பேச்சு:இருமப் படமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்முறை என்ற சொல் digital என்பதை குறிக்கின்றது . ஆனால் இந்த digit என்பதற்கு எண்தானம் என்ற சொல் வழக்கில் இருந்திருக்கிறது என்று நான் நினைகிறேன் . பார்க்க தானம் ( கணிதம் ) . இந்த தலைப்பு நீளமானதாக உள்ளது digicam என்பதற்கு இணையாக ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்று பரிந்துரைகிறேன் . - இராஜ்குமார் 12:22 ( ரியாத்) சனவரி 3 2009 .

light signal is converted into digits. this is called as digitalized light signal . இதனை எண்ணொளி என்று சொல்லலாம் . camera என்ற சொல்லுக்கு நிழற்பொறி என்றும் device என்பதற்கு பொறி என்றும் சேர்த்து பார்த்தால் , எண்ணொளி பொறி , எண்ணொளி நிழற்ப் பொறி , ஒளி எண் பொறி , எண்ணியல் ஒளிப்பொறி என்று சொல்லலாம் . - இராஜ்குமார் 13:10 ( ரியாத்) சனவரி 3 2009 .

இருதானம்[தொகு]

in electronics , digits are 0 & 1 only . இரண்டு வடிவத்தை கொண்டுள்ளதால் , இதனை இருதானம் என்றும் சொல்லலாம் . இருதானம் என்பது digital என்ற சொல்லுக்கு சரியான பொருத்தாமாக அமையும் . ஆகா இருதான ஒளிப்பொறி என்பது சரியாக இருக்கும் என்று நான் நினைகிறேன் . பரிந்துரை தொடரும் . - இராஜ்குமார் 13:30 ( ரியாத்) சனவரி 3 2009 .

ஒளி பதிவு , பிடிப்பு என்பதற்கு பதிலாக வாங்குதல் என்று சொன்னால் என்ன ! . இருதான ஒளிவாங்கி என்று சொல்லலாமே ! - இராஜ்குமார் 13:30 ( ரியாத்) சனவரி 3 2009 .

camera ( device ) - ஒளிவாங்கி

digital camera - இருதான ஒளிவாங்கி , எண்தான ஒளிவாங்கி

camera ( process ) - ஒளிப்பதிவு

- இராஜ்குமார் 13:30 ( ரியாத்) சனவரி 3 2009 .

கருத்து[தொகு]

இருதான என்பதும் ஒளிவாங்கி என்பதும் பொருத்தமாக இல்லை. டி'சி'ட்டல் என்பதற்கு எண்ணிம என்று கூறலாம் (இது ஓரளவுக்கு வழக்கிலும் உள்ளது - நூலகத்திட்டத்தில் பயன்படுத்துகிறார்கள்).ஒளிவாங்கி என்பது நல்லசொல்தான் எனினும் மிகவும் பொதுவாக உள்ளது. ஒளிப்படம் என்பது photograph ஆகவே, ஒளிப்படக் கருவி என்று கூறுவது பொருந்தும். சற்று நீளமாக உள்ளது. காமிரா என்பது வெறும் பெட்டி என்னும் பொருளுடையதுதான். ஒளிப்படம் பிடிக்க உதவுவதால், படமி எனலாம், ஆனால் படம் என்பது வினை அல்ல. படிவி எனலாம் (ஒளிப்படத்தைப் படிவிக்கும் கருவி). அல்லது அருவி, கருவி, மனைவி, என்பது போல படமி என்றே கூறலாம் என்றும் தோன்றுகின்றது. பொருளில் பட்டுச் சிதறி (எதிர்ந்து) வரும் ஒளியைக் குவித்து ஒளிப்படம் உருவாக்குவதால் குவிப்பி, குவிசி என்றும் சொல்லலாம். இருதான என்பதை இரணி என்றே சொல்லலாம். இரணை என்னும் சொல் இரட்டை என்னும் பொருள் தருவது. இரணைய என்றும் சொல்லலாம்.இரணிய என்றால் binary என்னும் பொருள் தரும். எனவே 1) எண்ணிம ஒளிப்படக் கருவி 2) எண்ணிமப் படமி, 3) எண்ணிமக் குவிசி, 4) இரணையப் படமி எனலாம்.--செல்வா 05:33, 21 ஜூன் 2010 (UTC)

இருதான என்பதற்கு மாறாக இரும என்றும் கூறலாம்.--செல்வா 05:24, 22 ஜூன் 2010 (UTC)
எண்ணிமப் படமி அல்லது இருமப் படமி நன்று. -- சுந்தர் \பேச்சு 06:10, 22 ஜூன் 2010 (UTC)
இருமப் படமி நான் இப்பரிந்துரையை ஏற்கிறேன். --இராச்குமார் (பேச்சு) 13:27, 7 சூலை 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இருமப்_படமி&oldid=1165277" இருந்து மீள்விக்கப்பட்டது