உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Kanags

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பயனர் பேச்சு:KanagsBOT இலிருந்து வழிமாற்றப்பட்டது)WikiProject Days of the year

[தொகு]

en:Wikipedia:WikiProject Days of the year இவ்வாறான ஒரு பக்கத்தை வழிகாட்டலுக்காக உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். நாள் தொடர்புபட்ட கட்டுரைகளில் பயனற்ற தொகுப்புகள் இடம்பெறுகின்றன. ஆ.வி கட்டுரைகளின் தொகுப்பில் இவ்வாறான அறிவிப்பு வருகின்றது:

Please read before editing

 • Each addition now requires a direct citation from a reliable source on this page supporting it. Simply providing a wikilink is not sufficient and additions without direct sources will be removed.
 • The births and deaths listed on this page are only for people for whom there is a Wikipedia article (no red links and no redirects). Please do not add yourself (unless there is a Wikipedia article about you), or anyone without a Wikipedia article. Any entry added for anyone without an article will be deleted.
 • The events listed on this page should be notable in that society and for some reasonable amount of time. Further guidelines for what should and should not be included are provided at Wikipedia:Days of the year. Events not meeting these guidelines will be removed.
 • The formatting of this page is considered static and should not be changed without discussion (and consensus) at Wikipedia talk:WikiProject Days of the year. The formatting is based on the template at Wikipedia:WikiProject Days of the year/Template and includes spacing, use of – instead of –, the number of sections, overlinking of years, and the use of references.

AntanO (பேச்சு) 07:57, 23 சனவரி 2024 (UTC)[பதிலளி]

பயிலரங்கு 2024

[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய பயனர்களின் பங்களிப்பினைப் பெறுவதற்காக பயிலரங்கு 2024 (திருநெல்வேலி) திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயிலரங்கத்தின் முக்கியக் கூறுகள்:

[தொகு]
 1. அறிவியல், கலை ஆகிய துறைகளில் பணியாற்றும் கல்லூரி ஆசிரியர்கள் 50 பேருக்கு, தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
 2. நாள் 1 - அறிமுகமும், அடிப்படைப் பயிற்சியும் (தளத்தில் உலவுதல், தொகுத்தல்). ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தும் பணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, விரிவாகக் கற்றுத் தரப்படும்.
 3. நாள் 2 - கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளை புதிய பயனர்கள் செய்வர். பயிற்சி தருபவர்கள் உடனிருந்து உதவுவர்.
 4. 1000 கட்டுரைத் தலைப்புகள் அடங்கிய பட்டியலானது புதிய பயனர்களிடத்து தரப்படும். அவர்களுக்கு விருப்பமான கட்டுரையை அவர்கள் தேர்ந்தெடுத்து, மேம்பாட்டுப் பணிகளைச் செய்வர்.
 5. பயிலரங்கத்தின் முடிவில் மொத்தமாக 250 கட்டுரைகள் மேம்படுத்தப்பட்டிருக்கும் (ஒரு பயனர், 5 கட்டுரைகளை மேம்படுத்துவார்).
 6. புதிய கட்டுரையை வரைவு எனும் தலைப்பின்கீழ் உருவாக்குவதற்கு வழிகாட்டல் தரப்படும். நேரமிருப்பின், ஒவ்வொருவரும் ஒரு கட்டுரை மட்டும் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.

உங்களிடம் கோரப்படும் உதவி:

[தொகு]

பயிற்சி பெறும் புதிய பயனர்களுக்கு தரவேண்டிய பட்டியலை உருவாக்குவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை நீங்கள் வரிசையாக இடலாம்.

சில குறிப்புகள்:

 1. திறன்பேசி, முதுகெலும்பி ஆகிய கட்டுரைகளில் ஒரு மேற்கோள்கூட இல்லை. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
 2. விலங்கு எனும் கட்டுரை கூகுள் தமிழாக்கம் வழியாக உருவாக்கப்பட்டு அப்படியே இருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
 3. ஆறு எனும் கட்டுரையில் மேற்கோள்கள் பெயரளவில் உள்ளன. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
 4. மிகுந்த நுட்பமான கட்டுரைகளை மேம்படுத்துவது புதியவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.
 5. மேம்படுத்துதலை எளிதாக செய்யக்கூடிய, தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்தோடு இருக்கவேண்டிய, முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்பை பட்டியலில் சேர்க்கலாம்.

பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள்.

மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:07, 7 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

தவறான தகவல்களை பதிவிடுதல் பற்றியது

[தொகு]

கனகரத்தினம் சிறிதரன் அவர்களே.. நாங்கள் டிறிபேக் கல்லுரியில் 6 தலைமுறைகளாக கல்வி கற்று வரும் குடும்பம். நாங்கள் எமது கல்லூரியை பற்றிய சரியான தகவல்களை பதிவிலிட்டு வருகிறோம். எமது கல்லூரி wiki pedia பக்கத்தில் சரியான தகவல்களை நிக்கி... தவறான தகவல்களை பதிவிலிட வேண்டாம். நீங்கள் கல்லூரி பற்றிய தகவல்கள் ஏதும் பதிவில் இடுவதாயின் எம்முடன் கலந்தாலோசிக்கவும். நன்றி நித்திகா மனோகரன் (பேச்சு) 18:06, 6 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நம்பகமான ஆதாரத்துடன் பதிவுசெய்யுங்கள். தேவையென்றால் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உரையாடுங்கள். //நீங்கள் கல்லூரி பற்றிய தகவல்கள் ஏதும் பதிவில் இடுவதாயின் எம்முடன் கலந்தாலோசிக்கவும்.// நீங்களும் இங்கு ஒரு பயனரே தவிர, சிறப்புச் சலுகைகள் இங்கில்லை. ~AntanO4task (பேச்சு) 18:12, 6 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்

[தொகு]

