உள்ளடக்கத்துக்குச் செல்

சான்ட்டா குரூசு டெ லா சியேறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்டா குரூசு டெ லா சியேறா
தன்னாட்சி பெற்ற நகரம்
சான்டா குரூசு டெ லா சியேறா-இன் கொடி
கொடி
சான்டா குரூசு டெ லா சியேறா-இன் சின்னம்
சின்னம்
நாடு பொலிவியா
மாநிலம்சான்டா குரூசு
மாவட்டம்ஆந்த்ரே இபனேசு
நகராட்சிசான்டா குரூசு டெ லா சியேறா
நிறுவல்பெப்ரவரி 26, 1561
அரசு
 • வகைநகர தன்னாட்சி அரசு
 • மேயர்பெர்சி பெர்னாண்டசு
பரப்பளவு
 • தன்னாட்சி பெற்ற நகரம்535 km2 (207 sq mi)
 • மாநகரம்
1,407 km2 (543 sq mi)
ஏற்றம்
416 m (1,365 ft)
மக்கள்தொகை
 (2012)[1]
 • தன்னாட்சி பெற்ற நகரம்14,53,549
 • அடர்த்தி2,700/km2 (7,000/sq mi)
 • பெருநகர்
21,02,998
 • பெருநகர் அடர்த்தி1,500/km2 (3,900/sq mi)
நேர வலயம்ஒசநே−4 (BOT)
இடக் குறியீடு(+591) 3
ம.மே.சு (2001)0.749 – high[2]
இணையதளம்www.gmsantacruz.gob.bo

சான்டா குரூசு டெ லா சியேறா (local pronunciation: [ˈsanta ˈkɾus de la ˈsjera]) (தமிழ்: மலைத்தொடரின் புனிதச் சிலுவை), பொதுவாக சான்டா குரூசு (local pronunciation: [ˈsanta ˈkɾus]), கிழக்கு பொலிவியாவில் சான்டா குரூசு மாநிலத்தின் தலைநகரமாகும்.[1] பிறை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரத்திலும் இதன் பெருநகரப்பகுதியிலும் மாநிலத்தின் 70% மக்கள் வாழ்கின்றனர்.[3] இது உலகின் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது.[4] 1561இல் நுஃப்லோ டெ சாவேசு என்ற எசுப்பானிய நாடு தேடலாய்வாளரால் தற்போதுள்ள இடத்திற்கு கிழக்கில் ஏறத்தாழ 200 km (124 mi) தொலைவில் நிறுவப்பட்டது; பலமுறை இடம் மாற்றப்பட்டு முடிவாக 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டது. வரலாற்றின் பெரும்பகுதிக்கும் இது ஓர் தொலைவுக் குடியிருப்பாகவே இருந்து வந்தது. 1825இல் பொலிவியா விடுதலை பெற்றபிறகும் கூட இது வளரவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரும் விரிவான வேளாண்மை மற்றும் நிலச் சீர்திருத்தங்களுக்குப் பிறகே இது விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது.

தற்போது இது பொலிவியாவின் மிகுந்த மக்கள்தொகை உடைய நகரமாக வளர்ந்தோங்கியுள்ளது; 2006இல் நகராட்சியின் மக்கள்தொகை 1,528,683 ஆக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. சான்டா குரூசு மாநிலம் நாட்டின் இரண்டாவது மக்கள்தொகை மிக்க மாநிலமாக விளங்குகின்றது. பொலிவியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% பங்காக உள்ள சான்டா குரூசு நாட்டின் அன்னிய நேரடி முதலீட்டில் 40% பங்கை ஈர்க்கிறது. எனவே சான்டா குரூசு பொலிவியாவின் முதன்மை வணிக மையமாகவும் நாட்டின் பிறபகுதிகளிலிருந்து குடிபெயர்வோரின் முன்னுரிமை பெற்ற நகரமாகவும் விளங்குகின்றது. [5] மாநிலத்தில் தயாரிக்கப்படும் இயற்கை எரிவளி அடுத்துள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எண்ணெய், வனப் பொருட்கள் மற்றும் வேளாண் வணிகம் பொருளியலில் முதன்மை பங்காற்றுகின்றன.

நகரக் கட்டிடங்கள்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "National Statistics Institute. General Population Estimates". www.ine.gob.bo. Retrieved 2011-09-08.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-04-25. Retrieved 2016-05-30.
  3. "National Statistics Institute. General Population Estimates". www.ine.gob.bo. Retrieved 2011-09-08.
  4. "World's fastest growing urban areas (1)". City Mayors. Retrieved 2012-04-10.
  5. "The Contributions of Santa Cruz to Bolivia (Spanish only)" (PDF). CAINCO. 2008.