முதலாம் முகம்மது ஷா
முதலாம் முகம்மது ஷா (Mohammed Shah I, 1358-1375) பாமினி இராச்சியத்தை நிறுவிய அலாவுதீன் பாமன் சுல்தானின் மூத்த மகன். இவர் பாமினிப் பேரரசின், இரண்டாம் அரசர் ஆவார். ஷா என்பது இவரது குடும்ப மரபுப்பெயர் ஆகும். இவர் தனது காலத்தில் நாணயச் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதனால் ஏராளமான தங்க நாணயங்களை அச்சிட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் விட்டார். 1360-இல் விசயநகர முதலாம் புக்கருக்கும், பாமினி இராச்சியத்திற்கும் போர் மூண்டது. இப்போரில் முதலாம் முகம்மது தீரத்துடன் போரிட்டு வென்றார். 1362-இல் தொடங்கிய வாரங்கல் போரில் பாமனி சுல்தான்கள் முழுவெற்றி அடைந்தனர்.
தம்முன் பாடிய சில பாடகர்களுக்கு விசயநகர கருவூலத்திலிருந்து பரிசு தரும்படி கூறினார். இதனால் இரு இராச்சியங்களுக்கிடையே மீண்டும் போர் மூண்டது. இப்போரில், முதலாம் முகம்மது வெற்றியடைந்தார். இவர் இராச்சியத்தைச் சுற்றிப் பார்த்து, அதன் நிருவாகத்தைச் சீர் செய்து சிறந்து விளங்கச் செய்தார். மாகாண ஆளுநர்கள் சரியாக அலுவல் பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ள சுல்தானே இராச்சியத்தை, இரகசியமாகச் சுற்றிப் பார்த்து, ஆட்சி மேலாண்மையைச் சிறப்பாக செய்தார்.
குடிப்பழக்கம் உடைய இவர்,அளவுக்கு அதிகமாகக் குடித்ததால் இறந்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது.[1] இவருக்குப் பிறகு இவரது மகன் அலாவுதீன் முசாகிது அரசப் பொறுப்பை ஏற்றார்.[1][2]
சிறப்பு
[தொகு]தனது இராச்சியத்தை திறம்பட நடத்த எட்டு அமைச்சர்கள் அடங்கிய, ஒரு மந்திரி சபையை எற்படுத்தினார். மராட்டிய மன்னர் சிவாஜி, பதினேழாம் நூற்றாண்டில் ஏற்படுத்திய அஷ்டப் பிரதான் என்னும் 8மந்திரிகள் கொண்ட வரலாற்றுப் புகழ் வாய்ந்த மந்திரிசபையானது, முதலாம் முகம்மதுவின் அமைச்சர்கள் சபையின் நடைமுறையைத் தழுவி உருவாக்கப் பட்டதாக வரலாற்று அறிஞர்கள் உரைக்கின்றனர்.
இதையும் காணவும்
[தொகு]- முகம்மது ஷா(حمد شاه) (1748 – 1702) என்ற மற்றொரு இசுலாமிய அரசரும் இந்தியப் பகுதியினை ஆண்டுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Bhattacharya, Sachchidananda. A Dictionary of Indian History (Westport: Greenwood Press, 1977) p.653
- ↑ Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate. The History and Culture of the Indian People. Vol. VI (5th ed.). Mumbai: Bharatiya Vidya Bhavan. pp. 251–3.
{{cite book}}
:|first=
has generic name (help)