இருமப் படமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருமப் படமி அல்லது எண்ணியல் படக்கருவி‎ (ஆங்கிலம்: Digital Camera) என்பது அசையும் ஒளிக் காட்சிகளான காணொளி அல்லது அசையாத பிம்பங்களை அல்லது இரண்டையும் இருதான ( ஈரெண் தான ) முறையில் ஒரு மின்னியல் உணரிகள் எனப்படும் மின்னணு முறையில் பிம்பத்தை உணரும் ஒரு தொழில் நுட்பம் கொண்டு பிம்பங்களைப் பதிவு செய்யும் ஒரு ஒளிப்பதிவுக் கருவி.

கானான் பவர் சாட் ஏ95 என்ற 'இ' னா வாங்கியின் முன்புறம் மற்றும் பின்புறம்.

கையடக்கமான பல டிஜிடல் காமிராக்களில், அசையும் விடியோபடக்காட்சிகள், அசையாத புகைப்படங்களுடன் ஒலியையும் பதிவு செய்து கொள்ளலாம். மேற்கத்திய சந்தைகளில் டிஜிடல் காமிராக்கள், தங்களை ஒத்த 35 எம்எம் பிலிம்(படச் சுருள்) புகைப்படக் கருவிகளை விட அதிகம் விற்கின்றன.[1]

ஒரு படச்சுருள் புகைப்படக் கருவியால் செய்ய முடியாதவற்றையும் டிஜிடல் காமிராவால் செய்ய முடியும்: பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை உடனடியாக திரையில் காட்டுவது, ஆயிரக்கணக்கான பிம்பங்களை ஒரு சிறிய ஒற்றை நினைவகத்தில் சேமித்து வைப்பது, ஒரு காட்சியை ஒலியுடன் பதிவு செய்வது மற்றும் நினைவகத்தின் இடத்தை அதிகரிக்க பிம்பங்களை நீக்குவது போன்றவை. சிலவற்றில் க்ராப் பிக்சர்ஸ்முறையில் பிம்பங்களை செதுக்க இயலும்; மேலும், ஒரு பிம்பத்தை வெட்டித் தொகுப்பதற்கான இமேஜ் எடிட்டிங் அடிப்படை வேலைகளையும் செய்ய முடியும். அடிப்படையாக, ஒரு படச்சுருள் புகைப்படக் கருவியைப் போலவேதான் லென்ஸ் எனப்படும் ஒரு விழி வில்லை மற்றும் பிம்பத்தின் மீது ஒளியைச் செலுத்தி அதைப் பதிவு செய்யும் கருவியில் பதிப்பிக்க ஒரு மாறுபடக்கூடிய டயாஃப்ரம் ஆகியவை கொண்டு இவையும் இயங்குகின்றன. ஒரு புகைப்படக் கருவியில் உள்ளதைப் போலவே டயாஃப்ரம் மற்றும் ஒரு ஷட்டர் இயக்க முறை ஆகியவற்றின் கூட்டு இயக்கம் மூலமாக பிம்பத்தின் மேல் சரியான அளவு ஒளி பதிவு செய்யப்படுகிறது; இதில் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால், பிம்பத்தை எடுக்கும் சாதனம் வேதியியல் அல்லது மின்னணு (எலெக்ட்ரானிக்) சார்ந்தது என்பதுதான்.

பிடிஏ மற்றும் (காமிரா ஃபோன்எனப்படும்) மொபைல் ஃபோன் தொடங்கி வாகனங்கள் வரை பல சாதனங்களில் டிஜிடல் காமிராக்கள் உள்ளிறுத்தப்படுகின்றன ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் இதர அஸ்ட்ரானாமிகல் சாதனங்கள் விசேஷமான டிஜிடல் காமிராக்களில் குறிப்பான சாதனங்கள்.

கையடக்கமான டிஜிடல் காமிராக்கள்[தொகு]

கையடக்கமான (காம்பேக்ட்) காமிராக்கள் சிறியதாகவும், எளிதில் கொண்டு செல்லக் கூடியதாகவும், நினைத்தவுடன் புகைப்படம் எடுக்கும் "ஸ்னாப்ஷாட்" டுக்கு வசதியாகவும் இருக்குமாறும் வடிவமைக்கப்படுகின்றன. இதனால், இவை பாயிண்ட் டு ஷூட் காமிரா (குறி நோக்கி படம் எடுக்கும் புகைப்படக்கருவி) என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் மிகச் சிறியது பொதுவாக, 20 எம்எம் பருமனையும் விடக் குறைவானது. இதனால், இவை சப்காம்பேக்ட் அல்லது "அல்ட்ரா காம்பேக்ட்" என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக எளிதில் உபயோக்கிக்கும் வசதி மற்றும் அதன் கையடக்கமான அமைப்பு, எளிமை ஆகியவற்றின் பொருட்டு, காம்பேக்ட் காமிராக்களின் வடிவமைப்பில் பல முன்னேற்றமடைந்த அம்சங்களும், படத்தின் தரமும் கை விட்டு விடப்படுகின்றன. பொதுவாக, லாசி கம்ப்ரெஷன், ஜேபிஈஜி என்னும் முறைகளைப் பயன்படுத்தித்தான் பிம்பங்கள் சேமிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஃபிளாஷ் எனப்படும் ஒளிவீச்சுக் கருவி, அருகில் இருக்கும் பொருட்களைப் புகைப்படம் எடுக்கும் அளவு போதுமான அளவு சக்தி கொண்டதாக உள்ளிருப்பதாகவே அமைக்கப்பட்டிருக்கும். புகைப்படத்தை ஃபிரேம் செய்வற்கு அநேகமாக எப்போதுமே லைவ் ப்ரிவ்யூ பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் மோஷன் பிக்சர் (அசையும் படம்) எடுக்கும் திறனும் குறைந்த அளவில் இருக்கலாம். காம்பேக்ட் காமிராக்கள் பெரும்பாலும் மாக்ரோ திறன்கள் கொணடிருக்கும், ஆனால் இவற்றில் ஜூம் செய்யும் வசதி இருந்தால், பொதுவாக அது ப்ரி்ட்ஜ் மற்றும் டிஎஸ்எல்ஆர் காமிராக்களில் உள்ளதை விடக் குறைவாகவே இருக்கும். சாதாரணமாக, இவற்றி்ல் ஒளி வேறுபாட்டை கணிக்கும் ஆட்டோஃபோகஸ் அமைப்பு இருக்கும். இது லைவ் ஃபீட் ப்ரிவ்யூவிலிருந்து வரும் பிம்பம் பற்றிய தரவுகளை முதன்மையான பிம்பத்திற்கு மாற்றி, விழிவில்லையை சரியாக குவிமையப்படுத்துகிறது.

அநேகமாக இத்தகைய புகைப்படக் கருவிகளில் விழி வில்லைகளின் உள்ளே கிட்டத்தட்ட-நிசப்தமான ஒரு லீஃப் ஷட்டர் பொருத்தப்பட்டருக்கும்.

இவற்றின் விலையைக் குறைக்கவும், வடிவத்தைச் சிறிதாக்கவும், இவை 6 எம்எம் மூலை விட்டம், அதாவது 6க்கு இணையான ஒரு க்ராப் ஃபாக்டர், அளவே உள்ள பிம்பம் உணர் கருவி (இமேஜ் சென்சார்)யையே பயன்படுத்துகின்றன. இதனால், குறைந்த ஒளியில் படமெடுக்கும் திறன் இவற்றில் குறைவாகவே இருக்கும். மேலும், பின்புலத்தின் ஆழம், அருகில் இருக்கும் பொருட்களை குவி மையப்படுத்தும் திறன், சிறிய நுணுக்கங்கள் ஆகியவையும், பெரிய இமேஜ் சென்சார்களை உபயோகிக்கும் புகைப்படக் கருவிகளை விடக் குறைவாகவே இருக்கும்.

ப்ரிட்ஜ் காமிராக்கள்[தொகு]

ப்ரிட்ஜ் அல்லது எஸ்எல்ஆர்-போன்ற உயர்-முனை காமிராக்கள், டிஎஸ்எல்ஆர் காமிராக்களில் உள்ள மதிப்பு மிகுந்த பல முன்னேற்றமான அம்சங்களைக் கொண்டு அவை போலவே தோற்றமளிக்கும் சிறப்பான டிஜிடல் காமிராக்களாகும். ஆனால், இவை, காம்பேக்ட் காமிராக்களைப் போல ஒரு நிலையான லென்ஸ் மற்றும் ஒரு சிறிய சென்சாரைத்தான் பயன்படுத்துகின்றன. பெரும்பான்மையான காம்பேக்டுகளைப் போல, இதிலும் பிம்பத்தை ஃபிரேம் செய்வதற்கு லைவ் ப்ரிவ்யூ பயன்படுத்தப்படுகிறது. ஒளி வேறுபாட்டைக் கண்டுணரும் கான்ட்ராஸ்ட்-டிடெக்ட் அமைப்பின் மூலம்தான் ஆடோஃபோகஸ் செய்யப்படுகிறது. ஆனால், சிறந்த முறையில் இயக்குவதற்கு இலகுவாக நிறைய ப்ரிட்ஜ் காமிராக்களில் கையால் இயக்கும் வசதி கொண்ட ஒரு ஃபோகஸ் முறையும் உண்டு.

ஃப்யூஜி பிலிம் ஃபைன்பிக்ஸ் எஸ்9000.

பெரும் வடிவத்துடன் சிறிய லென்ஸ் இணைந்துள்ள காரணத்தினால், இவற்றில் பல காமிராக்களில் மிகவும் விசேஷமான அம்சங்கள், அதாவது பெரும் அளவில் ஜூம் செய்யும் வசதி மற்றும் விரைவான அபெர்ச்சர்கள் கொண்ட விழி வில்லைகள் உண்டு. இதனால், விழி வில்லைகளை மாற்ற இயலாத வசதியின்மை ஒரளவிற்கு ஈடு செய்யப்படுகிறது. இதற்கு ஒரு மிகச் சரியான உதாரணம் பானாசோனிக் எஃப்இஜட்50ல்உள்ள விழி வில்லையாகும். இது 35-420 எம்எம்முக்கு இணையான 1:2.8-3.7 அபெர்ச்சர் கொண்ட ஒரு விழிவில்லை. இதைப் போல மிகுந்த சிறப்பம்சங்களை உடைய ஒரு விழிவில்லை தனது பணியிலிருந்து வழுவுதல்களைக் குறைப்பதற்காக, இவற்றில் மிகவும் நுணுக்கமான கட்டமைப்புகள் உள்ளன. இதில் பல ஆஸ்ஃபெரிக் தனிமங்கள் மற்றும் அநேகமாக அனாமலஸ்-டிஸ்பர்ஷன் கண்ணாடி போன்றவை, உபயோகிக்கப்படுகின்றன.

தமது சிறிய சென்சார்களின் குறைந்த உணர்வு நுகர் திறனுக்கு ஈடு செய்வதற்காக இந்தக் காமிராக்கள் அநேகமாக ஏதாவது ஒரு விதத்தில் பிம்பத்தை நிலைப்படுத்தும் இமேஜ் ஸ்டெபிலைசெஷன் அமைப்பைக் கொண்டிருக்கும். இதனால், வெகு நேரம் கையில் வைத்திருந்தாலும் சரியான எக்ஸ்போஷர்களைப் பெற முடியும்.

