அறநெறி பாடிய வீரகாவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறநெறி பாடிய வீரகாவியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை திலகவதி பால் என்பவர் ஆக்கியுள்ளார். இந்நூல் 1969ஆம் ஆண்டு கிறித்தவ இலக்கியச் சங்கம் என்னும் அமைப்பால் சென்னையில் வெளியிடப்பட்டது.

நூல் பொருள்[தொகு]

இக்காப்பியத்தின் தலைவனாக இருப்பவர் அமெரிக்காவில் கருப்பர்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்த் துறந்த கிறித்தவப் பெருமானாகிய மார்ட்டின் லூதர் கிங் (1929-1968) என்பவர் ஆவார். இந்த ஆப்பிரிக்க-அமெரிக்க தலைவரின் வாழ்க்கை, கொள்கைகள் ஆகியவற்றை "அறநெறி பாடிய வீரகாவியம்" எடுத்துரைக்கிறது.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).