உள்ளடக்கத்துக்குச் செல்

பாமினி சுல்தானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாமினி சுல்தான்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாமினி சுல்தானகம்
1347–1527
பாமினி சுல்தானம், 1470
பாமினி சுல்தானம், 1470
தலைநகரம்அஸன்பாத் (1347-1425)
முகம்மதாபாத் (1425-1527)
சமயம்
சன்னி இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
• 1347-1358
அலாவுதின் பாமன் சா
• 1525-1527
காலீம் அல்லாஹ் ஷா
வரலாற்று சகாப்தம்பின் மத்திய காலம்
• தொடக்கம்
3 ஆகஸ்ட் 1347
• முடிவு
1527
முந்தையது
பின்னையது
[[விஜயநகரப் பேரரசு]]
[[தில்லி சுல்தானகம்]]
[[தக்காணத்து சுல்தானகங்கள்]]

பாமினி சுல்தானகம் (Bahmani Sultanate) என்பது இந்திய தக்காணப் பகுதியில் அமைந்த ஒரு இசுலாமியச் சுல்தானகம் ஆகும். மேலும் இதுவே தென்னிந்தியாவில் அமையப்பெற்ற முதல் சுதந்திர மற்றும் ஒரே சியா இசுலாம் பேரரசு ஆகும்.

வரலாறு

[தொகு]

டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலத்தில் தக்காண பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அலாவுதீன் ஹாசன் பாமினி ஷா என்பவர். தாஜிய-பாரசீக வம்சத்தில் வந்த இவர் 1347ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் டெல்லி சுல்தானை எதிர்த்து, தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை தனி சுதந்திர அரசாக அறிவித்தார். இதன் பிறகு 1425ம் ஆண்டு வரை அஸன்பாத் (இன்றைய குல்பர்கா) நகரை தலைநகரமாக கொண்டு பாமினி சுல்தான்கள் ஆண்டு வந்தார்கள். 1425ம் ஆண்டு தலைநகர் முகம்மதாபாத் (இன்றைய பைதர்) நகருக்கு மாற்றப்பட்டது.

இதன் பிறகு இந்த பேரரசு, விஜயநகர பேரரசால் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முகம்மது கவுன் (1466 - 1481) ஆட்சி காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இவரது காலமே பாமினி பேரரசின் பொற்காலமாக விளங்கியது. இதற்கு பிறகு தனது வீழ்ச்சியை அடையத்தொடங்கிய இந்த பேரரசு 1518ம் ஆண்டு ஐந்து பகுதிகளாக பிரிந்தது. அவைகள் அகமதுநகர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், பிஜப்பூர் சுல்தானகம், பீதர் சுல்தானகம் மற்றும் பேரர் சுல்தானகம் ஆகும். இந்த ஐந்து சுல்தானகங்கள் பின்னாளில் தக்காணத்து சுல்தானகங்கள் என அழைக்கப்பட்டன.

பாமினி சுல்தான்கள்

[தொகு]

பாமினி சுல்தான்கள், தென்னிந்தியப் பகுதிகளை 191 ஆண்டுகள் ஆண்டனர். பொதுவாக இவர்களின் ஆட்சியில் சமயச்சார்பின்மை காணப்பட்டது.அவர்களின் பெயர்களுக்கு பின்வரும் சா(shah=ஷா) என்பது மரபுப் பெயராகும்.

தலைநகரம்1

[தொகு]
15.குல்பர்கா

1. அலாவுதின் பாமன் சா - கி.பி. 1347 - 1358

2. முதலாம் முகம்மது ஷா - கி.பி. 1358 - 1375

3. அலாவுதின் முசகிது சா - கி.பி. 1375 - 1378

4. தாவுத் சா I - கி.பி. 1378 - 1378

5. இரண்டாம் முகம்மது சா - கி.பி. 1378 - 1397

6. கியாசுதின் தோமதன் சா - கி.பி. 1397 - 1397

7. சம்சுதின் தாவுத் சா II - கி.பி. 1397 - 1397

8. தசிவுதின் பைரோசு சா - கி.பி. 1397 - 1422

தலைநகரம்2

[தொகு]
right
  • பத்து சுல்தான்கள், பைதர் நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

9. சிகாபுதின் அகம்மது சா I - கி.பி. 1422 - 1436

10. அலாவுதின் அகம்மது சா II - கி.பி. 1436 - 1458

11. அலாவுதின் உமாயுன் சா - கி.பி. 1458 - 1461

12. நிசாமுதின் அகம்மது சா III - கி.பி. 1461 - 1463

13. சம்சுதின் முகம்மது சா III - கி.பி. 1463 - 1482

14. சிகாபுதின் மமூத் - கி.பி. 1482 - 1518

15. அகம்மது சா IV - கி.பி. 1518 - 1520

16. அலாவுதின் சா - கி.பி. 1520 - 1523

17. வைவுல்லா சா - கி.பி. 1523 - 1526

18. கலீம்வுல்லா சா - கி.பி. 1526 - 1538

கலாச்சாரம்

[தொகு]
தலைநகர் குல்பர்காவின் மசூதி

சியா முஸ்லீம்களான பாமினி சுல்தான்கள், இரானிய மன்னர் பரம்பரையான பாமான் வம்சத்தில் வந்தவர்கள் எனக்கருதப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் பாரசீக மொழி பேசும் பாரசீகப் பண்பாட்டையே பின்பற்றினார். இவர்களது காலத்தில்தான் பாரசீக கலாச்சாரம் இந்தியாவில் பரவத் தொடங்கியது.

இதையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமினி_சுல்தானகம்&oldid=3816160" இலிருந்து மீள்விக்கப்பட்டது