இவை டிஜிடல் எஸ்எல்ஆர் காமிராக்களைப் போலவே தோற்றம் அளிப்பதால், சில சமயங்களில் இவை அவற்றோடு குழப்பப்பட்டு டிஜிடல் காமிரா என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. ப்ரிட்ஜ் காமிராக்களில் டிஎஸ்எல்ஆரில் இருப்பதைப் போன்ற ரிஃப்ளெக்ஸ் வ்யூயிங் அமைப்பு கிடையாது. (சில வகைகளில், ஒய்ட் ஆங்கிள் அல்லது டெலிஃபோட்டோ க்ன்வர்டர்கள் இத்துடன் இணைக்கப்படக் கூடும் என்றாலும்), இவை (மாற்ற முடியாத), நிலைப்படுத்தப்பட்ட விழி வில்லைகள் கொண்டுதான் இதுவரை வந்துள்ளன. பொதுவாக, ஒளிக்காட்சிகளை இதில் ஒலியுடன் பதிவு செய்யலாம், இதில் லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்பிளே அல்லது எலெக்ட்ரானிக் வ்யூ ஃபைண்டர் (ஈவிஎஃப்) மூலமாகப் பார்த்து காட்சியமைப்பு செய்யப்படுகிறது. பொதுவாக, இவை ஒரு உண்மையான டிஜிடல் எஸ்எல்ஆரை விட மெதுவாக இயங்குபவைதாம். ஆனாலும், இவற்றில் பிம்பத்தின் தரம் (தேவையான ஒளியுடன்)சிறந்து விளங்கும். மேலும், இவை டிஎஸ்எல்ஆரை விட கைக்கடக்கமாகவும், லேசானதாகவும் இருக்கும். இதில் உயர்-முனை மாதிரிகள், தாழ்-முனை மற்றும் இடைப்பட்ட நிலைகளில் உள்ள டிஎஸ்எல்ஆருக்கு இணையான ரெசொல்யூஷன்களைக் கொண்டுள்ளன. இவற்றில் பல காமிராக்கள், பிம்பங்களை ரா இமேஜ் ஃபார்மட்டில் (கச்சா பிம்ப வடிவம்)சேமித்து வைக்கும் அல்லது அவற்றை பண்படுத்தி ஜேபிஈஜி வடிவில் ஒடுக்கும் அல்லது இவை இரண்டையுமே செய்யும் திறன் உடையவையாக இருக்கும். இவற்றில் பெரும்பான்மையானவை டிஎஸ்எல்ஆர்களில் இருப்பதைப் போன்ற உள்ளிருப்பான ஒளிவீச்சுக் கருவிகளைக் கொண்டுள்ளன.

டிஜிடல் சிங்கிள் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் காமிராக்கள்[தொகு]

டிஜிடல் சிங்கிள்-லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் (டிஎஸ்எல்ஆர்கள்) படச்சுருள் பயன்படுத்தும் சிங்கிள்-லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் காமிராக்களை (எஸ் எல் ஆர்கள்) அடிப்படையாகக் கொண்ட டிஜிடல் காமிராக்கள். தமக்கே பிரத்யேகமாக உள்ள பார்வை அமைப்பின் காரணமாக இவை இந்தப் பெயரைப் பெறுகின்றன. இதன் விழி வில்லையில் இருந்து ஒளியை ஒரு தனி ஆப்டிகல் வ்யூ ஃபைண்டர் மூலமாக ஒரு கண்ணாடி பிரதி பலிக்கிறது. இமேஜரின் மீது ஒளி விழுவதை அனுமதிப்பதற்காக, ஒரு பிம்பத்தைப் படம் எடுக்கும்போது கண்ணாடி அதன் வழியிலிருந்து நகர்த்தப்படுகிறது ஃபிரேமிங்கின்போது இமேஜரை ஒளி சென்றடையாத காரணத்தால், கண்ணாடிப் பெட்டியில் இருக்கும் பிரத்யேகமான சென்சார்களைக் கொண்டே ஆட்டோஃபோகஸ் செய்யப்படுகிறது. 21ம் நூற்றாண்டின் டிஎஸ்எல்ஆர்கள் பெரும்பாலும் ஒரு "லைவ் வ்யூ"வைக் கொண்டுள்ளன. இவை தேர்ந்தெடுக்கப்படும் வேளையில் காம்பேக்ட் காமிராக்களின் லைவ் ப்ரிவ்யூ அமைப்பைப் போல செயல்படுகின்றன.

இந்தக் காமிராக்கள் மற்ற வகைக் காமிராக்களை விட பெரிய அளவிலான சென்சார்களை, உதாரணமாக, 18 எம்எம் முதல் 36 எம்எம் விட்டம் வரை, மற்றும் 2,1.6 அல்லது 1 க்ராஃப் ஃபாக்டர், கொண்டுள்ளன. இதனால் ஒரு குறிப்பிட்ட அபெர்ச்சரில், பெரும் அளவிலான குறைந்த பின்புல ஆழம் மற்றும் குறைந்த ஒளியிலும் சிறப்பாகச் செயல்படும் திறைனை இவை பெறுகின்றன.

ஒன்றன் இடத்தில் மற்றொன்றாக மாற்றிக் கொள்ளக் கூடிய விழி வில்லைகளை இவை பயன்படுத்துகின்றன. டிஎஸ்எல்ஆர்களின் ஒவ்வொரு பெரிய உற்பத்தியாளரும் தமது காமிராக்களில் பயன்படக் கூடிய பல்வேறு விழி வில்லைகளின் ஒரு வரிசையையும் உடன் விற்கிறார்கள். இதனால், காமிராவைப் பயன்படுத்துபவர் வைட் ஆங்கிள், டெலிஃபோட்டோ போன்று தமக்குத் தேவையான விழிவில்லை ஒன்றைத் தேர்வு செய்ய முடிகிறது. இதனால், ஒவ்வொரு விழிவில்லைக்கும் தனியாக ஒரு ஷட்டர் தேவைப்படுவதில்லை. டிஎஸ் எல் ஆர்கள் இமேஜருக்கு முன்னும், கண்ணாடிக்குப் பின்னும் உள்ள ஒரு ஃபோகல்-பிளேன் ஷ்ட்டரைப் பயன்படுத்துகின்ற்ன.

படம் பிடிக்கப்படும் தருணத்தில் கண்ணாடி அதன் பாதையிலிருந்து நகர்த்தப்படுவதனால், குறிப்பான 'களாக்" என்ற ஒரு ஒலி உண்டாகிறது.

எலெக்ட்ரானிக் வ்யூஃபைண்டர், இண்டர்சேஞ்சபிள் லென்ஸ் காமிராக்கள்[தொகு]

2008ஆம் ஆண்டின் இறுதியில் டிஎஸ்எல்ஆர்களின் பெரிய சென்சார்கள் மற்றும் மாற்றக் கூடிய விழி வில்லைகள் மற்றும் காம்பேக்ட் காமிராக்களின் லைவ் ப்ரிவ்யூ ஆகியவற்றை ஒரு எலெக்ட்ரானிக் வ்யூ ஃபைண்டர் அல்லது பின்புற எல்சிடியின் மூலம் இணைக்கும் ஒரு புதிய வகை புகைப்படக் கருவி உருவானது. இவை டிஎஸ்எல்ஆர்களை விட எளிதானவை மற்றும் கைக்கடக்கமானவை. காரணம் இவற்றில் உள்ள கண்ணாடிப்பெட்டி அகற்றப்பட்டதுதான். இவை டிஎஸ்எல்ஆர்கள் அல்லது காம்பேக்டுகளின் கையாளும் அல்லது இயக்கும் முறையை பின்பற்றியவைதாம். 2009ஆம் ஆண்டு வரை, ஃபோர் தேர்ட்ஸ் டிஎஸ்எல்ஆர் அமைப்பிலிருந்து உதிரிகளைக் கடனாகப் பெற்ற மைக்ரோ ஃபோர் தேர்ட்ஸ் மட்டுமே அதைப்போன்ற ஒரே அமைப்பாக இருந்தது.

டிஜிடல் ரேஞ்ஜ்ஃபைண்டர்ஸ்[தொகு]

ரேஞ்ஜ்ஃபைண்டர் என்பவை அவற்றைப் உபயோகப்படுத்துபவரால்,பிலிம் பயன்படுத்தும் காமிராக்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதைப்போல, பொருள் இருக்கும் தூரத்தை அளப்பதற்கு ஆப்டிகல் இயக்க முறையைப் பயன்படுத்துவதாகும். ஒலியளவு அமைப்பு அல்லது மின்னணு உத்திகளைப் பயன்படுத்தியே அநேக டிஜிடல் காமிராக்கள் பொருள் இருக்கும் தூரத்தை தாமாகவே அளக்கின்றன. ஆனால், அவற்றில் ஒரு ரேஞ்ஜ்ஃபைண்டர் இருக்கிறது என்று சொல்வது வழக்கமில்லை. ஒரு ரேன்ஜ்ஃபைண்டர் காமிராவை, அதாவது ரேன்ஜ்ஃபைண்டர் கொண்ட ஒரு பிலிம் காமிராவைக் குறிப்பிடுவதற்காகவே, ரேன்ஜ்ஃபைண்டர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதுவே எஸ்எல்ஆர் அல்லது தூரத்தை அளக்கும் வசதி இல்லாத இளிய காமிராவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதாக உள்ளது.

லைன்-ஸ்கேன் காமிரா சிஸ்டம்ஸ்[தொகு]

லைன்-ஸ்கேன் காமிரா என்பது ஒரு லைன்-ஸ்கேன் இமேஜ் சென்சார் சில்லு மற்றும் ஒரு குவிமையப்படுத்தும் இயக்க முறை ஆகியவற்றைக் கொண்ட ஒரு புகைப்பட சாதனமாகும். இந்த வகை காமிராக்கள் பொதுவாக தொழிற்சாலைகளில் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் பொருட்களைப் படம் பிடிப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றன. விடியோ காமிராக்களைப் போல் அல்லாது, லைன்-ஸ்கேன் காமிராக்கள் அடுக்கு வரிசையல்லாது, ஒரு ஒற்றை வரிசை பிக்சல் சென்சார்களைப் பயன்படுத்துகின்றன. இந்த லைன்-ஸ்கேன் காமிராவிலிருந்து வரும் தரவுக்கு ஒரு குறிப்பிட்ட அலைவரிசை உண்டு. காமிரா ஒரு வரியை சோதிக்கும், சிறிது காத்திருக்கும், பிறகு மீண்டும் சோதிக்கும். இவ்வாறு லைன்-ஸ்கேன் காமிராவிலிருந்து பெறப்படும் தரவை ஒரு கணினி மூலம் பண்படுத்தி ஒற்றைப் பரிமாணம் கொண்ட வரித்தரவு ஒன்று பெறப்பட்டு அதன் மூலம் இரட்டைப் பரிமாணம் கொண்ட ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்பட்ட இரட்டைப் பரிமாண பிம்பத்தரவு பிம்பப் பதனிடும் முறைகள் கொண்டு, தொழிற்சாலை நோக்கங்களுக்குத் தேவையான முறையில் மேலும் பண்படுத்தப்படுகின்றன.

லைன்-ஸ்கேன் தொழில்நுட்பத்தால் மிகவும் வேகமாகச் செல்லும் தரவுகளைக் கூட, மிகவும் உயர்ந்த பிம்ப ரெசொல்யூஷன்களில் பிடித்து விட முடியும் வழக்கமாக, இது போன்ற சூழ்நிலைகளில், பெறப்பட்ட பிம்பத் தரவானது ஒரு நிமிடத்தின் மிகச் சிறிய பகுதியிலேயே 100 எம்பிக்கும் மேலாகக் கடந்து விடக் கூடும். இதனால, லைன்-ஸ்கேன் காமிராவின் அடிப்படையிலான ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள் அமைப்பின் நோக்கங்களுக்கு தேவைப்படும் முறையில் காமிராவின் வெளியீடுகளைக் கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வசதிக்குட்பட்டு பெறக் கூடியதாகிய கணினித் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்திக் கொள்கிறது.

