ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜொகூர் பாரு-சிங்கப்பூர்
விரைவுப் போக்குவரத்து அமைப்பு
Johor Bahru–Singapore Rapid Transit System
Sistem Transit Aliran Johor Bahru–Singapura

   RTS  
ஜொகூர் நீரிணையில் 12 மார்ச் 2023-இல் கட்டுமானம்
கண்ணோட்டம்
வகைஎல்லைக்கோடு விரைவுப் போக்குவரத்து
நிகழ்நிலைகட்டுமானத்தில் உள்ளது (65%)[1]
நிகழ்வு இயலிடம் மலேசியா ஜொகூர் பாரு, ஜொகூர்
 சிங்கப்பூர் உட்லேண்ட்ஸ்
நடத்துனர்(கள்)ஒப்கோ (OpCo)[2]
RTS நிறுவனம், சிங்கப்பூர் (பிரசரானா மலேசியா; SMRT கார்ப்பரேசன் கூட்டு முயற்சி[3][4]
30 ஆண்டுகள் சலுகை காலம்
வழி
தொடக்கம்புக்கிட் சாகர் இலகு விரைவுப் போக்குவரத்து
(Bukit Chagar RTS station)
முடிவுஉட்லேண்ட்ஸ் இலகு விரைவுப் போக்குவரத்து
(Woodlands North MRT/RTS station)
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புLRV – 8 X 4 பெட்டிகள் கொண்ட தொடருந்துகள்
பெட்டியின் நீளம்:19.22 m (63 அடி 34 அங்) (முன்/முனை); 18.80 m (61 அடி 8+18 அங்) (நடுவில்)
அகலம்: 2.70 m (8 அடி 10 அங்)[5]
குறுகிய சுயவிவரம்
நீளம்: 76.04 m (249.5 அடி)[6]
கதவுகள்: ஒரு பெட்டிக்கு 6; ஒரு பக்கத்திற்கு 3;
பாதை1,435 mm (4 ft 8 12 in) standard gauge
வேகம்80 km/h (50 mph)
Map
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து வழித்தடம்

ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (ஆங்கிலம்: Johor Bahru–Singapore Rapid Transit System (RTS); மலாய்: Sistem Transit Aliran Johor Bahru–Singapura); சீனம்: 新山—新加坡捷运系统) என்பது மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான ஜொகூர் பாரு மற்றும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் ஆகிய நகரங்களை ஜொகூர் நீரிணையின் வழியாகக் கடக்கும் ஓர் அனைத்துலக விரைவுப் போக்குவரத்து அமைப்பாகும்.[7][8]

இந்தக் கட்டுமானம் முடிவடையும் போது, ​​இந்த விரைவுப் போக்குவரத்து அமைப்பு, தெப்ராவ் நகரிடை சேவைக்குப் பின்னர். மலாயா தொடருந்து நிறுவனத்தின் இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது தொடருந்து இணைப்புப் பாதையாக அமையும்.

இருப்பினும், ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து கட்டுமானம் முடிந்ததும் தெப்ராவ் நகரிடை சேவை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.[9] இந்த விரைவுப் போக்குவரத்து அமைப்பின் கட்டமைப்பில், இரு நாடுகளின் சுங்கம், குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தப்படுத்தல் வசதிகளைக் கொண்டிருக்கும்.

இரு தரப்புக் கட்டுமானங்களில் 22 நவம்பர் 2020-ஆம் தேதி மலேசியப் பிரிவிலும்; 22 சனவரி 2021-ஆம் தேதி சிங்கப்பூர் பிரிவிலும் கட்டுமானங்கள் தொடங்கின.[10][11]

பொது[தொகு]

வடக்கு சிங்கப்பூருக்கும் ஜொகூர் பாருவுக்கும் இடையே ஒரு விரைவுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்கலாம் எனும் திட்டத்தை 1991-இல் சிங்கப்பூரின் தகவல் தொடர்பு அமைச்சர் மா போ டான் என்பவரால் முதலில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தத் திட்ட வியூகத்தை இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன.[12]

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு விரைவு போக்குவரத்து அமைப்பு பற்றிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது; பின்னர் 24 மே 2010 அன்று சிங்கப்பூர்-மலேசியா தலைவர்கள் சந்திப்பின் போது முன்மொழியப்பட்டது.[13]

பொது[தொகு]

இந்த விரைவுப் போக்குவரத்து அமைப்பு ஜொகூர் பாருவில் உள்ள தஞ்சோங் புத்திரி புறநகரத்தையும்; சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் புறநகரத்தையும் இணைக்கும்.

