மலேசியப் பிரதமர் துறை
Jabatan Perdana Menteri (JPM) | |
மலேசிய மரபுச் சின்னம் | |
அமைச்சு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | சூலை 1957 |
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | பெர்டானா புத்ரா, மத்திய அரசு நிர்வாக மையம், 62502 புத்ராஜாயா |
பணியாட்கள் | 33,802 (2018) |
ஆண்டு நிதி | RM 11,822,244,400 (2022 - 2023) |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
பொறுப்பான துணை அமைச்சர்கள் |
|
அமைச்சு தலைமை |
|
வலைத்தளம் | www |
மலேசியப் பிரதமர் துறை (ஆங்கிலம்: Prime Minister Department; மலாய்: Jabatan Perdana Menteri (JPM); ஜாவி: جابتن ڤردان منتري) என்பது மலேசியாவின் மத்திய அரசின் அமைச்சகம் ஆகும். அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளின் சேவைகளும்; கொள்கை, சட்டம், ஒழுங்குமுறைகள் மூலமாக முறையாகச் செயல்படுத்தப் படுவதைக் கண்காணிப்பது மலேசியப் பிரதமர் துறையின் நோக்கம் ஆகும்.
இந்தத் துறைக்கு மலேசியப் பிரதமர் தலைமை தாங்குகிறார். அவருக்கு உதவியாகப் பிரதமர் துறை அமைச்சர்கள் உள்ளனர்.
மலேசியப் பிரதமர் துறையில்; மலேசியப் பிரதமர் அலுவலகம் (Prime Minister's Office), மலேசிய துணைப் பிரதமர் அலுவலகம் (Deputy Prime Minister's Office) மற்றும் 50-க்கும் மேற்பட்ட பிற அரசு நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
மலேசியப் பிரதமர் துறை ஜூலை 1957-இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் பெர்டானா புத்ரா (Perdana Putra), புத்ராஜெயாவில் (Putrajaya) உள்ளது.[1]
கட்டமைப்பு
[தொகு]முன்பு இந்த மலேசியப் பிரதமர் துறை, பிரதமர் துறையின் பொது நிர்வாகம் (General Administration) என அழைக்கப்பட்டது.
- புத்தாக்கம் மற்றும் மனிதவள மேலாண்மைப் பிரிவு (Innovation and Human Resource Management Division);
- நிதிப் பிரிவு (Finance Division),
- வளர்ச்சிப் பிரிவு (Development Division),
- கணக்குப் பிரிவு (Accounts Division),
- மேலாண்மைச் சேவைப் பிரிவு (Management Services Division),
- உள் தணிக்கைப் பிரிவு (Internal Audit Division),
- பெருநிறுவனத் தொடர்புப் பிரிவு (Corporate Communications Unit),
- நிகழ்வுகள் மேலாண்மைப் பிரிவு (Events Management Division)
- சட்ட ஆலோசகர் அலுவலகம் (Legal Advisor Office Division)
என இத்துறை ஒழுங்கமைக்கப்பட்டு உள்ளது.[2]
அனைத்து ஒன்பது (9) பிரிவுகளும் மூத்த துணைப் பொதுச் செயலாளரிடம் (Senior Deputy Secretary-General) அறிக்கைகளைச் சம்ர்ப்பிக்கின்றன. இவருக்கு துணைப் பொதுச் செயலாளர் (நிதி மற்றும் மேம்பாடு) மற்றும் துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை) ஆகிய இரு துணைப் பொதுச் செயலாளர்களால் உதவிகள் செய்யப் படுகின்றன.[3]
அமைப்பு
[தொகு]- மலேசியா பிரதமர்
- பிரதமர் துறை அமைச்சர்
- பிரதமர் துறையில் துணை அமைச்சர்
- மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர்
- மூத்த துணைப் பொதுச் செயலாளர்
- மூத்த துணைப் பொதுச் செயலாளர் அதிகாரத்தின் கீழ்
- சட்ட ஆலோசகர் அலுவலகம்
- உள் தணிக்கை பிரிவு
- 1 மலேசியா அரசு ஊழியர்கள் வீட்டு வசதி
- பெருநிறுவனத் தொடர்புப் பிரிவு
- ஒருமைப்பாடு அலகு
- துணைப் பொதுச் செயலாளர் (நிதி மற்றும் வளர்ச்சி)
- திட்ட அபிவிருத்தி பிரிவு
- கணக்கு பிரிவு
- நிதி பிரிவு
- துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
- புதுமை மற்றும் மனித வள மேலாண்மை பிரிவு
- மேலாண்மை சேவைகள் பிரிவு
- நிகழ்வு மேலாண்மை பிரிவு
- மூத்த துணைப் பொதுச் செயலாளர் அதிகாரத்தின் கீழ்
- மூத்த துணைப் பொதுச் செயலாளர்
- மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர்
- பிரதமர் துறையில் துணை அமைச்சர்
- பிரதமர் துறை அமைச்சர்
(29 சனவரி 2019 நிலவரப்படி)
பிரதமர் துறையின் கீழ் உள்ள நிறுவனங்கள்
[தொகு][https://jpm.gov.my/ms/ மலேசியப் பிரதமர் துறையின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[4]