லைன்-ஸ்கேன் காமிராக்கள் குறிப்பாக சரக்குகளைக் கையாளும் தொழிலில் பயன்படுத்துகின்றன. காரணம், செவ்வக வடிவில் உள்ள எந்த ஒரு சரக்குப் பொருளானாலும், அதன் கோணம் மற்றும் அளவு எத்தகையதாக இருந்தாலும், அந்தப் பொருளை குவிமையப்படுத்தும் இயக்க முறைகளை ஒருங்கிணைத்து அதன் ஆறு புறங்களையும் இது சோதிக்க வல்லது. இவ்வாறு பெறப்படும் 2-டி பிம்பங்கள் ஐடி, 2டி பார்கோடுகள் மட்டும் அல்லாமல், முகவரித் தகவல் மற்றும் பிம்பம் பண்படுத்தப்படும் முறைமைகளால் பெறப்படும் எப்படிப்பட்ட வடிவையும் கொள்ள வல்லது. இந்தப் பிம்பங்கள் இரட்டைப் பரிமாணத்திலும், மனிதர்களால் படிக்க முடிவதுமாக இருப்பதனால், இவற்றை ஒரு கணினித் திரையிலும் காணலாம். இதில் முதிர்ந்த ஒருங்கிணைந்த செயல் அமைப்புக்கள் என்பவை விடியோ கோடிங் மற்றும் ஆப்டிகல் காரக்டர் ரெகக்னிஷன்(ஓசிஆர்) ஆகியவையாகும்

ஒருங்கிணைப்பு[தொகு]

பல சாதனங்கள் தங்களுக்குள் உட்பொருத்தப்பட்ட அல்லது தங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள டிஜிடல் காமிராக்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, மொபைல் ஃபோன்களில் இப்போது டிஜிடல் காமிராக்களும் இருப்பது சகஜமாகி விட்டது. இப்படிப்பட்ட சாதனங்களில் சில காமிரா ஃபோன்கள் என்று வழங்கப்படுகின்றன. பிடிஏக்கள், லாப்டாப் மற்றும் பிளாக் பெர்ரி போன்ற மற்ற சிறிய (குறிப்பாக தொடர்பு சாதனங்களாகப் பயன்படும்) சிறிய மின்னணுக் கருவிகள் தம்மிடம் உள்ளிருப்பாகக் ஒரு டிஜிடல் காமிராவைக் கொண்டுள்ளன. சிலவற்றில் டிஜிடல் காம்கார்டர்கள் உள்ளன.

சேமிப்பிற்கான இடவசதி குறைவாக இருப்பதினாலும், படத்தின் தரத்தை விட வசதியே முக்கியமானதாகக் கருதப்படுவதாலும், இப்படிப்பட்ட உட்பொருத்தப்பட்ட அல்லது குவிமையப்படுத்தப்பட்ட கருவிகள் பிம்பங்களை தெளிவற்ற ஆனால் கைக்கடக்கமான ஜேபிஈஜி என்னும் கோப்பு வடிவில் சேமித்து வைக்கின்றன.

டிஜிடல் காமிராவை உள்ளடக்கிய மொபைல் ஃபோன் 2001ஆம் ஆண்டு ஜப்பானில் ஜே-ஃபோன் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. 2003ஆம் ஆண்டு தனித்த டிஜிடல் காமிராக்களை விட, காமிரா ஃபோன்களே அதிக அளவில் விற்பனையாகின. 2006ஆம் ஆண்டு பிலிம் பயன்படுத்தும் அனைத்து வகைக் காமிராக்கள் மற்றும் டிஜிடல் காமிராக்கள் இவற்றின் மொத்த விற்பனையையும் தாண்டி இவை விற்றன. இந்த காமிரா ஃபோன்களின் விற்பனை ஐந்து வருடங்களில் ஒரு பில்லியனைத் தாண்டியது. 2007ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட மொபைல் ஃபோன்களில் பாதிக்கு மேல் காமிரா ஃபோன்களாகவே இருந்தன.

தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால், இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட காமிராக்கள் ரெசொல்யூஷன், படத் தரம் மற்றும் கூடுதல் கருவிகளை பயன்படுத்தும் வசதி ஆகிய விஷயங்களில் டிஜிடல் காமிராக்களின் மிகத் தாழி நிலையில்தான் உள்ளன. ஆயினும், தொழில் நுட்பம் வெகு வேகமாக முன்னேறி வருவதால், முதன்மையான காம்பேக்ட் டிஜிடல் காமிராகளும், காமிரா ஃபோன்களுக்குமான இடைவெளி குறைந்து வருகிறது. உயர் முனை காமிரா ஃபோன்கள் அதே தலைமுறையைச் சார்ந்த தாழ்-முனை தனிப்பட்டதான டிஜிடல் காமிராக்களுடன் போட்டியிடுவதாக் உள்ளன.

படச் சுருள் காமிராக்களை டிஜிட்டல் காமிராக்களாக மாற்றுதல்[தொகு]

டிஜிடல் சிங்கிள்- லென்ஸ்- ரிஃப்ளெக்ஸ்- காமிரா

டிஜிடல் காமிராக்கள் பொதுவாக கையாளப்படத் துவங்கியவுடன், அநேக புகைப்பட நிபுணர்கள் கேட்ட கேள்வி என்னவென்றால், அவர்களது படச் சுருள் காமிராக்கள் டிஜிட்டல் காமிராக்களாக மாற்றப்பட முடியுமா என்பதுதான். இதற்கு பதில் முடியும் மற்றும் முடியாது என்ற இரண்டாகவும் இருந்தது. காமிராக்களைப் போல விழிவில்லைகளும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. எனவே, இதை மீண்டும் அமைப்பதனால் ஏற்படும் செலவு, மிகவும் அதிகமாக இருக்கும் என்பதனால், பெரும்பாலான 35 எம்எம் பிலிம் காமிராக்களைப் பொறுத்தவரையில் இதற்கான பதில் முடியாது என்பதுதான். டிஜிடல் முறைக்கு மாற்றுவதற்கும் மின்னணுவிற்குத் தேவையான இடம் அளிப்பதற்கும் மற்றும் லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்பிளேயின் ப்ரிவ்யூவை அனுமதிப்பதற்கும், பல காமிராக்களில் அவற்றின் பின்புறத்தை அகற்றி அந்த இடத்தில் முறைப்படுத்தப்பட்ட ஒரு டிஜிடல் யூனிட்டை வைக்க வேண்டியிருக்கும்.

என்சி2000 மற்றும் கோடக் டிசிஎஸ் தொடர் போன்ற பல ஆரம்ப காலத் தொழில்முறை எஸ்எல்ஆர் காமிராக்களும் 35 எம்எம் பிலிம் காமிராக்களிலிருந்து உருவாக்கப்பட்டவைதாம். அப்போதைய தொழில் நுட்பத்தின்படி, ஒரு டிஜிட்டல் "பின்புற"த்தைப் பொருத்துவதை விட, படச்சுருள் காமிராக்களை பெரிய, பருமனான (அதாவது அசல் காமிராவை விடவும் பெரியதான)டிஜிடல் யூனிட்டுகள் மீது பொருத்துவது என்பதே கடைப்பிடிக்கப்பட்டது. இவை தொழிற்சாலையிலேயே உருவாக்கப்பட்ட காமிராக்கள். சந்தையில் விற்கப்பட்ட பின் செய்யப்பட்ட மாற்றங்கள் அல்ல.

இதில் ஒரு குறிபபிடத்தக்க விதிவிலக்கு நிகான் ஈ2. இதன் பிறகு நிகான் ஈ3 வந்தது. இவற்றில் 35 எம்எம் வடிவமைப்பை 2/3 சிசிடி சென்சாராக மாற்றுவதற்கு கூடுதல் ஆப்டிக்ஸ் பயன்படுத்தப்பட்டன.

சில 35 எம்எம் காமிராக்களில் அவற்றின் உற்பத்தியாளரால் அமைக்கப்பட்ட டிஜிடல் காமிரா பின்புறங்கள் இருந்திருக்கின்றன. இதற்கு லெயிகாவை குறிப்பாக உதாரணம் காட்டலாம். மீடியம் ஃபார்மட் மற்றும் லார்ஜ் ஃபார்மட் காமிராக்கள் (அதாவது 35எம்எம் விட அதிகமான புகைப்படச் சுருளை உபயோகிப்பவை) குறைவான அளவில் உற்பத்தி செய்யப்படுபவை. உதாரணமாகக் கூறப்படும் டிஜிடல் பின்புறம் கொண்ட இவற்றின் விலை $10,000க்கும் அதிகமானது. இவை கையிறுக்கப் பிடிகள், படச்சுருள் பின்புறங்கள், வைண்டர்கள், மற்றும் தேவைக்கேற்ப தனியாகப் பொருத்திக் கொள்ளப்படக் கூடிய விழி வில்லைகள் என்று தனித்தனியான பகுதிகளைக் கொண்டவையாக இருந்தன.

இந்தப் பின்புறங்கள் பயன்படுத்தும் மிகப் பெரிய விழி வில்லைகளின் காரணமாக, பிம்பத்தின் அளவுகள் மிகவும் அதிகமானது. 2006ஆம் ஆண்டில் மிகவும் பெரியதாக இருந்தது ஃபேஸ் ஒன் னின் பி45 39 எம்பி இமேஜ்பேக். இது 224.6 எம்பி வரையிலான ஒரு ஒற்றை டிஃப் பிம்பத்தை உருவாக்க வல்லதாக இருந்தது. மீடியம் ஃபார்மட் டிஜிடல்கள், அவற்றைப் போன்ற சிறிய டிஎஸ்எல்ஆர்களை விட அதிகமாக புகைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் ஒவியப் புகைப்படங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுபவையாக இருந்தன; சில டிஎஸ்எல்ஆர்களில் குறிப்பாக ஐஎஸ்ஓ வேகம் அதிகபட்சமாக உள்ள 400க்கு எதிராக 6400ஆக இருந்தது.

வரலாறு[தொகு]

ஆரம்ப கால உருவாக்கம்[தொகு]

கூரிய உணர் தனிமங்களின் வரிசையிலிருந்து கிடைக்கப் பெறும் குறிகளை எண்ணியல் மரபில் அசையாத படங்களாக மாற்றும் காலம் தொட்டே ஸ்கேனர்கள் வழியாக பிம்பங்களை டிஜிட்டலாக்குவது மற்றும் ஒளிக்காட்சிகளையும் டிஜிட்டலாக்குவது என்பது தொடங்கி விட்டது. 1961ஆம் ஆண்டு விமான ஊர்திக்கான ஒரு மாநாட்டில் ஜெட் பாபுலேஷன் லேபோரேட்டரியைச் சார்ந்த யூஜின் எஃப் லாலிமொசைக் ஃபோட்டோசென்சார் என்பதை உயரம் அளவிடுவதற்கான ஒரு நட்சத்திர சென்சார் என்று குறிப்பிட்டார்.[2]

நியூ யார்க்கில் உள்ள ஃபிலிப்ஸ் லேப்ஸ் சார்ந்த எட்வர்ட் ஸ்டுப், பயட்டர் கேச் மற்றும் ஜோல்ட் ஷிலக்யி ஆகியோர்

"ஆல் சாலிட் ஸ்டேட் ரேடியேஷன் இமேஜர்ஸ்" என்பதற்கான ஒரு உரிமம் வேண்டி 1968ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம் நாள் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். இவர்கள் ஒரு தட்டையான ஒரு திரையை அமைத்தனர்.

