பயனர் பேச்சு:TNSE BASHEER VLR
வாருங்கள்!
வாருங்கள், TNSE BASHEER VLR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- Commons sibi (பேச்சு) 11:29, 15 மே 2017 (UTC)
குறிப்பு
[தொகு]வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா நல்ல பங்களிப்புகளைத் தருவதற்கு நன்றி. மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு Contracture தலைப்பை நீங்கள் பதிவேற்றும் போது அது குறுக்கங்கள் என்ற தலைப்பில் ஏற்கனவே இலக்கணம் குறித்து இருந்த உள்ளடக்கத்துக்குப் பதிலாக நோய் குறித்து தாங்கள் எழுதியவற்றைப் பதிவேற்றி விட்டது. எனவே, ஏற்கனவே உள்ள தலைப்பில் புதிய கட்டுரைகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டுகிறேன். தேவைப்படும் இடங்களில் புதிய தலைப்பில் பதிவேற்றவும் பழைய கட்டுரையின் பெயரை மாற்றவும் உரையாடல் பக்கத்தில் பேசலாம். தாங்கள் எழுதிய கட்டுரையை குறுக்கங்கள் (நோய்) என்னும் தலைப்புக்கு நகர்த்தி உள்ளேன்.--இரவி (பேச்சு) 08:20, 19 மே 2017 (UTC)
பங்களிப்பதற்கு நன்றி
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், TNSE BASHEER VLR!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
--இரவி (பேச்சு) 08:42, 19 மே 2017 (UTC)
ஆங்கில உள்ளடக்கம்
[தொகு]வணக்கம், தாங்கள் எழுதிய பென்பெரிடால் கட்டுரை முழுவதும் ஆங்கில உள்ளடக்கத்தினையே கொண்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் தமிழில்தான் எழுதப்பட வேண்டும். எனவே அக்கட்டுரையை தமிழில் மொழி பெயர்ப்பு செய்யுங்கள், இல்லையேல் நீக்கப்படலாம். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 02:57, 2 சூன் 2017 (UTC)
கவனிக்க
[தொகு]நீங்கள் எழுதும் கட்டுரைகள் அனைத்தும் தரமுள்ளவையாக உள்ளன. வாழ்த்துகள். ஒரு சில கருத்துகள்: வேதியியல் கட்டுரைகளில் Chembox தகவல்சட்டம் எதற்காக ஒரே வரியில் எழுதப்படுகின்றன. மொழிபெயர்க்கும் போது அவ்வாறு தான் தோற்றமளிக்கிறதா? 1,3-இருமெதில்-2-இமிடசோலிடினோன் கட்டுரையில் நான் செய்துள்ள திருத்தத்தைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:07, 4 சூன் 2017 (UTC)
- வேற்றுமொழிக் கட்டுரை ஒன்றை மொழிபெயர்க்கும் போது, அதன் பெயரை தமிழுக்கு அடுத்தபடியாக அதன் ஆங்கிலப் பெயரையும், மூலமொழிப் பெயரையும் ஆரம்ப வரிகளில் தருவது அவசியம். உதாரணமாக:
- பென்பெரிடால் (Benperidol) என்பது பியூடிரோபீனோன் வழிப்பொருளைச் சார்ந்த ஆற்றல் மிகு மருந்தாகும்.
- விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின் (Vladimir Vladimirovich Putin, உருசியம்: Влади́мир Влади́мирович Пу́тин)
என எழுதப்பட வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 11:23, 4 சூன் 2017 (UTC)
உள்ளிணைப்புகள்
[தொகு]வணக்கம் பஷீர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருவதற்கு பாராட்டுகள். உள்ளிணைப்புத் தலைப்புகளை அப்படியே கையாளாமல் கட்டுரைக்கு ஏற்றவாறு வாக்கியமாக அமைத்துக் கொள்ளமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- எடுத்துக்காட்டு:
உங்களது உரை:
- \\இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) ஆவார். இவர் எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)யில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்\\
திருத்தப்பட்ட உரை:
\\இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக 1967 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தல் மற்றும் 1971 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்\\
நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:41, 10 சூன் 2017 (UTC)
மீண்டும் உங்களின் கவனத்திற்கு
[தொகு]வணக்கம். தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். உங்கள் ஆர்வமும் உழைப்பும் மகிழ்ச்சியைத் தருகிறது. அத்துடன் கீழுள்ள திருத்தங்களையும் கவனித்துக் கடைபிடிக்குமாறு அருள்கூர்ந்து வேண்டிக்கொள்கிறேன்.
- உள்ளிணைப்புகள் குறித்து நான் உங்களுக்குச் சுட்டியிருந்த விடயங்களை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். அடுத்தடுத்து வரும் உங்களது கட்டுரைகளில் //சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)// போன்ற அடைப்புக்குறிகளுடன் கூடிய கட்டுரைத் தலைப்புகள் முறையான உள்ளிணைப்பு இன்மையால் இடம்பெறுகின்றன. நான் உங்களுக்கு விளக்கியது தெளிவாக இல்லையோ எனத் தோன்றுகிறது. தயவுசெய்து உங்கள் விக்கிப் பயிற்சியாளர் அல்லது உங்களால் தொடர்புகொள்ள இயலும் பயனர்களின் உதவியை நாடி இவற்றைச் சரிசெய்தீர்களானால் உங்கள் கட்டுரை மென்மேலும் விக்கித்தரமுடையதாகச் சிறக்கும்.
- கட்டுரைத் தலைப்புகளின் ஆங்கிலப் பெயரையும் சாய்வெழுத்துக்களில் அடைப்புக்குறிக்குள் அவசியம் தருமாறும்,
- உங்கள் கட்டுரைகளில் பிற பயனர்களால் இணைக்கப்படும் பகுப்புகளையும் அடையாளம் கண்டு நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் இணைத்துப் பழகவும்
- 'References' என்ற துணைத்தலைப்பையும் மறவாது “மேற்கோள்கள்” என தமிழாக்கம் செய்யவும்
தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:13, 12 சூன் 2017 (UTC)
- Booradleyp1, இவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நாம் இடும் கருத்துகளைக் கவனிப்பதாகவும் ஆனால் உரையாடல் பக்கத்தில் எப்படி பதில் அளிப்பது, ஐயங்களை யாரிடம் எப்படிக் கேட்பது என்று புரியவில்லை என்று குறிப்பிட்டார். இதே சிக்கலை உலகெங்கும் உள்ள புதிய பயனர்களும் எதிர்கொண்டு வருகிறார்கள் :( அவருக்கு இயன்ற அளவு தொலைப்பேசி வழியாக உதவி நல்க முனைகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:01, 14 சூன் 2017 (UTC)
விக்கிப்பீடியாவில் உரையாடுவது எப்படி? - விளக்கப் படம் காண்க
[தொகு]வணக்கம். விக்கிப்பீடியாவில் மற்ற பயனர்களுடன் உரையாடுவது எப்படி என்பதற்கான விளக்கப்படத்தை இங்கு இட்டுள்ளேன். வலது புறம் உள்ள படத்தையும் சொடுக்கிப் பார்க்கலாம். மேலும் உதவி தேவைப்பட்டால் குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 07:13, 15 சூன் 2017 (UTC)
கவனிக்க
[தொகு]கட்டுரைகளில் References என்ற துணைப்பகுப்பின் தலைப்பு தமிழில் மேற்கோள்கள் என மொழிபெயர்க்கப்பட வேண்டும். உங்கள் கட்டுரைகளில் அதனை மொழிபெயர்க்காமல் ஆங்கிலத் தலைப்பே இட்டு வருகிறீர்கள். இவற்றைக் கவனித்துத் திருத்த வேண்டுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 10:29, 15 சூன் 2017 (UTC)
- பசீர் அவர்களே... References என்ற துணைத்தலைப்பை மேற்கோள்கள் என அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றியிருக்கிறேன். இனி எழுதும் கட்டுரைகளில் இதனைக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:51, 16 சூன் 2017 (UTC)
பதக்கம்
[தொகு]விக்கிப்புயல் பதக்கம் | |
வணக்கம். குறுகிய காலத்தில் 100 கட்டுரைகளை எழுதி அசத்தி உள்ளீர்கள். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் செறிவான பங்களிப்புகளை அளிக்க வாழ்த்துகள். தங்களைப் போன்றோரின் பங்களிப்பு ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சிகளில் எங்களை இன்னும் உற்சாகத்தோடு கலந்து கொள்ளச் செய்யும். நன்றி. --இரவி (பேச்சு) 10:07, 16 சூன் 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
விருப்பம் --Arulghsr (பேச்சு) 10:21, 16 சூன் 2017 (UTC)
விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 14:11, 16 சூன் 2017 (UTC)
பராமரிப்பு வார்ப்புருக்கள்
[தொகு]நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் ஏனைய பயனர்களால் சேர்க்கப்படும் பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்காதீர்கள். அவற்றை சேர்த்தவர்களே நீக்குவார்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:12, 18 சூன் 2017 (UTC)
- நன்றி ஐயா
- தங்களின் அலைபேசி எண் கொடுக்க முடியுமா?
