சின்னச் சீறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்ன சீறா ஒரு இசுலாமியத் தமிழ்க் காப்பியம். இதனை இயற்றியவர் பனு அகுமது மரைக்காயர் ஆவார். இதில் நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுவதும் பாடப்பட்டுள்ளது. உமறுப் புலவர் இயற்றிய சீறாப்புராணத்தின் தொடர்ச்சியாகக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட நூல் சின்ன சீறா.

உள்ளடக்கம்[தொகு]

சின்ன சீறா, சீறாப் புராணத்தின் தொடர்ச்சியாக 30 படலங்களில் 1823 பாடல்ளைக் கொண்டுள்ளது. இதிலுள்ள உள்ள பாடல்கள் விருத்தப்பாவில் அமைந்தவை. இந்நூலின் பாடல்கள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் இறுதி ஆறு ஆண்டுகளின் நிகழ்வுகளைத் தருகின்றன. உமறுப் புலவரால் சீறாப் புராணத்தில் எழுதிப்படாத பகுதியைப் பனு அகுமது மரைக்காயர் இந்நூலில் நிறைவு செய்துள்ளார்.

நபிகள் நாயகம் ஒன்பது பிறநாட்டு அரசர்கள் ஒன்பது பேரை இசுலாமியத்தில் சேருமாறு அழைத்தக் கடிதங்கள் குறித்துச் சின்ன சீறாவில் காணப்படுகிறது. கைபர், ஹுனைன், தபூக் போர்கள், மக்காவின் வெற்றியும் அதற்குப் பிறகு அரபுநாடு இசுலாமியத்தில் இணைந்ததையும் இந்நூலில் பனு அகுமது மரைக்காயர் பாடியுள்ளார். நபிகள் நாயகம் இறையடி சேர்ந்ததுடன் சின்ன சீறா நிறைவு பெறுகிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னச்_சீறா&oldid=3309391" இலிருந்து மீள்விக்கப்பட்டது