வரிசை மற்றும் பத்தி வாரியாக இணைக்கப்பட்ட இரண்டு டெர்மினல் சாதனங்கள் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு கபாசிடருடன் இணைக்கப்பட்ட ஃபோடோடிகோடுகளின் அடுக்கு வரிசையான ஒளிப் பிம்பம் ஒன்றை பெறுவதற்கும், சேமிப்பதற்குமான இலக்காக அதை அமைத்தனர். இதற்கான யூஎஸ் 1970ஆம் ஆண்டு நவம்பர் 10 வழங்கப்பட்டது.[3] 1972ஆம் ஆண்டு, டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் பொறியாளர் விலிஸ் அட்காக் படச் சுருள் இல்லாத ஒரு புகைப்படக் கருவியின் வடிவமைப்பிற்கான உரிமத்தை கோரினார். ஆனால், அந்தப் புகைப்படக் கருவி அமைக்கப்பட்டதா என்று தெரியவில்லை.[4] டிஜிடல் காமிராவை உருவாக்கும் முதல் முயற்சியாகப் பதிவு செய்யப்பட்டது ஈஸ்ட்மேன் கோடக்கில் ஒரு பொறியாளராக இருந்த ஸ்டீவன் சாசன் 1975ம் ஆண்டு செய்ததுதான்.[5] அது 1973ஆம் ஆண்டு ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர் உருவாக்கிய அந்தச் சமயத்தில் புதுமையாக இருந்த திட-நிலை சிசிடி இமேஜ் சென்சார் சில்லைப் பயன்படுத்தியது.[6] அந்தக் காமிரா 8 பவுண்டு (3.6 கிலோ) எடை கொண்டிருந்தது. ஒரு ஒளி நாடாவில் கருப்பு வெள்ளைப் படங்களைப் பதிவு செய்தது. 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 0.01 மெகாபிக்சல் (10,000 பிக்சல்கள்) ரெசொல்யூஷனுடனான தன் முதல் படத்தைப் பிடிப்பதற்கு 23 விநாடிகள் எடுத்துக் கொண்டது. அந்த புரோடோடைப் காமிரா ஒரு தொழில் நுட்பப் பயிற்சியாகத்தான் செய்யப்பட்டது; உற்பத்தி செய்யப்படுவதற்காக அல்ல.

அனலாக் எலெக்ட்ரானிக் காமிராக்கள்[தொகு]

1981ஆம் ஆண்டு சோனி மவிகா காந்தப்புலன் ஒளிக்காட்சி புகைப்படக் கருவி (மேக்னடிக் விடியோ காமிரா) ஒன்றிற்கு செய்முறை விளக்கம் செய்து காட்டினார். பின்னர் கையில் கொண்டு செல்லும்படியான படச்சுருள் காமிரா போன்ற கருவி என்ற பொருளில் கையில் கொள்ளும்படியான மின்னணு காமிராக்கள் உருவாகத் துவங்கின. பின்னாளில் மவிகாவின் பெயருடன் வரத்துவங்கிய சோனியின் காமிராக்களுடன் இதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. இது ஒரு அனலாக் காமிரா. இது ஒரு ஒளிநாடா இயந்திரம் செய்வதைப் போல பிக்சல் குறிகளை கூரியதான அளவுகளில் மாற்றாமலேயே தொடர்ந்து பதிவு செய்தது; தொலைக்காட்சி-போன்ற குறிகளை ஒரு 2 × 2 அங்குல விடியோ ஃபிளாப்பியில் பதிவு செய்தது.[7] சுருக்கமாகச் சொன்னால், இது ஒற்றை ஃபிரேம்களை, 50 சதம் ஃபீல்டு முறையிலும் 25 சதம் டிஸ்க் ஃபிரேம் முறையிலும் பதிவு செய்த ஒரு விடியோ படக் காமிராவாகும். இதன் படத்தரம் அப்போதிருந்த தொலைக்காட்சிகளில் காணப்பட்ட படத்தரத்திற்கு ஈடாக இருந்ததாகக் கருதப்பட்டது.

1986ஆம் ஆண்டு கேனான் ஆர்சி-701 வரும்வரை அனலாக் மின்னணு காமிராக்கள் சந்தைக்கு வந்ததாகத் தெரியவில்லை. 1984 சம்மர் ஒலிம்பிக்ஸ் நேரத்தில் கேனான் இதன் ஒரு மாதிரியை செய்முறை விளக்கம் செய்து காட்டியது.யோமியுரி ஷிம்புன் என்னும் ஒரு ஜப்பானிய செய்தித் தாளில் இதன் பிம்பங்களை அச்சிட்டுக் காட்டியது. யுனைடட் ஸ்டேட்ஸில் இந்த வகை காமிராக்களைப் பயன்படுத்தி முதன் முறையாக செய்தியறிக்கையில் படங்களை வெளியிட்ட பத்திரிகை யூஎஸ்ஏ டுடே. இது உலக கால்பந்து போட்டித் தொடரின்போது அவ்வாறு செய்தது. அனலாக் காமிராக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாமல் போனதற்கு பல காரணிகள் இருந்தன: அவை ($20,000க்கு மேற்பட்ட) அதன் விலை, படச் சுருளுடன் ஒப்பிடுகையில் பிம்பத்தின் மோசமான தரம் மற்றும் வாங்கும் வசதிக்கேற்ற முறையில் இதற்கான அச்சு இயந்திரங்கள் கிடைக்காது இருந்தது ஆகியவையாகும். இதில் புகைப்படங்களை எடுத்து அவற்றை அச்சிடுவதற்கு ஃபிரேம் கிரேபர் போன்ற ஒரு கருவியை வாங்குவது என்பது ஒரு சராசரி நுகர்வோரின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. பின்னாளில் இந்த "விடியோ ஃபிளாப்பியை" திரையில் காண்பதற்கு பல கருவிகள் கிடைக்கப் பெற்றன, ஆனால் அவை ஒரு முறைப்படுத்தப்பட்ட கணினிக் கருவியாக உருவாகவில்லை.

ஆரம்பத்தில் இதை செய்தி ஊடகத்தார் மட்டுமே பயன் படுத்தினர், காரணம் அதன் பயன், மற்றும் தொலைபேசிக் கம்பி வழியாக பிம்பங்களை அனுப்புகிற வசதி ஆகியவை இதன் விலையை ஈடுகட்டுவதாக இருந்தது. பிம்பத்தின் குறைவான தரத்தை, செய்தித்தாள் வரைவியலின் குறைவான ரெசொல்யூஷன் சரி செய்து விட்டது. செயற்கைக் கோள் இணைப்பு இல்லாமல் இப்படி பிம்பங்களை அனுப்பும் திறன், 1989ஆம் ஆண்டு டியானன்மென் ஸ்கொயர் எதிர்ப்பு மற்றும் 1991ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் அரபு போர் ஆகியவற்றின்போது மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

அமெரிக்க அரசாங்கத்தின் முகமைகளும் அசையாத விடியோ படங்கள் என்னும் கருத்தாக்கத்தில் ஈடுபாடு காட்டத் துவங்கின. குறிப்பாக, வானத்திலிருந்து நிலத்திற்கான நிஜ நேர கண்காணிப்பு அமைப்புக்காக அமெரிக்க கடற்படை இதை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நுகர்வோருக்காக சந்தையில் முதன் முதலில் விற்பனைக்கு வந்த அனலாக் காமிரா 1988ஆம் ஆண்டு வந்த கேனான் ஆர்சி-250 எக்ஸாப்ஷாட்டாக இருக்கலாம். இதே வருடத்தில் உருவாக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஒரு அனலாக் காமிரா நிகான்க்யூவி-1000சி பரணிடப்பட்டது 2010-12-30 at the வந்தவழி இயந்திரம். பொது மக்களின் பயன்பாட்டிற்காக அன்றி பத்திரிகையாளர்களுக்கான காமிராவாக உருவாக்கப்பட்ட இது ஒரு சில நூறுகள் மட்டுமே விற்பனையானது. இது பிம்பங்களை கிரேஸ்கேலில் பதிவு செய்தது. செய்தித் தாளில் இதை அச்சிட்டபோது படத்தின் தரம் படச்சுருள் காமிராக்களின் தரத்தை ஒத்திருந்தது. தோற்றத்தில் இது ஒரு நவீன டிஜிடல் சிங்கிள் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் காமிராவைப் போன்றிருந்தது. பிம்பங்கள் விடியோ ஃபிளாப்பி டிஸ்குகளில் சேமிக்கப்பட்டன.

உண்மையான டிஜிடல் காமிராக்களின் வருகை[தொகு]

1999 வருடத்திய டிஜிடல் காமிரா நிகான் டி1

பிம்பங்களை ஒரு கணினிக் கோப்பாக பதிவு செய்த நிஜமான முதல் டிஜிடல் காமிரா 1988ஆம் ஆண்டின் ஃப்யூஜி டிஎஸ்-1பியாக இருக்கலாம். இது அதன் உள்ளிருப்பாக இருந்த ஒரு 16 எம்பி நினைவகத்தில் இதைப் பதிவு செய்தது. இது தரவுகளை நினைவகத்தில் வைத்திருக்க ஒரு மின்கலத்தைப் பயன்படுத்தியது. இது அமெரிக்காவில் விற்கப்படவே இல்லை. மேலும் ஜப்பானில் கூட கப்பலில் அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

முதல் முறையாக வணிக ரீதியாக கிடைக்கப் பெற்ற டிஜிடல் காமிரா 1990ஆம் ஆண்டின் டைகாம் மாடல் 1; இது லாஜிடெக் ஃபோட்டோமேன் என்ற பெயரில் விற்பனையானது. இது ஒரு சிசிடி இமேஜ் சென்சார் பயன்படுத்தி, படங்களை டிஜிடல் முறையில் சேமித்து படங்கள் இறக்கிக் கொள்ளப்படும் விதத்தில் ஒரு கணினியில் நேரடியாக இணைக்கப்பட்டு இருந்தது.[8][9][10]

1991ஆம் ஆண்டு கோடக் கோடக் டிசிஎஸ்-100 ஐ சந்தைக்கு கொண்டு வந்தது. இதுவே ஒரு நீண்ட தொழில்முறை கோடக் டிசிஎஸ் எஸ்எல்ஆர் காமிராக்களின் வரிசையைத் துவங்கியதாக அமைந்தது. இவை, அநேகமாக நிகான்களின் படச்சுருள் கருவியமைப்பின் அடிப்படையில் இருந்தன. 1.3 மெகாபிக்சல் சென்சாரை உபயோகித்த இதன் விலை $13,000.

1988ஆம் ஆண்டு முதல் ஜேபிஈஜி மற்றும் எம்பிஈஜி ஆகியவை முறைப்படுத்தப்பட்டவுடன் டிஜிடல் படிவத்திற்கான மாற்றம் எளிதானது. இது பிம்பம் மற்றும் ஒளிக்காட்சிக் கோப்புகளை சேமிப்பதற்காக அவற்றை ஒடுக்குவதை அனுமதித்தது. பின்புறத்தில் லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்பிளே கொண்ட, நுகர்வோருக்கான முதல் டிஜிடல் காமிரா 1995ஆம் ஆண்டின் காசியோக்யூவி-10 ஆகும். காம்பேக்ட் ஃபிளாஷ் பயன்படுத்திய முதல் காமிரா 1996ஆம் ஆண்டின் கோடக் டிசி -25.

பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு குறைந்த (அனலாக் அல்லது டிஜிடல்) ரெசொல்யூஷன் கொண்டிருந்த காமிராக்களே நுகர்வோர் சந்தைக்கான காமிராக்களாக இருந்தன.

1997ஆம் ஆண்டு நுகர்வோருக்காக மெகாபிக்சல் கொண்ட முதல் காமிரா விற்பனைக்கு வந்தது. முதன் முறையாக விடியோ பத்திகளை பதிவு செய்யும் திறன் கொண்டிருந்த காமிரா 1995ஆம் ஆண்டின் ரிக்கோ ஆர்டிசி-1யாக இருக்கலாம்.

