ஞானாதிக்கராயர் காப்பியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞானாதிக்கராயர் காப்பியம் என்னும் கிறித்தவக் காப்பிய நூல் புதுவை வித்துவான் சாமிநாதப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு 1986ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

நூல் பிரிவுகள்[தொகு]

இக்காப்பிய நூல் 30 படலங்களாகப் பிரிக்கப்பட்டு 2222 பாடல்களைப் பெற்றுள்ளது. இது ஞானாதிக்கராயர் என்பவரின் வாழ்க்கையைப் பாடுவதாக அமைந்துள்ளது.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).