ஏ-14 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-14 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர பிரதான வீதிகளுள் ஒன்று. இது வடமத்திய மாகாணத்தில் உள்ள மதவாச்சியையும் வடமாகாணத்தின் மேற்குக் கரையோரத்தை அண்டி அமைந்துள்ள தலைமன்னாரையும் இணைக்கிறது.
இந்த நெடுஞ்சாலை மாங்குளம், செட்டிகுளம், பறையனாலங்குளம், மடு வீதி, முருங்கன், உயிலங்குளம், மன்னார், பேசாலை வழியாகத் தலைமன்னாரை அடைகிறது. ஏ-14 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 113.84 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". 25 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.