1999ஆம் ஆண்டு நிகான் டி1 அறிமுகமாவதைக் கண்டது. 2.74 மெகாபிக்சல் காமிராவான இதுதான் ஒரு பெரும் உற்பத்தியாளரால் தயாரிக்கப்பட்டது. முதல் டிஜிடல் எஸ்எல்ஆர்வான இதன் அறிமுக விலை $6,000. இது தொழில் முறை புகைப்படக்காரர்கள் மற்றும் உயர்-முனை நுகர்வோர்களின் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாக இருந்தது. இந்தக் காமிரா நிகான்-எஃப் மௌண்ட் விழி வில்லைகளையும் பயன்படுத்தியது. இதனால், புகைப்பட நிபுணர்கள் ஏற்கனவே தங்களிடம் இருந்த பலவிதமான விழி வில்லைகளையும் பயன்படுத்த முடிந்தது.

பிம்பப் பிரிதிறன் (இமேஜ் ரெசொல்யூஷன்)[தொகு]

ஒரு டிஜிடல் காமிராவில் ரெசொல்யூஷன்ன (பொதுவாக, ஒளியை குறிப்பான குறிகளாக மாற்றும் ஒரு சிசிடி அல்லது சிஎம்ஓஎஸ் சென்சார் சில்லு)அடிப்படைக்கு உட்பட்டதுதான். இந்த சென்சார் மில்லியன் "பக்கெட்"டுக்களால் ஆனது. இவை, சென்சாரில் மோதும் ஃபோட்டான்களின் எண்ணிக்கையை அளவிடுவதாகும்.

இதன் பொருள் என்னவென்றால், ஒரு சென்சாரின் குறிப்பிட்ட பகுதியில் பிம்பம் எத்தனை பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவு பிக்சல்களின் மதிப்பு அதிகம் என்பதாகும். ஒரு சென்சார் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பொறுத்து, ஒரு கலர் ஃபில்டர் அரே உபயோகிக்கப்படலாம். இதற்கு டீமொசைகிங் இண்டர்பொலேஷன் அல்கோரிதம் தேவைப்படும்.

இதன் விளைவாக பிம்பத்தின் மேல் உருவாகும் பிக்சல்கள்தாம் அதன் "பிக்சல் எண்ணிக்கை"யைத் தீர்மானிக்கின்றன.

உதாரணமாக, ஒரு 640x480 பிம்பத்தில், 307,200 பிக்சல்கள் அல்லது ஏறத்தாழ 307 கிலோ பிக்சல்கள் இருக்கும். ஒரு 3872x2592 பிம்பத்தில், 10,036,224 பிக்சல்கள் அல்லது ஏறத்தாழ 10 மெகா பிக்சல்கள் இருக்கும்.

பிக்சல்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு காமிராவின் ரெசொல்யூஷனைக் குறிப்பதாக பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், இது ஒரு தவறான கருத்து.

ஒரு சென்சாரின் ரெசொல்யூஷனைப் பாதிக்கும் காரணிகள் பல உள்ளன.

அவற்றுள் சில், சென்சாரின் அளவு, விழிவில்லையின் தரம் மற்றும் பிக்சல்கள் அமைக்கப்பட்டிருக்கும் முறைமை ஆகியவற்றை உள்ளடக்கும். உதாரணமாக, ஒரு பேயர் ஃபில்டர் இல்லாத ஒரு மானோக்ரோம் காமிரா, உதாரணமாகக் கொள்ளப்படக் கூடிய ஒரு வண்ன காமிராவை விடை அதிக அளவில் ரெசொல்யூஷன் கொண்டிருக்கும்

அளவுக்கு அதிகமாக பிக்சல்களைக் கொண்டிருப்பதாக பல டிஜிடல் காம்பேக்ட் காமிராக்களும் விமர்சிக்கப்படுகின்றன. சென்சார் மிகவும் சிறியதாக இருந்தால் அவற்றின் 'பக்கெட்'டுகள் எளிதில் நிரம்பி வழிந்து விடும்; மேலும், சென்சாரின் ரெசொல்யூஷன் காமிராவின் விழிவில்லையின் சக்திக்கு மேற்பட்டும் போய்விடலாம்.

ஆஸ்திரேலியாவால் கோடக் டிஜிடல் காமிராக்களுக்களின் பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விற்பனை விலை.

தொழில் நுட்பம் முன்னேறி விட்டதால், விலைகள் வெகுவாக இறங்கி விட்டன. ஒரு டிஜிடல் காமிராவின் விலையை மதிப்பிடும்போது "ஒரு டாலருக்கு பிக்சல்கள்" என்ற கணக்கின் அடிப்படையில் பார்த்தால், மூர்'ஸ் லாவின்படி சந்தைக்கு வருகின்ற ஒவ்வொரு புதிய டிஜிடல் காமிராவிலும் ஒரு டாலரால் பெறக் கூடிய பிக்சல்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகிறது. காமிராக்களின் விலையை இது போலக் கணிப்பது 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பிஎம்ஏ டிஐஎம்ஏ மாநாட்டில் பாரி ஹென்டியால் கூறப்பட்டது. இதன் பிறகு, இதற்கு ஹெண்டி'ஸ் லா[11] என்று பெயராகிவிட்டது.

மிகக் குறைவாக ஆஸ்பெக்ட் ரேஷியோக்களே பயன்படுத்தப்படுவதால் (முக்கியமாக 4:3 மற்றும் 3:2), உபயோகமுள்ள சென்சார்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவே உள்ளது.

மேலும், சென்சார் உற்பத்தியாளர்கள் சாத்தியமான எல்லா அளவுகளிலும் அதை உற்பத்தி செய்வதில்லை, ஆனால், அவற்றின் அளவுகளை உயர்த்துவதில் ஈடுபடுகிறார்கள்.

உதாரணமாக, 2007ஆம் ஆண்டு கேனான் பயன்படுத்திய (பிக்சல் எண்ணிக்கையின் அடிப்படையில்) மிகப் பெரும் சென்சார்கள் 21.1, 16.6, மற்றும் 12.8 மெகா பிக்சல் சிஎம்ஓஎஸ் சென்சார்கள் ஆகும்.

வணிக முறையில் டிஜிடல் காமிராக்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அகலம் உயரம் ஆஸ்பெக்ட் ரேஷியோ

உண்மையான பிக்சல் எண்ணிக்கை

மெகாபிக்சல்கள் காமிரா உதாரணங்கள்
320 240 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 76,800 0.01 ஸ்டீவன் சாசன் ப்ரோடோடைப்(1975)
640 480 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 307,200 0.3 ஆப்பிள் க்விக்டேக் 100 (1994)
832 608 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 505,856 0.5 கேனான் பவர்ஷாட் 600 (1996)
1.024 768 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 786,432 0.8 ஒலிம்பஸ் டி-300எல் (1996)
1.280 960 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 1,228,800 1.3 ஃப்யூஜி பிலிம் டி எஸ்-300 (1997)
1.280 1,024 5:4 1,310,720 1.3 ஃப்யூஜி பிலிம் எம் எக்ஸ் -700 / லெயிகா டிஜிலக்ஸ்(1998), ஃப்யூஜி பிலிம் எம் எக்ஸ்-1700 (1999) / லெயிகா டிஜிலக்ஸ் ஜூம் (2000)
1,600 1,200 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 1,920,000 2 நிகான் கூல்பிக்ஸ் 950
2,012 1.324 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 2,663,888 2.74 நிகான் டி1
2,048 1,536 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 3,145,728 3 கேனான் பவர்ஷாட் ஏ75, நிகான் கூல்பிக்ஸ் 995
2,272 1,704 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 3,871,488 4. ஒலிம்பஸ் ஸ்டைலஸ் 410, காண்டாக்ஸ் ஐ4ஆர் (உண்மையில் சிசிடி சதுரமாக இருந்தாலும் 2,272x2,272)
2,464 1,648 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 4,060,672 1.4% கேனான் ஐடி
2,640 1,760 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 4,646,400 × 3 4.7 × 3 (14.1 எம்பி) சிக்மா எஸ்டி14, சிக்மா டிபிஐ 1 (3 பிக்சல்களின் லேயர்கள், ஃபோவென் சென்சாரில் ஒரு லேயருக்கு 4.7 எம்பி, )
2,560 1,920 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 4,915,200 5 ஒலிம்பஸ் ஈ-1, சோனி ஸைபர்-ஷாட் டி எஸ் சி-எஃப்707
2,816 2,112 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 5,947,392 6 ஒலிம்பஸ் ஸ்டைலஸ் 600 டிஜிடல்
3,008 2,000 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 6,016,000 6 நிகான் டி40, டி50, டி70, டி70க்கள், பெண்டாக்ஸ் கே100டி
3,072 2,048 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 6,291,456 6.3% கேனான் 300டி, கேனான் 10டி
3,072 2,304 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 7,077,888 7 ஒலிம்பஸ் எஃப் ஈ -210, கேனான் பவர்ஷாட் ஏ620
3,456 2,304 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 7,962,624 8 கேனான் 350டி
3,264 2,448 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 7,990,272 8 ஒலிம்பஸ் ஈ -500, ஒலிம்பஸ் எஸ்பி-350, கேனான் பவர்ஷாட் ஏ720 ஐ எஸ்
3,504 2,336 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 8,185,344 8.2 கேனான் 30டி, கேனான் 1டி II, கேனான் 1டி II என்
3,520 2,344 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 8,250,880 8.25 கேனான் 20டி
3,648 2,736 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 9,980,928 10 ஒலிம்பஸ் ஈ -410, ஒலிம்பஸ் ஈ -510, பானாசோனிக் எஃப் இஜட் 50
3,872 2,592 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 10,036,224 10 நிகான் டி 40எக்ஸ், நிகான் டி60, நிகான் டி3000, நிகான் டி200, நிகான் டி80, பெண்டெக்ஸ் கே ஐ ஓடி, சோனி ஆல்ஃபா ஏ100
3,888 2,592 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 10,077,696 10.1 கேனான் 400டி, கேனான் 40டி
4,064 2,704 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 10,989,056 11 கேனான் ஐடிக்கள்
4,000 3,000 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 12,000,000 12 கேனான் பவர்ஷாட் ஜி9, ஃப்யூஜி பிலிம் ஃபைன்பிக்ஸ் எஃப்1 எஃப்டி
4,032 3,024 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 12,192,768 12.3 ஒலிம்பஸ் பென் ஈ -பி1
4,256 2,832 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 12,052,992 12.1 நிகான்டி3, நிகான்டி3எஸ், நிகானடி700
4,272 2,848 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 12,166,656 12.2 கேனான் 45டி
4,288 2,848 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 12,212,224 12.2 நிகான்டி2எக்ஸ்கள்/டி2எக்ஸ், நிகான்டி300, Nikon டி90, நிகான்டி5000
4,368 2,912 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 12,719,616 12.7 கேனான் 5டி
4,672 3,104 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 14,501,888 14.5 பெண்டாக்ஸ்கே20டி
4,992 3,328 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 16,613,376 16.6 கேனான் 1டிக்கள் II
5,270 3,516 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 18,529,320 18.5 லெயிகா எம்9
5,616 3,744 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 21,026,304 21.0 கேனான் ஐடிக்கள் III, கேனான் 5டி மார்க் II
6,048 4,032 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 24,385,536 24.4 சோனி α 850, சோனி α 900, நிகான்டி3எக்ஸ்
7,500 5,000 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ 37,500,000 37.5 லெயிகா எஸ்2
7,212 5,142 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 39,031,344 39.0 ஹாசெல்ப்ளாட் ஹெச் 3டிII-39
8,176 6,132 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 50,135,232 50.1 ஹாசெல்ப்ளாட் ஹெச் 3டிII-50
8,956 6,708 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 60,076,848 60.1 ஹாசெல்ப்ளாட் ஹெச் 4டி-60
8,984 6,732 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ 60,480,288 60.5 ஃபேஸ் ஒன் பி65+

பிம்பத்தை படம் பிடிக்கும் முறைகள்[தொகு]

ஒரு டிஜிடல் காமிராவின் இதயப் பகுதியில் சிசிடி இமேஜ் சென்சார் உள்ளது.
இந்த டிஜிடல் காமிராவின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. (வலது கீழாக உள்ள) விழி வில்லை அசெம்பிளி ஓரளவு பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் (கீழ்ப்புறம் இடது பக்கம் உள்ள) எல்சிடி திரையில் தெரிவதைப் போல (வலது மேற்புறம் உள்ள) சென்சார் இன்னும் பயன்படக்கூடிய வகையில் பிம்பத்தைப் பதிவு செய்கிறது.

