இந்தி விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இந்தி மொழி பதிப்பு ஆகும். சூலை மாதம் 2003ல் இது தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி மூன்றாவது[2] இடத்தில் இருக்கும் இந்தி விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் இடத்தில் இந்தி விக்கிப்பீடியா இருக்கின்றது. 2013 பிப்ரவரி மாத நிலவரப்படி இந்தி விக்கிப்பீடியாவில் 1,06,000 கட்டுரைகள் உள்ளன.