வாய்ப் புண்
Oral ulcer | |
---|---|
கீழ் உதடில் உள்ள வாய்ப்புண் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இரையகக் குடலியவியல் |
ஐ.சி.டி.-9 | 528.9 |
நோய்களின் தரவுத்தளம் | 22751 |
மெரிசின்பிளசு | 001448 |
ம.பா.த | D019226 |
வாய்ப்புண் என்பது வாயினுள் திறவுண்டு காணப்படும் புண் ஆகும். இது மெல்லிய சவ்வு அல்லது உதடுகள் அல்லது வாயைச் சுற்றியுள்ள புறத்தோலியத்தில் ஏற்படும் பிளவினால் உண்டாகிறது. பலவகைப்பட்ட வாய் புண்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையான வாய்ப்புண்களின் தொடர்புடைய காரணங்களாவன: உடல் ரீதியான அல்லது வேதிப்பொருள் ரீதியான விபத்து, நுண்ணியிரிகளால் ஏற்படும் நோய்த்தொற்று, மருத்துவ நிலைகள் அல்லது மருந்துகள், புற்றுநோய் சார்ந்த மற்றும் குறிப்பிடப்படாத செயல்முறைகள். வாயில் புண் ஏற்பட்டதும், புண்ணின் காரணமாக வீக்கம் மற்றும்/அல்லது இரண்டாம்நிலை நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். கடைவாய்ப்புண் மற்றும் குளிர்மை புண்கள் அல்லது காய்ச்சலினால் ஏற்படும் கொப்புளங்கள் ஆகியவை வாய்ப்புண்ணின் மிகவும் பொதுவான வகைகளாகும். உதட்டை சுற்றி வரும் குளிர்மை புண்கள், சிற்றக்கி வைரசினால் ஏற்படுகிறது.[1][2]
காரணங்கள்
[தொகு]விபத்து
[தொகு]சிறிய உடல்ரீதியான காயங்கள்
[தொகு]வாயில் ஏற்படும் சிறிய காயங்களே (அடிபடுதல்), வாய் புண்கள் ஏற்பட பொதுவானக் காரணமாக உள்ளது. பல்லின் கூர்மையான ஓரங்கள், திடீரென்று கடித்துக்கொள்ளுதல் (இது குறிப்பாக கூர்மையான காரப்பற்கள் அல்லது ஞானப்பற்களினால் ஏற்படலாம்), கூர்மையான, உராய்வுத்தன்மையுடைய அல்லது அளவுக்கு அதிகமான உப்புள்ள உணவு, மோசமாக ஒட்டியுள்ள பொய்ப்பற்கள், பல்கவ்விகள் அல்லது பல்துலக்கியினால் ஏற்படும் காயம் போன்றவற்றினால் வாயின் மென் சவ்வு மேற்புறத்தில் புண்கள் ஏற்படலாம். காயத்திற்கான காரணி அகற்றபட்டுவிட்டால் (எடுத்துக்காட்டாக, மோசமாக பொருத்தப்பட்டிருக்கும் பொய்ப்பற்கள் அகற்றப்படுதல் அல்லது மாற்றப்படுதல்), புண்கள் பொதுவாக மிதமான வேகத்தில் குணமாகிவிடும்.[1].
இந்த புண்கள், பற்களில் வேலைப்பாடு செய்த பிறகு ஏற்படுவது மிகவும் பொதுவானதாகவும் உள்ளது. வாயின் மென்மையான திசுக்களில் சிராய்ப்புகள் ஏற்படும் போது புண்கள் ஏற்படுகின்றன. மென்மையான சவ்வு திசுக்களுக்கு காயங்கள் ஏற்படும் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, பற்களில் வேலைப்பாடு செய்வதற்கு முன்னதாக பல் மருத்துவர் பெட்ரோலிய ஜெல்லியின் பாதுகாப்பான இழையைத் தடவலாம்.
இரசாயன காயங்கள்
[தொகு]வலி நீக்கி மருந்து (ஆசுபிரின்) அல்லது ஆல்கஹால் போன்ற இராசயனங்கள், வாயின் மென் சவ்வில் படும் போது, திசுக்கள் சிதைவும் உரியவும் செய்து புண்ணுள்ள மேற்பரப்பை உருவாக்கலாம். சோடியம் லாரில் சல்பேட், பெரும்பாலான பல் துலக்கிகளில் காணப்படும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும். இது வாய்ப் புண்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.
