பத்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பத்வா (fatwa, அரபு மொழி: فتوى; பன்மை fatāwa) இசுலாமியத்தில் ஓர் சட்ட பரிந்துரையாகும். ஷாரியா சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கக்கூடிய முஃப்தி (இசுலாமிய கல்விமான்) ஒருவர் இதனை அறிவிக்கக்கூடும். பொதுவாக பிக்ஹ் எனப்படும் இசுலாமிய சட்டவியலில் ஏதேனும் ஒரு சட்டச்சிக்கலில் தெளிவுபெறுவதற்காக பத்வா வெளியிடப்படும். இதனை ஓர் நீதிபதி கேட்கக் கூடும். சுன்னி இசுலாமில் இதனை ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயமில்லை. ஆனால் சியா இசுலாமில் இதனை ஏற்பது தனிநபரளவில் கட்டாயமாக கொள்ளப்படுகிறது.[1]

மேற்கோள்கள்கள்[தொகு]

  1. http://www.questionsaboutislam.com/shariah-islamic-law/what-is-a-fatwa.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்வா&oldid=3508041" இருந்து மீள்விக்கப்பட்டது