- இரு சொற்களுக்கிடையே கட்டாயம் ஒரு இடைவெளி இருக்க வேண்டும். உம்: எஸ்.ஆர். இராஜா என எழுதுவது தவறு. "எஸ். ஆர். இராஜா" என எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 11:01, 18 சூன் 2017 (UTC)
இனிவரும் கட்டுரைகளில் கட்டாயம் பின்பற்றப்படும்
- நன்றி ஐயா
- முன்னர் எழுதப்பட்ட கட்டுரைகளில் மாற்றம் செய்வது எப்படி ஐயா?
- நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய கட்டுரைகளின் தலைப்பை எப்படி மாற்றுவது என்பது அறிய வலப்பக்கம் உள்ள நிகழ்படத்தைச் சொடுக்கிப் பாருங்கள். இந்த விளக்கத்தை யூடியூபிலும் காணலாம். பக்கத்தின் உள்ளே உள்ள எழுத்துக்கூட்டலை மாற்ற பக்கத்தின் மேலே உள்ள தொகு என்ற இணைப்பை அழுத்துங்கள். கூடுதல் விளக்கத்தை அளிக்கும் வகையில் விரைவில் இன்னும் உதவிப் படத்தைப் பதிவேற்றுகிறேன். --இரவி (பேச்சு) 13:24, 18 சூன் 2017 (UTC)
வி. கே. ராமசாமி முதலியார் சமஉ
[தொகு]வணக்கம். வி. கே. ராமசாமி முதலியார் எனும் பெயரில் வேறு எவரும் இல்லையென்பதால் வி. கே. ராமசாமி முதலியார் என்று மட்டும் எழுதினால் போதுமானது. ஏற்கனவே வேறு ஒருவரைக் குறிக்கும் கட்டுரை இருப்பின், வி. கே. ராமசாமி முதலியார் (சட்டமன்ற உறுப்பினர்) என தலைப்பிடலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:54, 20 சூன் 2017 (UTC)
பதக்கம்
[தொகு]ஊக்குவிப்பாளர் பதக்கம் | |
எப்படி விக்கிப்பீடியாவில் இலகுவாக கட்டுரைகள் எழுதுவது என்பதைக் கண்டுணர்ந்து அதனைத் தங்கள் உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் எடுத்துரைத்து தொடர்ந்து கட்டுரைகள் எழுத ஊக்கம் அளித்து வருகிறீர்கள். உங்கள் மாவட்டத்தில் இருந்து மட்டும் இது வரை மூன்று பேர் ஆளுக்கு நூறுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள் என்பது சாதாரண விசயமே அன்று. தங்களை நேரில் சந்தித்த பிறகு நானுமே இத்திட்டத்தில் இன்னும் முனைப்போடு ஈடுபட உந்துதல் பெற்றுள்ளேன் என்று கூறினால் அது மிகையாகாது. நீங்கள் தொடர்ந்து சிறப்பாக எம்மோடு கைகோர்த்துப் பங்களிக்கும் விதமாக இப்பதக்கத்தைத் தங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:38, 26 சூன் 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
தொடர் பங்களிப்பாளர் போட்டியில் பங்கேற்பதற்கான வழிமுறைகள்
[தொகு]- இங்கு சென்று உங்கள் பெயரைப் பதியுங்கள்.
- இங்குள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பச்சை tick குறியீடு உள்ள தலைப்புகள் ஏற்கனவே விரிவாக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர்க்கலாம்.
- தேர்ந்தெடுத்த தலைப்புகளை உங்கள் பெயரின் கீழ் இங்கு முற்பதிவு செய்யுங்கள்.
- தேர்ந்தெடுத்த தலைப்புகளைப் பத்து நாட்களுக்கு விரிவாக்குங்கள். இல்லையேல், உங்கள் முற்பதிவு காலாவதியாகி வேறு யாரேனும் அத்தலைப்பை விரிவாக்குவர்.
ஏதேனும் ஐயங்கள் இருந்தால் கேட்கவும். நன்றி. -- இரவி (பேச்சு) 06:33, 28 சூன் 2017 (UTC)
- நன்றி ஐயா
மனம் கட்டுரை
[தொகு]வணக்கம் பயனர்:TNSE BASHEER VLR! மனம் கட்டுரை உங்களால் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் விரிவாக்கியவர் பெயர் வேறாக உள்ளது. தயவுசெய்து இங்குள்ள உரையாடலைப் பார்த்து பதில் தாருங்கள். நன்றி. --கலை (பேச்சு) 21:01, 12 சூலை 2017 (UTC)
ஆல்சைமர் நோய்
[தொகு]பயனர்:TNSE BASHEER VLR! நீங்கள் தற்போது விரிவாக்கிக்கொண்டிருக்கும் ஆல்சைமர் கட்டுரையில் எழுத்துப்பிழைகள், ஒழுங்கற்ற சொற்றொடர்கள், சரியான விக்கியாக்கம் இல்லாமை போன்ற தவறுகள் உள்ளன. தயவுசெய்து கட்டுரையைச் சமர்ப்பிக்க முன்னர் அத் தவறுகளைத் திருத்திவிடுங்கள். நன்றி. நீங்கள் மொழிபெயர்ப்புக் கருவி ஏதாவது பயன்படுத்துகிறீர்களா என்றும் அறியத் தாருங்கள். --கலை (பேச்சு) 09:41, 14 சூலை 2017 (UTC)
- பயனர்:TNSE BASHEER VLR! நீங்கள் விரிவாக்கிய ஆல்சைமர் கட்டுரையில் மேற்கூறப்பட்ட தவறுகள் திருத்தப்படாமலேயே கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நான் மேலே இட்டிருந்த கருத்தை நீங்கள் கவனிக்காமலும் விட்டிருக்கக்கூடும். கட்டுரையில் எழுத்துப்பிழைகள், ஒழுங்கற்ற சொற்றொடர்கள், தமிழாக்கத்தில் சில தவறுகள், விக்கியாக்கமின்மை, ஆங்கிலச் சொற்றொடர்கள் என்று பல தவறுகள் உள்ளன. தவிர, நீங்கள் விரிவாக்கத் தொடங்கியபோது, ஏற்கனவே எழுதப்பட்டிருந்த பகுதியை நீக்கிவிட்டீர்கள். ஏன் அவ்வாறு நீக்கினீர்கள் என அறியலாமா? நீங்கள் நீக்கிய பகுதிகள் இங்கே உள்ளது. அவை தகுந்த மேற்கோள்களுடன் எழுதப்பட்டிருந்தது. அவ்வாறிருக்கையில், நீங்கள் அதனை நீக்காமலேயே, விரிவாக்கத்தைத் தொடர்ந்திருக்கலாம். அந்தப் பகுதியை மீள அமைப்பதாயின், நீங்கள் விரிவாக்கிய பகுதிகள் இல்லாதுபோய்விடும் என நினைக்கிறேன். @Ravidreams: மனம் கட்டுரையில் போலவே இந்தக் கட்டுரையையும் மீளமைக்கலாமா? இவ்வாறு கட்டுரைகள் சரியான முறையில் விரிவாக்கம் செய்யப்படாமல், சமர்ப்பிக்கப்படும்போது, அதனை வேறொருவர் விரிவாக்கிச் சமர்ப்பிக்கும் செயல்முறை இலகுவானதல்ல என நினைக்கிறேன். இவை தமிழக ஆசிரியர்களால் விரிவாக்கப்பட்ட கட்டுரைகளாக இருப்பதனால், உங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட வேறும் ஓரிரு கட்டுரைகளில், ஏற்கனவே இருந்த உள்ளடக்கம், அல்லது முன்னுரை நீக்கப்பட்டிருந்தது. ஆலோசனை தேவை. --கலை (பேச்சு) 22:59, 14 சூலை 2017 (UTC)
குறுக்கம்
[தொகு]நீங்கள் எழுதிய குறுக்கங்கள் பற்றிய கட்டுரையை உங்கள் |பயனர் பெயர்வெளிக்கு (பயனர்:TNSE BASHEER VLR/குறுக்கங்கள் (நோய்)) மாற்றியிருக்கிறேன். இக்கட்டுரையைப் தசைக் குறுக்கம் என்ற தலைப்பில் புதிதாக எழுதுங்கள். பின்னர் இந்தக் கட்டுரையை பயனர் வெளியில் இருந்து நீக்கி விடலாம். நன்றி.--Kanags \உரையாடுக 05:13, 15 சூலை 2017 (UTC)
அருள் கூர்ந்து திருத்தங்களைக் கவனிக்க
[தொகு]வணக்கம், நீங்கள் அரசியல்வாதிகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். இவற்றில் பலவற்றை நான் திருத்தி துப்புரவு முடிந்ததாக அறிவித்து வருகிறேன். இவற்றைக் கவனித்தீர்களோ தெரியாது. ஆனாலும் இன்னும் ஏராளமான கட்டுரைகள் (குறிப்பாக அரசியல்வாதிகள் பற்றியது) துப்புரவு செய்யப்படாமல் உள்ளன. அவற்றைக் கவனித்து நீங்களே துப்பரவு செய்தால், நான் மேலோட்டமாகப் பார்த்து துப்புரவு முடிந்ததாக அறிவிக்கலாம்.--Kanags \உரையாடுக 09:10, 20 சூலை 2017 (UTC)
நொடி (கால அளவு) கட்டுரை
[தொகு]குறிப்பிட்ட கட்டுரை ஆங்கில உரைப்பகுதி, தகுந்த விக்கியாக்கமின்மை, கட்டுரையின் இடையில் வழுக்கள் போன்ற காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முடிந்தால் அவற்றைத் திருத்திய பின்னர் அறியத் தாருங்கள். உதவி தேவைப்படின், என்ன உதவி தேவை என்பதைக் குறிப்பிட்டு, ஏனைய விக்கி நண்பர்களிடம் கேட்கலாம். --கலை (பேச்சு) 22:26, 22 சூலை 2017 (UTC)
- தகுந்த விக்கியாக்கமின்மை - விக்கியாக்கம் பற்றி தகுந்த வழிகாட்டுதல்கள் வேண்டும்.