நோய்த்தொற்று
[தொகு]வைரசு, பூஞ்சை மற்றும் பாக்டீரியா சார்ந்த செயல்முறைகள் வாய்ப் புண் ஏற்பட வழிவகுக்கலாம். கைகளைக் கழுவாமல் வெடிப்புற்ற உதடுகளை தொடுவதன் மூலமாகவும் வாய்ப் புண்கள் ஏற்படுகின்றன. உதடுகளின் வெடிப்பினால் ஏற்பட்ட சிறிய திறந்த புண்களினுள் கைகளில் உள்ள பாக்டீரியா நுழைவதனாலேயே இந்தப் புண்கள் ஏற்படுகின்றன.[1]
தீநுண்மி (வைரசு) சார்ந்தவை
[தொகு]தீநுண்மிகளில் சிற்றக்கி வைரசு மிகவும் பொதுவானதாகும். இது மீண்டும் மீண்டும் ஏற்படும் அக்கிவடிவ புண்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றது. இதனால் பொதுவாக வலியுடனும், வெடிக்கும் தன்மை கொண்ட பன்மடங்கு கொப்புளங்களாகவும் வாயில் புண் வரும். நீர்க்கோலவான் சின்னம்மை (சின்னம்மை, குளிர் நடுக்கம்), காக்சாக்கி வைரசு மற்றும் இதனுடன் தொடர்புடைய துணைவகைகள் வாய் புண்ணை ஏற்படுத்தும் சில வைரசு சார்ந்த செயல்பாடுகளாகும். எச்.ஐ.வி நோய் எதிர்ப்பு குறைப்பாடை ஏற்படுத்தி, தருணத் தொற்றுகள் அல்லது உடற்கட்டிகளைப் பெருக்கமடையச் செய்கிறது.[2]
பாக்டீரியா சார்ந்தவை
[தொகு]மைக்கோ நுண்ணுயிர் காசநோய் (காசநோய்) மற்றும் ட்ரிபோனிமா பாலிடம் (கிரந்தி (சிபிலிசு)) போன்றவை பாக்டீரியா சார்ந்த புண்ணை ஏற்படுத்துவதற்குக் காரணமாக உள்ளது.[2]
காற்றில் வளரும் ஸ்ட்ரெப்டோகோசி, நீசீரியா, அக்டினோமைசுகள் , ஸ்பைரோசெட்கள் மற்றும் வாய்-பெருங்குடல் வாழ் தீங்கற்றநுண்ணுயிர் தொற்று இனங்கள் போன்ற சாதாரண பாக்டீரியா சார்ந்த இணைவுகளினால் ஏற்படும் தருணம் சார்ந்த செயல்பாடு, வாய்ப் புண்ணின் பாதிப்பினை நீட்டிக்கலாம்.[3]
பூஞ்சை சார்ந்தவை
[தொகு]காக்சைட்டையோட்சு இமிட்டிசு (பள்ளத்தாக்கு காய்ச்சல்) க்ரிப்டோகாக்கசு நியோபார்மன்சு (க்ரிப்டோகோக்கோசிசு), பிளாசுடோமைசெசு டெர்மடைடிடிசு "வட அமெரிக்க பிளாசுடோமைக்கோசிசு" ஆகியவை வாய் புண்ணுக்கு காரணமான பூஞ்சை சார்ந்த காரணிகளாகும்.[2]
முதற்கலவுருக்கள் (புரோட்டோசோன்கள்)
[தொகு]ஓற்றையணு உயிரி கிஸ்டோலிடிக்கா என்பது ஓரணு ஒட்டுண்ணியாகும். இது நீர்க்கட்டிகளாக உருவெடுத்து சிலநேரங்களில் வாய்ப் புண்கள் ஏற்படக் காரணமாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலம்
[தொகு]ஆப்தோசு புண்களின் காரணிகள் பல்வேறு நோய் செயல்முறைகளின் விளைவாக இருக்கின்றன என்று பல ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இவற்றில் ஒவ்வொன்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தினால் செயலூக்கப்படுகின்றன.[2]
உடலால் கண்டுபிடிக்க முடியாத வேதிப்பொருட்கள் உடலை தாக்கும் போது ஆப்தோசு புண்கள் உருவாகின்றன என்று கருதப்படுகிறது.
நோய் எதிர்ப்பு குறைப்பாடு
[தொகு]நோய் எதிர்ப்பு குறைபாட்டின் காரணத்தினால் வாய்ப் புண்கள் திரும்ப திரும்ப ஏற்படலாம். வாயின் சீதச்சவ்வுகளில் நோய் எதிர்ப்பு புரதங்களின் அளவுகள் குறைந்து காணப்படுவதை இது குறிக்கிறது. வேதிச்சிகிச்சை, எச்.ஐ.வி மற்றும் ஒற்றை உட்கரு அணுமிகைப்பு ஆகிய அனைத்தும் நோய் எதிர்ப்பு குறைப்பாடு ஏற்படக் காரணமாகிறது. இந்த நோய் எதிர்ப்பு குறைப்பாட்டின் வெளிப்பாடாக வாய்ப் புண்கள் ஏற்படுகின்றன.
