வேராகுரூசு (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேராகுரூசு
பியூர்ட்டோ டி வேரோகுரூசு
நகரம்
விண்வெளியில் இருந்து வேராகுரூசு
விண்வெளியில் இருந்து வேராகுரூசு
வேராகுரூசு-இன் சின்னம்
சின்னம்
நாடுமெக்சிக்கோ
மாநிலம்வேராகுரூசு
மாநகரசபைவேராகுரூசு
நிறுவப்பட்டது22 ஏப்ரல் 1519
ஏற்றம்1 m (3 ft)
மக்கள்தொகை (2005)
 • நகரம்444,438
 • நகர்ப்புறம்512,310 (மாநகரம்)
 • பெருநகர்702,394 (பெருநகர்)
நேர வலயம்CST (ஒசநே-6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே-7)
இணையதளம்www.veracruz-puerto.gob.mx/

வேராகுரூசு (Veracruz) என்பது, மெக்சிக்கோ நாட்டின் ஒரு மாநிலமான வேராகுரூசில் மெக்சிக்கோ குடாவில் அமைந்துள்ள ஒரு முக்கிய துறைமுக நகரம் ஆகும். இது மாநிலத் தலைநகரமான அலாப்பாவில் (Xalapa) இருந்து கூட்டமைப்பு நெடுஞ்சாலை 140 வழியாக 105 கிலோமீட்டர் (65 மைல்) தொலைவில் உள்ளது. 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 444,438 உம், மாநகரசபைப் பகுதியின் மக்கள்தொகை 512,310 உம் ஆகும். 241 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாநகரசபைப் பகுதியில் நகருக்கு வெளியாயுள்ள வலன்டே டயசு, லாசு அமாப்போலாசு ஆகிய பகுதிகளும் அடங்குகின்றன. போக்கா டெல் ரியோ (Boca del Río), ஆல்வாராடோ (Alvarado) ஆகிய மாநகரசபைப் பகுதிகளையும் உட்படுத்தியுள்ள இதன் பெருநகரப் பகுதி 702,394 மக்கள் தொகையைக் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேராகுரூசு_(நகரம்)&oldid=1426007" இலிருந்து மீள்விக்கப்பட்டது