சிம்மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிம்மாதிரி
Simmathiri
沉马氏里
பிறப்பு சிம்மாதிரி
அப்பளசாமி

04 அக்டோபர் 1950
 மலேசியா
சுங்கை சிப்புட்,
பேராக்
இருப்பிடம் கோலா தெர்லாக், கேமரன் மலை, பகாங்
தேசியம் மலேசியர்
மற்ற பெயர்கள் கஜாலியா
கல்வி உயர்நிலைக் கல்வி
பணி அரசியல்வாதி
பகாங் மாநில ஜனநாயக செயல் கட்சி துணைத்தலைவர்
பணியகம் சொந்தத் தொழில்
விவசாயம் செய்தல்
அறியப்படுவது கேமரன் மலை, சுற்றுச் சூழல், இயற்கை பாதுகாப்பு
பட்டம் மொழி உரிமைப் போராட்டவாதி
சமயம் இந்து
வாழ்க்கைத் துணை ஈஸ்வரி
பிள்ளைகள் 3 ஆண்கள் 4 பெண்கள்

சிம்மாதிரி அப்பளசாமி (ஆங்கிலம்: Simmathiri), (பிறப்பு: அக்டோபர் 4, 1950) மலேசியாவில், தமிழ்மொழி, தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். மலேசிய மனித உரிமைக் கழகத்தின் செயல்பாட்டாளர்.[1] தமிழ் மொழிப் பள்ளிகளை மலேசிய அரசாங்கம் பாரபட்சம் இல்லாமல் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருபவர். 'எங்கள் உரிமை எங்களுக்கு வேண்டும்' என மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மலேசியர்களில் தனிச் சிறப்பைப் பெறுகின்றார்.[2][3]

கேமரன் மலையின் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் பேரணியைத் திரட்டி, மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர். கேமரன் மலை வாழ் தமிழர்களின் வியாபார நிலப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதில் ஒரு கொள்கைப் பிடிப்பாடு கொண்டவர். கேமரன் மலையின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதில் முன்னிலை வகிக்கின்றார்.[4][5]

அரசாங்கத்தையும், தன்னைச் சார்ந்த அரசியல் கட்சியையும் எதிர்பார்த்து நிற்காமல், தன் சொந்த வருமானத்தில் அரசியல் செலவுகளைக் கவனித்துக் கொள்கிறார். அரசியல் வாழ்க்கையில் தன்னலமற்றச் சேவைகளை வழங்கி வரும் ஒரு நடுநிலைவாதி.

2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 42,436 வாக்காளர்கள் கொண்ட கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் எஸ்.கே. தேவமணியை எதிர்த்து நின்றவர். மிகக் குறுகிய 1466 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்மாதிரி&oldid=1819220" இருந்து மீள்விக்கப்பட்டது