இந்தப் பகுப்பினை முன்பு உருவாக்கியிருந்ததாக நினைவு. தேடிப் பார்த்து கிடைக்காததால், மீண்டும் உருவாக்க முனைந்தபோது... நீங்கள் 2022 ஆம் ஆண்டில் நீக்கியிருப்பது தெரியவந்தது. இந்த பராமரிப்புப் பகுப்பு தேவையில்லை எனக் கருதுகிறீர்களா? இப்பகுப்பு இருந்தால், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பினை அளவிட உதவும் ஒரு கூறாக இருக்கும் என்பது எனது கருத்து. உங்களின் கருத்தினை அறிந்துகொள்ளலாமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:39, 11 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: எதற்காக அதனை நீக்கினேன் என நினைவில்லை. நீங்கள் கூறுவதுபோல இப்பகுப்பு தேவையான ஒன்றாக இருக்கலாம். தகுந்த ஒரு தாய்ப்பகுப்பினுள் சேருங்கள்.--Kanags \உரையாடுக 09:02, 12 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பாலாஜியின் இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் நீக்கியிருக்க வாய்ப்புள்ளது. இயங்குபடம் என்பது animation என்பதனைக் குறிப்பதால், மீண்டும் உருவாக்கிய பகுப்பை உரிய தாய்ப்பகுப்பினுள் சேர்த்துள்ளேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:43, 12 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

இதனை முன்பு இருந்ததைப் போன்று மாற்றிக்கொள்ளவா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:56, 12 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மாற்றலாம்.--Kanags \உரையாடுக 10:01, 12 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Balajijagadesh: இயங்குபடம் (animation) என்பது காணொளி (video) என்பதிலிருந்து வேறுபட்டது என்பதால், பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள் எனும் பகுப்பினை மீண்டும் உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதும் உள்ளனவா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:40, 12 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மணிமாலா கட்டுரை

[தொகு]

வணக்கம் ஐயா மணிமாலா ஊர் பற்றியக் கட்டுரை தானாகவே நடிகை மணிமாலாவின் கட்டுரையின் விக்கித் தரவில் சேர்ந்துவிட்டது. நான் பேருந்து பயணத்தில் இருப்பதால் உடனடியாக அதை சரி செய்ய இயலவில்லை. நன்றி.--Balu1967 (பேச்சு) 06:53, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

தானியங்கி

[தொகு]

வணக்கம். திகதிப் பிழைகளை களைவதற்காக, தானியங்கி மூலம் செப்டம்பர் என்பதை செப்தெம்பர் என்று மாற்றினேன். சிவப்பு இணைப்பாக வந்துள்ளது. வரும் நாட்களில் செப்டம்பர் பக்கங்கள் செப்தெம்பர் என மாற்றப்பட வாய்ப்புள்ளதா? . ஏனென்றால் திகதிப் பிழையான பக்கங்கள் 23700 இற்கும் அதிகமாகவுள்ளது. தானியங்கி கொண்டு மாற்றினால் விரைவாக மாற்றலாம். தங்களின் கருத்திட வேண்டுகிறேன்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 10:49, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

இது தேவையற்ற ஒரு மாற்றம். ஏனிந்த மாற்றம் தேவையாக இருந்தது?--Kanags \உரையாடுக 11:07, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
திகதிப் பிழை நீக்கத்திற்காக பகுப்பு:CS1 errors: dates இப்பகுப்பைத் தேர்ந்தெடுத்து இவ்வாறு மாற்றலாம் எதிர்பார்த்து செப்டம்பர் என்பதை செப்தெம்பர் என்று மாற்றினேன். இது இம்மாற்றத்தை நிகழ்த்தியது. இதற்கு வேறு வழி உள்ளதா எனப் பார்க்கிறேன். நன்றி.-- சா. அருணாசலம் (உரையாடல்) 18:12, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
@சா அருணாசலம்: இப்போதைக்கு இவற்றை மாற்ற வேண்டாம். மாதங்களின் சரியான பெயர்களிலேயே பல குழப்பங்கள் உள்ளன. அவை வெவ்வேறு பயனர்களால் மாற்றப்படலாம். வேறு வழிகளைத் தேடுவோம்.--Kanags \உரையாடுக 22:26, 23 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

காப்பீடு தொடர்பான தமிழ்க் கட்டுரைகள் பகுப்பு நீக்கப்பட்டது பற்றி

[தொகு]

வணக்கம். மேற்குறிப்பிட்ட பகுப்பு நீக்கப்பட்டதாக தெரிந்துகொண்டேன். இதன் காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள விழைகிறேன். தகுந்த காரணமின்றி இது நீக்கப்பட்டிருக்காது என்பதால் காரணத்தை தெரிந்துகொண்டு இப்பகுப்பை உருவாக்கியது தவறாக இருந்தால் இது போன்ற தவறு மேலும் வராமல் பார்த்துக்கொள்ளவே இதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 15:12, 23 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Sree1959: இதனை எதற்காக உருவாக்கினீர்கள் என்பதை முதலில் தெரிவியுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள் வேற்று மொழிகளிலா எழுதப்படுகிறது? நீக்கியமைக்குக் காரணம் வேறு சொல்ல வேண்டுமா?--Kanags \உரையாடுக 22:03, 23 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
@Kanags: வணக்கம். காப்பீடு தொடர்பான கட்டுரைகளின் பட்டியலை தெரிந்துகொள்வதற்காக / எடுப்பதற்காக ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் இந்தப் பகுப்பினை ஆரம்பித்திருப்பார் எனத் தெரிகிறது. அவ்வாறு அனுமானம் செய்து அதனை மறைந்த பகுப்பாக மாற்றினேன். மற்ற துறைக் கட்டுரைகளை பராமரிப்புப் பணிகளுக்காக நாம் மறைந்த பகுப்புகளில் கொண்டிருப்பதால், இதனையும் அவ்வாறாக நான் கருதினேன். தமிழ்க் கட்டுரைகள் என்பதற்குப் பதிலாக கட்டுரைகள் என இருந்திருந்தால் நன்று. இதனை நான் கவனித்தேன். அப்போது வேறொரு பணியில் இருந்ததால், இதில் கவனக்குவியம் கொள்ளவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:34, 24 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
காப்பீடு என்ற பகுப்பு உள்ளது. அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அவர் கொடுத்திருந்த விளக்கம்: //ஆங்கில விக்கிப்பீடியாவில் எத்தனையோ காப்பீடு தொடர்பான கட்டுரைகள் உள்ளன. இவற்றில் பல தமிழ் மொழியிலும் காணப்படுகின்றன. இருப்பினும் இவற்றை ஒருங்கிணைக்க பகுப்பு ஏதும் இதுவரை இல்லாததால் இந்த பகுப்பு காப்பீடு தொடர்பான தமிழ் மொழி கட்டுரைகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.// அவருக்குக் காப்பீடு என்ற பகுப்பு உள்ளது தெரிந்திருக்கவில்லையோ தெரியவில்லை. இவ்வாறான பகுப்புகளை உருவாக்க நாம் ஊக்குவிக்கக்கூடாது.--Kanags \உரையாடுக 03:46, 24 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
வணக்கம் ஐயா, தங்கள் பதிலில் நிர்வாக உரிமைகளை கையாளும் மூத்த பயனருக்குரிய பணிவு இருப்பதாக தெரியவில்லை. மாறாக தலைக்கனம் மட்டுமே தெரிகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

