அறநெறி பாடிய வீரகாவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறநெறி பாடிய வீரகாவியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை திலகவதி பால் என்பவர் ஆக்கியுள்ளார். இந்நூல் 1969ஆம் ஆண்டு கிறித்தவ இலக்கியச் சங்கம் என்னும் அமைப்பால் சென்னையில் வெளியிடப்பட்டது.

நூல் பொருள்[தொகு]

இக்காப்பியத்தின் தலைவனாக இருப்பவர் அமெரிக்காவில் கருப்பர்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிர்த் துறந்த கிறித்தவப் பெருமானாகிய மார்ட்டின் லூதர் கிங் (1929-1968) என்பவர் ஆவார். இந்த ஆப்பிரிக்க-அமெரிக்க தலைவரின் வாழ்க்கை, கொள்கைகள் ஆகியவற்றை "அறநெறி பாடிய வீரகாவியம்" எடுத்துரைக்கிறது.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறநெறி_பாடிய_வீரகாவியம்&oldid=3175843" இலிருந்து மீள்விக்கப்பட்டது