தொப்பையாங்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொப்பையாங்குளம் (ஆங்கிலம்:Thoppaiyankulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமத்தில் 500 வீடுகளும், 2000 மக்களும் வாழ்வதாக 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் 'வன்னிய படையாட்சி' இன மக்கள் வாழக்கூடிய கிராமம் ஆகும். இங்கு உள்ள முத்து முனீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது தவிர ஒன்டி வீரன் ஆலயமும் புகழ் பெற்றது.

இவ்வூரில் மொத்தம் 4 தெருக்கள் உள்ளன - ரோட்டுத்தெரு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு நடுத்தெரு. வாக்குரிமை பெற்றவர்கள் 900 பேர் ஆவர். ஓர் அங்கன்வாடி மையமும், ஓர் அரசு ஆரம்பப்பள்ளியும், பகுதி நேர நியாயவிலைக்கடையும் உள்ளது. கோவிந்தசாமி படையாட்சி, முருகேசபடையாட்சி காசி படையாட்சி போன்றோர் புகழ்பெற்று வாழ்ந்தவர்கள்.

தொழில்[தொகு]

விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. பணப்பயிரான முந்திரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அதிகளவு முந்திரி பருப்பு வியாபாரம் நடைபெறுகிறது. மேலும், மா, பலா ஆகிய பழ வகைகளும் பயிராகின்றன. இது தவிர தோட்டப் பயிர்களான புடலை, பாகல், அவரை ஆகியவை பயிரிடப்படுகின்றன. விவசாயம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இங்கு முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலும் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கல்வி[தொகு]

முதல் தலைமுறை கல்வி பெறும் கிராமம். பலரும் தங்கள் மேற்படிப்பைச் சென்னையில் கற்கின்றனர். வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இக்கிராமத்தில் தற்பொழுது படித்தவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது.

எல்லைகள்[தொகு]

வடக்கே ஒல்லியாம்பாளையம், மேற்கே கல்லமேடு, தெற்கே எலவத்தடி, வடமேற்கில் சேந்தநாடு ஆகிய ஊர்கள் உள்ளன .

அமைவிடம்[தொகு]

11° 41′39.88″ N 79°25′ 46.89″E

அருகாமை நகரங்கள்[தொகு]

விழுப்புரம் (40Km)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொப்பையாங்குளம்&oldid=2807560" இருந்து மீள்விக்கப்பட்டது