முதன் முறையாக டிஜிடல் பின்புறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு பிம்பத்தைப் படம் பிடிக்க மூன்று வழிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. ஒவ்வொன்றும் அதன் சென்சார் வன்பொருள் அமைப்பு மற்றும் நிற வடிகட்டி (கலர் ஃபில்டர்)களின் அடிப்படையிலானவை.

இதில் முதலாவது சிங்கிள் ஷாட் எனப்படும் முறையாகும். இதில் காமிராவின் சென்சார் அந்தக் காமிராவின் ஒளி வில்லையின் வழியாகச் செல்லும் ஒளிக்கு எத்தனை தடவைகள் வெளிப்படுகிறது என்பதாகும். இத்தகைய சிங்கிள் ஷாட் கேப்சர் முறைகள் பேயர் ஃபில்டர் மொசைக் கொண்ட ஒரு சிசிடி அல்லது ஒரு பீம் ஸ்ப்ளிட்டரின் வழியே அதே பிம்பத்திற்கு வெளிப்படும் தனித்தனியான மூன்று இமேஜ் சென்சார்கள் கொண்டவையாகும். இவை முதன்மை சேர்க்கை நிறங்கள் (சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகியவை) ஒவ்வொன்றிற்கும் ஒன்று என அமைக்கப்பட்டவையாகும்.

இரண்டாவது முறை மல்டி ஷாட் எனப்படுகிறது, காரணம் இதில் சென்சாரானது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் விழிவில்லையின் அபெர்ச்சர் திறக்கையில் அதற்கு வெளிப்படுகிறது. மல்டி ஷாட் உத்தியை பிரயோக்கிக்கவும் பல முறைகள் இருக்கின்றன. இவற்றில் முதலில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது நிறச் சேர்க்கை தகவல்களைப் பெறுவதற்காக (மீண்டும் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகியவைதாம்) ஒரு ஒற்றை இமேஜ் சென்சார் முன்னால் மூன்று ஃபில்டர்களை ஒரு வரிசையில் அனுப்புவதாகும். மல்டி ஷாட் முறையின் மற்றொரு வகை ஒரு பேயர் ஃபில்டருடன் ஒரு சிசிடியை பயன்படுத்தியது. ஆனால், உண்மையில், இது குவிமையப் பரப்பில் சென்சார் சில்லுவின் இடத்தை மாற்றுவதாகத்தான் இருந்தது. இதனால், சிசிடி அனுமதிப்பதற்கும் அதிகமான அளவில் ரெசொல்யூஷனைப் பெற முடிந்தது. மூன்றாவது வகையில் சில்லுவில் பேயர் ஃபில்டர் அல்லாமல் முதல் இரண்டு வகைகளும் இணைக்கப்பட்டன.

இந்த மூன்றாவது முறைக்குப் பெயர் ஸ்கேனிங், காரணம், ஒரு மேஜைக் கணினியின் ஸ்கேனர் நகர்ந்து செல்வதைப் போல, இதன் குவிமையப் பரப்பில் சென்சார் நகர்ந்து செல்கிறது இவற்றின் லீனியர் அல்லது ட்ரை-லீனியர் சென்சார்கள் ஃபோட்டோசென்சார்களின் ஒரு ஒற்றை வரிசையையே பயன்படுத்தின; அல்லது மூன்று நிறங்களுக்கு மூன்று வரிசைகளைப் பயன்படுத்தின. சில முறைகளில், காமிரா முழுவதையுமே சுற்றுவதன் மூலம் ஸ்கேனிங் செய்யப்பட்டது; ஒரு டிஜிடல் ரொடேடிங் லைன் காமிராவில் மிகுந்த அளவில் மொத்த எண்ணிக்கையில் ரெசொல்யூஷன்கள் கிடைக்கப்பெறும்.

எடுக்கப்படும் படத்தின் தன்மையைப் பொறுத்தே எந்த முறையைக் கையாளுவது என்பது தெரிவு செய்யப்படுகிறது. சாதாரணமாக, நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளைப் படம் எடுக்கும்போது, சிங்கிள் ஷாட் முறை தவிர வேறு முறைகளைக் கடைப்பிடிப்பது உகந்ததாக இருக்காது. இருப்பினும், மல்டி ஷாட் முறை மற்றும் திரும்பவும் ஸ்கேனிங் செய்யும் வசதி ஆகியவற்றுடன் கிடைக்கப் பெறும் அதிகத் தரத்திலான நிறத் தொகுப்பு மற்றும் பெரும் கோப்பு வடிவங்கள் ஆகியவை அசையாத பொருட்கள் மற்றும் பெரிய வடிவிலான புகைப்படங்களை எடுக்கும் தொழில் முறை புகைப்பட நிபுணர்களை கவர்வதாக உள்ளன.

21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிங்கிள்-ஷாட் காமிராக்கள் மற்றும் கச்சா பிம்ப கோப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றத்தால் சிசிடி அடிப்படையிலான சிங்கிள் ஷாட் காமிராக்கள், உயர் முனை தொழில்முறை புகைப்படக் கலையிலும் மிகுந்த அளவில் மேம்பட்ட நிலை அடைந்தன. சிஎம்ஓஎஸ்-அடிப்படையிலான சிங்கிள் ஷாட் காமிராக்களைப் பயன்படுத்துவது சகஜமானதாக இருந்தது.

ஃபில்டர் மொசைக்ஸ், இண்டர்பொலேஷன் மற்றும் அலையசிங்[தொகு]

ஒரு இமேஜ் சென்சாரின் பிக்சல் அரேயில் உள்ள கலர் ஃபில்டர்களின் பேயர் அமைப்பு

முதன்மை நிறங்களின் மாதிரிகள் குறைவதனால் ஏற்படும் வேற்றுத் தன்மையைக் குறைப்பதற்காக, அநேக நுகர்வோர் டிஜிடல் காமிராக்களில், தற்போது பேயர் ஃபில்டர் மொசைக்குடன் ஒரு ஆப்டிகல் ஆன்டி-அலையசிங் ஃபில்டர் பயன்படுத்தப்படுகிறது.

ஆர்ஜிபி எனப்படும் சிவப்பு, பச்சை நீல நிறங்களின் ஒரு முழு வரிசையை உருவாக்குவதற்கான நிறத் தகவல்களை இடைச்செருகுவதற்கு ஒரு டிமொசைகிங் அல்கோரிதம் பயன்படுத்தப்படுகிறது.

3சிசிடி அணுகலில் பீம் ஸ்ப்ளிட்டர் சிங்கிள் ஷாட் பயன்படுத்தும் காமிராக்கள் அல்லது ஃபொவியோன் எக்ஸ்3 சென்சார் ஆகியவை ஆன்டி-அலயசைங் ஃபில்டர் களையோ அல்லது டிமைசைகிங்கையோ பயன்படுத்துவதில்லை.

காமிராவில் இருக்கும் கருவிப் பொருள் அல்லது மென் பொருள் அடோப் காமிரா ரா போன்ற ஒரு கச்சா மாற்று நிரலாகும். இது சென்சாரிலிருந்து கிடைக்கப் பெறும் கச்சாத் தரவை மேல் விளக்கம் செய்து ஒரு முழு வண்ணப் படம் பெற உதவுகிறது. ஏனெனில், ஆர்ஜிபி நிற மாதிரி காமிராவுக்கு, ஒவ்வொரு பிக்சலுக்கும் சிவப்பு பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களின் அழுத்தமான மதிப்பீடுகளும் தேவை. (மற்ற வண்ண மாதிரிகளுக்கும் அவற்றை உபயோகிக்கையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பீடுகள் ஒவ்வொரு பிக்சலுக்கும் தேவைப்படுகின்றன).

ஒரே ஒரு சென்சார் தனிமத்தால் ஒரே நேரத்தில் இந்த மூன்று நிற மதிப்பீடுகளையும் பதிவு செய்ய இயலாது, ஆகவே, ஒவ்வொரு பிக்சலுக்கும் தேவைக்கேற்றபடி நிறங்களை வடிகட்டுவதற்காக ஒரு கலர் ஃபில்டர் அரே (சிஎஃப்ஏ) பயன்படுத்தப்பட வேண்டியுள்ளது.

பேயர் ஃபில்டர் அமைப்பு 2×2 மெல்லிய வடிகட்டிகளின் மொசைக் அமைப்பையே மீண்டும் செய்வதாகும். இதில் பச்சை நிறம் எதிரெதிர் மூலைகளிலும், சிவப்பு மற்றும் நீலம் மற்ற இரண்டு இடங்களிலும் இருக்கும். பச்சை நிறம் அதிக அளவில் இருப்பதனால், மனிதர்களின் பார்வைத்திறன் அமைப்பு முறையை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இதில் பச்சை நிறமே பிரகாசத்தை அதிக அளவில் தீர்மானிப்பதாக உள்ளது. மேலும், இது வண்ணச்சாயல் அல்லது கரைசல் ஆகியவற்றை விடவும் பிரகாசத்திற்கு அதிக அளவு உணர்வைக் கொண்டுள்ளது. சில நேரங்களில் 4-நிற வடிகட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன, இதில் பச்சை நிறத்தின் இரண்டு வண்ணச்சாயல்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதில் நிறம் மேலும் துல்லியமாக அளிக்கப்படுகிறது. ஆனால், இதில் இடைச்செருகும் முறைமை சற்றே சிக்கலானது.

ஒரு பிக்சலில் பெறப்படாத நிறத் தீவிர மதிப்புகள், அதையடுத்து உள்ள, எண்ணிக்கையில் உட்படும் நிறத்தை கொண்டுள்ள பிக்சல்களின் மதிப்பிலிருந்து இடைச்செருகலாக (அல்லது ஊகமாக) பெறப்படலாம்.

இணைப்பு[தொகு]

புகைப்படங்களைப் பாதுகாத்தல்[தொகு]

பல டிஜிடல் காமிராக்களும் தரவுகளை இட மாற்றம் செய்வதற்கு ஒரு கணினியில் இணைக்கப்படும் திறன் கொண்டுள்ளன.

சில காமிராக்கள் ஃப்யர்வொயர் போர்ட் கொண்டிருந்தாலும், தற்போது மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுவது யூஎஸ்பி முறைமையாகும். (பல காமிராக்களில் யூஎஸ்பி மாஸ் ஸ்டோரேஜ் முறையிலும் பார்க்கவியலும்). சில காமிராக்கள் யூஎஸ்பி எம்எஸ்சிஇணைப்பிற்குப் பதிலாக யூஎஸ்பி பிடிபி யை பயன்படுத்துகின்றன; சிலவற்றில் இவை இரண்டுமே உள்ளன.

  • கோடக், ஈஸிஷேர் ஒன் போன்ற மற்ற காமிராக்கள் ப்ளூடூத் அல்லது ஐஈஈஈ 802.11, வைஃபை போன்ற கம்பியில்லா இணைப்பைப் பயன்படுத்துகின்றன.
  • பிம்பங்களை பகிர்ந்து கொள்வதற்கு காமிரா ஃபோன்கள், மற்றும் சிலவகையான உயர்-முனை தனிப்பட்ட டிஜிடல் காமிராக்களும் செல்லுலர் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துகின்றன.

