ஏ-9 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யாழ்ப்பாணம் - கண்டி வீதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஏ-9 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
ஆசிய நெடுஞ்சாலை AH43 இன் பகுதி
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:கண்டி
வடக்கு முடிவு:யாழ்ப்பாணம்
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:கண்டி, மாத்தளை, தம்புள்ளை, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ8ஏ10

ஏ-9 நெடுஞ்சாலை (A9 Highway) என்பது இலங்கையின் மத்திய மாகாணத் தலைநகரான கண்டியையும் வட மாகாணத் தலைநகர் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் 325 கிலோமீட்டர் (202 மைல்) தூர நெடுஞ்சாலை ஆகும். இது பொதுவாக கண்டி வீதி என யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியில் யாழ் சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நெடுஞ்சாலை கண்டியில் இருந்து மாத்தளை, தம்புள்ளை, மிகிந்தலை, இறம்பாவை, மதவாச்சி, வவுனியா, கிளிநொச்சி ஆகிய நகரங்களினூடாக யாழ்ப்பாணத்தை அடைகிறது.

உள்நாட்டுப்போரின் விளைவுகள்[தொகு]

கிளிநொச்சி ஊடாக ஏ9 நெடுஞ்சாலை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக 1984 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை மூடப்பட்டது. அது முதல் நெடுஞ்சாலையின் பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு போர்நிறுத்ததைத் தொடர்ந்து 2002 பெப்ரவரி 15 ஆம் நாள் சில கட்டுப்பாடுகளுடன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.[1] இதன் போது நெடுஞ்சாலையின் 20 சதவீதமளவான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் இருந்தது.

போர் மீண்டும் தொடங்கியதால் 2006 ஆம் ஆண்டு நெடுஞ்சாலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுடான நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது.[2] 2009 ஜனவரி 9 ஆம் நாள் இலங்கை இராணுவம் ஆனையிறவு பகுதியைக் கைப்பற்றியதுடன் ஏ-9 நெடுஞ்சாலை முழுவதும் மீண்டும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இத்துடன் 23 ஆண்டுகளிற்குப் பிறகு இந்நெடுஞ்சாலையின் முழு நீளமும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.[3][4] [5].

மீள் திறப்பு[தொகு]

நெடுஞ்சாலை முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் போர் அதையண்டிய பகுதிகளில் நடைபெற்று வந்ததால் பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலை செப்பனிடப்பட்டு நிலக் கண்ணிகள் அகற்றப்பட்ட பின்னர் 2009 மார்ச் 2 ஆம் நாள் படையினரின் போக்குவரத்திற்காக நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. 1984 ஆண்டிற்குப் பிறகு யாழ் குடாநாட்டிற்கு படையினர் இந்நெடுஞ்சாலையின் சென்றது இதுவே முதல் முறையாகும்.[2]

2009 சூன் 17 ஆம் நாள் தனியார் லொறிகள் செல்வதற்கு நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. இதையடுத்து யாழ்ப்பாணக் குடா நாட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் ஏ 9 நெடுஞ்சாலையூடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தன. மூன்று நாட்களுக்கு ஒரு முறை, தடவைக்கு உச்சவரம்பாக 40 லொறிகள் பொருட்களை ஏற்றிச் செல்லவும், கொண்டுவரவும் அனுமதி வழங்கப்பட்டது.[6] பின்னர் வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். எனினும் இதுவும் பின்னர் நீக்கப்பட்டது. தற்போது ஆளடையாள அட்டை மாத்திரமே தேவைப்படும். பொருட்களைக் கொண்டு செல்வதற்கு உச்சவரம்புகள் ஏதும் கிடையாது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-9_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3236637" இருந்து மீள்விக்கப்பட்டது