அந்த வகையில் மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம்ம்; இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்தலாம் என கணிக்கப்பட்டது. 2018 -ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் முடிவடைய வேண்டும் என ஓர் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.[14]

சிங்கப்பூர் தரப்பு[தொகு]

சூன் 2011-இல், முன்மொழியப்பட்ட விரைவுப் போக்குவரத்து அமைப்பை, சிங்கப்பூர் நிலப்பகுதியில் சிங்கப்பூரின் தாம்சன்-கிழக்கு கடற்கரைச் சாலையின் சிங்கப்பூரின் வடக்கு உட்லண்ட்ஸ் பகுதியுடடன் இணைக்க வேண்டும் என்று சிங்கப்பூர் முன்மொழிந்தது.[15]

வடிவமைப்பு மற்றும் பொறியியல் செயல்பாடுகளுக்கு நவம்பர் 2011-இல் ஒப்பந்த விண்ணப்பம் அழைக்கப்பட்டது. இது தொழில்நுட்ப அளவுருக்கள் மற்றும் அமைப்புக்கான சீரமைப்பு மற்றும் முன்மொழிவுகளுக்கான விருப்பங்களைத் தீர்மானிப்பதை நோக்கமாகக் கொண்டது. அந்த ஒப்பந்தக் கோரிக்கையில்; சிங்கப்பூரின் ஏகோம் (Aecom Singapore); ஏகோம் பெருன்டிங் (Aecom Perunding); மற்றும் சிங்கப்பூர் கட்டிடக் கலைஞர்கள் (SA Architects); கூட்டமைப்பு வெற்றி பெற்றது.[25][26] முதல்கட்டப் பொறியியல் ஆய்வுகளின் முதல் பகுதி மார்ச் 2014-இல் நிறைவடைந்தது.

மலேசியத் தரப்பு[தொகு]

இருதரப்பு நிலையங்களின் மாதிரிகள்

செப்டம்பர் 2014-இல், மலேசியாவின் ஜொகூர் பாரு நகரில், எந்த இடத்தில் விரைவுப் போக்குவரத்து அமைப்பின் நிலையத்தைக் கட்டலாம் என்று ஜொகூர் மாநிலத்தின் பொதுப்பணி, கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டுக் குழு, பொது வாக்கெடுப்பை நடத்தியது. தஞ்சோங் புத்திரி, ஜொகூர் பாரு சென்ட்ரல் 1, ஜொகூர் பாரு சென்ட்ரல் 2, புக்கிட் சாகர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. பொதுமக்களின் தேர்வுபடி, புக்கிட் சாகர் நகர்ப்புறம் மலேசியத் தரப்பு முனையமாக தேர்வு செய்யப்பட்டது.

மலேசியத் தரப்பு அதன் செயல்முறைகளை அதன் பாணியில் பின்பற்றும் என்பதை உறுதிப்படுத்தியது. புதிய நிலையத்தின் குடிநுழைவு அனுமதி வசதிகள்; தற்போதைய சுல்தான் இசுகந்தர் கட்டிடத்தில் (Sultan Iskandar Building) இருக்கும் வசதிகளிலிருந்து தனித்தனியாகச் செயல்படும் எனவும் உறுதிப்படுத்தியது.[16]

கட்டுமானம்[தொகு]

விரைவுப் போக்குவரத்து அமைப்பின் கட்டுமானம் மலேசியப் பகுதியில் 22 நவம்பர் 2020-இல் தொடங்கியது. சிங்கப்பூர் பகுதியில் 22 சனவரி 2021-இல் தொடங்கியது. சனவரி 2024 இறுதிக்குள் கட்டுமானம் நிறைவடையும் என திட்டமிடப்பட்டது. எனினும் பற்பல காரணங்களினால் இந்தத் திட்டம் தாமதமாகி விட்டது. அவற்றுள் மலேசியாவில் 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசாங்க ஆட்சி மாறியதும் முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.[17]