- இடையில் வழுக்கள் - ஆங்கில கட்டுரையில் உள்ளதை மொழிபெயர்த்துள்ளேன். இதில் வழு என்பது என்ன என்று கூறினால் இனிவரும் கட்டுரைகளில் அவற்றை சரி செய்யலாம்.
- தகவல்கள் தெரிந்தால், விக்கி கட்டுரைகளை மேம்படுத்த வசதியாக இருக்கும். நன்றி அ பஷீர் அகமது
- பஷீர் அகமது!
- விக்கியாக்கம் - நீங்கள் இறுதியாகச் செய்துள்ள திருத்தங்களில் விக்கியாக்கம் சில செய்துள்ளீர்கள். தேவையற்ற இடத்தில் உரையின்றி வெறும் துணைத்தலைப்பு இருந்தது. அதனை நீக்கியுள்ளீர்கள். கட்டுரையின் உள்ளே முதன்மைத் தலைப்பு, அதாவது கட்டுரையின் தலைப்பு வரத் தேவையில்லை. அதனை நான் தற்போது நீக்கியுள்ளேன். மேலும் விக்கியாக்கம் என்பது விக்கிக்கான ஒரு ஒழுங்கு முறையில் கட்டுரையை அமைப்பது. வழிகாட்டுதல் தேவைப்படின், விக்கிப்பீடியா:தொகுத்தல் பக்கத்திலுள்ள வடிவமைப்புப் பகுதியைப் பாருங்கள் இங்கே உள்ளது. மேலும் பல்வேறு உதவிப்பக்கங்களை விக்கிப்பீடியா:உதவி பக்கத்தில் காணலாம். சில வடிவமைப்புக்களைக் காணும்போது எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மாற்றங்களைப் பார்ப்பதன்மூலம் அறிந்து கற்றுக்கொள்ளலாம். நீங்கள் மேலே கொடுத்துள்ள கருத்தின் வடிவமைப்பை மாற்றியிருக்கிறேன். அது எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என வரலாற்றுப் பக்கத்திற்குச் சென்று, என்னால் செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் பார்வையிடலாம். அல்லது தொகுத்தல் பக்கத்தில் போயும் எவ்வாறு அமைப்பு எழுதப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம். இவ்வாறு மாற்றங்களைப் பார்வையிடுவதன் மூலம் எவ்வாறு எழுதுவது என்பதையும் கற்றுக் கொள்ளலாம். அத்துடன் சொற்களுக்கிடையில், நிறுத்தற்புள்ளியை அடுத்து, காற்புள்ளிகளை அடுத்து இடைவெளி விடல், பந்திகளைப் பிரித்து எழுதுதல், தேவையில்லாத இடங்களில் மேலதிக இடைவெளிகள் விடுதலைத் தவிர்த்தல் போன்றனவற்றையும் கவனித்துச் செய்யலாம்.
- வழுக்கள் - கட்டுரையின் இடையில் ஒரு இடத்திலும், மேற்கோள்கள் பகுதியில் 4 ஆவது, 21 ஆவது மேற்கோள்களுக்கும், பெரிய சிவப்பு எழுத்தில் பிழை காட்டு என்று இருந்ததை அவதானித்திருப்பீர்கள். கட்டுரையின் நடுவில் வந்ததற்குக் காரணம், மேற்கோள் மேற்கோளுக்கான நிரல் பகுதியில் முடிக்கும் </ref> என்ற பகுதி கொடுக்கப்படவில்லை. தற்போது திருத்தியுள்ளேன். கீழே மேற்கோள்கள் பகுதியில் வழுக்கள் காட்டுவதற்கான காரணம், நீங்கள் கொடுத்திருக்கும் மேற்கோளின் குறிச்சொல்லிற்குரிய உரை இந்தக் கட்டுரையில் இல்லை. நீங்கள் ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கம் செய்யும்போது, கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே மேற்கோள் கொடுக்கப்படுமாயின், குறிப்பிட்ட மேற்கோளின் உரை ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டு, ஏனைய இடங்களில் அதற்கான குறிச்சொல் மட்டுமே கொடுக்கப்படும். எனவே நீங்கள் முழுக் கட்டுரையையும் தமிழாக்கம் செய்யாமல், ஒரு பகுதியை மட்டும் தமிழாக்கம் செய்து இட்டால், அந்தப் பகுதியில், குறிப்பிட்ட மேற்கோளுக்கான குறிச்சொல் மட்டுமே இருந்திருக்கலாம். அதற்கான உரை நீங்கள் விரிவாக்கம் செய்யாத பகுதியில் இருந்திருக்கலாம். எனவே ஒன்றில் ஆங்கிலக் கட்டுரையை முழுமையாக விரிவாக்கம் செய்ய வேண்டும். அல்லது குறிச்சொல்லுக்குரிய உரையை விரிவாக்கம் செய்யப்படாத பகுதியிலிருந்து தேடி எடுத்து, அதனை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் பிரதியிட வேண்டும். சில சமயம் குறிச்சொல்லின் பெயர், விரிவான உரையில் இருந்ததுபோல் இருக்காமல், இரண்டாம் முறை வரும்போது, மாற்றப்பட்டிருக்கலாம். அந்த வழுக்களையெல்லாம் நான் தற்போது மாற்றியுள்ளேன். வரலாற்றில் சென்று பாருங்கள். ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கம் செய்யும்போது, அங்கிருக்கும் உரையை அப்படியே பிரதி செய்து ஒட்டிவிடாமல், விடயத்தை விளங்கிக்கொண்டு, தமிழாக்கம் செய்து, தமிழ்விக்கிக்கு ஏற்ற வகையில் விக்கிப்படுத்திப் போடலாம். காரணம் ஆங்கில விக்கியில் இருக்கும் வார்ப்புருக்களுக்கு இணையான வார்ப்புருப் பக்கம் தமிழ் விக்கியில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிராமல் இருக்கலாம்.
- செய்யப்பட்ட மாற்றங்கள் இங்கே உள்ளது. --கலை (பேச்சு) 00:03, 24 சூலை 2017 (UTC)
- பஷீர் அகமது!
