உள்ளடக்கத்துக்குச் செல்

அடி அவாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு டத்தோ டான் ஸ்ரீ உலாமா அஜி
அப்துல் அடி அவாங்
YB Abdul Hadi Awang
عبدالهادي اواڠ
மலேசிய இசுலாமிய கட்சி
7-ஆவது தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 சூலை 2002
மாராங் மக்களவைத் தொகுதி
பதவியில்
21 அக்டோபர் 1990 – 21 மார்ச் 2004
பெரும்பான்மை161 (1990); 882 (1995); 12,700 (1999)
ரூ ரெண்டாங் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
3 ஆகத்து 1986 – 9 மே 2018
முன்னையவர்புதிய தொகுதி
பெரும்பான்மை531 (1986); 853 (1990); 1,394 (1995); 3,843 (1999); 1,435 (2004); 2,686 (2008); 2,819 (2013)
மாராங் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
22 ஏப்ரல் 1982 – 3 ஆகத்து 1986
பெரும்பான்மை133 (1982)
8-ஆவது மலேசிய எதிர்க்கட்சிகளின் தலைவர்
பதவியில்
23 சூலை 2002 – 21 மார்ச் 2004
திராங்கானு மாநில முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 டிசம்பர் 1999
ஆட்சியாளர்சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்
தொகுதிரூ ரெண்டாங் சட்டமன்றத் தொகுதி
மலேசிய இசுலாமிய கட்சி தலைவர்
பதவியில்
1990–2018
மலேசியப் பிரதமரின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதர்
பதவியில்
2020–2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Abdul Hadi bin Awang

20 அக்டோபர் 1947 (1947-10-20) (அகவை 76)
மாராங், திராங்கானு, மலாயா ஒன்றியம் (மலேசியா)
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிமலேசிய இசுலாமிய கட்சி (PAS)
பிற அரசியல்
தொடர்புகள்
கூட்டணி (ALLIANCE)
பாரிசான் (BN)
அங்காத்தான் பெர்பாடுவான் உம்மா (APU)
மாற்று பாரிசான் (BA)
பாக்காத்தான் ராக்யாட் (PR)
குகுசான் செசாத்திரா (GS)
பெரிக்காத்தான் (PN)
முபாகாட் நேசனல் (MN)
துணைவர்(கள்)சைனாப் அவாங் நிகா
டாக்டர் நோர்சித்தா தாட்
பிள்ளைகள்14
பேரப் பிள்ளைகள்: 30
முன்னாள் கல்லூரிமதீனா இசுலாமிய பல்கலைக்கழகம்
அல்-அசார் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்உலாமா ஆசிரியர்
இணையத்தளம்presiden.pas.org.my/v2/

டான் ஸ்ரீ டத்தோ அப்துல் அடி அவாங் எனும் அடி அவாங் (ஆங்கிலம் Abdul Hadi bin Awang; மலாய்: Abdul Hadi bin Awang; சீனம்: 哈迪阿旺 சாவி: عبدالهادي بن اواڠ;); என்பவர் அக்டோபர் 1990 முதல் திராங்கானு, மாராங் மக்களவைத் தொகுதியின் (Marang Federal Constituency) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராக (Member of Parliament) சேவை செய்தவர். இவர் ஒரு மலேசிய அரசியல்வாதி மற்றும் மத போதகர் ஆவார்.[1]

இவர் மலேசிய இசுலாமிய கட்சியின் (Malaysian Islamic Party) (PAS) 7-ஆவது தலைவர்; 2 டிசம்பர் 1999 தொடங்கி 25 மார்ச் 2004 வரையில் திராங்கானு மாநிலத்தின் முதல்வர் (Menteri Besar of Terengganu) பதவி வகித்தவர்; 22 ஏப்ரல் 1982 தொடங்கி 3 ஆகத்து 1986 வரையில் திராங்கானு மாநில மாராங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் (Marang State Constituency); 1986 முதல் 2018 வரை திராங்கானு மாநில ரூ ரெண்டாங் சட்டமன்றத் தொகுதியின் (Ru Rendang State Constituency) உறுப்பினர் பதவிகளை வகித்தவர்.[2]

பொது

[தொகு]

மலேசிய எதிர்க்கட்சிகளின் தலைவர் பதவியில் 8-ஆவது தலைவராக 23 சூலை 2002 தொடங்கி 21 மார்ச் 2004 வரை பதவி வகித்த இவர், பன்னாட்டு அளவில், பன்னாட்டு முசுலிம் அறிஞர்களின் சங்கத்தின் (International Union of Muslim Scholars) துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

அத்துடன் 2020-ஆம் ஆண்டில் இருந்து 2020-ஆம் ஆண்டு வரை மலேசியப் பிரதமர் துறையில் மலேசியப் பிரதமரின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராகவும் (Special Envoy of Malaysia to the Middle East) சேவை ஆற்றியவர்.

