த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த லார்டு ஆப் த ரிங்ஸ்:
த பெலொசிப் ஆப் த ரிங்
இயக்கம்பீட்டர் ஜாக்சன்
தயாரிப்பு
மூலக்கதைத லோட் ஒவ் த ரிங்ஸ்
படைத்தவர் ஜே. ஆர். ஆர். டோல்கீன்
திரைக்கதை
  • பிரான் வால்ஷ்
  • பில்லிப்பா பாய்யேன்ஸ்
  • பீட்டர் ஜாக்சன்
இசைஹவார்ட் ஷோர்
நடிப்பு
ஒளிப்பதிவுஆண்ட்ரூ லெஸ்லி
படத்தொகுப்புஜெமி செல்கிர்க்
விநியோகம்நியூ லைன் சினிமா
விங்நட் பிலிம்சு
வெளியீடு10 திசம்பர் 2001 (2001-12-10)(ஐக்கிய இராச்சியம்)
19 திசம்பர் 2001 (ஐக்கிய அமெரிக்கா)
20 திசம்பர் 2001 (நியூசிலாந்து)
ஓட்டம்178 நிமிடங்கள்
நாடுநியூசிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$93 மில்லியன்[1]
மொத்த வருவாய்$897.7 மில்லியன்

த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (ஆங்கில மொழி: The Lord of the Rings: The Fellowship of the Ring) என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு காவிய கனவுருப்புனைவுத் சாகசத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1954 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவர் எழுதிய த லோட் ஒவ் த ரிங்ஸ் என்ற புதின புத்தகத்தை மையமாக கொண்டு பீட்டர் ஜாக்சன் என்பவர் தயாரித்து மற்றும் இயக்க, எலியா வுட்,[2] இயன் மெக்கெல்லன்,[3] லிவ் டைலர், விக்கோ மோர்டென்சென்,[4] சீன் ஆஸ்டின், கேட் பிளான்சேட், ஜோன் ரைஸ்-டேவிஸ், பில்லி பாய்டு, டோமினிக் மோனகன், ஆர்லாந்தோ புளூம், கிறிஸ்டோபர் லீ, ஹியூகோ வீவிங், சான் பீன், இயன் ஹோல்ம் மற்றும் ஆண்டி செர்கிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்கள்.

இந்த படத்தின் கதை மத்திய-பூமியில் அமைக்கப்பட்டடுள்ளது, அதிகாரத்திற்குத் திரும்புவதற்காக, தனது ஆன்மாவின் ஒரு பகுதியைக் கொண்ட ஒரு மோதிரத்தைத் தேடும் டார்க் லார்டு சாரோனைப் பற்றி சொல்கிறது. இளம் ஹாபிட் பிரோடோ பேக்கின்சுக்கு இந்த அதிசய மோதிரம் கிடைக்கிறது. பிரோடோ மற்றும் எட்டு தோழர்கள் மோதிரத்தை அழிக்கக்கூடிய ஒரே இடமான மோர்டோர் தேசத்தில் உள்ள மவுண்ட் டூமுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்கும்போது ஏற்படும் பல சவால்களை சொல்லறது.

இந்த படம் திசம்பர் 10, 2001 அன்று லண்டனில் உள்ள ஓடியோன் லீசெஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது மற்றும் 19 டிசம்பர் 2001 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதன் விசுவல் எபெக்ட்சு, ஜாக்சனின் இயக்கம், திரைக்கதை, இசையமைப்பு மற்றும் மூலப்பொருளுக்கு விசுவாசம் ஆகியவற்றிற்காக பாராட்டைப் பெற்றது. இது அதன் ஆரம்ப வெளியீட்டில் உலகளவில் $880 மில்லியன் வசூலித்தது, இது 2001 இன் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாகவும், வெளியான நேரத்தில் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த ஐந்தாவது படமாகவும் அமைந்தது. அடுத்தடுத்த மறு வெளியீடுகளைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு வரை $897 மில்லியனுக்கு மேல் வசூலித்துள்ளது.[5] இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Lord of the Rings: The Fellowship of the Ring (2001)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 5 February 2009.
  2. Flynn, Gillian (16 November 2001). "Ring Masters". Entertainment Weekly. Archived from the original on 25 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 16 September 2007.
  3. "Obituary: Patrick McGoohan". 14 January 2009. http://news.bbc.co.uk/2/hi/entertainment/5083460.stm. 
  4. xoanon (15 October 1999). "Daniel Day-Lewis Offered role of Aragorn, Again!". theonering.net. பார்க்கப்பட்ட நாள் 23 August 2012.
  5. "All Time Worldwide Box Office". Box Office Mojo. Archived from the original on 1 October 2002.

வெளி இணைப்புகள்[தொகு]