சதர் பசார் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதர் பசார் சட்டமன்றத் தொகுதி தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 120 வார்டும், 121வது வார்டின் சில பகுதிகளு, 122, 133 ஆகிய வார்டுகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

தேர்தல் நடைபெற்ற ஆண்டு வேட்பாளர் கட்சி
1993 அரிசு கிருட்டிணன் பாசக
1998 ராசேசு செயின் காங்கிரசு
2003 ராசேசு செயின் காங்கிரசு
2008 ராசேசு செயின் காங்கிரசு
2013 சோம் தத் ஆம் ஆத்மி கட்சி
2015 சோம் தத் ஆம் ஆத்மி கட்சி

ஆறாவது சட்டமன்றம் (2015)[தொகு]

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் வாக்குகள் எண்ணிக்கை வாக்குகள் %
ஆம் ஆத்மி கட்சி சோம் தத் 67,507 56.60
பாசக பிரவீன் குமார் ஜெயின் 33,192 27.83
காங்கிரசு அசய் மக்கான் 16,331 13.69

ஐந்தாவது சட்டமன்றம் (2013)[தொகு]

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் வாக்குகள் எண்ணிக்கை வாக்குகள் %
ஆம் ஆத்மி கட்சி சோம் தத் 34,079 31.24
பாசக செய் பிரகாசு 33,283 30.51
காங்கிரசு ராசேசு செயின் 31,094 28.51

நான்காவது சட்டமன்றம் (2008)[தொகு]

கட்சி வேட்பாளர் வாக்குகள் எண்ணிக்கை வாக்குகள் %
காங்கிரசு ராசேசு செயின் 47,508 53.44
பாசக செய் பிரகாசு 33,419 37.59
பகுசன் சமாச் கட்சி ராசேந்திர குமார் பிரசாபதி 5,004 5.63

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-01-24 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க[தொகு]