அல்-அசார் பல்கலைக்கழகம்
جامعة الأزهر (الشريف) Jāmiʻat al-Azhar (al-Sharīf) | |
![]() எகிப்தின் கெய்ரோவிலுள்ள அல்-அசார் மசூதி | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 970~972 |
சார்பு | பாத்திம கலீபகம் விழும்வரையிலும் சியா இசுலாம், தற்போது சன்னி இசுலாம்1 |
தலைவர் | உசாமா அல்-அபத் |
அமைவிடம் | ![]() 30°02′45″N 31°15′45″E / 30.04583°N 31.26250°Eஆள்கூறுகள்: 30°02′45″N 31°15′45″E / 30.04583°N 31.26250°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையத்தளம் | http://www.alazhar.gov.eg/ |
![]() | |
1972க்கும் and 1171க்கும் இடைப்பட்ட காலத்தில், அல்-அசார் சியா இசுலாமின் இசுமாயிலியப் பிரிவை சார்ந்திருந்தது |
அல்-அசார் பல்கலைக்கழகம் (Al-Azhar University, " (மதிப்புமிக்க) அசார் பல்கலைக்கழகம்") எகிப்தின் கெய்ரோவில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். கி.பி 970 அல்லது 972 இல் பாத்திம கலீபகத்தாரால் இசுலாமிய கல்வியமைப்பாக (மதரசா) நிறுவப்பட்டது. இதன் மாணவர்கள் குரானையும் இசுலாமிய சட்டத்தையும் விரிவாகப் படித்ததுடன் ஏரணம், இலக்கணம், கவிதை ஆகியவற்றுடன் நிலவின் பல்வேறு நிலைகளை கணிக்கும் முறைகளை கற்றுத் தேர்ந்தனர். பலதுறைப் படிப்புகளையும் ஒரே இடத்தில் கற்குமாறு ஏற்படுத்தியதால் உலகின் முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும் இத்தகைய பழைமையான பல்கலைக்கழகங்களில் இதுவரை இயங்கிவருவதும் இது ஒன்றே ஆகும். தற்போதைய பல்கலைக்கழகத்தில் மதசார்பற்ற பலகல்வித்திட்டங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. அராபிய இலக்கியத்திற்கும் இசுலாமிய கற்கைகளுக்கும் உலகில் இதுவே முதன்மையான மையமாக விளங்குகிறது.[1][2]எகிப்தில் பட்டம் வழங்குகின்ற மிகப் பழைமையான பல்கலைக்கழகமாக இது உள்ளது. 1961இல் கூடுதல் மதசார்பற்ற கல்வித்திட்டங்கள் சேர்க்கப்பட்டன.[3][4]
இது கெய்ரோவிலுள்ள அல்-அசார் மசூதியுடன் இணைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இசுலாம் சமயத்தை விரிவாக்குவதும் [இசுலாமியப் பண்பாடு|இசுலாமியப் பண்பாட்டை]] வளரத்தெடுப்பதுமாகும். இந்த நோக்குடன் இங்குள்ள இசுலாமிய அறிஞர்கள், (உலேமாக்கள்) சன்னி இசுலாமிய உலகின் முஸ்லிம் தனிநபர்கள் மற்றும் சமூகத்தினரின் நடத்தைகள் குறித்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அறிவுரைகள் (ஃபத்வாகள்) வழங்குகின்றனர்.
காட்சிக்கூடம்[தொகு]
பல்கலைகழகத்திற்கும் மசூதிக்கும் நுழைவு வழி. வலப்புறத்தில் குன்சா அல் குரியின் மினாரைப் பார்க்கலாம்.
அல்-அசார் மசூதி குவிமாடத்தின் உட்புறம்.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Encyclopædia Britannica. "Britannica article". Britannica article. பார்த்த நாள் 2010-03-21.
- ↑ பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் p.37 1993 edition ISBN 0-85229-571-5
- ↑ Skovgaard-Petersen, Jakob. "al-Azhar, modern period." Encyclopaedia of Islam, THREE. Edited by: Gudrun Krämer, Denis Matringe, John Nawas and Everett Rowson. Brill, 2010, retrieved 20/03/2010:
Al-Azhar, the historic centre of higher Islamic learning in Cairo, has undergone significant change since the late 19th century, with new regulations and reforms resulting in an expanded role for the university. 1. From madrasa to university
- ↑ Jomier, J. "al- Azhar (al-Ḏj̲āmiʿ al-Azhar)." Encyclopaedia of Islam, Second Edition. Edited by: P. Bearman , Th. Bianquis , C.E. Bosworth , E. van Donzel and W.P. Heinrichs. Brill, 2010, retrieved 20/03/2010:
This great mosque, the 'brilliant one'...is one of the principal mosques of present-day Cairo. This seat of learning...regained all its activity—Sunnī from now on—during the reign of Sultan Baybars...Al-Azhar at the beginning of the 19th century could well have been called a religious university; what it was not was a complete university giving instruction in those modern disciplines essential to the awakening of the country.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் அல்-அசார் பல்கலைக்கழகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Al-Azhar University (Arabic)
- The world Association for Al-Azhar Graduates
- Al-Azhar Institute for Teaching Arabic as Foreign Language
- Al-Azhar-US Embassy English Language Resource Center (ELRC)
- Al-Azhar University Faculty of Islamic Sciences for International Students
- Al Azhar
- Al-Azhar Supreme Council for Islamic Affairs (English)
- Al-Azhar Pages
- Dar Al Ifta (English) (Al-Azhar for Islamic ஃபத்வா)
- Al Azhar-West Dialog Project (English)
- Educational website for Al-Azhar Institutes (English)
- History and organization of Al-Azhar (English)
- Islam for Today
- Muslim Heritage
- Al-Azhar University rules for international students admission (Arabic only)
- New Grand Sheikh at Al-Azhar University: Fighting Extremism in A Suit and Tie