டச்சு விக்கிப்பீடியா
Appearance
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | டச்சு மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.nl.wikipedia.org/ |
டச்சு விக்கிப்பீடியா (Dutch Wikipedia) என்பது விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் டச்சு மொழிப் பதிப்பு ஆகும். 2001 சூனில் இது தொடங்கப்பட்டது. நவம்பர் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது[1]. டிசம்பர் 17, 2011ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் எட்டியது.[2]
கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவது [3] இடத்தில் இருக்கும் டச்சு விக்கியில் ஆகத்து 20,2012 வரை மொத்தம் 1,071,718 கட்டுரைகள் உள்ளன. 2006ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கூகிள் மற்றும் சிமெயிலுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது சிறந்த டச்சு மொழி வலைதளமாக டச்சு விக்கிப்பீடியாவை தெரிவு செய்தது[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://nl.wikipedia.org/wiki/Wikipedia:Persbericht_2008_-_500.000ste_artikel
- ↑ Wikipedia:Persbericht 2011 - 1.000.000ste artikel
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1000_000.2B_articles
- ↑ http://www.multiscope.nl/organisatie/nieuws/sberichten/nederlandse-wikipedia-groeit-als-kool.html
வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் டச்சு விக்கிப்பீடியாப் பதிப்பு