பஷீர் அகமது! தயவுசெய்து நீங்கள் போட்டிக்காக விரிவாக்கும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க முன்னர், குறிப்பிட்ட கட்டுரையில் ஆங்கிலச் சொற்றொடர்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதா என்று பாருங்கள். தமிழாக்கம் செய்யும்போது, நேரடியாக குறிப்பிட்ட விக்கிப் பக்கத்தில் செய்யாமல் மணல்தொட்டியிலோ, அல்லது வேறு எங்குமோ செய்துவிட்டு பின்னர் இங்கு பதிவு செய்தல் உதவக் கூடும். மேலும் கட்டுரையைச் சமர்ப்பிக்க முன்னர் எழுத்துப்பிழை திருத்தம், ஒழுங்கற்ற சொற்றொடர்களைத் திருத்தல் போன்றவற்றையும் செய்துவிடுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 22:25, 27 சூலை 2017 (UTC)
போட்டிக் கட்டுரை விரிவாக்கம்
[தொகு]பஷீர் அகமது! நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகளில் என்ன திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதனைத் தயவுசெய்து கவனித்து, அவற்றை அடுத்தடுத்த கட்டுரைகளில் திருத்த முயற்சி செய்யுங்கள். ஏற்கனவே மேலே மிகவும் விரிவாக மேற்கோள்கள் எவ்வாறு கொடுப்பது என விளக்கி, திருத்தங்களைப் பார்க்கும்படி கூறினேன். ஆனால் நீங்கள் மீண்டும், அவற்றைக் கவனியாது, அதே தவறுகளை விடுவதனால், மேற்கோள்களில் பிழைகாட்டு என்று சிவப்பு எழுத்துக்களில் வருகின்றது. அவ்வாறு வரும்போதாவது, என்ன பிழை என்று பார்த்துத் திருத்தலாமே. ஒரே மேற்கோளை மீண்டும், மீண்டும் கொடுக்கையில், அதற்குரிய சரியான குறிச்சொல்லில் மாற்றம் இல்லாமல் அப்படியே எழுதவேண்டும். இனிமேல் அவற்றைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். இங்கே என்னால் செய்யப்பட்டுள்ள நான்கு மாற்றங்களையும் பாருங்கள். புரியும். ஆங்கிலக் கட்டுரையிலிருந்து தமிழாக்கம் செய்யும்போது, ஏன் அதனை மட்டும் நீங்கள் மாற்றி எழுதுகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. கலை (பேச்சு) 22:18, 31 சூலை 2017 (UTC)
நைஜர் ஆறு விரிவாக்க கட்டுரை
[தொகு]பஷீர் அகமது நீங்கள் நைஜர் ஆறு கட்டுரையில் செய்த மாற்றங்களை புதிய பயனர் அறியாமல் மாற்றங்களை செய்ததாக கருதி முன்னிளையாக்கிவிட்டேன். ஏற்கனவே உள்ள ஒரு கட்டுரையையை விரிவாக்கும்போது அதில் முன்பே நன்கு உள்ள பகுதிகளை தேவையின்றி அழிக்காமல் மேற்கொண்டு கட்டுரையில் உள்ளடக்கங்களைச் சேர்க்கலாம் இதனால் உழைப்பு வீனாகாது. பழைய உள்ளடக்கங்களைவிட சிறப்பாக புதியதாக இதை எழுதும் நோக்கம் இருப்பின் உங்கள் பழைய உள்ளடக்கத்தை மீண்டும் மீள்வித்து விடுகிறேன் கட்டுரையை தொடர்ந்து எழுதலாம்.--அருளரசன் (பேச்சு) 06:29, 4 ஆகத்து 2017 (UTC)
- பஷீர் அகமது! ஏற்கனவே உள்ள கட்டுரையை விரிவாக்கும்போது, அதில் முன்பே நன்கு உள்ள பகுதிகளைத் தேவையின்றி அழிப்பதனால், முன்னர் அதனை எழுதிய பயனரின் உழைப்பு வீணாகின்றது, இதுபற்றி நானும் ஏற்கனவே ஆல்சைமர் கட்டுரை விரிவாக்கம்பற்றிக் கூறியபோது சொல்லியிருந்தேன். தயவுசெய்து, அவற்றைக் கவனித்துச் செய்யுங்கள். மேலும், நீங்கள் மேற்கோள்களை இணைக்கும்போது தவறாக இணைப்பதுபற்றியும், அதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதுபற்றியும், மிகவும் விரிவாகக் கூறியிருந்தேன். ஆனால் நைஜர் ஆறு கட்டுரையில் மீண்டும் அதே தவறு உள்ளது. தயவுசெய்து சிவப்பு இணைப்புக்களைக் கொண்ட மேற்கோள்களைத் திருத்திவிடுங்கள். ஏதாவது புரியாவிட்டால் கேளுங்கள். --கலை (பேச்சு) 23:02, 5 ஆகத்து 2017 (UTC)
சிந்தித்தல் கட்டுரை
[தொகு]சிந்தித்தல் கட்டுரை எந்தவொரு மேற்கோளும் இல்லாமல் உள்ளது. அதனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தயவுசெய்து மேற்கோள்களை இணைத்து மேம்படுத்தி விடுங்கள். நன்றி. @Shriheeran: --கலை (பேச்சு) 13:43, 7 ஆகத்து 2017 (UTC)
- தயவு செய்து இணைத்துவிடுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:25, 7 ஆகத்து 2017 (UTC)
தொல்பழங்காலம் கட்டுரை
[தொகு]- தவறான உள்ளிணைப்புக்கள் - எ.கா.: வெண்கல கா[[கற்காலம்|லம்]] வெண்கலக் காலத்திற்கு உள்ளிணைப்புக் கொடுப்பதாயின், [[வெண்கலக் காலம்]] என்றுதானே கொடுக்கப்பட வேண்டும். வெண்கலக் காலத்தில் என்பதற்கு இணைப்புக் கொடுக்க விரும்பின் [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்தில்]] என்று கொடுக்கலாம். திருத்தப்பட்டுள்ளன.
SISTER I WANT TO TELL YOU ONE THING - ACTUALLY I DIDN'T GET ANY TRAINING REGARDING THE TECHNICAL INPUTS LIKE 'PIPE' ETC., I DO EVERYTHING ONLY BY TRIAL AND ERROR I GAIN SOME NEW EXPERIENCE AT THE END OF EACH ARTICLE.
FOR EXAMPLE I SPENT MORE THAN 2 HOURS TO REMOVE RED LETTERS IN THE REFERENCES.
IN SOME CASES I COULDN'T DO ANYTHING. IN SUCH CASES I REMOVED THE REFERENCES, WHERE I COULDN'T DO ANYTHING.
IF TIME PERMITS YOU GUIDE ME. DEFINITELY I COULD FOLLOW THE INSTRUCTIONS AT MY LEVEL BEST.
வரலாற்றைப் பாருங்கள். I DON'T KNOW ABOUT GOING THROUGH HISTORY
- தெளிவற்ற சொற்றொடர்கள் - தயவுசெய்து கட்டுரையை முழுமையாக வாசித்துத் தெளிவாக்குங்கள். எ.கா.:வரையறை என்ற தலைப்பின் கீழுள்ள இறுதி என்ற துணைத் தலைப்பின் கீழுள்ள சொற்றொடர் விளக்கமற்று இருக்கிறது. தவறாகத் தமிழாக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். தயவுசெய்து பார்த்துத் திருத்திவிடுங்கள்.
- பயன்பாட்டிலுள்ள தமிழ்ச் சொற்களை விட்டுவிட்டு, ஆங்கிலத்தின் நேரடி மொழிபெயர்ப்பு. எ.கா.: Stone Age என்பதை கற்காலம் என்று கூறாமல் கல் வயது (I THINK I FOUND IT IN TAMIL WIKIPEDIA - I FEEL SORRY IF I WERE WRONG)என்கின்றீர்கள். அதனைத் தவிர்க்கலாம் (I WILL RECTIFY IT) என நினைக்கிறேன். குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ப் பக்கம் ஏற்கனவே த.வி. யில் இருந்தால், அதனையே பயன்படுத்தி இணைப்பையும் கொடுக்கலாம்.
- தலைப்புக்களுக்கு மீண்டும் தடித்த எழுத்துக்களைக் கொடுக்கத் தேவையில்லை. இவ்வாறு உங்களது பல கட்டுரைகளில் திருத்தம் (I DON'T KNOW TO READ THE CORRECTIONS & DIFFERENCES - I WANT TO KNOW THAT - THAT'S WHY I COULDN'T MAKE CORRECTIONS IN ALZEMIER'ஸ் DISEASE - ACTUALLY I AM A MUSCULAR DYSTROPHY PATIENT - THAT'S WHY I SELECTED ALZEMIER WHICH SOMEWHAT LESS TROUBLES THAN MINE) செய்ததாய் நினைவு. ஆனால் மீண்டும், மீண்டும் அவ்வாறே வருகிறது. தவிர்க்கப்படலாம்.
- உள்ளிணைப்புகளை தலைப்புகளில் கொடுக்காமல், விரிவான தகவல் பகுதியில் கொடுக்கலாம். எ.கா.: பழைய கற்காலம் (WHILE TYPING ITSELF I THOUGHT ABOUT THAT. BUT I THOUGHT IT ON THE OTHER WAY - ANYHOW I MAY GIVE ONLY LITTLE IDEAS UNDER THAT HEADING. IF THE READER IS IN NEED OF MORE CONCEPTUAL MATTER HE COULD DIRECTLY GO TO THE MAIN TOPIC WITHOUT WASTING HIS TIME IN THE SMALLER SUB=தலைப்பு.) உள்ளிணைப்பு இடம் மாற்றப்பட்டுள்ளது. வரலாற்றில் பாருங்கள்.
- ஒரு குறிப்பிட்ட சொல் கட்டுரையின் பல இடங்களில் வரும்போது, அவை எல்லாவற்றிற்கும், உள்ளிணைப்புகள் கொடுக்கத் தேவையில்லை.
- சொற்களுக்கிடையில், சொற்றொடர்களுக்கிடையில் சரியான இடைவெளி விடுதல்.(in Typewriting I was instructed to leave 2 spaces after each sentence = anyhow I Will try to rectify all in the forthcoming articles-அட் my level best)
தயவுசெய்து நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க முன்னர் மேற்கூறிய விடயங்களைக் கவனியுங்கள். நன்றி.
Thank you sister
- பயனர்:TNSE BASHEER VLR!
- முதலில் ஒன்று சொல்லிக்கொள்ள விருப்பம். தமிழ்விக்கியில் ஆங்கில உரையாடலைத் தவிர்த்து தமிழிலேயே உரையாடுதல் நல்லது என்பது எனது கருத்து. (சிலசமயம், சில இடங்களில் இருக்கையில், அவசரமாக எழுத வேண்டி வந்தால், தமிழில் எழுத முடியாது இருப்பதையும் புரிந்துகொள்கின்றேன்.)
