ஆர். எஸ். சிவாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். எஸ். சிவாஜி
பிறப்பு(1956-10-26)26 அக்டோபர் 1956
சென்னை, சென்னை மாநிலம், இந்தியா
இறப்பு2 செப்டம்பர் 2023(2023-09-02) (அகவை 66)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், இணைத்தயாரிப்பாளர், ஒலிப்பதிவாளர்
பெற்றோர்எம். ஆர். சந்தானம், இராஜலட்சுமி

ஆர். எஸ். சிவாஜி (26 அக்டோபர் 1956 – 2 செப்டம்பர் 2023)[1]) என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். குறிப்பாக இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களில் இவர் மிகுதியாக நடித்துள்ளார். இவர் உதவி இயக்குநராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும், லைன் புரொடியூசராகவும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[2][3][4]

தொழில்[தொகு]

எல்லிஸ் ஆர். டங்கனின் மீரா (1945) உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய நடிகரும் தயாரிப்பாளருமான எம். ஆர். சந்தானத்தின் மகன்தான் ஆர். எஸ். சிவாஜி. இவரது சகோதரரான சந்தான பாரதியும் பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநரும் ஆவார், இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றிவருகிறார்.[5]

சிவாஜி முதன்மையாக நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 1980 கள் மற்றும் 1990 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்தார். இவர் சார்! நீங்க எங்கயோ போயிட்டீங்க என்று அபூர்வ சகோதரர்கள் (1989) படத்தில் ஜனகராஜை பார்த்துப் பேசிய வசனம் புகழ்பெற்றது. பின்னர் பல தமிழ்த் திரைப்படங்களில் இந்த வசனத்தைக் கொண்டு கேலிசெய்யப்பட்டு வருகிறது.[6] இவர் முறையே நயன்தாராவின் தந்தையாக கோலமாவு கோகிலா படத்திலும், விவேக்கின் உதவியாளராக தாராள பிரபு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.[7][8]

குறிப்பிடத்தக்க திரைப்படவியல்[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

  • குலவிளக்கு
  • எத்தனை கோணம் எத்தனை பார்வை
  • அன்புள்ள சினேகிதியே
  • மருதாணி

வலைத் தொடர்[தொகு]

ஆண்டு நிரல் பெயர் பாத்திரம் வலைப்பின்னல் குறிப்புகள்
2020 டைம் என்ன பாஸ் ரூம் ஜஹாம் அமேசான் பிரைம் [9]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எஸ்._சிவாஜி&oldid=3786278" இருந்து மீள்விக்கப்பட்டது