உள்ளடக்கத்துக்குச் செல்

காரைக்கால் அம்மையார் (1943 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரைக்கால் அம்மையார்
இயக்கம்சி. வி. ராமன்
தயாரிப்புசி. வி. ராமன்
கந்தன் கம்பனி
நடிப்புவி. ஏ. செல்லப்பா
கே. சாரங்கபாணி
காளி என். ரத்னம்
டி. எஸ். துரைராஜ்
பி. சரஸ்வதி
கே. ஆர். செல்லம்
டி. எஸ். ஜெயா
கல்யாணி
வெளியீடுசெப்டம்பர் 22, 1943
நீளம்12306 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காரைக்கால் அம்மையார் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது காரைக்கால் அம்மையாரின் வாழ்கை கதையாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கதைக்களம்

[தொகு]

புனிதவதி என்ற இயற்பெயரைக் கொண்ட காரைக்கால் அம்மையார், சிறுவயதிலிருந்தே சிவபெருமானின் தீவிர பக்தையாக உள்ளார். அவர் எப்போதும் "நமசிவாய" என்ற சிவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருப்பவர். அவர் ஒரு பணக்கார வணிகரை மணக்கிறார். அவர் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வில், தன் மனைவி ஒரு தெய்வீக குணம் கொண்டவர் என்பதை கணவர் உணர்கிறார். அதன் பிறகு அவர் மனைவியை "அம்மையார்" என அழைக்கத் தொடங்குகிறார். அவரை இனி தன் மனைவியாக நடத்த முடியாததால், வேறொரு பெண்ணை மணக்கிறார். இதையடுத்து புனிதவதி தன்னை எந்த ஆணும் ஆசையுடன் பார்க்காதபடி வேறுவடிவத்தைஅத் தரும்படி சிவனிடம் கேட்கிறார். அவர் விருப்பத்தை சிவன் நிறைவேற்றுகிறார். புனிதவதி காளியின் வடிவமாக மாறுகிறார். சிவபெருமான் அவரை தனது இருப்பிடமான கைலாய மலைக்கு வரும்படிச் சொல்கிறார். அவர் கைகளாலேயே மிகுந்த பக்தியுடன் அங்கு நடந்து செல்கிறார்.

நடிப்பு

[தொகு]

தி இந்து இதழில் வெளியான விமர்சனக் கட்டுரையில் உள்ள தகவல்களைக் கொண்டு இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.[1]

நடிகர்கள்

நடிகர்கள் (தொடர்ச்சி.)
  • எம். இ. மாதவன்
  • பி. ராமையா சாஸ்திரி
  • குஞ்சிதபாதம் பிள்ளை

நடிகைகள்

நடனம்
  • எஸ். நடராஜ்
  • ஏ. ஆர். சகுந்தலா

தயாரிப்பு

[தொகு]

இந்தப் படத்தை கந்தன் கம்பெனியுடன் இணைந்து சி. வி. ராமன் தயாரித்தார். சி. வி. ராமன் இயக்கினார். கோயம்புத்தூரில் உள்ள கந்தன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.[2]

அக்காலத்தில் பிரபலமான ஜோடிகளான எஸ். நட்ராஜ் மற்றும் ஏ. ஆர். சகுந்தலா ஆகியோர் இணைந்து "சிவ தாண்டவம்" என்ற நடன நாடகத்தை ஆடினர்.[2]

இசை

[தொகு]

இந்தப் படத்திற்கு பாபநாசம் சிவன் இசையமைத்தார். இந்தப் படத்தில் காரைக்கால் அம்மையாரின் பாடல்களும் பயன்படுத்தப்பட்டன.

வெளியீடு

[தொகு]

இந்தப் படம் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை, இருப்பினும் ஏ. பி. நாகராஜன் 1973 இல் மீண்டும் இதே கதையைக் கொண்டு பற்றி ஒரு படத்தை இயக்கினார்.[2] தி இந்துவின் ராண்டார் கை "பழக்கமான கதை, செல்லப்பா, சரஸ்வதி ஆகியோரின் அற்புதமான நடிப்பும், நடராஜ்-சகுந்தலாவின் நாட்டிய நாடகத்திற்காக நினைவில் உள்ளது" என்று எழுதினார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Randor Guy (31 August 2013). "Blast from the Past — Mani Malai (1941)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/mani-malai-1941/article5079214.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 Guy, Randor (21 December 2013). "Karaikkal Ammaiyar (1943)". தி இந்து. Retrieved 16 November 2021.