- நீங்கள் மட்டுமல்ல, நானும் (விக்கிப் பயனர்களில் பலரும்) எந்த முறையான பயிற்சியும் இல்லாமல், TRIAL AND ERROR வழியில்தான் கற்றுக்கொண்டோம், கற்றுக்கொள்கிறோம். எனவே அந்தக் கவலை வேண்டாம். அதனை நன்கு அறிந்திருக்கும் காரணதாலேயே, நான் கருத்துக்களை உங்கள் பக்கத்தில் எழுதும்போது, மிக விளக்கமாகவும், எடுத்துக் காட்டுக்களுடனும் எழுதுகிறேன். நீங்கள் சரியாகப் புரிந்து அவற்றை சரியான முறையில் எழுத வேண்டும் என்பதற்காகவே அதிக நேரம் செலவளிப்பதையும் பொருட்படுத்தாது, கூடியளவு விளக்கமாக எழுதுகிறேன். இவ்வளவு விரிவான பதில்கள் வழிகாட்டுதலே.
- நான் எழுதுபவற்றில் ஏதாவது புரியாவிட்டால் மீண்டும் கேட்கும்போது, நிச்சயமாக விளக்கம் தர முயல்வேன்.
- //IN SOME CASES I COULDN'T DO ANYTHING. IN SUCH CASES I REMOVED THE REFERENCES, WHERE I COULDN'T DO ANYTHING.// எந்த இடத்தில் என்ன பிரச்சனை என்று குறிப்பிட்டு உதவி கேட்டால், அது தொடர்பில் பார்த்து ஏனைய பயனர்கள் உதவுவார்கள். எனவே கேட்கத் தயங்க வேண்டாம். நானும் விக்கித் தொகுப்பில் எல்லாம் தெரிந்து வைத்திருக்கவில்லை. தற்போதும் பலரிடன் உதவிகள் கேட்டுப் பெற்று, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
- நாமாகக் கற்றுக்கொள்ளவும் சில வழிகள் உண்டு.
- இந்தப் பக்கத்தில் பல உதவிகள் கிடைக்கலாம்.
- புரியாதவற்றை இந்தப் பக்கத்திலோ, அல்லது வேறு பயனர்களின் உரையாடல் பக்கத்திலோ கேட்கலாம். உதவுவார்கள்.
- ஒரு குறிப்பிட்ட விடயம் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டுமெனில், நான் செய்வது மூலத்தைத் தொகு என்பதை அழுத்தி தொகுத்தல் பெட்டிக்குள் போய், எவ்வாறு எழுதியுள்ளார்கள் என்பதைப் பார்த்து அறிவது. இதனையும் நீங்கள் செய்து அறியலாம்.
- நீங்கள் விரிவாக்கிய பகுதியில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை வரலாற்றில் போய்ப் பார்ப்பதன் மூலமும் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு கட்டுரையின் மேலேயும் உள்ள வரலாற்றைக் காட்டவும் என்பதை அழுத்துங்கள். வரலாற்றைக் காட்டவும் என்பது நேரடியாகப் பக்கத்தில் வராவிட்டால், மேலும் என்பதை அழுத்தி அதில், வரலாற்றைக் காட்டவும் என்பதைத் தெரிவு செய்யலாம். அங்கே, குறிப்பிட்ட கட்டுரையில் செய்யப்பட்ட ஒவ்வொரு சிறிய, பெரிய மாற்றங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். எ.கா. தொல்பழங்காலம் கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தைப் பார்த்தீர்கள் என்றால் இவ்வாறு] இருக்கும். இங்கே பார்த்தீர்கள் என்றால் நீங்கள் செய்த தொகுப்புக்களைத் தொடர்ந்து நான் சில தொகுப்புக்கள் செய்திருப்பதைக் காணலாம். அந்த மாற்றங்கள் என்ன என்பதை அறிவதற்கு, குறிப்பிட்ட தொக்குப்புக்களில் உள்ள, முந்திய என்பதை அழுத்தலாம். அப்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைக் காட்டும் பகுதிகள் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றின் மூலம் என்ன மாற்றங்கள் எப்படிச் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியலாம். எ.கா. தொல்பழங்காலம் கட்டுரையில் இறுதியாகச் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை, இங்கே பார்க்கலாம். இங்கே மூன்றாம் நிலைத் துணைத் தலைப்பாக நீங்கள் போட்டிருந்தது, இரண்டாம் நிலைத் துணைத்தலைப்பாகப் போடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வேறுபாட்டைப் பார்க்க வேண்டுமெனின், அந்தப் பக்கத்திலேயே முந்தைய வேறுபாடு என்பதை அழுத்தலாம். அல்லது வரலாற்றைக் காட்டவும் பக்கத்தில் இரண்டாவதாக உள்ள தொகுப்பில் முந்திய என்பதனை அழுத்தலாம். இவ்வாறே ஒவ்வொருவரும் செய்துள்ள மாற்றங்களைப் பார்த்து அறிந்துகொள்ளலாம். எ.கா. உள்ளிணைப்புக்களில் செய்யப்பட்ட மாற்றங்களைப் பார்ப்பதாயின் இங்கே பாருங்கள். இப்போது ஓரளவு புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
- //கல் வயது (I THINK I FOUND IT IN TAMIL WIKIPEDIA// தற்போது, கல் வயது என்ற சொல்லை தமிழ்விக்கிப்பீடியாவில் இட்டுத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஏற்கனவே நீங்கள் எழுதியிருந்த கற்காலம் என்பதையும் நான் மாற்றிவிட்டதால் அந்தப் பக்கமும் தேடுதலில் வரவில்லை. தமிழ்விக்சனரியிலும்கூட, கற்காலம் என்றே உள்ளது. மேலும், பொதுவான வழக்கிலுள்ள சொற்களையும், தமிழ்விக்கியில் பயன்படுத்தும் வார்த்தைகளையும் பார்த்து முடிவு செய்யலாம். பொதுவாக நான் ஒரு கட்டுரையைத் தமிழாக்கம் செய்யும்போது, ஆங்கிலக் கட்டுரையில் உள்ள சொற்களுக்குத் தமிழில் கட்டுரை உள்ளதா என்று பார்ப்பேன். அவ்வாறு இருப்பின் அந்தக் குறிப்பிட்ட சொல்லைக் கொடுத்து, உள்ளிணைப்புக்களையும் கொடுப்பேன்.
- சில தொகுப்புக்களை உங்கள் மணல்தொட்டியில் செய்து பார்த்து, சரியாக வந்தால் அவற்றைக் கட்டுரையில் பயன்படுத்தலாம்.
- மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் விக்கியில் தொடரப்போகும் உங்கள் பணிக்கு உதவியாக இருக்குமென நினைக்கிறேன்.
- தொல்பழங்காலம் கட்டுரையில் வரையறை என்ற இரண்டாம்நிலை துணைத் தலைப்பின் கீழுள்ள இறுதி என்ற மூன்றாம் நிலைத் துணைத் தலைப்பின் கீழுள்ள சொற்றொடர் விளக்கமற்று இருக்கிறது. தவறாகத் தமிழாக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். தயவுசெய்து பார்த்துத் திருத்திவிடுங்கள். --கலை (பேச்சு) 11:39, 10 ஆகத்து 2017 (UTC)
- பயனர்:TNSE BASHEER VLR!
