விவேகானந்தா பிக்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேகானந்தா பிக்சர்ஸ்
நிறுவுகை1977
தலைமையகம்இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
முதன்மை நபர்கள்திருப்பூர் மணி
திருப்பூர் விவேக்
உற்பத்திகள்தயாரிப்பு நிறுவனம்
திரைப்பட விநியோகஸ்தர்

விவேகானந்த பிக்சர்ஸ் (Vivekananda Pictures) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சென்னையை மையமாகக் கொண்ட ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இந்த தயாரிப்பு நிறுவனம் 1977 ஆம் ஆண்டில் திருப்பூர் மணியால் நிறுவப்பட்டது. அவர் தனது பதாகையின் கீழ் சுமார் முப்பது திரைப்படங்களைத் தயாரித்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு, திருப்பூர் விவேக்கினால் கைதி என்ற பெருவெற்றித் திரைப்படம் தயாரிக்கபட்டது, அவர் இப்போது நிறுவனத்தின் தலைமையிடத்தில் உள்ளார் [1][2]

வரலாறு[தொகு]

தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமான கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978) படத்தை வெங்கடேஷ் இயக்கினார், அதில் சிவகுமார், சுமித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அந்த படத்தைத் தொடர்ந்து, ரோசாப்பு ரவிக்கைகாரி, வண்டிச்சக்கரம், ஆணிவேர், ஆயிரம் முத்தங்கள் ஆகிய படங்களை முன்னணி வேடத்தில் சிவகுமார் நடிக்க தயாரிக்கபட்டது.[3] முதல் ஐந்து படங்களில் முன்னணி ஆண் வேடதில் சிவகுமார் நடித்தாலும், பெண் கதாபாத்திரங்களில் கண்ணன் ஒரு கைகுழந்தையில் சுமித்ராவும், ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் தீபாவும், ஆணிவேர், வண்டிச்சக்கரம் ஆகிய படங்களில் சரிதாவும், ஆயிரம் முத்தங்கள் படத்தில் ராதாவும் நடித்தனர்.[4][5] மறைந்த நடிகர் வினு சக்ரவர்த்தி கதை, திரைக்கதை எழுத்தாளராக வண்டிச்சக்காரத்தில் அறிமுகம் செய்யப்பட்டார், அதை இயக்கியவர் கே. விசயன் ஆவார். அது தமிழில் சில்க் ஸ்மிதாவின் அறிமுகப் படம் ஆகும். 1980 ஆம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசு விருதில் வண்டிச்சக்கரம் மூன்றாம் பரிசை வென்றது. ரோசாப்பு ரவிக்கைகாரி படத்தில் வினு சக்ரவர்த்தி நடிகராக அறிமுகமானார், நகைச்சுவை நடிகர் லூசு மோகன் அதே படத்தின் மூலம் புகழ் பெற்றார். 1983 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசன், சரிதா, சரத் பாபு மற்றும் பலர் நடித்த இமைகள் படத்தை இந்நிறுவனம் தயாரித்தது. அப்படத்திற்கின இசையை கங்கை அமரன் அமைத்தார்.[6] இவர்களது அடுத்த படமான ஈட்டி படத்தில் விஜயகாந்த், விஷ்ணுவர்தன், நளினி, விஜி ஆகியோர் நடிக்க ராஜசேகர் இயக்கினார். அடுத்தபடமான விடிஞ்சா கல்யாணம் படத்தில் சத்யராஜ், ஜெயஸ்ரீ, சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மணிவண்ணன் இயக்கினார். 1988 ஆம் ஆண்டில், இவர்கள் மோகன்லால் மற்றும் கார்த்திகா நடித்த ஆகியோர் நடித்த மலையாள திரைப்படமான காந்திநகர் செகண்ட் ஸ்ரிட் படத்தை அண்ணாநகர் முதல் தெரு என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தனர். அந்தப் படத்தில் சத்தியராஜ் மற்றும் ராதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு பெயர் நடிகர் இயக்குநர் இசையமைப்பாளர் வெளியீடு குறிப்பு
1978 கண்ணன் ஒரு கைக்குழந்தை சிவகுமார், சுமித்ரா வெங்கடேஷ் இளையராஜா 1978 ஆகத்து
1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி சிவகுமார், தீபா தேவராஜ் மோகன் இளையராஜா 1979 ஆகத்து
1980 வண்டிச்சக்கரம் சிவகுமார், சரிதா, சில்க் ஸ்மிதா கே. விசயன் சங்கர் கணேஷ் 1980 ஆகத்து
  • தமிழ்நாடு அரசின் சிறந்த படத்திற்கான விருது
  • பிலிம்பேரின் சிறந்த நடிகருக்கான விருது
  • பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருது
1981 ஆணிவேர் சிவகுமார், சரிதா கே. விசயன் சங்கர் கணேஷ் 1981 ஆகத்து
1982 ஆயிரம் முத்தங்கள் சிவகுமார், ராதா அன்னக்கிளி எஸ். தேவராஜன் சங்கர் கணேஷ் 1982 மார்ச்
1983 இமைகள் சிவாஜி கணேசன், சரிதா ஆர். கிருஷ்ணமூர்த்தி கங்கை அமரன் 1983 ஏப்ரல்
1985 ஈட்டி விசயகாந்து, நளினி, விஜி இராஜசேகர் இளையராஜா 1985 ஆகத்து
1986 விடிஞ்சா கல்யாணம் சத்யராஜ், ஜெயஸ்ரீ, சுஜாதா மணிவண்ணன் இளையராஜா 1986 அக்டோபர்
1986 காலமெல்லாம் உன் மடியில் முரளி, ஜெயஸ்ரீ இராஜசேகர் இளையராஜா 1986
1987 சின்னத்தம்பி பெரியதம்பி சத்யராஜ், பிரபு, நதியா மணிவண்ணன் கங்கை அமரன் 1987 பெப்ரவரி
1988 அண்ணாநகர் முதல் தெரு சத்யராஜ், பிரபு, நதியா, அம்பிகா பாலு ஆனந்த் சந்திரபோஸ் 1988 சனவரி
1990 வாழ்க்கைச் சக்கரம் சத்யராஜ், கௌதமி மணிவண்ணன் சங்கர் கணேஷ் 1990 பெப்ரவரி
1990 வாழ்ந்து காட்டுவோம் ராம்கி, கௌதமி, கே. ஆர். விஜயா ஆர். கிருஷ்ணமூர்த்தி சங்கர் கணேஷ் 1990 திசம்பர்
1992 உனக்காக பிறந்தேன் பிரசாந்த், மோகினி பாலு ஆனந்த் தேவா 1992 மே
1994 வண்டிச்சோலை சின்ராசு சத்யராஜ், சுகன்யா மனோஜ்குமார் ஏ. ஆர். ரகுமான் 1994 ஏப்ரல்
2019 கைதி கார்த்தி, நரேன் லோகேஷ் கனகராஜ் சாம் சி. எஸ். 2019 திசம்பர்

