உள்ளடக்கத்துக்குச் செல்

நாக குமார காவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாககுமார காவியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும். இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது. 170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சமண சமய நூலான நாககுமார காவியம் அச் சமயக் கொள்கைகளை நூலில் விளக்க முற்படுகிறது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம். பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு முத்தி பெறுவதற்குத் துறவின் இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக்கதையின் நோக்கமாகத் தெரிகிறது.

நூல் சிறப்பு

[தொகு]

இந்நூல் ஐந்து (5) சருக்கங்கள் நூற்றி எழுபது (170) விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கின்ற நூலாகும்.முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. இக்கதையின் நாயகன் ஐந்நூற்றி பத்தொன்பது (519) பெண்களை மணம் செய்கிறார். இந்நூல் 16-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது. [1]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=17421 நாக குமார காவியம் தினமலர் கோயில்கள் தளம்

வெளி இணைப்புகள்

[தொகு]

நாககுமார காவியம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக_குமார_காவியம்&oldid=3878986" இலிருந்து மீள்விக்கப்பட்டது