினை வழிபட்டு வந்தது.