- இசுதானா நெகாரா மலேசியா - (National Palace) (இணையத்தளம்)
- மலேசியப் பிரதமர் அமைச்சு (PMO) (இணையத்தளம்)
- மலேசிய துணைப் பிரதமர் அமைச்சு - (Deputy Prime Ministers' Office)
- மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் - (Chief Secretary's Office) (இணையத்தளம் பரணிடப்பட்டது 2021-04-30 at the வந்தவழி இயந்திரம்)
- பொது நிர்வாகம் பரணிடப்பட்டது 2020-12-04 at the வந்தவழி இயந்திரம்
- கருத்துரைக் குழு
- மலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர் - (Attorney General of Malaysia) (AGC) (இணையத்தளம்)
- அமைச்சரவை, அரசியலமைப்பு மற்றும் அரசுகளுக்கு இடையிலான விவகாரங்கள் பிரிவு (BKPP)
- விழாக்களின் பிரிவு மற்றும் பன்னாட்டு மாநாடுகள் செயலகம் - (BIUPA)
- வணிகர்கள், சிறு வணிகர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறையின் வளர்ச்சி - (UPPPKWH)
- கல்வி சேவை ஆணையம் - Education Service Commission - (SPP)[5]
- மலேசிய தேர்தல் ஆணையம் (SPR) (Website)[5]
- கூட்டாட்சி பிரதேசங்களின் அமைச்சு - Federal Territories Department (JWP)
- கூட்டாட்சி பிரதேசங்களின் விளையாட்டுத்துறை மன்றம் (MSWP)
- லபுவான் நகராட்சி* (PL) (இணையத்தளம்)
- கம்போங் பாரு வளர்ச்சிக் கழகம்* (PKB)
- கோலாலம்பூர் மாநகராட்சி* (DBKL) (இணையத்தளம்)
- கூட்டாட்சி பிரதேசங்களின் நிலம் மற்றும் சுரங்கங்களின் இயக்குநர் அலுவலகம் பரணிடப்பட்டது 2023-12-22 at the வந்தவழி இயந்திரம் (PTGWP)
- புத்ராஜெயா நகராட்சி* (PPj) (இணையத்தளம்)
- கூட்டாட்சி பிரதேசங்களின் சிரியா வழக்குத் துறை (JAPENSWP)
- அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு (ICU)
- நீதிபதிகள் நியமன ஆணையம் (JAC)[5]
- சட்ட விவகாரப் பிரிவு (BHEUU)
- சட்ட உதவித் துறை (JBG)
- மலேசிய நொடிப்புநிலைகள் துறை (MdI)
- சட்ட மற்றும் நீதித்துறை பயிற்சி நிறுவனம் (ILKAP)
- மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (SPRM)[5] (இணையத்தளம்)
- மலேசிய குடிமை தற்காப்பு துறை (APM) (இணையத்தளம்)
- மலேசியா இசுலாமிய மேம்பாட்டுத் துறை (JAKIM)[6]
- அல் இஜ்ரா தொலைக்காட்சி** (TV Alhijrah) (இணையத்தளம்)
- வக்காப், ஜகாத் மற்றும் அஜ் துறை (JAWHAR)
- கூட்டாட்சி பிரதேசங்களின் இசுலாமியப் பணிகள் துறை (JAWI)
- மலேசியாவின் இசுலாமிய தக்வா அறக்கட்டளை** (YADIM)
- மலேசியாவின் இசுலாமிய பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை** (YaPEIM)
- மலேசியாவின் வக்காப் அறக்கட்டளை** (YWM)
- மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவு (BHEPMM)
- மலேசிய சிரியா நீதித்துறை (JKSM)
- கூட்டாட்சி பிரதேசங்களின் சிரியா நீதிமன்றம் (MSWP)
- சபா மாநில சிரியா நீதித்துறை (JKSN Sabah) (இணையத்தளம்)
- தேசிய தணிக்கை துறை (JAN)[5]
- தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA)
- அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் (EAIC)[5]
- மலேசிய ஒருமைப்பாட்டு நிறுவனம்** (INTEGRITI)
- தேசிய நிதிக்குற்ற எதிர்ப்பு மையம் (NFCC)
- பொதுப் புகார்கள் பணியகம் (BPA/PCB)
- மலேசிய தேசியப் பாதுகாப்பு மன்றம் (MKN) (இணையத்தளம்)
- சபா கூட்டரசு செயலாளர் அலுவலகம் (PSUP Sabah)
- சரவாக் கூட்டரசு செயலாளர் அலுவலகம் (PSUP Sarawak)
- அரசுப் பாதுகாப்பு தலைமை அதிகாரி அலுவலகம் பரணிடப்பட்டது 2010-03-09 at the வந்தவழி இயந்திரம் (CGSO)
- மலேசிய உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம்[7] (PKPMP)
- முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அலுவலகம் (இணையத்தளம்)
- முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி அலுவலகம் (PTAB) (Website)
- முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அலுவலகம்
- முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் அலுவலகம்
