உள்ளடக்கத்துக்குச் செல்

சீமைத்துத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீமைத்துத்தி
Marshmallow (சீமைத்துத்தி)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. officinalis
இருசொற் பெயரீடு
Althaea officinalis
L.[1]
வேறு பெயர்கள் [1]
  • Althaea kragujevacensis Pančić ex Diklić & Stevan.
  • Althaea micrantha Wiesb. ex Borbás
  • Althaea sublobata Stokes
  • Althaea taurinensis DC.
  • Althaea vulgaris Bubani
  • Malva althaea E.H.L.Krause
  • Malva maritima Salisb.
  • Malva officinalis (L.) Schimp. & Spenn. ex Schimp. & Spenn.

சீமைத்துத்தி (தாவரவியல் பெயர்: Althaea officinalis[2], ஆங்கிலம்: marsh mallow[3], அல்லது marshmallow) என்பது பூக்கும் தாவரமாகும். இது “மால்வேசியே” என்ற குடும்பத்தின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளது. இக்குடும்பத்தில் மொத்தம் 246 பேரினங்கள் உள்ளன. அதிலுள்ள பேரினமான “அல்தியா” என்பதில் 178 இனங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இனமாக, இதன் பெயர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாவரயினத்தினை கண்டறிந்தவர் ‘கரோலஸ் லின்னேயஸ்[4] ஆவார். இவ்வினத்திற்கு, 15 வேறுபெயர்கள்[5] உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது..

வாழிடங்கள்

[தொகு]

வளரியல்புகள்

[தொகு]

இவ்வினம், பல்லாண்டுத் தாவரம் ஆகும். இலையுதிர்காலத்தில் மட்டும் தண்டுகளுடன் காணப்படும், இதன் தண்டு 180 cm (6 அடி) உயரமாக வளர்கிறது. ஒரு சில பக்கவாட்டு கிளைகள் மட்டுமே காணப்படுகின்றன. முழு தாவரமும் மென்மையான முடிகளுடன் இருக்கின்றன. இலைகள், பரந்த முக்கோணமாகவும், முட்டை வடிவத்திலும் இருக்கின்றன. பெரும்பாலும் 3-5 மேலோட்டமான மடல்கள் இருக்கின்றன. இலைகள் எதிரெதிராக அமைந்துள்ளன. இலையடிச் செதில்கள் இல்லை.[6][7] பூந்துணர்கள் இலைக்கோணத்தில் அமைந்துள்ளன. பூவிதழ் இளஞ்சிவப்பாகவும், பூத்துள் பைகள் சிறுநீரக வடிவத்தில் ஒரே பகுதியாக அமைந்து நுனியில் பூத்தூள் பைகள் இருக்கின்றன.[8] [9] பூக்கள் ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் பூக்கின்றன.இதன் பழங்கள் உருண்டையாக தோன்றுகின்றன.

பயன்கள்

[தொகு]
இலைகளும், பூக்களும் உணவில் பயனாகிறது
இதன் வேர்கள்
  • இத்தாவரம் தோட்டங்களில் வளர்க்கப்படும் அலங்காரத் தாவரமாகத் திகழ்கிறது.[10]
  • பண்டைய உரோமானியர்கள் தங்களது உணவில் இதனைப் பயன்படுத்தினர்.
  • பதினாறாம் நூற்றாண்டில், எகிப்தியர்களும் இதனை உணவில் பயன்படுத்தினர்.
  • சிரியாவின் ஏழை மக்கள், இதனுடன் வெங்காயம், வெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி சமைத்துண்டனர்.[11]
  • இலைக் கொழுந்துகள் சமையலுக்குப் பயன்பட்டன. பூ மொட்டுகள் ஊறுகாய் போன்று பதப்படுத்தப்பட்டு பயன்படுகிறது.[12] இதன் வேர்கள் உரிக்கப்பட்டு, துண்டுகளாகப்பட்டு, வேகவைக்கப்படுகின்றன. பிறகு இதனுடன் இனிப்பு கலந்து சுவைக்கப் படுகிறது.
  • முட்டை வெண்கருவிற்கு மாற்றாக, இத்தாவரத்தின் பெரும்பகுதிகளை, நீர் சேர்த்து கொதிக்க வைக்கும் போது கிடைக்கும் பண்டம் பயனாகிறது.[12]
  • பெர்சிய இனிப்பான அல்வா தயாரிக்கவும் பயனாகிறது.
  • சீதமென்சவ்வு சிதைந்து தோன்றும் எரிச்சலைக் குணப்படுத்த பாரம்பரிய மருத்தாகப் பயன்படுகிறது.[13] வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகிய உடல் நோய்களைக் குணப்படுத்த வாய்க்கொப்பளிப்பு நீராகப் பயன்படுத்தப்படுகிறது.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Althaea officinalis". Tropicos. Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச்சு 2024.
  2. "Althaea officinalis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச்சு 2024.
    "Althaea officinalis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச்சு 2024.
  3. "Althaea officinalis". RHS. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச்சு 2024.
  4. IPNI
  5. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:558872-1#synonyms
  6. Harrap, Simon (2013). Harrap's Wild Flowers. London: Bloomsbury Wildlife. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4729-6648-3.
  7. Poland, John; Clement, Eric (2009). The Vegetative Key to the British Flora. Southampton: John Poland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9560144-0-5.
  8. Stace, C.A. (2019). New Flora of the British Isles. Suffolk. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5272-2630-2.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  9. Martin Crawford, How to grow Perennial Vegetables, Green Books, 2012
  10. https://www.gardeningknowhow.com/ornamental/flowers/marshmallow-plant/marshmallow-plant-growing.htm
  11. Grieve. A Modern Herbal. Penguin 1984 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-046-440-9
  12. 12.0 12.1 Elias, Thomas S.; Dykeman, Peter A. (2009) [1982]. Edible Wild Plants: A North American Field Guide to Over 200 Natural Foods. New York: Sterling. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4027-6715-9. இணையக் கணினி நூலக மைய எண் 244766414.
  13. Cavero, R (2 December 2014). "Medicinal plants used for respiratory affections in Navarra and their pharmacological validation". Journal of Ethnopharmacology 158 (Part A): 216–220. doi:10.1016/j.jep.2014.10.003. பப்மெட்:25311273. 
  14. "John S. Williamson & Christy M. Wyandt 1997. Herbal therapies: The facts and the fiction. Drug topics" (PDF). Archived from the original (PDF) on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமைத்துத்தி&oldid=3912850" இலிருந்து மீள்விக்கப்பட்டது