உட்லேண்ட்ஸ், சிங்கப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உட்லேண்ட்ஸ்
சிங்கப்பூர் திட்டமிட்ட கட்டமைப்பு மற்றும் சிங்கப்பூர் மண்டல மையம்
Other transcription(s)
 • சீனம்兀兰
 • பின்யின்Wùlán
 • மலாய் மொழிWoodlands
 • தமிழ்ஊட்லண்ட்ஸ்
Woodlands Square and Woodlands MRT Station, Singapore - 20051111.jpg
RepublicPolytechnic-CulturalCentre-20070205.jpg
SMRT bus service 911 in front of Block 878 Woodlands Street 82, Singapore.jpg
HDB flats along Woodlands Avenue 4, Singapore.jpg
MarsilingMRT.JPG
Si Ling Secondary School, Oct 06.jpg
இடமிருந்து வலமாக: சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில் உட்லேண்ட்ஸ் நகர மையத்தைக் கடக்கிறது, குடியரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, உட்லேண்ட்ஸ் தெரு 82, உட்லேண்ட்ஸ் அவென்யூ 4இல் வீட்டு வசதிக் கழக அடுக்ககங்கள், மார்சிலிங் ரயில் நிலையம், சி லிங் இடைநிலைப் பள்ளி

சிங்கப்பூரில் உட்லேண்ட்சின் அமைவிடம்
உட்லேண்ட்ஸ் is located in சிங்கப்பூர்
உட்லேண்ட்ஸ்
உட்லேண்ட்ஸ்
      Woodlands in       சிங்கப்பூர்
உட்லேண்ட்ஸ் is located in ஆசியா
உட்லேண்ட்ஸ்
உட்லேண்ட்ஸ்
உட்லேண்ட்ஸ் (ஆசியா)
உட்லேண்ட்ஸ் is located in புவி
உட்லேண்ட்ஸ்
உட்லேண்ட்ஸ்
உட்லேண்ட்ஸ் (புவி)
ஆள்கூறுகள்: 1°26′10.57″N 103°47′12.14″E / 1.4362694°N 103.7867056°E / 1.4362694; 103.7867056
Country சிங்கப்பூர்
Regionசிங்கப்பூர் வடக்கு மண்டலம்
CDC
Town councils
 • Marsiling-Yew Tee Town Council
 • Sembawang Town Council
Constituencies
 • மார்சிலிங் யீவ் டீ பொதுக்குழு தொகுதி
 • செம்பவாக் தனித்தொகுதி
அரசு
 • MayorNorth West CDC
 • டியோ ஹோ பின்

 • Members of ParliamentMarsiling-Yew Tee GRC
 • அலிமா யாகோப்பு (அதிபர் தேர்தலை நடத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு ஆகத்து 7இல் பதவி விலகினார்)
 • ஓங் டெங் கூன்

Sembawang GRC

 • அம்ரின் அமின்
 • காவ் பூன் வான்
 • விக்ரம் நாயர்
பரப்பளவு[1][2]
 • Residential4.80 km2 (1.85 sq mi)
மக்கள்தொகை (2018)[1][2][3]
 • மொத்தம்252,530
இனங்கள்Official
 • Woodlands resident

Colloquial

 • Woodlander
 • Woodlandian
Postal district25
Dwelling units62,675
Projected ultimate98,000

உட்லேண்ட்ஸ் என்பது சிங்கப்பூரின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு திட்டமிடல் பகுதி மற்றும் குடியிருப்பு நகரம் ஆகும். இந்த நகரம் மலேசியாவின் ஜொகூர் பாரு நகரத்துடன், ஜொகூர்-சிங்கப்பூர் காஸ்வே நெடுஞ்சாலைப்பாலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இது வடக்கு பிராந்தியத்திற்கான பிராந்திய மையமாகும் .

உட்லண்ட்ஸ் திட்டமிடல் பகுதியின் எல்லைகளாக கிழக்கே செம்பவாங், தெற்கே மண்டாய், மேற்கே சுங்கெய் காடுட் மற்றும் வடக்கே ஜொகூர் பாரு ஆகியவை அமைந்துள்ளன. உட்லேண்ட்ஸ் புது நகர் பகுதி உட்லேண்ட்ஸ் திட்டமிடல் பகுதிக்குள் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

நவீன உட்லேண்ட்ஸ் நகர் அடங்கிய பகுதி 1923 ஆம் ஆண்டில் ஜொகூர்-சிங்கப்பூர் காஸ்வே திறக்கப்பட்டதற்கு சாட்சியாக இருந்தது. ஆரம்பகால உட்லேண்ட்ஸ் பகுதியானது கிராமங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை உள்ளடக்கியது, அங்கு குடியிருந்தவர்கள் பெரும்பாலும் மார்சிலிங் பகுதியில் பகுதி நேர கடைக்காரர்கள் மற்றும் காய்கறி விவசாயிகளாக வாழ்ந்தனர். அதே நேரத்தில் இரப்பர் தோட்டங்கள் மற்றும் கோழிப்பண்ணைகள் நவீன அட்மிரால்டி அமைந்துள்ள ஜலன் உலு செம்பவாங்கின் நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் முதல் குடியிருப்புகள் 1972 ஆம் ஆண்டிலிருந்து மார்சிலிங்கின் வடக்கு பகுதியில் கட்டப்பட்டன, உட்லேண்ட்ஸ் மத்திய சாலையில் அமைந்துள்ள உட்லேண்ட்ஸ் பேருந்து நிலையம் 1980ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[4]