பகுப்பு உருவாக்கப்படுவதற்கான காரணத்தை அதிலேயே குறிப்பிட்டிருந்தேன். இதைக்கூட படிக்காமல் நீங்கள் பகுப்பை நீக்கிவிட்டீர்கள் என்பது என்னை காரணம் கேட்பதில் இருந்து புரிகிறது.

தமிழ் மொழி கட்டுரைகள் வேற்றுமொழிகளில் எழுதப்படவில்லை என்பது அறிவுள்ள அனைவருக்கும் தெரியும். ஆக, உங்களுக்கும் அது உள்ளது என்பதை நீங்களே மீண்டும் உறுதி செய்துகொள்ள அவசியம் இல்லை. பகுப்பு என்பது ஒரு விஷயத்தை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு ஆகையால் பல்வேறு மொழிகளில் உள்ள, குறிப்பாக தமிழல்லாத வேற்று மொழிகளில், காப்பீடு சார்ந்த கட்டுரைகள் உள்ளதால் அவையில் எத்தனை தமிழில் உள்ளன என்பதை எளிதில் கண்டுகொள்ளவே இந்த பகுப்பு உருவாக்கப்பட்டது. அதில் எவ்வித தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விக்கி சட்டதிட்டங்களுக்கு புறம்பான ஏதேனும் ஒன்று நீக்குவதற்கு காரணமாக இருக்குமோ என்று தெரிந்து கொள்ளவே உங்களுக்கு சிறிதும் மரியாதை குன்றாமல் பணிவுடன் நான் காரணம் கேட்டு கேள்வி எழுப்பினேன்.

"நீக்கியமைக்குக் காரணம் வேறு சொல்ல வேண்டுமா?" என்று திமிருடன் கேட்டுள்ளீர்கள். ஆம், காரணம் செல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள். ஏனென்றால் நிர்வாக உரிமைகள் உள்ள பயனர்கள் விக்கிப்பீடியா தங்கள் குடும்ப சொத்து என்று நினைக்கக்கூடாது அல்லவா? ஆகவே நீங்கள் காரணம் கூறுவதுடன் மட்டுமின்றி விக்கிப்பீடியாவின் சட்டதிட்டங்களுக்கு புறம்பாக இந்த பகுப்பு உருவாக்கப்பட்டிருந்தால் ஒழிய நீக்கிய பகுப்பை மீண்டும் நீக்குமுன் இருந்த நிலைக்கு கொண்டு வந்து அதிகார துஷ்பிரயோகம் செய்தமைக்கு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்பது எனது நியாயமான எதிர்பார்ப்பு, கோரிக்கை. இதை ஏற்றுக்கொள்ளும் முடிவு உங்களிடம் உள்ளது. தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்கு பங்களிக்க வேண்டுமா என்று தீர்மானம் செய்யும் முடிவு என்னிடம் உள்ளது.

பகுப்பை அவசர அவசரமாக நீக்குவதற்கு முன் இன்ன காரணத்துக்காக பகுப்பு தேவையில்லை என்று கூறியிருக்கலாம். தவிர, "காப்பீடு" என்ற பகுப்புக்கும் "காப்பீடு தொடர்பான தமிழ் கட்டுரைகள்" என்ற பகுப்புக்கும் நிச்சயம் வேறுபாடு உள்ளது. தூய காப்பீடு கட்டுரைகளுக்கு "காப்பீடு" என்ற பகுப்பு பொருந்தும், ஆனால் காப்பீடை உள்ளடக்கும் அதே வேளை மற்ற விஷயங்களை குவியப்படுத்தும் கட்டுரைகள் "காப்பீடு தொடர்பான தமிழ் கட்டுரைகள்" என்ற பகுப்பில் இருப்பது தான் சிறப்பு. எடுத்துக்காட்டாக, "இடர் மேலாண்மை", "மறையிடர் மதிப்பீடு", போன்றவை. அவருக்கு இது பற்றி தெரியாமல் இருக்கலாம். ஒரு கலந்துரையாடலில் ஏற்படக்கூடிய முடிவை நான் கூட ஏற்றுக்கொள்ளக் கூடும். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பளிக்காமல் "அனைத்தும் யாம் அறிவோம்" என்ற ஆணவப் போக்கை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.

கேள்வி கேட்க யாருமே இல்லை என்ற எண்ணத்தை இனிமேலாவது மாற்றிக்கொள்வது உங்களுக்கு பயனளிக்கக்கூடும். வாழ்க அறிவுடன்.

ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 04:48, 24 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
நன்றி, காப்பீடு பகுப்பில் அனைத்துக் காப்பீடு குறித்த கட்டுரைகளையும் காப்பீடு குறித்த சேய்ப் பகுப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இதுவே விக்கிப்பீடியா கொள்கை. நீங்கள் உருவாக்கியது தேவையற்றது மட்டுமல்லாது உடனடியாக நீக்கப்படக்கூடியவை. ஏராளமான கட்டுரைகளை நீங்கள் ஒரு பகுப்பினுள் தேர்த்திருக்கிறீர்கள். இவ்வாறான பகுப்புகளை உருவாக்க முன் உரையாடுங்கள், தெளிவு கிடைக்கும்.--Kanags \உரையாடுக 06:54, 24 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

வணக்கம். கூகுள் தமிழாக்கக் கருவி கொண்டு உருவாக்கப்பட்ட இக்கட்டுரையை நீங்கள் அவ்வப்போது மேம்படுத்தி வந்துள்ளீர்கள். நிறைவு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:07, 2 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

உதவி

[தொகு]

வணக்கம். 'External Links என்பதனை புற இணைப்புகள் என தமிழாக்கம் செய்யக்கூடாது; வெளியிணைப்புகள் என தமிழாக்கம் செய்யவேண்டும்' என்று @செல்வா: ஐயா உரையாடல் பக்கமொன்றில் எழுதியிருந்தார். அந்தப் பக்கத்தை உங்களால் கண்டறிய இயலுமா? அல்லது உங்களால் விளக்க இயலும் என்றாலும் நன்றே. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:04, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: பேச்சு:நாராயணகுரு பக்கத்தில் //"வெளி இணைப்புகள்" என்று இருந்தாலே போதும் "வெளிப்புற" இணைப்புகள் என்று எழுதுதல் வேண்டாம்// என்று எழுதியுள்ளார். அது சரியே, ஆனாலும் "புற இணைப்புகளும்" சரியாக இருக்கலாம். ஆனால் நாம் ஒரு சீர் கருதி வெளி இணைப்புகள் என எழுதுவதே நல்லது.--Kanags \உரையாடுக 04:49, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

உதவிக்கு நன்றி. இன்னொரு உரையாடல் பக்கத்தில் 'புற இணைப்புகள் என எழுதுவது தவறானது' என்பதாக எழுதியிருந்தார். அந்த விளக்கத்தை மறந்துவிட்டேன். உரையாடிய கட்டுரைத் தலைப்பும் நினைவில் இல்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:15, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

டிறிபேக் கல்லூரி பக்கம் தொடர்பானது

[தொகு]

எமது பாடசாலை பக்கத்தில் விக்கிபீடியாவில் கட்டுரையில் உள்ளவர்களை மட்டும் படித்தவர்கள் பட்டியலில் பட்டியல் படுத்தவும் என கூறி இருந்தீர்கள். எதற்காக என்பதை தெரிந்து கொள்ளலாமா? ஏன் விக்கிபீடியாவில் கட்டுரையில் இல்லாதவர்களை பட்டியலில் இணைக்க முடியாது நித்திகா மனோகரன் (பேச்சு) 18:02, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@நித்திகா மனோகரன்: பாடசாலையில் படித்த "குறிப்பிடத்தக்கவர்களை" மட்டுமே கட்டுரையில் இணைக்க முடியும். அவ்வாறு குறிப்பிடத்தக்கவர்கள் பற்றி விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் முடியும். யாராவது விடுபட்டு, அவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாயிருக்கும் பட்சத்தில், முதலில் அவர்கள் பற்றி ஒரு கட்டுரையை விக்கிபீடியாவில் எழுதுங்கள். அதன்பின் பாடசாலைப் பக்கத்தில் இணைக்கலாம். கட்டுரை எழுத முன்னர் இந்த உதவிப் பக்கத்தைப் பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:33, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

உதவி

[தொகு]

வணக்கம். பகுப்பு:CS1 பிழைகள்: திகதிகள் என்பதுவும் பகுப்பு:CS1 errors: dates என்பதுவும் உள்ளன. எதாவது ஒன்று மட்டும் இருக்கும்படி செய்து உதவுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:44, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

வணக்கம். இந்த வேண்டுகோளை கவனித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:27, 16 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 06:58, 16 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

உங்களின் உதவிக்கு மிக்க நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 16 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

வார்ப்புரு நீக்கம்

[தொகு]

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி கட்டுரையில் விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வார்ப்புருவை ஏன் நீக்கினீர்கள்? தொகுப்புச் சுருக்கத்திலும் காரணம் கொடுக்கவில்லை.

 • இருக்கும் இரண்டு

மேற்கோள்களும் தொடர்பிழந்து உள்ளது.

 • //இவரின் பின் வண டி. பி. ஹண்ட் அவர்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்புமே இக் கல்விப்பணி நிலை பெற துணை புரிந்தன//
 • //வண. சின்னத்தம்பி அவர்களும் நீதவான் டிறிபேர்க் குடும்பத்தினரும் இணைந்து நிதியைத் திரட்டி பல்வேறு கட்டடங்களை உருவாக்கினர்.//
 • //யாழ்ப்பாண கல்லூரியில் அதிபராகவிருந்த பேரறிஞர் ஜோன் பிக்னல் இப்பாடசாலை வளருவதற்கு பலவழிகளிலும் உந்து சக்தியாக விளங்கினார்.//
 • //பெருந்தொகையான மாணவர்கள் ஆங்கிலக் கல்வி பெற்று அரசாங்கத்திலே சிறந்த உத்தியோகங்களைப் பெற்றனர். // ஆதாரமற்ற விளம்பர நோக்கம்.
 • //நீதவான் டிறிபேர்க்கினுடைய மருமகள் அலன் டிறிபேர்க் இப்பாடசாலையில் தமது மாமனாரின் நினைவாக ஒரு நிலையமும் வாசிப்புக் கூடமும் அமைப்பதற்கு நன்கொடை ரூ.2000/= வழங்கினார்.//
 • //அதனுடைய கற்கள் புதிதாக அமைக்கப்பட்ட நவமணி படமாளிகையை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன//

