உள்ளடக்கத்துக்குச் செல்

அலாவுதின் பாமன் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாமினி சுல்தானம்
அலாவுதின் பாமனின் நாணயம்

அலாவுதின் பாமன் சா (r. 3 ஆகத்து 1347 - 1358) என்பவரின், இயற்பெயர் சாபர் கான் (Zafar Khan) ஆகும். இவர் ஆப்கானின் 34 மாகாணங்களில் ஒன்றான, பாதாக்சானின்(Badakhshan) வழிவந்தவர்.இவர் ஈரானின்[1] பாரசீக மொழி பேசும் மக்களான, தத்சிக்(TĀDJĪK)[2] பரம்பரையைச் சார்ந்தவர் என வரலாற்று ஆய்வுகளால் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன் இவர்,பாரசீக அரசரான பாமனின் வழித்தோன்றல் என கருதப்பட்டார்.[3]

புரட்சியும், ஆட்சியும்

[தொகு]

தில்லி சுல்தானத்தினை, முகம்மது பின் துக்ளக் ஆண்ட காலத்தில், புரட்சி செய்தவரான நசிருதின் இசுமாயில் சா (Nazir uddin Ismail Shah), தக்காணத்தின் ஆளுநராக இருந்த சாபர் கானின் புரட்சிக்கு ஆதரவாக இருந்தார்.அதன்பின்னர் சாபர்கானுக்கு, அலாவுதின் பாமன் சா (Abu'l Muzaffar Ala-ud-Din Hassan Bahman Shah) என்ற பட்டப்பெயரினைக் கொடுத்து, பாமினிச் சுல்தானத்தை நிறுவ பேருதவிப் புரிந்தார். அலாவுதின் பாமனும், துக்ளக்கின் ஆட்சிப் பகுதியான தக்காணத்தில் தொடர்ந்து புரட்சி செய்து, பாமினி சுல்தானத்தை, 3 ஆகத்து 1347 ஆம் ஆண்டு நிறுவினார்.[4][5]

தனது சுல்தானத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றினையும் நன்கு கவனித்து ஆட்சி செய்ய ஆளுநர்களை நியமித்தார்.[6][7] தனது காலத்தில் விசயநகரத்துடன் பல போர்கள் செய்தார். இவருக்குப் பிறகு இவரது மகனான, முதலாம் முகம்மது சா அரியணை ஏறினார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. C.E. Bosworth, B.G. Fragner (1999). "TĀDJĪK". Encyclopaedia of Islam (CD-ROM Edition v. 1.0). Leiden, The Netherlands: Koninklijke Brill NV. 
  2. Cavendish, Marshall. "World and Its Peoples", p.335. Published 2007, Marshall Cavendish. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761476350
  3. Early historians, Tabataba and Nizam-ud-Din Ahmad believe that Hasan was descended from the Persian king Bahman, son of Isfandiyar.
  4. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai:Bharatiya Vidya Bhavan, p.248
  5. Bhattacharya, Sachchidananada. A Dictionary of Indian History (Westport: Greenwood Press, 1972) p. 100
  6. During his reign Hasan fought many wars with Vijayanagar. By the time of his death the kingdom streched from north to south from the Wainganga River to Krishna and east to west from Bhongir to Daulatabad.
  7. 7.0 7.1 Bhattacharya. Indian History. p. 929

இதையும் பார்க்கவும்

[தொகு]

தக்காணத்து சுல்தானகங்கள்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாவுதின்_பாமன்_சா&oldid=3816159" இலிருந்து மீள்விக்கப்பட்டது