ஏற்றுக்கொள்ளப்படாத போட்டிக் கட்டுரைகளில் திருத்தம்
[தொகு]பயனர்:TNSE BASHEER VLR! போட்டிக் கட்டுரைகளில், ஏற்றுக்கொள்ளப்படாதவற்றில் நீங்கள் திருத்தங்கள் செய்தால், ஏற்றுக்கொள்ளாத நடுவரின் உரையாடல் பக்கத்தில் ஒரு குறிப்பை இட்டுச் சென்றால், குறிப்பிட்ட பயனர் மீள்பார்வை செய்து ஏற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும். அரசியல், பிள்ளை, திமீத்ரி மெண்டெலீவ் ஆகிய கட்டுரைகள் ஏண் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சரிபார்த்துவிட்டு, குறிப்பிட்ட நடுவருக்கு அறிவித்தால், மீள்பார்வை செய்வார். அத்துடன் வரலாற்றில் போய் எப்படி செய்யப்பட்ட மாற்றங்களைப் பார்ப்பது என்பது பற்றி நான் கொடுத்த விளக்கம் புரிந்ததா என்பதையும் அறியத் தாருங்கள். நன்றி. --கலை (பேச்சு) 09:12, 14 ஆகத்து 2017 (UTC)
- வணக்கம் பசீர், உங்களுடைய கட்டுரைகளை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளேன். ஆயினும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஓவ்வொரு கட்டுரையிலும் வரலாற்றுப் பக்கத்தில் நான் செய்த மாற்றங்களைக் காணலாம். முக்கியமாக போட்டிக்காக முன்னேற்றம் செய்யப்படும் கட்டுரைகளில் கட்டாயமாக பகுப்புகளை சேர்க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:42, 15 ஆகத்து 2017 (UTC)
ஒளிப்படவியல் கட்டுரை
[தொகு]பயனர்:TNSE BASHEER VLR! ஒளிப்படவியல் கட்டுரையில் மீண்டும் அதே தவறு விட்டுள்ளீர்கள். நீங்கள் இங்கே பதில் தராமையினால், கொடுக்கப்படும் ஆலோசனைகளைக் கவனத்தில் கொள்கின்றீர்களா, இல்லையா என்றும் தெரியவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மேற்கோள் எடுத்துப் போடும்போது, எதற்காக மாற்றுகின்றீர்கள் என்று புரியவில்லை. வரலாற்றில் எப்படி செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பார்ப்பது என்று மிக விளக்கமாகவே உங்களுக்கு எழுதினேன். ஆனால் உங்களிடமிருந்து பதில் வராமையினால், புரிந்துகொள்கின்றீர்களா, இல்லையா என்பதும் தெரியவில்லை. தயவுசெய்து, இங்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் பாருங்கள். --கலை (பேச்சு) 17:25, 17 ஆகத்து 2017 (UTC)
- உங்களுக்கு மேற்கோள்களை இணைப்பது எப்படி என்பது பற்றி மிக விளக்கமாக இங்கேயும், மின்னஞ்சலிலும் விளக்கியிருந்தேன். ஆனால் உங்களிடமிருந்து இது தொடர்பில் எந்த பதிலும் வராமையினால், உங்களுக்குப் புரிந்ததா, இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது. தயவுசெய்து அறியத் தரவும். நன்றி. --கலை (பேச்சு) 16:38, 22 ஆகத்து 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி:கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
[தொகு]வணக்கம்! ஒரு தடவையில் 3 கட்டுரைகள் மட்டுமே முற்பதிவு செய்யலாம் என்பதனால், மேலதிகமாக இருந்தவற்றை நீக்கியிருக்கிறேன். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:36, 21 ஆகத்து 2017 (UTC)
நண்பருக்கு நன்றிகள்
போட்டிக்கட்டுரை
[தொகு]பஷீர் அகமது! உங்களால் சமர்ப்பிக்கப்பட்ட அளவியல், அசையும் (அனிமே) ஆகிய கட்டுரைகள் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவற்றில் திருத்தங்களைச் செய்யுங்கள். அவ்வாறு திருத்த விரும்பாவிட்டால், கூறிவிட்டு வேறு கட்டுரைகளை முற்பதிவு செய்து விரிவாக்குங்கள். அதுவரை 3 கட்டுரைகள் மட்டுமே உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டிருக்கும்.
அளவியல் கட்டுரை
[தொகு]இந்தக் கட்டுரையில் துணைத்தலைப்புக்கள், அவற்றின் கீழே வரும் மேலதிக துணைத் தலைப்புக்கள் என்பவை ஒரு ஒழுங்கற்று இருப்பதாகத் தோன்றுகிறது. எஸ்.ஐ. படித்தரங்கள் என்று ஒரு இரண்டாம்நிலைத் துணைத்தலைப்பு உள்ளது. இதன்மூலம் அனைத்துலக முறை அலகுகள் என்பதே குறிப்பிடப்படுகின்றது. அதன்கீழே மூன்றாம் நிலைத் துணைத் தலைப்புக்களாக முதலில் நீளம் (மீட்டர் அதன் அலகு), நிறை (கிலோ கிராம் அதன் அலகு) என்று குறிப்பிட்டு கொடுக்கப்பட்டு, பின்னர் ஆம்பியர், கெல்வின் என்று வருகின்றன. ஆம்பியர், கெல்வின் என்பன எவற்றின் அலகுகளோ, அவற்றை மூன்றாம் துணைத் தலைப்பாகக் கொடுத்தால் ஒரு ஒழுங்கு பேணப்படும். பின்னர் மீண்டும் ஒரு அலகான மோல் என்பது இரண்டாம் துணைத்தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் சர்வதேச அலகுகள் என்ற இரண்டாம் நிலைத் துணைத்தலைப்பு கொடுக்கப்பட்டு அதே அனைத்துலக முறை அலகுகள் பற்றிப் பேசப்படுகின்றது. தயவுசெய்து கட்டுரை விரிவாக்கத்தின்போது, கட்டுரை முழுமையும் ஒரு ஒழுங்கில் வரும்படி கவனியுங்கள். நீங்கள் விரிவாக்கும் பகுதி ஏற்கனவே எழுதப்பட்டிருப்பின், அந்தப் பகுதியிலேயே இணைத்து எழுதுங்கள். ஒரே விடயத்தை வெவ்வேறு துணைத் தலைப்புக்களாக்காமல் தவிர்க்கலாம். இன்னொரு விடயம், நீங்கள் பயன்படுத்தும் சொற்களுக்குரிய கட்டுரை தமிழ்விக்கியில் ஏற்கனவே இருப்பின், அதே சொல்லைப் பயன்படுத்தி, அதற்குரிய உள்ளிணைப்பையும் கொடுங்கள். எ.கா. அனைத்துலக முறை அலகுகள்
அசையும் கட்டுரை
[தொகு]மீண்டும் மேற்கோள்களில் வழுக்கள் உள்ளன. எது உங்களுக்குப் புரியவில்லை என்று கூறினால்தான் மீண்டும் உதவ முடியும். ஆங்கிலக் கட்டுரையிலிருந்து தமிழாக்கம் செய்யும்போது, அங்குள்ள மேற்கோள்களை எப்படி இணைப்பது என்று ஏற்கனவே கூறினேன். அது புரிந்ததா, இல்லையா என்று கூட பதில் கூற மறுக்கிறீர்கள். அதனால் மேலதிக உதவிகளைக்கூடச் செய்ய முடியாமல் உள்ளது. எதில் உங்களுக்குப் பிரச்சனை என்று தெரிந்தால்தான் அதற்கு என்ன செய்யலாம் என்று கூற முடியும். ஏற்கனவே விளக்கியுள்ள ஒரு விடயத்தில் மீண்டும் தவறு வரும்போது, அதில் எந்தப் பகுதி உங்களுக்குப் புரியவில்லை என்று கூறாமல் உதவுவது கடினம். மேற்கோள்களைத் திருத்த முயலாமல், அவற்றை அப்படியே நீக்கிவிடுவது சரியல்ல. சில கட்டுரைகளில் நீங்கள் அவ்வாறு செய்திருப்பதைக் காண முடிந்தது. தயவுசெய்து, கட்டுரைகளில் வரலாற்றுப் பகுதிக்குச் சென்று, மற்றவர்கள் அந்தக் கட்டுரையில் செய்திருக்கும் மாற்றங்களைப் பார்த்து அறிந்துகொள்ள முயலுங்கள். நான் ஏற்கனவே சில திருத்தங்கள் செய்து, இணைப்புக்களையும் கொடுத்து எவ்வாறு அதனைப் பார்ப்பது, புரிந்துகொள்வது என்று விளக்கம் கொடுத்திருந்தேன். ஆனால் அவற்றைப் பார்த்தீர்களா, புரிந்து கொண்டீர்களா என்றுகூட நீங்கள் எழுதாமையினால், என்னால் உதவ முடியாமல் உள்ளது. --கலை (பேச்சு) 22:37, 26 ஆகத்து 2017 (UTC)
மின்னஞ்சலுக்கான பதில்