இவை எல்லாம் கலைக்களஞ்சிய நடையில் தான் உள்ளதா? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:28, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஆம், அவை கலைக்களஞ்சிய நடையே. மேற்கோள்கள் தொடர்பிழந்து உள்ளது ஒரு பிரச்சினை இல்லை. கட்டுரை எழுதும்போது அது இணைப்பில் இருந்தால் சரி. அது பார்க்கப்பட்ட நாள் முக்கியம். வேண்டுமானால், மேலதிக மேற்கோள்கள் தேவை என வார்ப்புரு சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 08:38, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:05, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

உதவி

[தொகு]

திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில் கட்டுரையை ஒருங்கிணைத்த போது ஒரு கட்டுரையின் வரலாறு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு கட்டுரையின் வரலாறு மீட்கப்படவில்லை. உதவவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 13:05, 13 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 23:10, 13 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
நன்றி.--கி.மூர்த்தி (பேச்சு) 01:45, 14 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில் கட்டுரையை ஒருங்கிணைத்த போதும் ஒரு கட்டுரையின் வரலாறு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு கட்டுரையின் வரலாறு மீட்கப்படவில்லை. உதவவும். தானியக்கக் கட்டுரையை ஒருங்கிணைக்கும் போது இத்தவறு நிகழ்கிறதாக கருதுகிறேன். என்ன தவறு செய்கிறேன்?--கி.மூர்த்தி (பேச்சு) 09:43, 18 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@கி.மூர்த்தி: இப்போது வரலாறுகள் அனைத்தும் தெரிவதாக நம்புகிறேன். கட்டுரையை இணைத்தால் மட்டும் போதாது. அதனை மீண்டும் நீக்கி விட்டு மீண்டும் அனைத்து வரலாறுகளுடனும் மீட்டமைக்க வேண்டும். இல்லையேல் ஒரு கட்டுரையின் வரலாறு மட்டுமே தெரியும். இதனைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:54, 18 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
@கி.மூர்த்தி: இந்தப் பக்கத்திலுள்ள செயல்முறை எளிதாக இருக்கும்: விக்கிப்பீடியா:ஒத்த கட்டுரைகள்/கட்டுரைகளை ஒன்றிணைத்தல் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:25, 18 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
அங்காள பரமேசுவரி, அங்காள தேவி கட்டுரைகளை ஒன்றிணைத்த போதும் ஒரு கட்டுரையின் பக்கவரலாறு கிடைக்கவில்லை. உதவவும். ஒரு சில கட்டுரைகளில் மட்டும் எனக்கு இத்தகை சிக்கல் வருகிறது.--கி.மூர்த்தி (பேச்சு) 11:31, 6 மே 2024 (UTC)[பதிலளி]
@கி.மூர்த்தி: ஆயிற்று. இங்கு மூன்று கட்டுரைகளை இணைத்திருக்கிறீர்கள். கட்டுரைகளை இணைக்கும்போது கவனம் தேவை. முடியாவிட்டால், மூத்த பயனர்களின் உதவியை நாடுங்கள். சரியாக இணைக்காவிடில், வரலாறுகளை இணைக்கமுடியாமலே போய்விடும்.--Kanags \உரையாடுக 11:50, 6 மே 2024 (UTC)[பதிலளி]
நன்றி. மீண்டுமொருமுறை கட்டுரையை நீக்கி மீட்காமல் விட்டேனா?--கி.மூர்த்தி (பேச்சு) 11:49, 6 மே 2024 (UTC)[பதிலளி]
@Kanags and கி.மூர்த்தி: அண்மைக் காலத்தில், கட்டுரைகளை ஒன்றிணைக்கும்போது பிறருக்கும் பிரச்சினை ஏற்படுவதாக உணர்கிறேன். இரு நாட்களுக்கு முன்னர் பயனர் @Nan: எனது உதவியைக் கேட்டிருந்தார். அப்போது என்னால் கவனிக்க இயலவில்லை. அதன் பிறகு, தானே சரி செய்துவிட்டதாக தகவல் இட்டிருந்தார். நந்தகுமார் அவர்கள் ஏதேனும் முயற்சி செய்து திருத்தினார்களா அல்லது அதுவே சரியாகி விட்டதாக எனும் தகவல் தெரிந்தால், உதவியாக இருக்கும். விக்கிப்பீடியா தளத்திலேயே செயல்பாட்டில் பிரச்சினை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:28, 7 மே 2024 (UTC)[பதிலளி]
ஆம். நேற்று நானும் கட்டுரைகளை ஒன்றிணைத்தேன். சரியாக பழைய வரலாறுகள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று பழைய வரலாறுகளைக் காண்பிக்கிறது. இன்று இன்னும் இரு கட்டுரைகளை ஒன்றிணைத்துப் பார்க்கிறேன்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 07:34, 7 மே 2024 (UTC)[பதிலளி]
எந்தச் சிக்கலும் இல்லை. மேலே குறிப்பிட்ட அங்காள பரமேஸ்வரி கட்டுரை மூன்று கட்டுரைகளால் இணைக்கப்பட்டது. முறையான அங்காளபரமேஸ்வரி கட்டுரை நீக்கப்பட்டு, ஆனால் வரலாற்றுடன் மீள்விக்கப்படவில்லை. இதுவே காரணம். முறையாக இணைக்கப்பட்டால் எந்தச் சிக்கலும் இல்லை.--Kanags \உரையாடுக 07:36, 7 மே 2024 (UTC)[பதிலளி]
சில கட்டுரைகளில் எனக்கு இந்த சிக்கல் வந்தது. அடுத்த முறை இச்சிக்கலை சந்தித்தால் சரியாக கூறுகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 08:15, 7 மே 2024 (UTC)[பதிலளி]
@Kanags and Selvasivagurunathan m: மரியாதை (திரைப்படம்), மரியாதை ஆகிய இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைத்தேன். இரண்டு கட்டுரைகளின் பக்க வரலாறுகளுடன் வருகிறது. சிக்கல்கள் இல்லை. நன்றி.--சா. அருணாசலம் (உரையாடல்) 09:36, 7 மே 2024 (UTC)[பதிலளி]
@Kanags, கி.மூர்த்தி, Nan, and சா அருணாசலம்: திபெத் தன்னாட்சிப் பகுதி (கட்டுரை A), திபெத் தன்னாட்சி பகுதி (கட்டுரை B) ஆகிய இரு கட்டுரைகளை ஒன்றிணைத்தேன். கட்டுரை A'இன் வரலாறு முழுவதுமாக இற்றையாக 7 நிமிடங்கள் எடுத்தது. வேறு சிக்கல்கள் எவற்றையும் எதிர்கொள்ளவில்லை - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:33, 7 மே 2024 (UTC)[பதிலளி]
கட்டுரைகளை இணைத்த பின்னர், இறுதியாகக் கவனிக்க வேண்டியது: புதிய கட்டுரை விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளதா? ஏனெனில், கட்டுரையை நீக்கும்போது அது விக்கித்தரவில் இருந்து நீக்கப்பட்டு விடுகிறது. மீள்விக்கும்போது அது அனேகமாக மீண்டும் விக்கித்தரவில் சேர்க்கப்படுவதில்லை. திபெத் தன்னாட்சிப் பகுதி கட்டுரையைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 11:00, 7 மே 2024 (UTC)[பதிலளி]
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இப்போது விக்கித்தரவில் சேர்த்துள்ளேன். இனிமேல் இதனைத் தவறவிடாது, கவனிப்பேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:14, 7 மே 2024 (UTC)[பதிலளி]
@Kanags and Selvasivagurunathan m:மூன்று கட்டுரைகளை இணைக்கும்போது ஏதேனும் பிரச்சனைகள் வருகிறதா? (அல்லது) வேறு பிரச்சனையா என்பது தெரியவில்லை. உப்பளம் கட்டுரைக்கு பிறகு நான் இணைத்த இரண்டு கட்டுரைகளில் எந்த பிரச்சனைகளும் இல்லை. தற்பொழுது உப்பளம் (உப்பு), உப்பளம் கட்டுரையாக கனக்சு நகர்த்தி உள்ளார். ஆனால், 7 தொகுப்புகளை பார்க்கவா அல்லது மீள்விக்கவா? என்று பக்க வரலாறு பக்கத்தில் உள்ளது. இதை எப்படி சரி செய்வது? மீண்டும் கட்டுரையை நீக்கிவிட்டு மீள்விக்க வேண்டுமா?--நந்தகுமார் (பேச்சு) 14:39, 9 மே 2024 (UTC)[பதிலளி]
அந்த 7 தொகுப்புகளில் இருந்தும் சில பகுதிகளை நீங்கள் இந்தக் கட்டுரையில் சேர்த்திருப்பதாகத் தெரிகிறது. எனவே உப்பளம் கட்டுரையை இப்போது முழுமையாக நீக்கி விட்டு மீண்டும் அனைத்தையும் மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 05:52, 10 மே 2024 (UTC)[பதிலளி]
@Kanags:, நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 12:31, 10 மே 2024 (UTC)[பதிலளி]