- முன்னாள் பிரதமர் இசுமாயில் சப்ரி யாகோப் அலுவலகம்
- ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் (PMBRR) (இணையத்தளம்)
- கூட்டாட்சி பிரதேசங்களின் முப்தி அலுவலகம் (PMWP)
- சொத்து மேலாண்மைப் பிரிவு (BPH)
- பாதுகாப்பு பிரிவு பரணிடப்பட்டது 2021-01-17 at the வந்தவழி இயந்திரம்
- மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவு பரணிடப்பட்டது 2021-01-29 at the வந்தவழி இயந்திரம் (MITRA)
- பொது-தனியார் கூட்டாண்மை பிரிவு (UKAS)
- மலேசிய பொதுச் சேவைகள் ஆணையம் (SPA)[5][8] (இணையத்தளம்)
- பொது சேவைத் துறைt (JPA)
- மலேசிய பொது நிர்வாக நிறுவனம் (INTAN)
- பிரதமர் துறையின் ஆய்வுப் பிரிவு
- சபா மற்றும் சரவாக் விவகாரப் பிரிவு (BHESS)
- கூட்டரசுப் பிரதேசங்களின் நிலவளச் செயலகம்
- பகிரப்பட்ட வளங்களின் அமலாக்கப் பிரிவு (SEPADU)
- சிறுகடன் மேம்பாட்டு பிரிவு[9]
- உத்திநோக்கு சிறப்புப் பிரிவு(UKS)
- கூட்டாட்சி பிரதேசங்களின் இசுலாமிய வழக்குகள் மன்றம் பரணிடப்பட்டது 2021-05-06 at the வந்தவழி இயந்திரம்* (MAIWP)
- MAIWP ஜகாத் சேகரிப்பு மையம்** (PPZ-MAIWP)
- மலேசியாவின் மனித உரிமை ஆணையம்* (SUHAKAM)[5] (இணையத்தளம்)
- தேசிய புத்தாக்க நிறுவனம்* (AIM)
- தாபோங் அஜி* (TH) (இணையத்தளம்)
- ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுநர்களின் உயர்கல்வி உதவித்தொகை நிதி*
- உத்திசார் மற்றும் பன்னாட்டு ஆய்வுகளுக்கான நிறுவனம்** (ISIS)
- இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிரான பன்னாட்டுப் பல்தரப்புக் கூட்டாண்மை** (IMPACT)
- இணக்கத்தீர்வுக்கான கோலாலம்பூர் வட்டார மையம்** (KLRCA)
- மலேசிய குடும்ப அறக்கட்டளை** (YKM)
- மலேசிய இசுலாமிய புரிதல் நிறுவனம்** (IKIM)
- தேசிய சட்ட உதவி அறக்கட்டளை** (YBGK) (இணையத்தளம்)
- அமானா ராயா நிறுவனம்** (ARB)
- பூமிபுத்ரா முதலீட்டு அறக்கட்டளை** (YPB)
- பெல்டா* (FELDA) (இணையத்தளம்)
- பெல்டா ஒழுங்குமுறை பிரிவு (BKSF)
- வீடுமனை முதலீட்டு நிறுவனம்** (PHB) (இணையத்தளம்)
- பெர்மோடாலான் நேசனல்** (PNB) (இணையத்தளம்)
- பெட்ரோனாஸ்** (PETRONAS) (இணையத்தளம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Government Directory: Prime Minister's Department". Office of the Prime Minister of Malaysia. 8 July 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
- ↑ "Departments and Agencies under Prime Minister's Department". Prime Minister's Department. Archived from the original on 29 January 2019. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
- ↑ "Committee under Prime Minister's Department". Prime Minister's Department. Archived from the original on 29 January 2019. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
- ↑ "Jabatan dan Agensi di bawah JPM". Jabatan Perdana Menteri. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 இந்த நிறுவனம் பிரதமர் துறைக்கு சொந்தமானது; ஆனால் ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் அறிக்கைகளை வழங்குகிறது.
- ↑ Darul Quran (DQ) and Malaysian Institute of Islamic Training (ILIM) are under the jurisdiction of this Department.
- ↑ Administration of all judicial courts, including Federal Court of Malaysia, Court of Appeal of Malaysia and High Courts of Malaysia are under the jurisdiction of this Office.
- ↑ Legal and Judicial Service Commission (SPKP) is included.
- ↑ It is also known as Secretariat for the Advancement of Malaysian Entrepreneurs (SAME).
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Prime Ministers Office (Malaysia) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Prime Minister's Department official portal பரணிடப்பட்டது 2020-12-04 at the வந்தவழி இயந்திரம்