சாங்காய்

ஆள்கூறுகள்: 31°13′43″N 121°28′29″E / 31.22861°N 121.47472°E / 31.22861; 121.47472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:23, 14 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎மேலும் அறிய: clean up, removed: {{Authority control}} using AWB)
சாங்காய் நகரம்
上海市
Shànghǎi Shì
ஷாங் ஹாய் ஷு
பெருநகரம்
மேலிருந்து வலச்சுற்றாக: புடோங் தோற்றம்; யூயுவான் பூங்கா, சீனக் காட்சிக்கூடம், நான்ஜிங் சாலையில் மின்விளக்கு பதாகைகள், நீர்த்துறை
மேலிருந்து வலச்சுற்றாக: புடோங் தோற்றம்; யூயுவான் பூங்கா, சீனக் காட்சிக்கூடம், நான்ஜிங் சாலையில் மின்விளக்கு பதாகைகள், நீர்த்துறை
சீனாவில் சாங்காயின் அமைவிடம்
சீனாவில் சாங்காயின் அமைவிடம்
நாடு சீனா
County-level divisions18 மாவட்டங்கள், 1 கவுண்டி
ஊர் பகுதிகள்220 ஊர்களும் கிராமங்களும்
குடியேற்றம் (ஹுவாடிங் கவுண்டி)கிபி 751
நிறுவனப்பட்டது (சாங்காய் ஊர்)கிபி 991
நிறுவப்பட்டது (சாங்காய் கவுண்டி)1292
அரசு
 • வகைமாநகராட்சி
 • கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர்யூ ஜங்ஷங் (俞正声)
 • மாநகராட்சி தலைவர்ஹான் ஜங் (韩正)
பரப்பளவு
 • பெருநகரம்7,037.50 km2 (2,717.19 sq mi)
 • நிலம்6,340.50 km2 (2,448.08 sq mi)
 • நீர்697 km2 (269 sq mi)
 • நகர்ப்புறம்
5,299.29 km2 (2,046.07 sq mi)
 • சொங்மிங்1,041.21 km2 (402.01 sq mi)
ஏற்றம்4 m (13 ft)
மக்கள்தொகை
 (2008)
 • பெருநகரம்2,06,09,000
 • அடர்த்தி3,154/km2 (8,170/sq mi)
 • நகர்ப்புறம்
1,44,04,000
 மக்கள் தொகை அடர்த்தி 2008
நேர வலயம்ஒசநே+8 (பெய்ஜிங் நேர வலயம்)
Postal code
200000 – 2021000
Area code+86/21
GDP(2006)
 - மொத்தம்¥1,029.7 பில்லியன்
 - தலா/ஆள்வீதம்¥56,733
ம.வ.சு. (2005)0.909
இடத்தில் பேச்சு: சாங்காய் சீனம்
இணையதளம்www.shanghai.gov.cn

சாங்காய் (சீனம்: 上海 ஷாங் ஹாய், என்னும் "கடல் பக்கத்தில்") சீன நாட்டிலும்[4][5] உலகளவிலும் மக்கள்தொகைப்படி மிகப்பெரிய நகரமாகும் [6]. இது சீனாவின் வணிக மற்றும் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது. 23 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சாங்காய் சீனாவின் நான்கு மாநிலளவிலான நகராட்சிகளில் ஒன்றாகும்.[7] பன்னாட்டு மக்களும் வாழும் இந்நகரம் வணிகம், பண்பாடு, நிதியம், ஊடகம், கவின்கலை, தொழினுட்பம், மற்றும் போக்குவரத்தில் தாக்கமேற்படுத்தி வருகிறது. முதன்மை நிதிய மையமாக விளங்கும் சாங்காய்[8] உலகின் மிகுந்த போக்குவரத்து மிக்க சரக்குக்கலன் துறைமுகமாகவும் உள்ளது.[9]

இது சீனாவின் கிழக்குப் பகுதியில் யாங்சே ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது. சீனக் கடலோரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் ஜியாங்சு மற்றும் செஜியாங் மாநிலங்களாலும் கிழக்கில் கிழக்கு சீனக்கடலாலும் சூழப்பட்டுள்ளது.[10]

பல நூற்றாண்டுகளாக முதன்மையான நிர்வாக, கடல்வணிக, பண்டமாற்று மையமாக விளங்கிய சாங்காய் 19வது நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. சாங்காய் துறைமுகத்தின் அமைவிடமும் பொருளியல் முக்கியத்துவமும் ஐரோப்பியர்களால் உணரப்பட்டது. முதலாம் அபினிப் போரில் பிரித்தானியர் வென்றபிறகு வெளிநாட்டு வணிகத்திற்கு திறக்கப்பட்ட பல துறைமுகங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது. 1842ஆம் ஆண்டில் கண்ட நாஞ்சிங் உடன்படிக்கையின்படி சாங்காயில் வெளிநாட்டினர் குடியேற்றங்கள் அனுமதிக்கப்பட்டன. இதன்பிறகு கிழக்கிற்கும் மேற்கிற்குமான வணிகத்தில் சாங்காய் முக்கிய பங்கு வகித்தது. 1930களில் ஆசிய பசிபிக் மண்டலத்தின் தன்னிகரில்லா நிதிய மையமாக முன்னேற்றம் கண்டது.[11] இருப்பினும், 1949இல் பொதுவுடமைக் கட்சி கையகப்படுத்தி பின்னர், சோசலிச நாடுகளுக்கு மட்டுமே வணிகம் குவியப்படுத்தப்பட்டது. இதனால் பன்னாட்டளவில் இதன் தாக்கம் குறையலாயிற்று. 1990களில் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்திய சீனப் பொருளாதார சீர்திருத்தங்களால் நகர வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது. வெளிநாட்டு மூலதனம் குவியலாயிற்று.[12]