வெஸ்லி மேல்நிலைப் பள்ளி

[தொகு]

வெஸ்லி மேல்நிலைப் பள்ளி என்ற கட்டுரையில் உள்ளடக்கம் போதாது என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். இப்போது போதுமான அளவு உள்ளடக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. தயவு செய்து அதை கவனிக்கவும். மேலும் கட்டுரை மேம்படுத்த உதவ வேண்டுகிறேன்.@ ராம்குமார் கல்யாணி 🌿 15:32, 23 ஏப்பிரல் 2024 (UTC)

உதவி

[தொகு]

வணக்கம். மெர்சென் பகா எண்கள்-செவ்விய எண்கள் பட்டியல் - கட்டுரையில் நிறைய கணினி தொடர்பான சொற்கள் உள்ளன. அவற்றை என்னால் சரியாக மொழிபெயர்க்க இயலவில்லை. தயவுசெய்து கட்டுரையை சரிபார்த்து மேம்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:30, 14 மே 2024 (UTC)[பதிலளி]

@Booradleyp1: பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 12:31, 16 மே 2024 (UTC)[பதிலளி]

பகுப்பு உருவாக்கம்

[தொகு]

பகுப்பு:Pages using Timeline- என்ற பகுப்பு தமிழில் இல்லை; ஆனால் சிவப்பிணைப்பாகவுள்ள இதன்கீழ் 48 கட்டுரைகள் உள்ளன. இதற்குத் தக்க பகுப்பினை உருவாக்கிச் சரிசெய்துவுதங்கள்.--Booradleyp1 (பேச்சு) 06:02, 15 மே 2024 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 06:34, 15 மே 2024 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:53, 16 மே 2024 (UTC)[பதிலளி]

ஐயங்கள்

[தொகு]

வணக்கம். பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் பற்றி இங்கு குறிப்பிட்டவாறும், சின்னதம்பி தேவர் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தெரிவித்தவாறும் ஒவ்வொரு கட்டுரையாக திறந்து பார்த்து பகுப்புகளை ஒழுங்கமைக்க எண்ணியுள்ளேன். (தானியங்கி மூலமாக இதனைச் செய்வது இயலாது என்றே கருதுகிறேன்.) இது குறித்து இரண்டு ஐயங்கள்:

 1. எனது வழக்கமான பயனர் கணக்கு வழியாக புகுபதிகை செய்யாது, எனது தானியங்கிக் கணக்கு வழியாக புகுபதிகை செய்து ஒழுங்கமைப்புப் பணியாற்ற விரும்புகிறேன். "AWBஐ இயக்குவதாக இருந்தால் மட்டுமே தானியங்கிக் கணக்கை பயன்படுத்த வேண்டும்" என விதிமுறை ஏதும் உள்ளதா? அல்லது, மனித ஆற்றலைப் பயன்படுத்தி ஒவ்வொரு கட்டுரையாக திறந்து பார்த்து செய்யும் பணிக்கும் தானியங்கிக் கணக்கைப் பயன்படுத்தலாமா?
 2. தானியங்கிக் கணக்கைப் பயன்படுத்தலாம் எனில், அத்திருத்தங்கள் அண்மைய மாற்றங்களில் தெரியவேண்டும் என விரும்புகிறேன். நான் செய்து பார்த்ததில், அவை அண்மைய மாற்றங்களில் தெரிவதில்லை. தெரியும்படி செய்ய எங்கு சென்று என்ன மாற்றங்களை செய்துகொள்ள வேண்டும்?
 • குறிப்பு: திருத்தங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதனை மற்றவர்களும் அறிந்துகொண்டால் அவர்களும் நடைமுறைப்படுத்துவர் என்பதுவே இதன் காரணம். ஒரு நேரத்தில் 5 முதல் 10 கட்டுரைகள் வரையே செய்வேன். எனவே இது ஏற்புடையது எனக் கருதுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:15, 16 மே 2024 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m: "AWBஐ இயக்குவதாக இருந்தால் மட்டுமே தானியங்கிக் கணக்கை பயன்படுத்த வேண்டும்" என்ற எந்த விதிமுறையும் இல்லை. தானியங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதால் உள்ள ஒரேயொரு நன்மை: "அண்மைய மாற்றங்களில்" (தெரிவு செய்தாலன்றி) உங்கள் பங்களிப்புகள் காட்டப்பட மாட்டாது. அண்மைய மாற்றங்களில் தெரிய வேண்டுமென்றால் உங்கள் வழமையான முதன்மைக் கணக்கில் மட்டுமே தொகுக்க வேண்டும். அதிகத் தொகுப்புகள் இல்லையெனில் உங்கள் வழமையான கணக்கில் தொகுக்கலாம். மேலும் ஒரு தெளிவு: AWB கருவியில் உங்கள் வழமையான கணக்கிலும் தொகுக்க முடியும்.--Kanags \உரையாடுக 12:29, 16 மே 2024 (UTC)[பதிலளி]

விரிவான தெளிவுபடுத்துதலுக்கு மிக்க நன்றி. ~AntanO4task எனும் கணக்கில் செய்யப்படும் தொகுத்தல்களை அண்மைய மாற்றங்களில் பார்த்து வருகிறேன். அந்தக் கணக்கை ஒரு bot என தவறாகப் புரிந்துகொண்டிருந்தேன் (wrong perception). அதனாலேயே இரண்டாவது ஐயம் எழுந்தது. இப்போது தெளிவடைந்தேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:54, 16 மே 2024 (UTC)[பதிலளி]

சிங்கப்பூர் முஸ்லிம் சங்கங்கள்

[தொகு]

வணக்கம் ஐயா, இந்தப் பக்கத்தை எப்படி முதன்மை பக்கத்திற்கு நகர்த்துவது என்பதை கூறவும். ஏதேனும், திருத்தம் இருந்தால் கூறவும். உங்கள் உதவி தேவை. நன்றி Lovedotedit (பேச்சு) 02:46, 18 மே 2024 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை- அழைப்பு

[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,66,616 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]

உதவி

[தொகு]

இரும்பு பாசுபைடு (Iron phosphide) ஆங்கிலக்கட்டுரையில் தமிழ் மொழியை காட்டவில்லை. மொழி இணைப்பில் உதவி தேவை.--கி.மூர்த்தி (பேச்சு) 06:13, 27 மே 2024 (UTC)[பதிலளி]

@கி.மூர்த்தி: இதன் மூலக்கூற்று சமன்பாடு என்ன? Fe3P ஆ அல்லது FeP ஆ?--Kanags \உரையாடுக 06:28, 27 மே 2024 (UTC)[பதிலளி]
FeP (Iron phosphide is a chemical compound of iron and phosphorus, with a formula of FeP)--கி.மூர்த்தி (பேச்சு) 06:31, 27 மே 2024 (UTC)[பதிலளி]
அப்படியானால் கட்டுரையில் சில மாற்றம் தேவை. (தற்போது அது Fe3P ஐயே காட்டுகிறது). மாற்றிய பின்னர் சரியான விக்கித்தரவில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 06:34, 27 மே 2024 (UTC)[பதிலளி]

செய்திகளில் பகுதியில் காட்சிப்படுத்தல் தொடர்பாக

[தொகு]

2024 இந்தியன் பிரிமியர் லீக் இறுதிப்போட்டி பற்றிய கட்டுரையை மொழிபெயர்த்துள்ளேன். சரியாக இருந்தால் செய்திகளில் பகுதியில் காட்சிப்படுத்த வேண்டுகிறேன்.--மகாலிங்கம் இரெத்தினவேலு 00:33, 1 சூன் 2024 (UTC)[பதிலளி]

கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகோள்

[தொகு]

வணக்கம். இந்த நிகழ்வை நடத்துவதற்காக, நிதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தந்தோம். இந்த விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:15, 4 சூன் 2024 (UTC)[பதிலளி]

உதவி

[தொகு]

தங்கம்(III) குளோரைடு கட்டுரையில் வரும் சிகப்பு இணைப்பை எவ்வாறு சரி செய்வது?--கி.மூர்த்தி (பேச்சு) 05:17, 8 சூன் 2024 (UTC)[பதிலளி]

உதவி

[தொகு]

நாண் நரசிம்மரில் எழுத்து மற்றும் உள்ளடக்கம் பிழைகளை சரி செய்ததை AntanO கெடுத்து விட்டார். அதை சரி செய்ய நீங்கள் உதவ வேண்டும். 120.56.161.180 09:57, 15 சூன் 2024 (UTC)[பதிலளி]

மக்களவைத் தொகுதி தகவல்பெட்டி உதவி

[தொகு]