1988ஆம் ஆண்டிற்கு முன்னர், உட்லேண்ட்ஸ் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி மற்றும் செம்பவாங் தனித்தொகுதி என பிரிக்கப்பட்டு வந்தது. பின்னர் இது வளர்ச்சியின் பொருட்டு 1991 இல் செம்பவாங் குழுத்தொகுதி உடன் இணைக்கப்பட்டது.

உட்லேண்ட்ஸின் வளர்ச்சி 1981 இல் தொடங்கியது. இது 1985 ஆம் ஆண்டில் நிறைவடைந்த சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சிக் கழக நெய்பர்ஹூட் 1 (மார்சிலிங் தோட்டத்திற்குப் பின்னால் உள்ள) என்ற பெயரிலான அடுக்ககங்கள் கட்டப்பட்டதையும் உள்ளடக்கியது; 1987ஆம் ஆண்டில் நெய்பர்ஹூட் 8 அடுக்ககமும் 1989 ஆம் ஆண்டில் நெய்பர்ஹூட் 3 அடுக்ககமும் நிறைவடைந்தது, சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்ககங்களின் செறிவு காரணமாக, குடியிருப்புகளானது எண் முறையுடன் ஆங்கில எழுத்துக்களையும் சேர்ந்த முறை உருவாக்கப்பட்டது. அட்மிரால்டியில் 1996 ஆம் ஆண்டில் 6எக்சுஎக்சு தொகுதியும், 1997ஆம் ஆண்டில் 7எக்சுஎக்சு தொகுதியும் கட்டி முடிக்கப்பட்டன. இன்னோவாவின் விரிவாக்கம் 1998 ஆம் ஆண்டில் தொடங்கி 2002 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது, இது தொகுதி 5எக்சுஎக்சு தொகுதியையும் கொண்டுள்ளது. உட்லேண்ட்ஸ் கிழக்கின் விரிவாக்கம் 1999 ஆம் ஆண்டில் தொடங்கி 2004 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.

ஜலான் உலு செம்பவாங் என்பது கம்போங் சாலையாகும், இது உட்லேண்ட்ஸ் நியூ டவுன் மற்றும் செம்பவாங் ஏர்பேஸின் சில பகுதிகளையும் குறுக்கே செல்கிறது. உட்லேண்ட்ஸ் புது நகரம், கம்பாஸ் அவென்யூ, செம்பவாங் ஏர்பேஸ் மற்றும் செலட்டார் அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் விரிவாக்கத்தால் ஜூன் 1992 முதல் ஜலான் உலு செம்பவாங் அகற்றப்பட்டது. கம்போங் 1996 ஆம் ஆண்டிற்குள் அழிக்கப்பட்டது, அது ஒரு இராணுவ பயிற்சி மைதானமாக மாற்றப்பட்டது.

நெய்பர்ஹுட் அடுக்ககங்களின் தளவமைப்பு[தொகு]

நகரத்தில் மூன்று தொகுதிகள் உள்ளன. உட்லேண்ட்சின் உள்ளே ஒன்பது நெய்பர்ஹுட் அடுக்ககங்கள் (N1 முதல் N9 வரை) அமைந்திருந்தன. முதன்மையாக உட்லேண்ட்ஸ், மார்சிலிங், உட்ரோவ் மற்றும் அட்மிரால்டி ஆகியவற்றின் கொண்டுள்ளன . உட்லேண்ட்ஸ் சதுக்கம் நகர மையமாக செயல்படுகிறது, அருகிலுள்ள சுற்றுப்புற மையங்களும் பலவிதமான வணிக நடவடிக்கைகளை வழங்குகின்றன. கம்பங் அட்மிரால்டி உள்ளிட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 2014 இல் தொடங்கப்பட்டன.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 City Population - statistics, maps and charts | Woodlands
 2. 2.0 2.1 "Land Area and Dwelling Units by Town". Data Singapore. 2016. ஜூன் 12, 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 26, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Statistics Singapore - Geographic Distribution - 2018 Latest Data". February 11, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 4. Jalelah Abu Baker (7 June 2013). "This used to be my playground". The Straits Times. p. B14, Home section. 11 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Integrated Development In Woodlands, "Kampung Admiralty", Takes Off With Groundbreaking Ceremony". Housing & Development Board. 20 ஆகஸ்ட் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 August 2014 அன்று பார்க்கப்பட்டது.