எசுப்பானிய அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுப்பானிய அமெரிக்காவிலுள்ள நாடுகளைக் காட்டும் நிலப்படம்.
அமெரிக்காக்களில் எசுப்பானியம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள்.
   50%
   30%
   20%
   10%
   5%
   2%
16வது,17வது, 18வது நூற்றாண்டுகளில் அமெரிக்காக்களில் இருந்த ஐரோப்பிய குடியேற்றங்களும் ஆட்பகுதிகளும்

எசுப்பானிய அமெரிக்கா (Spanish America) அல்லது இசுப்பானிக் அமெரிக்கா (Hispanic America) (எசுப்பானியம்: Hispanoamérica, América española அல்லது América hispana) அமெரிக்காக்களில் உள்ள எசுப்பானியம் பேசுகின்ற நாடுகள் அடங்கிய பகுதியாகும்.[1][2]

இந்த நாடுகளுக்கும் எசுப்பானியாவிற்கும் அல்லது அதன் முன்னாள் ஐரோப்பிய பெருநகரத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த அனைத்து நாடுகளிலிலுமே எசுப்பானியம் முதன்மை மொழியாக உள்ளது; சிலவற்றில் ஒன்று அல்லது மேற்பட்ட முதற்குடிகளின் மொழிகளுடன் (குவாரனி, கெச்வா, ஐமர, மாயன் போன்றவை), அல்லது ஆங்கிலத்துடன் (புவர்ட்டோ ரிகோவில்) எசுப்பானியம் அலுவல்மொழியாக இணைத்தகுதி பெற்று விளங்குகின்றது.[3] கத்தோலிக்க கிறித்தவமே பெரும்பான்மையினரின் சமயமாக விளங்குகின்றது.[4]

ஐபீரோ-அமெரிக்கா என்ற வகைப்பாட்டில் எசுப்பானிய அமெரிக்க நாடுகளுடன் பிரேசிலும் (முந்தைய "போர்த்துக்கேய அமெரிக்கா") சேர்க்கப்படுகின்றது; சிலநேரங்களில் ஐபீரிய மூவலந்தீவு நாடுகளான போர்த்துகல், எசுப்பானியா, அந்தோராவும் சேர்க்கப்படுகின்றன. எசுப்பானிய அமெரிக்காவும் இலத்தீன் அமெரிக்காவும் வேறானவை; இலத்தீன் அமெரிக்காவில் எசுப்பானிய அமெரிக்கா தவிர பிரேசில், மற்றும் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடு அல்லது கனடா தவிர்த்த முன்னாள் பிரான்சியக் குடியேற்றங்களும் சேர்க்கப்படுகின்றன.[5]

வரலாறு[தொகு]

அமெரிக்காக்களில் எசுப்பானிய ஆதிக்கம் 1492இல் தொடங்கியது; 15ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை, கண்டங்கள் கண்டறிபட்டதில் தொடங்கி பல்வேறு ஐரோப்பிய அரசுகள் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியாவில் பெரும்பகுதிகளையும் அரசுகளையும் கைப்பற்றிட்ட உலக வரலாற்றின் ஒரு அங்கமாகும். எசுப்பானிய அமெரிக்கா பரந்த எசுப்பானியப் பேரரசின் முதன்மை அங்கமாக இருந்தது.

1808இல் எசுப்பானியாவை நெப்போலியன் கையகப்படுத்திய பின்னரான குழப்பத்தில் எசுப்பானியப் பேரரசு பிளவுற்றபோது எசுப்பானிய அமெரிக்க ஆட்பகுதிகள் தங்கள் விடுதலைப் போர்களைத் துவக்கின. 1830ஆம் ஆண்டுவாக்கில், மீதமிருந்த பகுதிகள் பிலிப்பீன்சு தீவுக்கூட்டம், கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ தீவுகள் மட்டுமே; இவையும் 1898இல் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது.

நாடுகள்[தொகு]