இவற்றில், "படச் செய்தி அனுப்புதல்" என்று பொதுவாக அழைக்கப்படும் எம்எம்எஸ் மல்டி மீடியா சேவையே செல்லுலர் நெட்வொர்க்குகளில் மிக பொதுப்படையாக பயன்படுத்தப்படும் முறைமையாகும். இது 1.3 பில்லியன் மக்களால் பயன்படுத்தப் படுகிறது. செல்லுலர் நெட்வொர்க்குகளின் இரண்டாவது முறைமை ஒரு மின்னஞ்சலின் இணைப்பாக படத்தை அனுப்புவதாகும். காமிரா ஃபோன்களில் ஒரு மிகச் சிறிய சதவீதமே இது போல மின்னஞ்சலில் பயன்படுத்தப்பட ஆதரவு கொண்டுள்ளன. எனவே இது அவ்வளவு பொதுப்படையான வழக்கமாக இல்லை.

பொதுவான ஒரு மாற்று வழி கார்ட் ரீடர் பயன்படுத்துவதாகும். இது பல வகையான சேமிப்பு ஊடகங்களையும் படிக்கும் திறன் பெற்றது. மேலும், கணினிக்கு மிக விரைவாக தரவை மாற்றும் திறனும் உடையது. ஒரு கார்ட் ரீடர் பயன்படுத்துவதன் மூலம் படங்களை இறக்கும்போது காமிராவின் மின்கல சக்தி குறைவதும் தவிர்க்கப்படுகிறது, ஏனெனில் இந்த முறைமையில், கருவியானது தனக்குத் தேவையான சக்தியை யூஎஸ்பி போர்ட்டிலிருந்து பெறுகிறது. பல சேமிப்பு ஊடகங்களிலும் சேகரிக்கப்பட்ட படங்களை நேரடியாக அணுகுவதற்கு ஒரு வெளிப்புற கார்ட் ரீடர் அனுமதிக்கும். ஆனால், ஒரே ஒரு ஸ்டோரஜ் கார்ட் மட்டுமே பயனடுத்தப்படுமானால், அதை காமிரா மற்றும் ரீடர் ஆகியவற்றிற்கு இடையே மாற்றி மாற்றி நகர்த்துவது அசௌகரியத்தை விளைவிக்கலாம்.

புகைப்படங்களை அச்செடுத்தல்[தொகு]

பல நவீன காமிராக்கள் பிக்ட்ப்ரிட்ஜ் தரத்திற்கு ஆதரவாக உள்ளன. இதில் ஒரு கணினியின் தேவை இல்லாமலேயே, தரவை நேரடியாக பிக்ட்ப்ரிட்ஜைக் கையாளும் திறன் கொண்ட ஒரு கணினி அச்சுப் பொறிக்கு அனுப்ப முடிகிறது. கம்பியில்லாத் தொடர்பு முறையும் நாடா வடம் இன்றியே புகைப்படங்களை அச்செடுப்பதற்கு பயனாகிறது.

அச்சுப்பொறியுடன் ஒருங்கிணைந்த ஒரு டிஜிடல் காமிராவை, பொலராய்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புகைப்படத்தின் ஒரு சிறிய அச்சிட்ட பிரதி கிடைக்கப்பெறுகிறது. இது ஆரம்ப காலத்தில் போலராய்டால் 1975ஆம் ஆண்டு பிரபலமாக்கப்பட்ட இன்ஸ்டண்ட் காமிராவை நினைவுறுத்துவதாக உளளது[12]

புகைப்படங்களை காண்பித்தல்[தொகு]

பல டிஜிடல் காமிராக்களிலும் ஒரு விடியோ அவுட்புட் போர்ட் இருக்கும். பொதுவாக எஸ்விடியோ தரமுறைப்படுத்தப்பட்ட ஒரு ஒளிக்காட்சிக் குறியை தொலைக்காட்சிக்கு அனுப்பும், இதன் மூலம் பயனர் ஒரு நேரத்தில் ஒரு படத்தைக் காட்ட முடியும். காமிராவில் இருக்கும் பித்தான்கள் அல்லது நிரல்கள் எந்தப் புகைப்படம் என்று தெரிவு செய்யவும், ஒரு தெரிவிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லவும், அல்லது தானியங்கி முறையில் தொலைக்காட்சியில் ஒரு "படக் காட்சியை" அனுப்பவும் உதவுகின்றன.

ஹெச்டிஎம்ஐ, பல உயர்-முனை டிஜிடல் காமிரா உற்பத்தியாளர்களால் ஏற்கப்பட்டுள்ளது. இது படங்கள் அவற்றின் அதிக ரெசொல்யூஷனுடன் ஒரு ஹெச்டிடிவியில் காண்பிக்கப்படுவதை அனுமதிக்கிறது.

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மொபைல் கருவிகளிலிருந்து ஒளிக்காட்சிகளை டிஜிடல் முறையில் தொலைக் காட்சிக்கு அனுப்புவதற்கு சிலிகான் இமேஜ் ஒரு புதிய தொழில் நுட்பத்தை அறிவித்தது. எம்ஹெச்எல் என்னும் நுட்பம் 1080பி ரெசொல்யூஷன் வரையிலான படங்களை ஒரு ஒளிக் கற்றையாக அனுப்புகிறது. மேலும், அது ஹெச்டிஎம்ஐக்கு ஒத்து வருவதாகவும் உள்ளது.[13]

காமிராக்களில் பயன்படுத்தப்படும் நினவட்டைகளை சில டிவிடி பதிவுக் கருவிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளால் படிக்க முடியும்; இதற்கு மாற்றாக, பல ஃபிளாஷ் கார்ட் ரீடர்கள் டிவி வெளியீட்டிற்கான ஒப்புமையையும் கொண்டிருக்கின்றன.

முறைமைகள்[தொகு]

பல டிஜிடல் காமிராக்களும் வெவ்வேறு வகையான பயன்பாடுகளுக்கு வெவ்வேறு வகைகளில் முன்னரே அமைக்கப்பட்ட முறைமைகளைக் கொண்டுள்ளன. சரியான வெளிப்பாட்டிற்கான நிலைகளுக்குட்பட்டு, எக்ஸ்போஷர், அபெர்ச்சர் மற்றும் ஃபோகஸ் சிங், லைட் மீட்டரிங், ஒயிட் பேலன்ஸ் மற்றும் ஈக்விவலண்ட் சென்சிடிவிடி உள்ளிட்ட இந்த துணையலகுகளை மாற்றியமைக்கலாம். உதாரணமாக ஒரு போர்ட்ரெய்ட் படத்திற்காக பின்புலம் குவியமைப்பிற்கு வெளியே இருப்பதாக அமைத்துக் கொள்ளலாம். பிம்பத்தின் உட்கருத்துக்கு மாற்றாக ஒரு மனித முகத்தின் மீது குவியமைப்பது போல அமைத்துக் கொள்ளலாம்.

பிம்பத் தரவுகளை சேமித்தல்[தொகு]

டிஜிடல் புகைப்படங்களை சேமிக்கும் பல வழிகளில் ஒன்றான ஒரு காம்பேக்ட்ஃப்ளாஷ் (சிஎஃப்) கார்ட்

அநேக டிஜிடல் காமிராக்கள் பிம்பத் தரவுகளை சேமிப்பதற்கு பயன்படுத்துவது ஏதாவது ஒரு வகையில் அகற்றப்படக் கூடிய ஒரு சேமிப்பகம் ஆகும்.

பெரும்பான்மையான ஊடக வகைகள்,ஃபிளாஷ் மெமரி, காம்பேக்ட் ஃபிளாஷ், எஸ்டி போன்ற நினைவட்டைகளைப் பயன்படுத்துகின்றன. மிகவும் சிறிய ஹார்ட் டிஸ்க் டிரைவ்கள் சிடி சிங்கிள் (185 எம்பி) மற்றும் 3.5" ஃபிளாப்பி டிஸ்க் ஆகிய மைக்ரோடிரைவ் தொழில் நுட்பங்களும் சேமிப்பு வசதிக்காக கிடைக்கப் பெறுகின்றன.

அகற்றப்படக் கூடிய சேமிப்பு வகை தொழில் நுட்பங்களில் கீழ்க்காண்பவை அடங்கும்:

மற்ற வகை வடிவங்களில் இவை அடங்கும்:

  • ஆன்போர்ட் ஃபிளாஷ் மெமரி - விலை மலிவான மற்றும் கருவியின் பயன்பாட்டிற்கு இடைநிலையிலுள்ள (காமிரா ஃபோன் போன்ற)காமிராக்கள்
  • பிசி கார்ட் ஹார்ட் டிரைவ் - ஆரமப் காலத்திய தொழில்முறை காமிராக்கள் (தற்போது நிறுத்தப்பட்டு விட்டன)
  • தெர்மல் ப்ரிண்டர் - பிம்பங்களை சேமிக்காது உடனுக்குடன் அச்செடுக்கும் ஒரே ஒரு மாடல் காமிராவில் இருந்தது.

பெரும்பான்மையான டிஜிடல் காமிரா உற்பத்தியாளர்கள், லினக்ஸ் அல்லது வேறு இலவச மென்பொருட்களுடன் இணந்து வேலை செய்யும் இயக்க நிரல் (டிரைவர்) மற்றும் வேறு இலவச மென்பொருள்ஆகியவற்றை காமிராவுடன் அளிப்பதில்லை. இருப்பினும் பல காமிராக்கள் முறைப்டுத்தப்பட்ட யூஎஸ்பி ஸ்டோரேஜ் நெறிமுறையையே பயன்படுத்துகின்றன. இதனால் அவற்றை உபயோகிப்பது எளிதாகிறது. ஜிஃபோட்டோ திட்ட முறைமையின் ஆதரவை மற்ற காமிராக்கள் கொண்டுள்ளன.

வடிவங்கள்[தொகு]

பிம்பத்தரவை சேமித்து வைப்பதற்கு மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வடிவம் தி ஜாயிண்ட் ஃபோட்டோகிராஃபி எக்ஸ்பர்ட்ஸ் க்ரூப் ஸ்டாண்டார்ட் (ஜேபிஈஜி)யாகும். மற்ற கோப்பு வடிவங்களில் டேக்டு இமேஜ் ஃபைல் ஃபார்மட் (டிஃப்) மற்றும் வேறு பல ரா இமேஜ் ஃபார்மட்டுகள் அடங்கும்.

பல காமிராக்கள், குறிப்பாக தொழில்முறை அல்லது டிஎஸ்எல்ஆர் காமிராக்கள், ரா இமேஜ் ஃஃபார்மட் முறைக்கு ஆதரவாக உள்ளன ரா இமேஜ் (கச்சா பிம்பம்) என்பது காமிராவின் சென்சாரிலிருந்து நேரடியாக வெளிவரும் பண்படுத்தப்படாத பிக்சல் தரவுகளின் வரிசையாகும். இவை அந்தந்த உற்பத்தியாளருக்கு உரிமம் உள்ள வடிவங்களில் சேமிக்கப்படுகின்றன, உதாரணமாக நிகானுக்கு என்ஈஎஃப், கேனானுக்கு சிஆர்டபிள்யூ அல்லது சிஆர்2 மற்றும் மினோல்டாவுக்கு எம்ஆர்டபிள்யூ போன்றவை. அடோப் சிஸ்டம்ஸ் டிஎன்ஜி என்னும் வடிவத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆதாய உரிமை தேவைப்படாத இலவச கச்சா பிம்ப வடிவம் குறைந்த பட்சம் 10 காமிரா உற்பத்தியாளர்களால் ஏற்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலங்களில் கச்சா கோப்புக்கள் விசேஷமான படத் தொகுப்பு நிரல்களில்தான் பண்படுத்தப்பட வேண்டியிருந்தன. ஆனால், காலப் போக்கில், கூகிளின் பிகாசா போன்ற அதிக அளவில் பயன்படுத்தப்படும் பல நிரல்களில் கச்சா பிம்பங்களுக்கான ஆதரவு நிலை கிடைக்கப்பெற்று விட்டது. கச்சா வடிவத்தில் உள்ள பிம்பங்களைத் தொகுப்பதனால், வெள்ளை நிறச் சமன்பாடு, வெளிப்பாட்டின் இழப்பீடு, நிற வெப்பம் ஆகிய பல்வேறு அமைப்புகளிலும் நெகிழ்வுத் தன்மையைப் பெற முடிகிறது. சுருக்கமாகச் சொன்னால், பிம்பத்தின் தரம் கெடாத வகையில் பெரும் அளவு மாற்றஙகளைச் செய்வதற்கு கச்சா வடிவம் உதவுகிறது; இல்லாவிடில், படத்தை மீண்டும் எடுக்கும்படி கூட நேரலாம்.