[தொகு]@TNSE BASHEER VLR, Dineshkumar Ponnusamy, Shriheeran, and Sivakosaran: இங்கே போட்டிக் கட்டுரைகள் தொடர்பாக நான் மேலே இட்ட கருத்துக்கள் தொடர்பாக பஷீர் அகமது எனக்கு மின்னஞ்சல் வழியே ஒரு பதில் அனுப்பி வைத்துள்ளார். அதில் அன்புள்ள விக்கிபீடியா சகோதர சகோதரிகளுக்கு என்று ஆரம்பித்து எழுதியுள்ளார். அதனால் இந்த மடலைப் பலருக்கும் அனுப்பியுள்ளார் என நினைக்கிறேன். அவரது கருத்துக்களை இங்கேயே, எனது கருத்துக்குக் கீழேயே கொடுத்திருக்கலாம். அவ்வாறு விக்கியிலேயே கருத்துக்களை அளித்தால், பலருக்கும் விளக்கம் கிடைக்கும் என்றும், அவ்வாறே செய்யும்படியும் ஒரு தடவை பதில் மடலில் எடுத்துச் சொன்னேன். எப்படி பேச்சுப் பக்கத்தில் எழுதுவது என்று தெரியாது கூறினார். அதை எவ்வாறு எழுதுவது என்று விளக்கமும் அளித்திருந்தேன். சில கருத்துக்களுக்கு அவர் இங்கேயே பேச்சுப் பக்கத்தில் பதில் கொடுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இருந்தாலும் ஏன் மடலில் எழுதுகின்றார் என்பதற்கான காரணம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. இது தொடர்பில் அவருக்கு மின்னஞ்சலில் பதில் அளித்துள்ளேன். அவரது மடலுக்குரிய எனது கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன். இந்தப் போட்டிக் கட்டுரைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டல்லாமல், தொடர்ந்தும் வருங்காலத்தில் நல்ல சிறந்த கட்டுரைகளை ஆக்குவதற்காக என்னால் முடிந்தளவில் அவருக்குப் புரியாத விடயங்களைப் புரிய வைக்கவே முயன்றேன். விளக்கங்களை இங்கே பேச்சுப் பக்கத்தில் மட்டுமன்றி, மின்னஞ்சலிலும் கொடுக்கவே முயன்றேன். ஆனால் எனது முயற்சி பலனளிக்கவில்லை என்பதை அவரது இறுதியாக வந்த மின்னஞ்சல் கூறுகின்றது. அவற்றைப் புரிந்துகொள்ள அவர் முயற்சிக்கவில்லையா அல்லது விளங்கிக்கொள்வதில் அவர் நேரம் செலவளிக்க விரும்பவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் எதனையோ தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார் எனத் தெரிகிறது. அவர் தனது மின்மடலில் என்னுடைய விக்கிபீடியாவுடனான தொடர்பை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அவர் அதற்கு கூறியிருக்கும் காரணங்கள் எனது கருத்துக்களால் ஏற்பட்டிருப்பதால், இனிமேல் அவர் விரிவாக்கும் கட்டுரைகளை @Dineshkumar Ponnusamy, Shriheeran, and Sivakosaran: ஆகியோர் சரி பாருங்கள். நான் இதில் தலையிடவில்லை. ஆனாலும் அவரது குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
- "முற்பதிவு" பகுதியிலிருந்து முடிக்கப்பட்ட "அனிமே" மற்றும் "அளவியல்" ஆகியவை நீக்கப்படவில்லை. மாறாக முற்பதிவு செய்து தொடங்கி முடிக்கப்பட்ட "அப்பாசியக் கலீபகம்" எனும் கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்குக் காரணம் "அனிமே" மற்றும் "அளவியல்" கட்டுரைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும்வரை கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவர் திருத்தும்வரை விட்டு வைக்கப்பட்டுள்ளது. அதனால் அவை இரண்டும், அவரது முற்பதிவிலேயே வைக்கப்பட்டுள்ளது. அவர் திருத்தாவிட்டால், அவற்றை அவரது முற்பதிவிலிருந்து நீக்கிவிட்டு, மேலதிக கட்டுரைகளை முற்பதிவு செய்யலாம் என்றும் கூறியிருக்கிறேன். ஒரு தடவையில் மூன்று கட்டுரைகள் மட்டுமே முற்பதிவில் இருக்க வேண்டும், ஏன் மேலதிகமாக அனுமதிக்கப்படுகிறது என்பது தொடர்பில் ஏற்கனவே எம்மிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதனாலேயே "அப்பாசியக் கலீபகம்" கட்டுரை முற்பதிவிற்கான பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. அதே கட்டுரையை அவர் மீண்டும் முற்பதிவு செய்வதில் தடை ஏதும் இருக்கவில்லை. "அப்பாசியக் கலீபகம்" கட்டுரையை அவர் தொடங்கி முடித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், அந்தக் கட்டுரைப் பக்கத்தில் சென்று நான் பார்க்கவில்லை. முற்பதிவுக்கான பட்டியல்கள் பக்கத்தில் மட்டுமே பார்த்து, முற்பதிவை நீக்கினேன். எனவே கட்டுரை எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது, முடிந்து விட்டதா, முடிக்கவில்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. "அப்பாசியக் கலீபகம்" எனும் கட்டுரையைத் தொடங்கி 26,665 பைட்டுகள் முடித்து அதனை இற்றை செய்யாத நிலையில் அக்கட்டுரையை என் "முற்பதிவு" பகுதியிலிருந்து நீக்கியது மிகவும் வருந்தத்தக்கது. என்று குறிப்பிட்டிருந்தார். பஷீர் அகமது! கட்டுரை ஏற்கனவே விரிவாக்கி முடிவடைந்திருந்தால், அது முற்பதிவுக்கான பக்கத்தில் இல்லாவிட்டாலும்கூட நீங்கள் சமர்ப்பிக்கலாம்தானே. அதில் தடையேதும் இல்லையே. இதில் நீங்கள் வருத்தப்பட ஏதுமில்லை.
- மேற்கோள்களில் தவறு இருந்தது. ஒப்புக்கொள்கிறேன். மேற்கோள்களை நீக்கிக் கொள்கிறேன் (நீக்கும் செயல் எனக்குத் தெரியும். அதை நான் முழுமையாகச் செய்வேன்). அந்த மேற்கோள்களை சரி செய்ய தாங்கள் கூறும் வழிகாட்டுதல்கள் எனக்குப் புரியவில்லை (சரி செய்யும் செயல் நான் அறியாதது. இதுபோல் பல கட்டுரைகளில் தாங்கள் கூறியது போல் முயற்சியும் செய்து சில வழிமுறைகளை நானே உருவாக்கிக் கொண்டேன். தற்பொழுது குறிப்பிட்டுள்ள திருத்தங்கள் புரியவில்லை. எனவே நீக்கி விட்டேன்). சரி செய்யாதது என் தவறு என்பதுபோல் சரி செய்யுமளவுக்கு சரியான முறைமைகள் விக்கிபீடியா இணையத்தில் அனைவருக்கும் எளிதில் புரியும்படி இல்லாதது திட்டத்தின் தவறுதானே. என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கோள்கள் எப்படிச் சேர்ப்பது என்பதுபற்றி மிகவும் விரிவாக விக்கியிலும், மின்னஞ்சலிலும் விளக்கினேன். விளக்கங்கள் கொடுத்ததுடன், சிலவற்றை அவர் விரிவாக்கிய கட்டுரைகளில் திருத்தங்கள் செய்து அவற்றை எடுத்துக் காட்டாகக் காட்டியும் செய்தேன். வரலாற்றில் எப்படித் திருத்தங்களைப் பார்ப்பது என்று தெரியவில்லை என்று கூறியதால், அதனையும் மிக விரிவாக இணைப்புக்களைக் கொடுத்து, எங்கே திருத்தங்களைப் பார்க்கலாம் என்று விளக்கி எழுதினேன். எனக்குப் புரியாத விடயங்களை எப்படி ஏனைய விக்கிப் பயனர்களிடம் கேட்டுக் கற்றுக் கொள்கிறேனோ, அதே வழியில் அவருக்கும் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதில் எந்தப் பகுதியாவது புரியவில்லையெனில் மீண்டும் கேட்குமாறும் கூறியிருந்தேன். வரலாற்றை பார்ப்பதில், அதாவது ஏனைய பயனர்களால் செய்யப்பட்ட திருத்தங்களைப் பார்த்தும் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை எனில், மீண்டும் அது தொடர்பில் கேட்டிருக்கலாம். இருந்தாலும் அதனை மிகவும் விளக்கமாகவே எவ்வாறு திருத்தங்கள் highlight செய்யப்பட்டுள்ளது என்று சொற்களைக்கூடக் குறிப்பிட்டுத்தான் மின்னஞ்சலில் விளக்கம் கொடுத்திருந்தேன். எனக்கு உண்மையிலேயே இதற்குமேலும் எவ்வாறு புரிய வைப்பது என்று தெரியவில்லை. திட்டத்தின் தவறு என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விக்கியில் முழுமையான விளக்கம் கிடைக்காவிட்டாலும், அனைத்து விக்கிப்பீடியர்களும் உதவத் தயாராகவே காத்திருக்கிறார்கள். அனைவரும் ஆரம்பத்தில் கடினமான விடயங்களை, ஏனையோரின் உதவியுடன்தான் புரிந்துகொண்டு எமது விக்கிப் பணிகளைத் தொடர்ந்து வருகிறோம். அவ்வாறு இருக்கையில் திட்டத்தைத் தவறு கூறாமல், அனைவரையும்போல விடயத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம் என்பதே எனது கருத்து. புரிந்துகொள்ளாத பகுதிகளைக் கேளுங்கள் என்று கூறியும், அதனைக் கேட்காமல், திட்டத்தில் தவறு சொல்வது முறையல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
- என் கடின உழைப்பை இனி இதில் செலுத்த வேண்டியதில்லை. என்று கூறியுள்ளார். விக்கியில் பங்களிக்கும் அனைவருமே, தமது நேரத்தைச் செலவிட்டு, உழைப்பை ஒரு நன்னோக்கில் செலவு செய்பவர்கள்தான். அதில் அவரது பங்கும் இருந்ததில் மகிழ்ச்சியே.
- விக்கிபீடியா குடும்பத்திற்கு என்னுடைய பங்களிப்பை என் மனம் திருப்திப்படும் வகையில் கொடுத்துள்ளேன். என்று கூறியுள்ளார். இது நல்ல விடயம்தானே?