மார்ச் 2023-இல், சிங்கப்பூரின் திட்டப்பணி 45% நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மே 2023-இல், சிங்கப்பூரின் தரப்பில் முன்னேற்றம் 50% ஐ எட்டியது. மலேசியாவின் தரப்பில் 36% முடிந்தது. 11 சனவரி 2024-இல், இரு தரப்பிலும் 65% கட்டுமானம் நிறைவு. அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் திட்டம் நிறைவடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.[18]

காட்சியகம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Yeoh, Grace (11 January 2024). "Johor Bahru-Singapore RTS Link passes 65% construction milestone on both sides; connecting span complete". CNA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 January 2024.
  2. "Prasarana, SMRT ink MOU to set up JV company". Astro Awani. 25 September 2017. Archived from the original on 23 January 2018. பார்க்கப்பட்ட நாள் 23 January 2018.
  3. "Prasarana and SMRT Corp sign MoU for RTS operating company". 26 September 2017. Archived from the original on 6 June 2019. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
  4. "SMRT, Prasarana sign MOU to form joint venture company for JB-Singapore RTS Link". Channel NewsAsia. 25 September 2017. Archived from the original on 13 June 2019. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
  5. "SEATING ARRANGEMENT".
  6. "SIDE VIEW".
  7. "LTA | Johor Bahru – Singapore Rapid Transit System Link".
  8. Barrow, Keith (16 January 2018). "Singapore and Malaysia sign accord on cross-border metro line". International Railway Journal (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 9 August 2018. பார்க்கப்பட்ட நாள் 10 August 2018.
  9. "KL gives in-principle nod for Johor-S'pore rapid transit link". The Straits Times. 31 July 2018 இம் மூலத்தில் இருந்து 1 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180801094337/https://www.straitstimes.com/asia/se-asia/kl-gives-in-principle-nod-for-johor-spore-rapid-transit-link. 
  10. Burroughs, David (27 November 2020). "Construction on Johor Bahru – Singapore link launched". பார்க்கப்பட்ட நாள் 23 May 2021.}}
  11. Abdullah, Zhaki (22 January 2021). "Work begins on Johor Bahru-Singapore RTS Link station". CNA (TV network). https://www.channelnewsasia.com/news/singapore/work-begins-on-johor-bahru-singapore-rts-link-station-14020208. 
  12. Tan, Christopher (10 July 2018). "No official word from new Malaysia govt on RTS Link to JB". The Straits Times (in ஆங்கிலம்). Archived from the original on 26 August 2018. பார்க்கப்பட்ட நாள் 5 August 2018.
  13. "Joint Statement on Singapore-Malaysia Leaders' Retreat between Prime Minister Lee Hsien Loong and Prime Minister Dato' Sri Mohd Najib Tun Abdul Razak, 24 May 2010, Singapore". Ministry of Foreign Affairs, Singapore. Archived from the original on 26 August 2018. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
  14. "Msia – S'pore ink agreement on RTS Link this month". www.thesundaily.my (in ஆங்கிலம்). Archived from the original on 23 July 2018. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
  15. Lim, Jia Qi (13 December 2016). "Singapore-JB Rapid Transit System to be linked via high bridge over Straits of Johor". Channel NewsAsia. Archived from the original on 9 July 2017. பார்க்கப்பட்ட நாள் 28 December 2019.
  16. Bak Heng, Sim (20 September 2014). "Bukit Chagar chosen as final transit terminal". New Straits Times. Archived from the original on 26 August 2018. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
  17. "Construction of JB-Singapore RTS project begins" (in en). The Straits Times. 2020-11-22. https://www.straitstimes.com/asia/se-asia/construction-of-jb-singapore-rts-project-begins. 
  18. "Singapore-JB RTS Link on track to start operations by end-2026, construction at Singapore side hits halfway mark". CNA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.

வெளி இணைப்புகள்[தொகு]