சன் டிவி நெட்வொர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன் டிவி நெர்ட்வொர்க் லிமிடட்
வகைபொது
நிறுவுகை1992
நிறுவனர்(கள்)கலாநிதி மாறன்
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்கலாநிதி மாறன் (Chairman)
தொழில்துறைமக்கள் ஊடகம்
வருமானம் 3,001.70 கோடி (US$380 மில்லியன்) (2018)[1]
இயக்க வருமானம் 1,959.48 கோடி (US$250 மில்லியன்) (2018)[1]
நிகர வருமானம் 1,093.04 கோடி (US$140 மில்லியன்) (2018)[1]
மொத்தச் சொத்துகள் 4,349.83 கோடி (US$540 மில்லியன்) (2017)[1]
பணியாளர்1,959 (2017)[1]
தாய் நிறுவனம்சன் குழுமம்
இணையத்தளம்www.suntv.in
www.sunnetwork.in

சன் டிவி நெட்வொர்க் (சன் தொலைக்காட்சி வலையமைப்பு) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள மக்கள் ஊடக நிறுவனமாகும். சன் குழுமத்தின் பகுதியான இது ஆசியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி வலையமைப்பாக உள்ளது.[2][3] 14 ஏப்ரல் 1992 கலாநிதி மாறனால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பல்வேறு வகையான தொலைக்காட்சிகளையும் ரேடியோ அலைவரிசைகளையும் பல்வேறு மொழிகளில் நிர்வகித்து வருகிறது.

இதன் அடையாளத் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சி இந்தியாவின் முதல் தனியார் தமிழ் தொலைக்காட்சியாகும். சன் குழுமம் 2012 இல் இருந்து ஐபிஎல் தொடரில் ஐதராபாத் நகரை அடிப்படையாகக் கொண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் என்ற அணியை நிர்வகித்து வருகிறது.[4][5]

தயாரிப்புகள் மற்றும் செயல்பாடுகள்[தொகு]

தொலைக்காட்சி அலைவரிசைகள்[தொகு]

சன் குழுமத்தில் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி போன்ற நான்கு மொழிகளில் 32 தொலைக்காட்சி அலைவரிசைகள் (24 நிலையான வரையறு தொலைக்காட்சி +8 உயர் வரையறு தொலைக்காட்சி) சொந்தமாகக் கொண்டு இயங்குகிறது. சன் குழுமம் 7 புதிய உயர் வரையறு தொலைக்காட்சி மற்றும் 3 புதிய எஸ்டி அலைவரிசைககளை துவங்கவுள்ளது. அதன் முதல்கட்டமாக வட இந்தியாவில் மராத்தி மொழியில் முதல் அலைவரிசையை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் பின்னர் சன் குழுமத்தில் மொத்தம் 42 அலைவரிசைகள் இருக்கும்.

புதிதாக வரவிருக்கும் அலைவரிசைகள்[தொகு]

உயர் வரையறு தொலைக்காட்சிகள்[தொகு]

புதிதாக வரவிருக்கும் உயர் வரையறு தொலைக்காட்சி அலைவரிசைகள்
உயர் வரையறு தொலைக்காட்சி அலைவரிசைகள்
வகை தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்
பொழுதுபோக்கு சன் தொலைக்காட்சி ஜெமினி தொலைக்காட்சி உதயா தொலைக்காட்சி சூர்யா தொலைக்காட்சி
இசை சன் மியூசிக் ஜெமினி மியூசிக்
திரைப்படங்கள் கே தொலைக்காட்சி ஜெமினி மூவீஸ்

நிலையான வரையறு தொலைக்காட்சி[தொகு]

