இந்தி விக்கிப்பீடியா
Appearance
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | இந்தி மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.hi.wikipedia.org/ |
இந்தி விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இந்தி மொழி பதிப்பு ஆகும். சூலை மாதம் 2003ல் இது தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி மூன்றாவது[2] இடத்தில் இருந்தது இந்தி விக்கி. இந்திய மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் இடத்தில் இந்தி விக்கிப்பீடியா இருக்கின்றது.
நவம்பர் 15, 2024 அன்று, 1,63,541 கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது.
காலக்கோடு
[தொகு]- 2003 சூலை 11 – இந்தி விக்கிப்பீடியா தொடக்கம்
- 2005 சனவரி 25 – கட்டுரைகள் எண்ணிக்கை 1,000
- 2007 சனவரி 16 – கட்டுரைகள் எண்ணிக்கை 5,000.
- 2007 மார்ச் 14 – கட்டுரைகள் எண்ணிக்கை 10,000.
- 2007 திசம்பர் 6 – கட்டுரைகள் எண்ணிக்கை 15,000.
- 2008 மே 29 – கட்டுரைகள் எண்ணிக்கை 20,000.
- 2008 சூலை 11 – இந்தி விக்கிப்பீடியா தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவு
- 2009 மே 9 – கட்டுரைகள் எண்ணிக்கை 30,000.
- 2009 செப்டம்பர் 8 – இந்திய விக்கிகளில் முதலிடத்தைப் பெற்றது.
- 2009 செப்டம்பர் 14 – கட்டுரைகள் எண்ணிக்கை 50,000.
- 2010 பிப்ரவரி 13 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 25,000
- 2010 சூன் 20 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 30,000
- 2010 நவம்பர் 26 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 37,000
- 2011 சனவரி 29 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 40,000
- 2011 ஆகஸ்டு 14 – பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 50,000.
- 2011 ஆகஸ்டு 30 – 100,000க்கும் அதிகமான கட்டுரைகள்
அடையாளச்சின்னம்
[தொகு]2004–2010 | 2010– |
---|
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இந்தி விக்கிப்பீடியாப் பதிப்பு