தற்பொழுது இந்தியாவில் 18ஆவது மக்களவைக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், இந்திய மக்களவைத் தொகுதி தகவல் பெட்டியில் 17வது மக்களவை என்பதை 18ஆவது மக்களவை என மாற்றிட தங்கள் உதவி வேண்டப்படுகிறது. உ.ம். குவாலியர் மக்களவைத் தொகுதி. நன்றி. சத்திரத்தான் (பேச்சு) 02:02, 18 சூன் 2024 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 05:18, 18 சூன் 2024 (UTC)[பதிலளி]
கண்டேன். நன்றி. என்னுடை தாமத பதிலுக்கு வருந்துகிறேன்--சத்திரத்தான் (பேச்சு) 11:17, 22 சூன் 2024 (UTC) .[பதிலளி]

உதவி

[தொகு]

வணக்கம். Gunamurugesan என்பவர் தனது பயனர் பக்கத்தை மு. குணசேகரன் என நகர்த்தினார். எனவே பேச்சுப் பக்கமும் அவ்வாறே நகர்ந்துவிட்டது. புரிதல் இல்லாது தொடர்ந்து அவர் தேவையற்ற தொகுப்புகளைச் செய்ததால், அவரை 3 நாட்களுக்கு தடை செய்தேன். கொதித்தெழுந்து உணர்ச்சி வசப்படுகிறார். படட்டும், பங்களிப்பாளரை இழக்க நான் விரும்பவில்லை! Gunamurugesan என்பதனை மு. குணசேகரன் என்பதாக தரவுத்தள கட்டமைப்பிலேயே (wikimedia database system) மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும்? எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? மாற்றிய பிறகு, அவர் எந்த login, password பயன்படுத்த வேண்டும்? உங்களின் வழிகாட்டலை எனக்குத் தாருங்கள். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:57, 27 சூன் 2024 (UTC)[பதிலளி]

வணக்கம் மா. செல்வசிவகுருநாதன், உலகளாவிய பயனர் கணக்கு பெயர் மாற்றக் கோரிக்கைக்கான இணைப்பை இங்கு இட்டுள்ளேன் இதைப் பயன்படுத்தி தரவுத்தளக் கட்டமைப்பிலேயே பயனர் பெயரை மாற்றலாம் கு. அருளரசன் (பேச்சு) 16:01, 27 சூன் 2024 (UTC)[பதிலளி]
@Arularasan. G உதவிக்கு நன்றி! பிரச்சினையை தீர்த்துள்ளேன். இனிமேல் சரியாகக் கையாள வேண்டியது அந்த நபரின் பொறுப்பு! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:09, 27 சூன் 2024 (UTC)[பதிலளி]

தகவலுக்காக: இந்த நபர் குறித்து ஆலமரத்தடியில் அறிவிக்கும் சூழல் ஏற்பட்டது. இவரின் பயனர் பக்கத்து பழைய வரலாறுகளைப் பார்த்தபோது, முன்பே இவர் தனது பயனர் பக்கத்தை நகர்த்தியதையும் அதை நீங்கள் மீளமைத்திருப்பதையும் காண முடிகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இவரின் பயனர் பக்கத்தை அங்குள்ள நிர்வாகி நீக்கியுள்ளார். அங்குள்ள உரையாடல் பக்கத்தில் காணப்படும் தகவல்கள் இப்பயனர் பிரச்சினை மிகுந்தவர் எனக் காட்டுகிறது. மேல்-விக்கியில் இவர் செய்த குற்றஞ்சாட்டலில் ஆங்கிலப் புலமை மிளிர்கிறது! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 29 சூன் 2024 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

[தொகு]

//10:37, 15 மே 2024// அன்றைய தேதியில் நீங்கள் சுருக்கப்பகுதியில் எதுவும் எழுதாமல் நீக்கம் செய்துள்ளீர்கள். அதனால் அங்கு மனநிலை பிறழ்ந்தவரின் வாக்கியங்கள் இன்னும் உள்ளது. கூகுளில் தேடும் போது, முன்பு இந்த மனப்பிறழ் வரிகள்வந்தன. இப்பொழுது தோன்றவில்லை. ஏனெனில் தொடர்ந்து பல பதிவுகள் இத்தலைப்பின் கீழ் செய்தமையால், அவ்வாக்கியங்கள் தெரிவதில்லை. எனவே, இனி சுருக்கப்பகுதியில் நடுநிலையாக எழுதி, பக்கத்தினைச் சேமியுங்கள் அல்லது நீக்குங்கள். அவ்வாறு நீங்கள் எழுதாமல் நீக்கினால், அது கட்டுரையின் முதல் பத்தியின் தரவுகளை எடுத்து சேமிக்கும். விக்கிக்கு வெளியேயும் நம் தரவுகள் கையாளப்படுகின்றன என்பதால் இந்த வேண்டுகோள். இந்த கருவி உங்களுக்கு உதவலாம். உழவன் (உரை) 05:13, 13 சூலை 2024 (UTC)[பதிலளி]

@Info-farmer: அறியத்தந்தமைக்கு நன்றி. இனிக் கவனமாக இருப்பேன்.--Kanags \உரையாடுக 05:32, 13 சூலை 2024 (UTC)[பதிலளி]

பகுப்புகள் ஒன்றிணைப்பு

[தொகு]

பகுப்பு:நோய்த்தொகைகள், பகுப்பு:கூட்டு அறிகுறிகள் இரண்டுமே ஆ.வியின் en:Category:Syndromes பகுப்புக்கு இணையானவையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்களும் ஒருமுறை பார்த்துவிட்டு, என் கருத்து சரியானதென்றால், இரு பகுப்புகளையும் ஒன்றிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 05:01, 14 சூலை 2024 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 05:33, 14 சூலை 2024 (UTC)[பதிலளி]
ஒன்றிணைத்தமைக்கு மிக்க நன்றி.--Booradleyp1 (பேச்சு) 12:45, 14 சூலை 2024 (UTC)[பதிலளி]

பகுப்பு மாற்றம்

[தொகு]

பிசுமுத்தைடு என்ற பகுப்பை பிசுமத்தைடு என மாற்றி உதவவும்--கி.மூர்த்தி (பேச்சு) 03:25, 19 சூலை 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kanags&oldid=4049921" இலிருந்து மீள்விக்கப்பட்டது