- என்னைச் சார்ந்தவர்களை ஊக்குவித்து என் மாவட்டத்தை விக்கிபீடியா பங்களிப்பில் முதன்மையாக இருக்கச் செய்தது என் தவறுதான். வருந்துகிறேன். என்று அவர் கூறியதுதான் முரண்பாடாக உள்ளது. மேலும் பயனர்களை விக்கியில் இணைத்தது நல்ல விடயம்தானே. இதற்கு ஏன் வருந்த வேண்டும்? மேலும் உங்களால் புரிந்துகொள்ள முடியாத விடயத்தை ஒருவேளை உங்களால் ஊக்குவிக்கப்பட்டவர்கள் புரிந்திருக்கவும் வாய்ப்புண்டு. எனவே அவர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எனக்குப் பிறகு விக்கியில் பங்களிக்கத் தொடங்கியவர்களிடம் இருந்தும் நான் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது, இருக்கிறது. அவர்களிடம் கேட்டறிந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.
- என் பங்களிப்பில் குறைகள் இருக்கலாம். நானும் மனிதன்தான். என்று கூறியுள்ளார். இது நான் உட்பட அனைவருக்குமே பொருந்தும். எல்லோரும் தவறுகள் விட்டு, தெரிந்தவர்களிடமிருந்து கற்றுக்கொண்டுதான் இங்கே பங்களிப்பைச் செய்து வருகிறோம். நான் இன்னமும் இங்கே கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதுதான் உண்மை.
- ஆனால் தங்களது விக்கிபீடியா பக்கங்களில் போதிய விளக்கங்கள் அனைவரும் எளிதில் அணுகும் வகையில் இல்லாதது அதைவிட மிகவும் வருந்தத் தக்கது. என்று கூறியுள்ளார். பஷீர் அகமது! தங்களது விக்கிப்பீடியா என்று யாரைக் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. விக்கிப்பீடியா அனைவருக்கும் பொதுவானது, எவரும் தனித்து உரிமை கொண்டாட முடியாது. விக்கிபீடியா உங்களதும், எனதும், அனைவரதும்தான். முதலில் விக்கிப்பீடியா என்பது ஒவ்வொருவரும் தானே விரும்பிச் செய்வதுதான் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். அங்கே விளக்கங்கள் போதாமல் இருந்தால், அனைவரும் இணைந்து அதனை மேம்படுத்த முனைவதுதான் விக்கிப்பீடியா. ஒரு விடயத்தை இங்கேயே பல விக்கியர்களின் உதவியுடன் கற்றுக்கொண்டு ஒத்தாசைப் பக்கங்களை நீங்களும்கூட பலருக்கும் புரியும்வண்ணம் மேம்படுத்தலாம். அதைவிடுத்து, திட்டத்தில் தவறுள்ளது என்று கூறுவது சரியல்ல. நீங்களாகவே கற்றுக்கொண்டு, அவ்வாறான ஒத்தாசைப் பக்கங்களை மேம்படுத்த முனையும்போது, இன்னமும் தெளிவாக விளக்கங்கள் வர வாய்ப்புண்டு.
- முடித்த "அப்பாசியக் கலீபகம்" கட்டுரையை சரிசெய்து சமர்ப்பிக்கப் போவதும் இல்லை. என்று கூறியுள்ளார். இது சரியல்ல என்று கருதுகிறேன். கட்டுரையை முடித்திருப்பின், அதனை சமர்ப்பிப்பதில் எந்தத் தடையுமில்லை. எனது அணுகுமுறை தவறெனில், ஏனைய நடுவர்கள் அவரது கட்டுரையைச் சரி பார்க்கலாம். நான் அவரது கட்டுரையைச் சரி பார்ப்பதில் இருந்து விலகிக்கொள்கிறேன்.
- எனக்காக பதில் எழுதி தங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். என்றும் எழுதியுள்ளார். என்ன செய்வது? என்னால் ஒருவர் விக்கிப் பங்களிப்பை நிறுத்திக் கொள்கின்றேன் என்று கூறும்போது, விளக்கமாகப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். சனிக்கிழமைகளில்தான் வீட்டு வேலைகள் அதிகம் செய்ய வேண்டியதிருக்கும். அவற்றைச் செய்யாமல் கணினியில் என்ன வேலை? என்று வீட்டினரின் ஏச்சுப் பேச்சுக்களையும் பொறுத்துக்கொண்டு பதிலளிக்க வேண்டியுள்ளது .
- (பின் குறிப்பு என்னைப்போல் இன்னொருவரை இழக்கும் முன் விக்கிபீடியா பக்கங்களை படிப்பவர் அனைவரும் புரிந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவிடக்கூடிய வகையில் மாற்றங்கள் செய்ய முயற்சி செய்தால் அதுவே விக்கிபீடியா நாடுநர்களுக்குச் செய்யும் சேவை) என்றும் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். பஷீர் அகமது! விக்கியில் செய்யப்படும் மாற்றங்கள் அனைவரும் இணைந்து செய்வதுதான். எவரும் (நீங்களோ, நானோ அல்லது எவருமோ) அந்த மாற்றங்களைச் செய்யலாம் என்பதுதான் விக்கியின் சிறப்பே. எனவே ஏனைய விக்கிப் பயனர்களால் விளக்கங்கள் கொடுப்பதில் வெற்றி பெற முடியவில்லை என்று நீங்கள் கருதினால், அவற்றைக் கற்றுக்கொண்டு, மாற்றங்களைச் செய்து விக்கியை இன்னமும் முன்னேற்ற உதவலாம். நான் அவ்வாறு தட்டுத் தடுமாறிக் கற்றுக்கொண்டு விக்கி உதவிப் பக்கமொன்றை மேம்படுத்தியிருக்கிறேன். நீங்களும் விக்கி முன்னேற்றத்தில் அக்கறை உண்டெனில் அவ்வாறே செய்யலாம். விக்கிப்பீடியா என்பதும் அதில் பங்களித்த உங்களையும் இணைத்ததுதான். வீக்கிப்பீடியா செய்யும் சேவை என்பதில் உங்கள் சேவையும் சேர்ந்தே அடங்குகிறது. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டாலே, விக்கிப் பங்களிப்பை நிறுத்திக் கொள்கிறேன் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
ஒத்தாசைப் பக்கங்கள் உதவியாக இல்லையென்று நீங்கள் கருதினால், ஒரு முக்கியமான விடயத்தை மீண்டும் சொல்கிறேன். விக்கியில் எவ்வாறு எழுதுவது என்பதை நான் கற்றுக்கொண்டது அம்முறையில்தான். ஒவ்வொரு கட்டுரையிலும் ஏனையோர் என்ன மாற்றங்களைச் செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள் என்பதை வரலாற்றுப் பக்கத்தில் போய், செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், திருத்தங்களைப் பார்த்து அதனைச் செய்து பார்க்கலாம். அல்லது கட்டுரையின் தொகுப்பிற்குள் போய் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதனைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். இந்த மாற்றங்களை உங்கள் மணல்தொட்டியில் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். பொறுமையுடன் வாசித்ததற்கு நன்றி. இவற்றைக் கருத்தில்கொண்டு, தொடர்ந்து உங்கள் பங்களிப்பை விக்கிக்கு அளித்தால் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் --கலை (பேச்சு) 12:15, 27 ஆகத்து 2017 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
[தொகு]அன்புள்ள பசீர்,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி.--இரவி (பேச்சு) 19:07, 18 மார்ச் 2018 (UTC)
Try the new version of Content Translation
[தொகு]Hi TNSE BASHEER VLR,
I’m Pau Giner, a Designer and Product Manager working with the Language team of the Wikimedia Foundation. We are working on some improvements to Content Translation that may be of your interest since you have been a prolific translator during the recent months.
Currently the Language team is working on a new version of Content Translation that will provide a more solid editing experience. This is expected to solve many of the common issues that translators experience when creating a translation. Inserting and editing complex content such as references will be much easy, reliable and producing cleaner wikitext as a result.
The new version is a major refactoring and architectural update of Content Translation, so we want to expose it to editors in a gradual way but starting at an early stage. Given your experience with the current version of the tool, we think you are an ideal candidate to try the new version and give us feedback. If you are interested you can follow these steps:
- Access the new version of the tool. You can access the new version anytime at the usual location of the tool by adding a version=2 parameter to the URL. So you can follow this link to start a new translation: https://ta.wikipedia.org/wiki/Special:ContentTranslation?version=2
- Translate an article. Try to create a new article as you would normally do in Content Translation.
- Provide feedback. Based on your experience translating with the new version (and your previous experiences with the former version) you can provide feedback in this talk page. Provide feedback mentioning what worked well, what didn’t work so well, and whether you noticed anything important to be missing to support your translation workflow. If you are familiar with Phabricator (our bug tracking system), you can report CX2 related issues by creating a ticket using this link.
Your feedback will be very useful to identify common issues to work on for the upcoming months.
Thanks for using Content Translation.
--Pginer-WMF (பேச்சு) 09:56, 11 சூன் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
[தொகு]சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
பரிசினைப் பெற்றுக் கொள்க
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியாவில் நடந்த தொடர் பங்களிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு அமேசானின் மின்பரிசுச் சீட்டின் அனுப்பவுள்ளோம். இது தொடர்பாக தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் வரவில்லை. தங்களின் தபால் முகவரியும், அஞ்சல் முகவரியினையும் தர இயலுமா? எனது மின்னஞ்சல் அல்லது இதர வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:38, 24 அக்டோபர் 2019 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
[தொகு]Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.