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் விவேகானந்தா பிக்சர்ஸ்

குறிப்புகள்[தொகு]

  1. "Tamil film producer Tirupur Mani passes away" (in en). Tamilstar இம் மூலத்தில் இருந்து 2017-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170606183305/http://www.tamilstar.com/news-id-tamil-film-producer-tirupur-mani-passes-away-tirupur-mani-silk-smitha-10-09-1616687.htm. 
  2. "IndiaGlitz – Vandichakkaram Vidinja Kalyanam producer Tiruppur Mani passed away in Chennai – Tamil Movie News" இம் மூலத்தில் இருந்து 2016-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160913061858/http://www.indiaglitz.com/vandichakkaram-vidinja-kalyanam-producer-tiruppur-mani-passed-away-in-chennai-tamil-news-166979.html. 
  3. "Metro Plus Tiruchirapalli / Personality : Portrait of an actor". தி இந்து. 2005-02-12. Archived from the original on 2019-05-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Aayiram Muthangal (1982) Cast and Crew". gomolo.com. Archived from the original on 2017-08-03. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
  5. "Ayiram Muthangal". Spicyonion.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
  6. "Nadigar Thilagam Sivaji Ganesan's filmography (pls refer page 24)". nadigarthilagam.com. Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேகானந்தா_பிக்சர்ஸ்&oldid=3741976" இலிருந்து மீள்விக்கப்பட்டது