திரைப்பட விநியோகஸ்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரைப்பட விநியோகஸ்தர் (Film distributor) என்பவர் ஒரு திரைப்படத்தை சந்தைப்படுத்துவது இவரின் முக்கிய பணியாகும். இது பொதுவாக தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வேறுபடுகின்றது. உதாரணமாக திரைப்படத்திற்கு நிதியளிப்பதில் மற்றும் விநியோகம் சார்ந்த ஒப்பந்தங்கள் செய்வது திரைப்பட விநியோகஸ்தர் ஒருவரின் முக்கிய பகுதியாகும்.

ஒரு விநியோகஸ்தர் ஒருவர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியையும் மற்றும் ஒரு படம் காட்சிப்படுத்தப்பட வேண்டிய அல்லது பார்க்கக் கூடிய முறையையும் தீர்மானிக்கலாம்: எடுத்துக்காட்டாக திரையிடுவது மூலம், ஓடிடி தளம்[1] அல்லது வீட்டுக் காட்சிக்காகவோ (டிவிடி, கோரிய நேரத்து ஒளிதம், பதிவிறக்கம், தொலைக்காட்சி நிகழ்ச்சி) போன்றவை ஆகும். தமிழகத் திரைப்படத்துறை விநியோகஸ்தர் சங்கத் தலைவராக டி. ராஜேந்தர் என்பவர் 2019 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஓடிடி தளத்தில் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா? - தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கேள்வி". www.hindutamil.in.
  2. "திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் வெற்றி - இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து". tamil.news18.com.