வாழ்க்கை

[தொகு]

அடி அவாங்கின் தொடக்க நிலைக் கல்வியை ருசிலா தேசிய பள்ளி (Rusila National School); மாராங் சமயப் பள்ளி (Marang Religious School); உயர்நிலைக் கல்வியை கோலா திராங்கானு சுல்தான் சைனால் ஆபிதீன் சமய மேல்நிலைப் பள்ளி (Sultan Zainal Abidin Religious Secondary School Kuala Terengganu); ஆகிய பள்ளிகளில் மேற்கொண்டார்.

பின்னர் 1969 – 1973-ஆம் ஆண்டுகளில் இடையில் சவூதி அரேபியா மதீனா இசுலாமிய பல்கலைக்கழகத்திலும் (Islamic University of Madinah); 1974 - 1976-ஆம் ஆண்டுகளில் கெய்ரோ அல்-அசார் பல்கலைக்கழகத்திலும் (Al-Azhar University) மேல் படிப்பை மேற்கொண்டார்.[3]

அங்காத்தான் பெலியா இசுலாம்

[தொகு]

மேல்நாடுகளில் தம் உயர்க்கல்வியை முடித்துக் கொண்ட அவர் மலேசியாவுக்குத் திரும்பியதும், 1977-ஆம் ஆண்டில் அங்காத்தான் பெலியா இசுலாம் மலேசியா (Angkatan Belia Islam Malaysia) (ABIM) எனும் மலேசிய முற்போக்கு இளைஞர் அணியில் குழுவில் சேர்ந்தார்.

அங்கு அடி அவாங்கின் நல்சேவைகளின் பங்குப்பளிப்புகளினால் விரைவில் அந்த அணியின் திராங்கானு மாநிலத் தலைவராக (Terengganu State Chief) ஆனார்.[4]

மலேசிய இசுலாமியக் கட்சியின் தலைவர்

[தொகு]

ஓர் ஆண்டு கழித்து, 1978-ஆம் ஆண்டில், மலேசிய இசுலாமியக் கட்சியில் (Malaysian Islamic Party) (PAS) சேர்ந்தார். 1978 பொதுத் தேர்தலில் மாராங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். எனினும் பாரிசான் நேசனல் கட்சியின் துங்கு சாகித் துங்கு மூசாவிடம் (Tengku Zahid Tengku Musa) 64 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அதன் பின்னர் மலேசிய இசுலாமியக் கட்சியின் பதவிகளில் விரைவாக உயர்ந்தார். 1989-இல் மலேசிய இசுலாமியக் கட்சித் தலைவர் பதவிக்கு பாட்சில் நூர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அடி அவாங் அக்கட்சியின் துணைத் தலைவரானார்.[5]

2002-ஆம் ஆண்டு வரை அடி அவாங் துணைத் தலைவராக இருந்தார். அதே ஆண்டில் பாட்சில் நூர் (Fadzil Noor) மாரடைப்பால் இறந்தார். இதன் விளைவாக அடி அவாங், மலேசிய இசுலாமியக் கட்சியின் தலைவரானார்.[6]

பிறப்பு

[தொகு]

அடி அவாங் 1947-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி திராங்கானுவில் உள்ள மாராங் மாவட்டத்தில் உள்ள கம்போங் ருசிலா (Kampung Rusila) எனும் கிராமத்தில் பிறந்தார். ஒன்பது உடன்பிறப்புகளில் ஐந்தாவது குழந்தை; உடன்பிறப்புகளில் நால்வர் இறந்து விட்டனர்.

அடி அவாங்கின் தந்தையார் பெயர் அஜி அவாங் முகமது பின் அப்துல் ரகுமான் (Haji Awang Mohamad bin Abd Rahman). தாயாரின் பெயர் அஜ்ஜா அமினா யூசுப் (Hajjah Aminah Yusuf).[7]

விருதுகள்

[தொகு]

மலேசிய விருதுகள்

[தொகு]
  •  மலேசியா :
    • மலேசியப் பேரரசர் விருது - (Order of Loyalty to the Crown of Malaysia) (PSM) – Tan Sri (2021)[8]
  •  திராங்கானு :
    • திராங்கானு மாநில சுல்தான் விருது - (Order of Sultan Mahmud I of Terengganu) (SSMT) – Dato' Seri (2001)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hooker, Othman, Clive (2003), pp. 232–3
  2. Farish Ahmad Noor (2004), pp. 28–30
  3. Haddad, Voll, Esposito (1991), pg 50
  4. Saw, Swee-Hock, K. Kesavapany (2006), pg 76
  5. Hooker, Othman, Clive (2003), pp. 160–1
  6. Hooker, Othman, Clive (2003), p. 162
  7. Biodata Timbalan Presiden
  8. "Former Chief Justice and ex-FELDA chairman head King's birthday honours list". The Edge Markets. 13 November 2021. Archived from the original on 13 November 2021. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_அவாங்&oldid=4040720" இலிருந்து மீள்விக்கப்பட்டது