திரைப்படங்களுக்கான வடிவங்கள் ஏவிஐ, டிவி, எம்பிஈஜி,(அதிகமாக அசையும் ஜேபிஈஜியை கொண்டுள்ள) எம்ஓவி, டபிள்யூஎம்வி மற்றும் (அடிப்படையில் டபிள்யூஎம்வியைப் போன்றதேயான) ஏஎஸ்எஃப் ஆகியவையாகும். அண்மைக் காலத்திய வடிவங்களில் எம்பி4 அடங்கும். இது க்விக்டைம் ஃபார்மட் அடிப்படையிலானது. இது புதிதான ஒடுக்கும் அல்கோரிதம்களைப் பயன்படுத்தி அதே அளவுப் பதிவிடத்தில் அதிக நேரப் பதிவை அனுமதிக்கிறது.

படங்களில் அன்றி, காமிராக்களில் பயன்படுத்தப்படும் மற்ற வடிவங்கள் டிசைன் ரூல் ஃபார் காமிரா ஃபார்மட் (டிசிஎஃப்) இது காமிராவின் உள்கோப்பு அமைப்பு மற்றும் பெயரிடுதல் மற்றும் டிஜிடல் ப்ரிண்ட் ஆர்டர் ஃபார்மட் (டிபிஓஎஃப்) ஆகியவற்றிற்கான ஒரு ஐஎஸ்ஓ வரியறையாகும். பிம்பங்கள் எந்த வரிசையில் மற்றும் எத்தனை பிரதிகள் எடுக்கப்படவேண்டும் என்பதை இதுவே தீர்மானம் செய்கிறது.

பெரும்பான்மையான காமிராக்களில் எக்சிஃப் தரவு உள்ளது. இது படத்தைப் பற்றிய மெட்டா டேட்டாவை அளிக்கிறது. எக்சிஃப் தரவுகளில், அபெர்சர், எக்ஸ்போஷர் டைம், ஃபோகல் லெங்க்த், எடுக்கப்பட்ட தேதி மற்றும் நேரம், மற்றும் இடம் ஆகியவை அடங்கும்.

மின் கலன்கள்[தொகு]

டிஜிடல் காமிராக்களுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. காலப்போக்கில் அவை அளவிலும் சிறுத்துவிட்டன. இதனால், அவற்றுள் நுழைக்கும் அளவு சிறிதான ஆனால், ஓரளவு ஒப்புக் கொள்ளப்படக் கூடிய கால அளவு நீடிக்கும் மின்கலம் (பாட்டரி) தயாரிப்பதும் அவசியமாகி விட்டது.

டிஜிடல் காமிராக்களில் பயன்படும் மின் கலங்களில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன.

உடனடி உபயோகம்[தொகு]

இதில் முதல் வகை உடனடி உபயோகத்திற்காக ஏற்கப்பட்டுள்ள மின் கலன்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற அமைப்பை டிஜிடல் காமிராக்கள் கொண்டுள்ளன. இவற்றில் ஏஏ,சிஆர்2 அலலது சிஆர்-வி3 ஆகியவற்றைக் குறிப்பிடலாம். விரல் விட்டு எண்ணக்கூடிய வகை காமிராக்களில் ஏஏஏ மின்கலன்கள் வகையைக் கொண்டுள்ளன. சிஆர்2 மற்றும் சிஆர்-வி3 மின் கலன்கள் லிதியம் அடிப்படையிலானவை. இவை ஒரே ஒரு முறை உபயோகத்திற்கானவை. இவை காம்கார்டர்களிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. ஏஏ மின் கலன்களே மிகவும் பொதுவாகக் காணப்படுபவையாகும்; இருப்பினும் தாழ்-முனை காமிராக்களுக்கு அளிக்கப்படும் சக்தியேற்றப்படாத ஆல்கலைன் மின்கலன்களும், பல காமிராக்களுக்கும் குறைந்த கால அளவிற்கு தேவைப்படும் அளவு சக்தியளிக்கும் திறன் கொண்டுள்ளன. எப்போதாவது மட்டுமே பயன்படுத்தப்படும் காமிராக்களில் அவை திருப்திகரமாக பயன்படக் கூடும்.

மாறாக, மேலும் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஏஏ நிக்கல் மெட்டல் ஹைட்ரைட் மின் கலன்கள் (என்ஐஎம்ஹெச்) பயன்படுத்துவது தேவைப்படலாம். இவை தேவையான அளவு சக்தியை அளிக்க வல்லவை. மேலும், இவற்றை மறு மின்னூட்டத்திற்கும் உட்படுத்தலாம். என்ஐஎம்ஹெச் மின் கலன்கள் லிதியம் அயோன் மின் கலன்கள்[சான்று தேவை] போன்ற அளவு சக்தியை அளிப்பதில்லை. மேலும், அவை உபயோகத்தில் இல்லாதபோது சக்தியை வெளியேற்றி விடுகின்றன.

இவை எவ்வளவு காலம் பயன்பாட்டில் இருக்கக்கூடும் என்பதை முடிவு செய்யும் பல்வேறு ஆம்பெரெ-ஹவர் (ஏஹெச்) அல்லது மில்லி -ஆம்பெரெ-ஹவர் (எம்ஏஹெச்)மதிப்பீடுகளில் கிடைக்கின்றன. பொதுவான இடைப்பட்ட நிலை நுகர்வோர் மாதிரிகள் மற்றும் சில தாழ்-முனை காமிராக்கள் உடனடி உபயோகத்திற்கான மின் கலன்களையே பயன்படுத்துகின்றன; மிகக் குறைவான டிஎஸ்எல்ஆர்களே (உதாரணமாக சிக்மா எஸ்டி10) இவற்றை ஏற்கின்றன. மறு மின்னூட்டத்திற்கு உட்படுத்தப்பட முடியாத சிஆர்-வி3 மின் கலன்களுக்கு மாற்றாக மறு மின்னூட்டத்திற்கு உட்படுத்தப்படக் கூடிய ஆர்சிஆர்-வி3 லிதியம்-அயோன் மின் கலன்களும் கிடைக்கப் பெறுகின்றன.

தனியுரிமம்[தொகு]

டிஜிடல் காமிராக்களின் இரண்டாம் வகை மின் கலன்கள் மின்கல வடிவ உரிமமாகும். இவை உற்பத்தி செய்பவரின் வரையறைகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு, பிற்பாடு சந்தையில் கிடைக்கப்பெறும் மாற்று பாகங்களாகவோ அல்லது ஓயிஎம் களாகவோ கிடைக்கின்றன. அநேகமாக, உரிமம் கொண்டுள்ள அனைத்து மின்கலன்களும் லிதியம் அயோன்கள்தாம். பாட்டரிகளின் வாழ்நாள் குறைந்து முடிவதற்கு முன்பாக இவை ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் (உதாரணமாக 500 சுழற்சிகள் வரை) மறு மின்னூட்டங்களை ஏற்றுக் கொள்ளும். தம்முடைய அளவிற்கு பொருத்தமான வகையில் இவை செயலாற்றும். இதன் விளைவாக மிகவும் உயர் முனையான தொழில் முறை காமிராக்கள் மற்றும் சாதாரண பயனீட்டாளர் உபயோகிக்கும் மாதிரிகள் ஆகிய இரண்டுமே லிதியம் அயோன் பாட்டரிகளையே பயன்படுத்துகின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. "Nikon Says It's Leaving Film-Camera Business". Washington Post. 2006-01-12. பார்க்கப்பட்ட நாள் 2007-02-23.
  2. யூஜின் எஃப்.லாலி, "மொசைக் கைடன்ஸ் ஃபார் இண்டர்பிளேனடரி ட்ராவல்," ஸ்பேஸ் ஃப்ளைட் ரிபொர்ட் டு தி நேஷன், பிபி. 2249–61, அமெரிகன் ராக்கெட் சொசைடி, நியூ யார்க், அக்டோபர் 9–15, 1961.
  3. US 3540011 
  4. US 4057830  மற்றும் US 4163256  1972ஆம் ஆண்டில் கோரப்பட்டாலும் 1976 மற்றும் 1977ஆம் ஆண்டில்தான் அளிக்கப்பட்டன. "1970s". பார்க்கப்பட்ட நாள் 2008-06-15.
  5. "Digital Photography Milestones from Kodak". Women in Photography International. பார்க்கப்பட்ட நாள் 2007-09-17.
  6. Michael R. Peres (2007). The Focal Encyclopedia of Photography (4th ed. ). Focal Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0240807405. http://books.google.com/books?id=VYyldcYfq3MC&pg=RA1-PA16&dq=sasson+ccd+fairchild&ei=sDAFR-7YA46ApwLuvYijDQ&ie=ISO-8859-1&sig=FHJgLcIA9OrCgLxeJGpanGnMs8o. 
  7. Kenji Toyoda (2006). "Digital Still Cameras at a Glance". in Junichi Nakamura. Image sensors and signal processing for digital still cameras. CRC Press. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780849335457. http://books.google.com/books?id=UY6QzgzgieYC&pg=PA5&dq=sony+mavica+analog&lr=&as_brr=3&ei=WhxiSpvkG4nokATQg7iiDg. 
  8. "1990". DigiCam History Dot Com. பார்க்கப்பட்ட நாள் 2007-09-17.
  9. "Dycam Model 1: The world's first consumer digital still camera". DigiBarn computer museum.
  10. கரோலின் கூறினார்,, "டிகாம் மாடல் 1: கையோடு கொண்டு செல்லக் கூடிய முதல் டிஜிடல் ஸ்டில் காமிரா", மாக்வீக் , vol. 4, எண். 35, அக்டோபர் 16, 1990, ப. 34.
  11. Bogdan Solca (2007-01-08). "More on digital cameras". Softpedia. Archived from the original on 2009-05-19. பார்க்கப்பட்ட நாள் 2009-12-22.
  12. "Reinventing Instant Photography for the Digital Age". Polaroid. January 8, 2009 இம் மூலத்தில் இருந்து 2009-01-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20090121175859/http://thenewinstant.com/news-updates/Polaroid%20Introduces%20the%20Polaroid%20PoGo%E2%84%A2%20Instant%20Digital%20Camera/. பார்த்த நாள்: 2009-01-15. 
  13. "Mobile High-Definition Link Technology Gives Consumers the Ability to Link Mobile Devices to HDTVs with Support for Audio and Video". Silicon Image. January 7, 2008. http://www.siliconimage.com/news/releasedetails.aspx?id=480. பார்த்த நாள்: 2009-01-15. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Digital cameras
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமப்_படமி&oldid=3792261" இலிருந்து மீள்விக்கப்பட்டது