பீதர் சுல்தானகம்
பீதர் சுல்தானகம் பரீத் சாகி வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1489–1619 | |||||||||
![]() தக்காணத்தில் பீதர் சுல்தானகம் | |||||||||
தலைநகரம் | பீதர் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம்(அலுவல் மொழி )[1] உருது | ||||||||
சமயம் | சியா இசுலாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
காசிம் பரீத் ஷா | |||||||||
வரலாறு | |||||||||
• Established | 1489 | ||||||||
• 1619 | 1619 | ||||||||
நாணயம் | மொஹர் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() |
பீதர் சுல்தானகம் (Bidar sultanate) தென்னிந்தியா ஐந்து தக்காண சுல்தானகங்களில் ஒன்றாகும். காசிம் பரீத் சாகி வம்சத்தின் பீதர் சுல்தானகம், தற்கால வடக்கு கர்நாடகா, தென்கிழக்கு மகாராட்டிரா மற்றும் மேற்கு தெலுங்கான பகுதிகளை 1489 முதல் 1619 முடிய வரை ஆண்டனர். பீதர் சுல்தானகத்தின் தலைநகரம் பீதர் நகரம் ஆகும். பீதர் சுல்தான்கள் சியா இசுலாமியர்கள் ஆவர்.
வரலாறு[தொகு]
பீதர் சுல்தானகத்தை 1492ல் நிறுவிய காசிம் பரீத், முன்னாள் துருக்கிய அடிமை ஆவார்.[2] இவர் பாமினி சுல்தான் மூன்றாம் முகமது ஷாவிடம் படைவீரராக சேர்ந்து, படிப்படியாக முன்னேறி பிரதம அமைச்சராக பதவி வகித்தார். பாமினி சுல்தானகம் வீழ்ச்சியடையும் தருவாயில், 1489 முதல் பீதர் பகுதிகளை கைப்பற்றி காசிம் பரித் ஷா வம்சத்தினர் தன்னாட்சியுடன் ஆண்டனர்.
தலிகோட்டா சண்டை[தொகு]
26 சனவரி 1565 அன்று விசயநகரப் பேரரசிற்கும், பீதர் சுல்தான் அலி பரீத் உள்ளிட்ட தக்காண சுல்தான்களுக்கும் இடையே தலைகோட்டை எனுமிடத்தில் நடைபெற்ற போரில் விஜயநகரப் பேரரசர் ராமராயரின் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
வீழ்ச்சி[தொகு]
1619ல் நடைபெற்ற போரில் பிஜப்பூர் சுல்தானகம், பீதர் சுல்தானகத்தை வென்று, பிஜப்பூருடன் இணைத்தது.[3] 12 செப்டம்பர் 1686ல் முகலாயப் பேரரசின் தக்காண ஆளுநர் அவுரங்கசீப் தக்காண சுல்தான்கள் மீது படையெடுத்து போரிட்டு, பீதர் உள்ளிட்ட அனைத்து தக்காண சுல்தானகங்களையும் முகலாயப் பேரரசில் இணைத்தார்.
பீதர் சுல்தான்கள்[தொகு]
- முதலாம் காசிம் பரீத் 1489 – 1504
- முதலாம் அமீர் பரீத் 1504 – 1542
- முதலாம் அலி பரீத் ஷா 1542 – 1580
- இப்ராகிம் பரீத் ஷா 1580 – 1587
- இரண்டாம் காசிம் பரீத் ஷா 1587 – 1591
- இரண்டாம் அலி பரீத் ஷா 1591
- இரண்டாம் பரீத் ஷா 1591 – 1601
- மீர்சா அலி பரீத் ஷா 1601 – 1609
- மூன்றாம் அமீர் பரீத் ஷா 1609 – 1619
படக்காட்சிகள்[தொகு]
இதனையும் காணக[தொகு]
- பாமினி சுல்தானகம்
- தக்காண சுல்தானகங்கள்
- கோல்கொண்டா சுல்தானகம்
- அகமதுநகர் சுல்தானகம்
- பேரர் சுல்தானகம்
- பிஜப்பூர் சுல்தானகம்
- தலிகோட்டா சண்டை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Spooner & Hanaway 2012, ப. 317.
- ↑ Bosworth 1996, ப. 324.
- ↑ Majumdar 2007, ப. 466-468.
உசாத்துணை[தொகு]
- Bosworth, C.E. (1996). The New Islamic Dynasties. Columbia University Press.
- Majumdar, R.C. (2007). The Mughul Empire. Bharatiya Vidya Bhavan.
- Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books.
- Spooner, Brian; Hanaway, William L. (2012). Literacy in the Persianate World: Writing and the Social Order. University of Pennsylvania Press.