தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்
Appearance
தேவாரம் பாடல் பெற்ற தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலுள்ள இறைவன் குற்றம் பொறுத்த நாதர், இறைவி கோல்வளைநாயகி.[1] இக்கோயிலில் சட்டநாதருக்கான தனி சன்னதி மலைக்கோயில் என்ற பெயரில் அமைந்துள்ள கோயிலில் காணப்படுகிறது.
சிறப்புகள்
[தொகு]இந்திரன், இறைவன் என்றறியாமல் அவர்மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத்தருளியமையால் குற்றம் பொறுத்த நாதர் ஆனார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
இவற்றையும் பார்க்க
[தொகு]திருக்கருப்பறியலூர் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்குறுக்கை |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்குரக்குக்கா |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 27 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 27 |