தன் தடுப்பாற்றல்
[தொகு]வாய்ப் புண் ஏற்படுவதற்கு தன் தடுப்பாற்றலும் ஒரு காரணமாக உள்ளது. சீதச்சவ்வு குமிழ்ச்சருமமனையம் என்பது தோல் மேல்புறச் செல் தளச்சவ்விற்கு ஏற்படும் ஓர் தன் தடுப்பாற்றல் விளைவாகும். வாய் சீதச்சவ்வில் செதிலுறிவு/புண் ஏற்பட இது காரணமாகிறது.
ஒவ்வாமை
[தொகு]கனிமப் பூச்சு போன்ற ஒவ்வாமை ஊக்கிகளுடன் தொடர்பு ஏற்படுவதன் காரணத்தினால் சீதச்சவ்வில் புண்கள் ஏற்படுகின்றன.
உணவுத் திட்டம்
[தொகு]வைட்டமின் சி குறைப்பாட்டினால் கேவிநோய் ஏற்படலாம். இந்நோய் காயங்கள் ஆறுவதை தடை செய்து புண்கள் உருவாக வழிவகுக்கிறது.[2] இதேப்போன்று வைட்டமின் பி12, துத்தநாகம்[4] போன்ற குறைபாடுகள் வாய்ப் புண் ஏற்படுவதுடன் தொடர்புடையதாக அறியப்பட்டுள்ளது.
உடற்குழி நோய், புண்கள் ஏற்படுவதற்கு ஒரு பொதுவானக் காரணமாக உள்ளது. இந்த சூழலில் கோதுமை, ரை அல்லது வாற்கோதுமை போன்றவற்றை உட்கொள்ளுவதால் நாட்பட்ட வாய்ப் புண்கள் ஏற்படலாம். வாய்ப் புண்கள் ஏற்படுவதற்கு பசையம் உணர்திறன் காரணமாக இருந்தால் பசையம் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். பெரும்பாலான ரொட்டி வகைகள், பசைக்களிம்பு (பாசுதா), வேகவைத்த உணவுப்பொருள், பீர்கள் போன்ற உணவுகளை தவிர்த்தல் அவசியம். இதற்கு ஈடு செய்யும் வகையில், பசையம் இல்லாத வகைகளும் கிடைக்கக்கூடியதாக உள்ளது. டையட் கோலா மற்றும் சர்க்கரையல்லாத மெல்லும் கோந்து போன்ற செயற்கையான சர்க்கரைகளினாலும் வாய் புண்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ஃப்லோவெண்ட்
[தொகு]ஃப்லோவெண்டை பயன்படுத்திய பிறகு வாயை சரியாக கழுவாமல் விட்டுவிட்டால் வாய்ப் புண்கள் ஏற்படலாம்.[மேற்கோள் தேவை]
புற்றுநோய்
[தொகு]வாய்ப் புற்றுநோய்களின் காரணத்தினால் புண்கள் ஏற்படலாம். இதில் நைவுப்புண்ணின் மையத்தில் இரத்த ஓட்டம் தடைபட்டு அழுகிவிடுவதன் காரணத்தினால் புண்கள் ஏற்படுகின்றன. செதிள் உயிரணு புற்று, புகையிலை காரணத்தினால் ஏற்படும் நோய்களில் ஒன்றாகும்.
வாய்ப் புண்களுடன் தொடர்புள்ள மருத்துவ நிலைகள்
[தொகு]பின்வரும் மருத்துவ நிலைகள் வாய் புண்களுடன் தொடர்புடையதாக உள்ளன:
- பெசெட்ஸ் நோய்
- நீர்க்கொப்புளம் குமிழ்ச்சருமமனையம்
- செலியக் நோய் (பசையம் உணர்திறன்)
- க்ரோன்ஸ் நோய்
- ஜின்ஜிவோஸ்டோமாடிடிசு
- வெண்படல்
- வாயில் ஏற்படும் கொப்புளத் தோல் நோய்
- செம்முருடு
- நியூட்ரோபில் அணுக்குறை
- வாய் வெண்புண்
- பெருங்குடல் அழற்சி
- தொற்று தன்மை கொண்ட ஒற்றை உட்கருஅணுமிகைப்பு
தடுப்பு முறைகள்
[தொகு]விபத்தினால் ஏற்படும் புண்களுக்கு, விபத்து ஏற்படும் மூலத்தை தவிர்ப்பதனால் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால் விபத்து போன்ற நிகழ்வுகள் தற்செயலாக ஏற்படுவதனால், இந்த வகை தடுப்பு முறை நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது.