மொ.உ.உ மட்டும் பில்லியன் $USD (2014 மதிபீடு.)
நாடு மக்கள்தொகை பரப்பு[a] மொ.உ.உ (பெயரளவில்)[b] தனிநபர் மொ.உ.உ (பெயரளவுல்)[6][7] மொ.உ.உ (பிபிபி) தனிநபர் மொ.உ.உ(பிபிபி)
அர்கெந்தீனா அர்கெந்தீனா 41,214,000 2,780,400 $475.00 $22,459 $964 $22,500
பொலிவியா பொலிவியா 10,227,299 1,098,581 $27.43 $3,030 $70 $5,400
சிலி சிலி[8] 17,094,275 756,950 $268.20 $15,775 $409 $22,500
கொலம்பியா கொலொம்பியா 48,873,936 1,141,748 $427.13 $8,858 $640 $13,400
கோஸ்ட்டா ரிக்கா கோஸ்ட்டா ரிக்கா 4,579,000 51,000 $45.13 $10,893 $71 $15,000
கூபா கியூபா 11,451,652 110,861 $72.30 $6,051 $121 $10,200
டொமினிக்கன் குடியரசு டொமினிக்கன் குடியரசு 10,090,000 48,730 $59.00 $13,012 $106 $10,060
எக்குவடோர் எக்குவடோர் 14,067,000 256,370 $80.93 $5,968
எல் சல்வடோர் எல் சால்வடோர் 7,185,000 21,040 $23.82 $3,875
குவாத்தமாலா குவாத்தமாலா 14,655,189 108,890 $49.88 $3,512
ஒண்டுராசு ஹொண்டுராஸ் 7,793,000 112,492 $18.39 $2,323
மெக்சிக்கோ மெக்சிக்கோ 113,724,226 1,972,550 $1,177.00 $10,629
நிக்கராகுவா நிக்கராகுவா 5,743,000 129,494 $10.51 $2,006
பனாமா பனாமா 3,450,349 75,571 $36.25 $12,744
பரகுவை பரகுவை 6,996,245 406,752 $26.00 $4,169
பெரு பெரு 29,885,340 1,285,220 $217.60 $6,819
புவேர்ட்டோ ரிக்கோ புவேர்ட்டோ ரிக்கோ (U.S.) 3,994,259 9,104 $93.52 $27,678
உருகுவை உருகுவை 3,415,920 176,215 $49.40 $16,609
வெனிசுவேலா வெனிசுவேலா 28,549,745 916,445 $205.70 $6,756
மொத்தம் 376,607,614 11,466,903 $3,460.16 $9,188

மீப்பெரும் நகரங்கள்[தொகு]

நகரம் நாடு மக்கள்தொகை பெருநகரப்பகுதி
மெக்சிக்கோ நகரம்  மெக்சிக்கோ 8,851,080 20,137,152
புவெனஸ் ஐரிஸ்'  அர்கெந்தீனா 3,050,728 13,941,973
பொகோட்டா  கொலம்பியா 8,854,722 13,864,952
லிமா  பெரு 7,605,742 9,367,587
சான் டியேகோ (சிலி)  சிலி 5,428,590 7,200,000
கரகஸ்  வெனிசுவேலா 3,273,863 5,239,364
குவாத்தமாலா நகரம்  குவாத்தமாலா 2,149,188 4,500,000
குவாதலஹாரா  மெக்சிக்கோ 1,564,514 4,424,584
Monterrey  மெக்சிக்கோ 1,133,814 4,106,054
மெதெயின்  கொலம்பியா 2,636,101 3,731,447
உவயாகில்  எக்குவடோர் 2,432,233 3,328,534
சான்டோ டொமிங்கோ  டொமினிக்கன் குடியரசு 1,111,838 3,310,171[9]
அவானா  கியூபா 2,350,000 3,073,000
Maracaibo  வெனிசுவேலா 2,201,727 2,928,043
புவெப்லா  மெக்சிக்கோ 1,399,519 2,728,790
கலி  கொலம்பியா 2,068,386 2,530,796
சான் யுவான்  புவேர்ட்டோ ரிக்கோ 434,374 2,509,007
அசுன்சியோன்  பரகுவை 680,250 2,089,651
Toluca  மெக்சிக்கோ 820,000 1,936,422
மொண்டேவீடியோ  உருகுவை 1,325,968 1,868,335
கித்தோ  எக்குவடோர் 1,397,698 1,842,201
மனாகுவா  நிக்கராகுவா 1,380,300 1,825,000
Barranquilla  கொலம்பியா 1,148,506 1,798,143
சான்ட்டா குரூசு  பொலிவியா 1,594,926 1,774,998
வாலென்சியா  வெனிசுவேலா 894,204 1,770,000
Tijuana  மெக்சிக்கோ 1,286,157 1,751,302
டெகுசிகல்பா  ஒண்டுராசு 1,230,000 1,600,000
லா பாஸ்  பொலிவியா 872,480 1,590,000
சான் சல்வடோர்  எல் சல்வடோர 540,090 2,223,092
Barquisimeto  வெனிசுவேலா 1,116,000 1,500,000
León  மெக்சிக்கோ 1,278,087 1,488,000
Córdoba  அர்கெந்தீனா 1,309,536 1,452,000
Juárez  மெக்சிக்கோ 1,301,452 1,343,000
San Pedro Sula  ஒண்டுராசு 1,250,000 1,300,000
Maracay  வெனிசுவேலா 1,007,000 1,300,000
சான் ஓசே  கோஸ்ட்டா ரிக்கா 386,799 1,284,000
Rosario  அர்கெந்தீனா 908,163 1,203,000
பனாமா நகரம்  பனாமா 990,641 1,500,000
Torreón  மெக்சிக்கோ 548,723 1,144,000
Bucaramanga  கொலம்பியா 516,512 1,055,331

