புவெப்லா (நகரம்)
புவெப்லா
புவெப்லா | |
---|---|
நகரம்/நகராட்சி | |
இரோயிகா புவெப்லா டெ சரகோசா சரகோசாவின் வீர புவெப்லா | |
அடைபெயர்(கள்): அமெரிக்காவின் தொல்லியல் சேகரிப்பு, தேவதைகளின் நகரம், ஏஞ்சலோபொலிசு | |
புவெப்லா மாநிலத்தில் அமைவிடம் | |
மெக்சிக்கோ நாட்டில் மாநிலத்தின் அமைவிடம் | |
நாடு | மெக்சிக்கோ |
மாநிலம் | புவெப்லா |
நகராட்சி | புவெப்லா நகராட்சி |
நிறுவப்பட்டது | ஏப்ரல் 16, 1531 |
நகராட்சித் தகுதி | 1821 |
பரப்பளவு | |
• நகராட்சி | 534.32 km2 (206.30 sq mi) |
• நகர்ப்புறம் | 689,87 km2 (26,636 sq mi) |
ஏற்றம் (of seat) | 2,135 m (7,005 ft) |
மக்கள்தொகை (2010) Municipality | |
• நகராட்சி | 24,99,519 |
• பெருநகர் | 29,29,347 |
• Seat | 24,99,519 |
இனம் | Poblano |
நேர வலயம் | ஒசநே−6 (மத்திய சீர்தர நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே−5 (மத்திய பகலொளி நேரம்) |
அஞ்சல் குறியீடு | 72000 |
இடக் குறியீடு | 222 |
ஐஎசுஓ 3166 குறியீடு | MX-PUE |
GDP | 1.527 பில்லியன் பெசோக்கள்[1] |
இணையதளம் | (எசுப்பானியம்) அலுவல்முறை வலைத்தளம் |
அலுவல் பெயர் | வரலாற்றுச் சிறப்புமிக்க புவெப்லா நகரம் |
வகை | பண்பாடு |
வரன்முறை | ii, iv |
தெரியப்பட்டது | 1987 (11வது அமர்வு) |
உசாவு எண் | 416 |
அரசு சார்பு | மெக்சிக்கோ |
வலயம் | இலத்தீன அமெரிக்காவும் கரிபியனும் |
புவெப்லா (Puebla, எசுப்பானிய ஒலிப்பு: [ˈpweβla]), முறையாக இரோயிகா புவெப்லா டெ சரகோசா (Heróica Puebla de Zaragoza), புவெப்லா நகரம், புவெப்லா மாநிலத்தின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். மெக்சிக்கோவின் ஐந்து மிக முக்கியமான எசுப்பானியக் குடியேற்றங்களில் ஒன்றாகும்.[2] குடியேற்றக் காலத்தில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட இந்த நகரம் மெக்சிக்கோவின் மையப்பகுதியில் மெக்சிக்கோ நகரத்திலிருந்து தென்கிழக்கே 60 மைல்கள் (97 km) தொலைவிலும் மெக்சிக்கோவின் முதன்மையான அத்திலாந்திக்குப் பெருங்கடல் துறைமுக நகரமான வேராகுரூசுக்கு மேற்கிலும் இந்த இரு நகரங்களையும் இணைக்கும் தடத்தில் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.[3] தற்கால புவெப்லா மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட நகரமாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரத்தை சரகோசாவின் வீர நகரம் என்றும் தேவதைகளின் நகரம் என்றும் ஓடுகளின் நகரம் என்றும் குறிப்பிடுகின்றனர். இது முழுமையாக எசுப்பானியர்களால் கட்டமைக்கப்பட்டமையால் இங்குள்ள கட்டிடக்கலையும் பண்பாடும் ஏனைய ஐரோப்பிய குடியேற்ற நகரங்களைப் போலவே உள்ளன. இக்காலத்திய நகரங்கள் பலவும் ஏற்கெனவே இருந்த தொல்குடி மக்களின் நகரங்களுக்குள் கட்டப்பட்டிருந்தன. புவெப்லாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மையப்பகுதி குடியேற்றவாத எசுப்பானியப் பண்பாட்டிற்கான காட்சிக்கூடமாக விளங்குகின்றது. 17வது, 18வது நூற்றாண்டு ஐரோப்பியக் கட்டிடக் கலையை இங்கு காணலாம்.
புவெப்லாவின் தட்பவெப்பநிலை ஆண்டு முழுமையும் இதமாக உள்ளது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Puebla City". 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-10-20.
- ↑ Seacord, Stephanie (2006-01-01). "On the road to becoming an authentic "poblano"". Mexconnect. பார்க்கப்பட்ட நாள் 2009-10-21.
- ↑ Julia Hirshberg, “Social Experiments in New Spain: A Prosopographical Study of the Early Settlement at Puebla de Los Angeles, 1531-1534” , Hispanic American Historical Review vol. 59, 1979.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Puebla
- (எசுப்பானியம்) Puebla state government web page
- (எசுப்பானியம்) Images of Puebla City பரணிடப்பட்டது 2012-02-06 at the வந்தவழி இயந்திரம்
- "Puebla, a city of Mexico". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).