விபத்தின் காரணமாக வாயில் காயம் (கடித்துக்கொள்ளுதல் மற்றும் பல) ஏற்பட்ட தனிநபருக்கு சந்தர்ப்பவாத பாக்டீரியா சார்ந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருந்தால், பாக்டீரியாப்பகை வாய்க்கழுவிகளின் மூலம் நேரடியாகக் காயத்தை கழுவுவதால் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். இந்த வாய்க்கழுவிகளை 12 மணி நேரம் இடைவெளிவிட்டு 2 நாட்களுக்கு பயன்படுத்தவேண்டும். ஒரு நிமிடத்திற்கு வாயை வாய்கழுவிகளினால் கழுவவேண்டும். கரைசலை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஏனெனில், பாக்டீரியா எதிர் வாய்க்கழுவிகள் ஒரு முழு நிமிடமும் வாயினுள் இருக்கும் என்பதனால் நாட்பட்ட சுவை உணர்வு குறைவு மற்றும் மற்றபடி விரும்பத்தக்க நுண்ணுயிரிகளின் சாத்தியமான குறைவு போன்ற தீங்குவிளைவிக்கக் கூடிய தாக்கங்களை இது ஏற்படுத்தும். ஒரு மில்லிமீட்டர் அளவு சொட்டுகள் போதுமானதாக இருக்கிறது. பொதுவாகக் காயம் ஏற்பட்ட 3 மணிநேரங்களுக்குள் முதல் சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சிகிச்சைமுறை
[தொகு]வாய்ப் புண்களுக்கு முதல்நிலை அணுகுமுறையாக நோய்க்குறி சார்ந்த சிகிச்சை அமைகிறது. புண் ஏற்பட்டதற்கான காரணங்கள் அறியப்பட்டவுடன், அந்த நிலைக்கான சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும். போதுமான அளவு வாயை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமாகவும் அறிகுறிகளிலிருந்து விடுபடலாம். இயல்புமாறா கிசுட்டமின் எதிர்ப்பிகள், அமில எதிர்ப்பிகள், கார்ட்டிக்கோஸ்டீராய்டுகள் அல்லது வலியுள்ள புண்களை தணிக்கும் வகையில் உள்ள மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் புண்களின் வலி அறியாமல் இருக்கலாம். பாராசெட்டமால் அல்லது இபுப்ரோபென் மற்றும் ஓரிடத்திற்குரிய உணர்ச்சிநீக்கி லாசென்ஞ்கள் போன்ற வாய்க்குரிய வலிநிவாரணிகளை பயன்படுத்தலாம். மென்ஸோகெயின் (வலி நிவாரணி) போன்ற வண்ணப்பூச்சுகள் அல்லது வாய் கழுவிகளும் வலியை குறைக்க உதவும். காரமான மற்றும் சூடான உணவுகளை தவிர்த்தலும் வலியை குறைக்கும். உப்புநீரை (வெதுவெதுப்பான உப்பு தண்ணீர்) கொண்டு வாயை கழுவினாலும் கூட வலி குறையும். புண்ணின் மேல் ஒரு சிறிய அளவு காடியை தடவுவதன் மூலம் சிறிது நேரத்திற்கு வலியிலிருந்து விடுபடலாம். இது ஒரு பழங்காலத்து தீர்வு முறையாகும். மூன்று வாரங்களுக்கும் மேலாக புண்கள் இருந்தால், ஒரு மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Mouth ulcers". North East Valley Division of General Practice. பார்க்கப்பட்ட நாள் 2006-06-18.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Sapp, J. Phillip (2004). Contemporary Oral and Maxillofacial Pathology. Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-323-01723-1.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ வாய் சார்ந்த துவாரத்தின் தீவிரமான மென்சவ்வு நோய்த்தொற்றுகளின் சிகிச்சைக்கான பாக்டீரியாப்பகை ஏஜெண்டுகளின் நசிவு தொடர்பான வரண்ட மருந்தளவு வடிவங்கள் பரணிடப்பட்டது 2017-02-11 at the வந்தவழி இயந்திரம் யு.எஸ் பேடெண்ட் ஆஃபிஸ் ஃபுல்-டெக்ஸ்ட் அண்டு இமேஜ் டேட்டாபேஸ், 2001 ஆம் ஆண்டு ஜூன் 19ம் தேதி.
- ↑ Orbak R, Cicek Y, Tezel A, Dogru Y (March 2003). "Effects of zinc treatment in patients with recurrent aphthous stomatitis". Dent Mater J 22 (1): 21–9. பப்மெட்:12790293.
- ↑ Van Voorhees, BW (2007-01-18). "Mouth Ulcers - Treatment". MedlinePlus. பார்க்கப்பட்ட நாள் 2008-05-08.