குறிப்புகள்[தொகு]

 1. ச.கிமீயில்.
 2. Values listed in billions USD.

மேற்சான்றுகள்[தொகு]

 1. கீழ்காணும் அகரமுதலிகளில் பெரும்பாலான சொல்லகராதிகளிலும் இந்தப் பண்பாட்டு பகுதியைக் குறிக்க "எசுப்பானிய அமெரிக்காவே" இடம் பெற்றுள்ளது. சில "இசுப்பானிக்," "இசுபானிக் அமெரிக்க", "இசுப்பானோ-அமெரிக்க" என்பவற்றை "எசுப்பானிய அமெரிக்காவிற்கு" ஒத்தசொல்லாக குறிப்பிடுகின்றன. The American Heritage Dictionary of the English Language (3rd ed.) (1992). Boston: Houghton Mifflin. ISBN 0-395-44895-6. Merriam-Webster's Collegiate Dictionary (11th ed.) (2003). Springfield: Merriam-Webster. ISBN 0-87779-807-9. The Random House Dictionary of the English Language (2nd ed.) (1987). New York: Random House. ISBN 0-394-50050-4. Shorter Oxford English Dictionary on Historical Principles (2007). New York: Oxford University Press. ISBN 978-0-19-920687-2. Webster's New Dictionary and Thesaurus (2002). Cleveland: Wiley Publishing. ISBN 978-0-471-79932-0
 2. "இசுப்பானிக் அமெரிக்கா" சில பழைய படைப்புக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது; சார்லசு எட்வர்டு சாப்மேனின் 1933 வருடத்திய குடியேற்றவாத இசுப்பானிக் அமெரிக்கா: வரலாறு மற்றும் 1937 ஆண்டின் ரிபப்ளிக்கன் இசுப்பானிக் அமெரிக்கா: வரலாறு (இரண்டும் நியூ யார்க்: தி மாக்மில்லன் கோ.); அல்லது மொழிபெயர்ப்பு படைப்புகளில் இசுப்பானோயமெரிக்கா என்பது நேரடியாக பயன்படுத்தப்படுகின்றது; எட்மண்டு இசுடூபன் உர்பன்சுக்கியின் (1978), இசுப்பானிக் அமெரிக்கா மற்றும் அதன் நாகரிகம்: எசுப்பானிய அமெரிக்கர்களும் ஆங்கிலோ-அமெரிக்கர்களும், நோ,்மன்: ஒக்லகாமா பல்கலைக்கழக அச்சகம்.
 3. "CIA – The World Factbook – Field Listing – Languages". Archived from the original on 2014-03-07. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.
 4. "CIA – The World Factbook – Field Listing – Religions". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.
 5. "Latin America" The Free Online Dictionary (American Heritage Dictionary of the English Language, 2000, 4th ed. Houghton Mifflin Company. Updated in 2003.)
 6. Data mostly refers to IMF staff estimates for the year 2013, made in April 2014. World Economic Outlook Database-April 2014, அனைத்துலக நாணய நிதியம். Accessed on 9 April 2014.
 7. Data refers mostly to the year 2012. World Development Indicators database, உலக வங்கி. Database updated on 18 December 2013. Accessed on 18 December 2013.
 8. "Demografia de Chile" (PDF). Archived from the original (PDF) on ஜனவரி 27, 2009. பார்க்கப்பட்ட நாள் மே 31, 2016. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 9. "República Dominicana; Población estimada y proyectada por año y sexo, según región, provincia y municipio. 2000-2010" (in Spanish). Oficina Nacional de Estadística (ONE). Archived from the original on 2009-12-19. பார்க்கப்பட்ட நாள் 2010-04-13.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) Context page: [1] பரணிடப்பட்டது 2010-04-22 at the வந்தவழி இயந்திரம் ("Poblacion estimada y proyectada región provincia y municipio 2000-2010.xls")
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுப்பானிய_அமெரிக்கா&oldid=3545599" இலிருந்து மீள்விக்கப்பட்டது