நிலையான வரையறு தொலைக்காட்சி அலைவரிசைகள்
வகை தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் வங்காளம்
பொழுதுபோக்கு சன் தொலைக்காட்சி ஜெமினி தொலைக்காட்சி உதயா தொலைக்காட்சி சூர்யா தொலைக்காட்சி சன் வங்காள
இசை சன் மியூசிக்கு ஜெமினி மியூசிக் உதயா மியூசிக் சூர்யா மியூசிக்
திரைப்படங்கள் கே தொலைக்காட்சி ஜெமினி மூவீஸ் உதயா மூவீஸ் சூர்யா மூவீஸ்
நகைச்சுவை ஆதித்யா தொலைக்காட்சி ஜெமினி காமெடி உதயா காமெடி சூர்யா காமெடி
சிறுவர்கள் சுட்டித் தொலைக்காட்சி குஷி தொலைக்காட்சி சிண்டூ தொலைக்காட்சி கொச்சு தொலைக்காட்சி
செய்திகள் சன் செய்திகள்
பழைய திரைப்படங்கள் & பொழுதுபோக்கு சன் லைப் ஜெமினி லைப்

முன்னர் ஒளிபரப்பான தொலைக்காட்சி[தொகு]

நிலையான வரையறு தொலைக்காட்சி அலைவரிசைகள்
வகை தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் வங்காளம்
செய்திகள் ஜெமினி செய்திகள் (2004-2019)

அச்சு ஊடகம்[தொகு]

சன் குழுமத்தில் இரண்டு தினசரி செய்தித்தாள்கள் மற்றும் ஆறு பத்திரிகைகளை தமிழில் வைத்திருக்கிறது. 1977 ஆம் ஆண்டில் கே. பி. கந்தசாமியால் தினகரன் என்ற காலை செய்தித்தாள் நிறுவப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் சன் நெட்வொர்க்கால் கே. பி. கே. குமரனிடமிருந்து வாங்கப்பட்டது.[6][7] இது இந்தியாவில் தினத்தந்திக்குப் பிறகு இரண்டாவது பெரிய புழக்கத்தில் உள் செய்தித்தாள் ஆகும்.[8][9]

தமிழ்முரசு ஒரு மாலை செய்தித்தாள். இக்குழுவுக்கு குங்குமம், முத்தாரம் மற்றும் வண்ணத்திரை என்ற வார இதழும், குங்குமச் சிமிழ், குங்குமம் தோழி என்ற மாத இருமுறை இதழும் உண்டு.

வானொலி நிலையங்கள்[தொகு]

இந்தக் குழு இந்தியா முழுவதும் 67 பண்பலை ஒலிபரப்பு வானொலி நிலையங்களை சூரியன் பண்பலை வானொலி, ரெட் பண்பலை வானொலி என்ற பெயரில் ஒலிபரப்புகிறது.

OTT இயங்குதளம்[தொகு]

தொலைக்காட்சி விநியோகம்[தொகு]

டிடிஹ் சேவை[தொகு]

கேபிள் டி.வி[தொகு]

ஐபில் அணிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Sun TV Network Profit & Loss". Sun TV Network. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.
  2. "Sun, Zee remain top on profitability charts". Rediff.com. 31 December 2013. http://www.rediff.com/money/2009/apr/24sun-zee-tv-top-profitability-chart.htm. 
  3. "Problems in Sun TV Network license renewal". kinindia.net. 2015-06-08. Archived from the original on 2018-08-24. பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
  4. "Sun TV Network win Hyderabad IPL franchise". Wisden India. 25 October 2012 இம் மூலத்தில் இருந்து 25 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170625142249/http://www.wisdenindia.com/cricket-news/sun-tv-network-win-hyderabad-ipl-franchise/32100. 
  5. "Sun Risers to represent Hyderabad in IPL". Wisden India. 18 December 2012 இம் மூலத்தில் இருந்து 25 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170625164705/http://www.wisdenindia.com/cricket-news/sun-risers-represent-hyderabad-ipl/40723. 
  6. Robin Jeffrey (24 March 2000). India's newspaper revolution. C. Hurst & Co. பக். 79,80,114,135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85065-383-7. 
  7. "Sun acquires Dinakaran newspaper". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 7 November 2010.
  8. Judy Franko (13 March 2010). "Tamil daily Dinakaran takes over the lead". exchange4media.com. Archived from the original on 23 January 2013. பார்க்கப்பட்ட நாள் 7 November 2010.
  9. "India's 15 most-read newspapers". rediff.com. 5 May 2010. பார்க்கப்பட்ட நாள் 7 November 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_டிவி_நெட்வொர்க்&oldid=3792023" இலிருந்து மீள்விக்கப்பட்டது