சுகாத்திசு கேலிக்கு விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Favicon of Wikipedia சுகாத்திசு கேலிக்கு விக்கிப்பீடியா
Scottish Gaelic Wikipedia
Wikipedia-logo-v2-gd.svg
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)சுகாத்திசு கேலிக்கு
உரிமையாளர்விக்கிமீடியா அறக்கட்டளை
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பம்
உரலிhttp://gd.wikipedia.org/

சுகாத்திசு கேலிக்கு விக்கிப்பீடியா (Scottish Gaelic Wikipedia) (Scottish Gaelic: Uicipeid [ˈUçkʲɪpetʲ] ) என்பது விக்கிப்பீடியாவின் சுகாத்திசு கேலிக்கு பதிப்பு ஆகும். 23 மே 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, இது 15,929 கட்டுரைகளையும் 26,938 தொகுப்பாளர்களையும் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

இக் கலைக்களஞ்சியம் 2004இல் நிறுவப்பட்டது.[1] 2017ஆம் ஆண்டில், சூசன் ரோஸை இசுகொட்லாந்தின் தேசிய நூலகம் (என்.எல்.எஸ்) பணியமர்த்தியது. இது கலைக்களஞ்சியத்தை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஆகும். இந்த பகுதி நேர நிலை 12 மாதங்கள் நீடித்தது. கேலிக் மொழிப் பொருட்களை இணையத்தில் வைக்கும் எண்ணிம மயமாக்கல் இயக்கத்தைத் தொடர்ந்து இசுகொட்லாந்தின் தேசிய நூலகம் அதன் சுகாத்திசு கேலிக் வளங்களை அதிகரிக்க எண்ணியது. ரோசு கேலிக் மொழியின் இரண்டாம் மொழி பேச்சாளர், இம் தன்னுடைய பதின்ம வயதில் இம்மொழியைக் கற்றுக் கொண்டார். மேலும் கேலிக் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 2010 முதல் யுசிபீட்டைத் திருத்துகிறார்.[2] சமூக குழுக்களுடன் பணிபுரிந்து, உதவி பக்கங்களை உருவாக்கி, மேலும் பயனர்களை ஈர்க்க இவர் பணியாற்றினார்.[3][4] இந்த மானியத்தை விக்கிமீடியா யுகே மற்றும் பார்ட் நா கெய்ட்லிக் ஆகியோர் வழங்கினர்.

ஒரு கட்டத்தில்,விக்கிப்பீடியாவினை எவ்வாறு திருத்தலாம் என்பதை மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஒரு தொகுதியை சபால் மோர் ஓஸ்டெய்க் வழங்கினார்.[5]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en). https://www.scotsman.com/news/nls-appoints-world-s-first-gaelic-wikipedian-1-4353120. 
  2. (in fy). https://www.itnijs.frl/2017/01/skotske-bibleteek-sil-gaelictalige-wikipedia-utwreidzje/. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-07. https://web.archive.org/web/20181207102850/https://www.nls.uk/news/archive/2017/01/gaelic-wikipedian-begins. 
  4. Hannan (in en). https://www.thenational.scot/news/14896462.gaelic-wikipedia-website-uicipeid-to-undergo-major-development-as-part-of-link-up/. 
  5. "An Uicipeid - Wikipedia na Gàidhlig". Sabhal Mòr Ostaig. 7 December 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 December 2018 அன்று பார்க்கப்பட்டது.