சாங்காய் சுற்றுலாத் தலமாகவும் புகழ்பெறத் தொடங்கியது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்த்துறை, நகர தேவதை கோவில், யூயுவான் பூங்கா போன்றவையும் வளர்ந்துவரும் வானளாவிக் கட்டிடஙளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சீன நிலப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டின் காட்சியகமாக சாங்காய் குறிப்பிடப்படுகிறது.[13][14]

பெயர்க்காரணம்

சாங்காய்
சீனமொழியில் "சாங்காய்", எழுதப்படும் விதம்
சீனம் 上海
Wu Zaonhe
சொல் விளக்கம் கடல் மேல் அல்லது கடலில்

சீன எழுத்துமுறையில் இந்நகரத்தைக் குறிக்கும் இரு எழுத்துக்களான '上' (சாங் - "மேலே") மற்றும் '海' (ஹாய் - "கடல்"), இணைந்து இதற்கு சொல்விளக்கமாக "கடல்-மேல்" எனப் பொருள்தருகின்றன. இந்தப் பெயரின் பயன்பாடு முதன்முதலில் 11வது நூற்றாண்டின் சொங் அரசமரபு காலத்தில் கிடைக்கிறது. அப்போதே இங்குள்ள ஆற்று கழிமுகத்தில் இப்பெயருடைய ஊர் இருந்துள்ளது. இந்தப் பெயரை எவ்வாறு பொருள் கொள்வது என்பதற்கு பல விவாதங்கள் நடைபெற்றபோதும் சீன வரலாற்றாளர்கள் தாங் அரசமரபு காலத்தில் இந்நகர் உண்மையாகவே கடலின் மேல் இருந்ததால் அதுவே சரியான விளக்கமாக கொள்கின்றனர்.[15]

சாங்காயில் உள்ளதோர் வானளாவி (ஓரியன்டல் பேர்ள் டவர்)

மேற்சான்றுகள்

  1. "Land Area". Basic Facts. Shanghai Municipal Government. பார்க்கப்பட்ட நாள் 2007-09-12.
  2. "Water Resources". Basic Facts. Shanghai Municipal Government. பார்க்கப்பட்ட நாள் 2007-09-12.
  3. "Topographic Features". Basic Facts. Shanghai Municipal Government. பார்க்கப்பட்ட நாள் 2007-09-12.
  4. Chan, Kam Wing (2007). "Misconceptions and Complexities in the Study of China's Cities: Definitions, Statistics, and Implications". Eurasian Geography and Economics 48 (4): 383–412. doi:10.2747/1538-7216.48.4.383. http://courses.washington.edu/chinageo/ChanCityDefinitionsEGE2007.pdf. பார்த்த நாள்: 13 September 2011. , p. 395.
  5. "What are China's largest and richest cities?". University of Southern California.
  6. "Cities: largest (without surrounding suburban areas)". Geohive. பார்க்கப்பட்ட நாள் 13 September 2011.
  7. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census". National Bureau of Statistics of China.
  8. "The Competitive Position of London as a Global Financial Centre" (PDF).
  9. "Top 50 World Container Ports".
  10. "Geographic Location". Basic Facts. Shanghai Municipal Government. பார்க்கப்பட்ட நாள் 14 September 2011.
  11. Scott Tong (October 2009). "Shanghai: Global financial center? Aspirations and reality, and implications for Hong Kong" (PDF). Hong Kong Journal. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
  12. "Historic Transformation". Shanghai.gov.cn. 27 May 1949. பார்க்கப்பட்ட நாள் 11 December 2011.
  13. Hunt, Katie (21 May 2008). "Shanghai: China's capitalist showpiece". BBC News. http://news.bbc.co.uk/2/hi/business/7373394.stm. பார்த்த நாள்: 7 August 2008. 
  14. "Of Shanghai... and Suzhou". The Hindu Business Line. 27 January 2003. பார்க்கப்பட்ட நாள் 20 March 2008.
  15. Danielson, Eric N., Shanghai and the Yangzi Delta, 2004, pp.8–9.

மேலும் அறிய

பெரிய எழுத்துக்கள்==வெளி இணைப்புகள்==


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்காய்&oldid=2691011" இலிருந்து மீள்விக்கப்பட்டது