மீண்டும் ஒரு காதல் கதை (1985 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீண்டும் ஒரு காதல் கதை
இயக்கம்பிரதாப் போத்தன்
தயாரிப்புராதிகா
கதைபிரதாப் கே போத்தன்
சோமசுந்தரேவர்
இசைஇளையராஜா
நடிப்புபிரதாப் கே போத்தன்
ராதிகா
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புபி. லெனின்
கலையகம்ஆர்டிஸ்ட் கார்பரேஷன்
வெளியீடு15 பெப்ரவரி 1985 (1985-02-15)[1]
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மீண்டும் ஒரு காதல் கதை 1985 (Meendum Oru Kathal Kathai) நடிகை ராதிகாவால் தயாரிக்கப்பட்டு அறிமுக இயக்குனரான பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு காதல் திரைப்படமாகும். இப்படத்தில் இருவருமே முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர். இப்படம் மனநிலை சரியில்லாத இருவரின் உறவைப் பற்றியதாகும். இப்படத்தின் திரைக்கதை பிரதாப் கே போத்தன் மற்றும் சோமசுந்தரேசுவரர் ஆகிய இருவருமே இணைந்து எழுதப்பட்டதாகும். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இளையராஜாவால் இசைக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை பி. சி. ஸ்ரீராம் மேற்கொண்டுள்ளார். பி. லெனின் படத்தொகுப்பைக் கவனித்துக் கொண்டார். 1985 பெப்ரவரி 15 இல் வெளிவந்த இத்திரைப்படம் 32வது தேசியத் திரைப்பட விழாவில் அறிமுக இயக்குநருக்கான விருதினை பெற்றது.

கதைச் சுருக்கம்[தொகு]

வியாபாரத்தில் தீவிர ஈடுபாட்டிலுள்ள பத்ரிநாத் (தட்சிணாமூர்த்தி) என்ற பெரிய பணக்காரரின் மகள் சரசு (ராதிகா). இவள் ஒரு மனநிலை சரியில்லாதவள். சரசுவை வீட்டில் வைத்துக் கொள்ள பத்ரிநாத்தால் இயலவில்லை. எனவே சாருஹாசன் நடத்தி வரும் ஒரு கிருத்துவ காப்பகத்தில் ஜூஜூ தாத்தாவின் (ரான்னி பட்டேல்) பாதுகாப்பில் விட்டு விட்டு செல்கிறார். சரசு அங்கே அனாதையான கணபதி என்கிற குப்பியை (பிரதாப் கே.போத்தனை) சந்திக்கிறாள். இருவரும் ஒருவருக்கொருவர் பிரிக்க முடியாத வண்ணம் அன்பாய் இருந்தனர். சில நாட்களுக்கு பிறகு தனது மகனின் திருமணத்திற்காக சரசுவை அழைத்துச் செல்ல பத்ரிநாத் தனது மனைவியுடன் காப்பகம் வருகிறார். சரசு வெகுளித்தனத்துடன் குப்பியையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறாள். குப்பி சாருஹாசனின் வற்புறுத்தலுக்கிணங்க மிகுந்த தயக்கத்துடன் அவளுடன் செல்கிறான்.

திருமணத்தில் குப்பியும் சரசுவும் மணமக்களைப் போலவே வலம் வந்து அவர்களுக்கிடையே ஏதோ உறவிருப்பதை வெளிப்படுத்துகின்றனர். சரசு குப்பியை தனக்கு திருமணம் செய்துவைக்க தனது பெற்றோரிடம் வலியுறுத்துகிறாள். எதிர்பாரா திருப்பமாக பத்ரிநாத்தின் உறவினர்கள் திருமணத்தை நடத்திட ஆலோசனைத் தருகின்றனர். அவரும் இதையேற்று இருவரின் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

குப்பியையும் சரசுவையும் கோரகொண்டா என்ற மலைப்பாங்கான கிராமத்திற்கு ஜூஜூ தாத்தாவின் பாதுகாப்பில் அனுப்பி வைக்கிறார். கோரகொண்டா வித்தியாசமான மக்கள் வசித்து வரும் ஒரு அசாதாரண கிராமமாகும். அங்கே நைலக்ஸ் நளினி என்பவர் கிராமத் தலைவன் மற்றும் சிலருடன் சேர்ந்து சில சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒருநாள் இருவரும் காடுகளினிடையே சென்றுகொண்டிருக்கும் போது அங்கே வந்த கிராமத் தலைவன் அவர்களைத் துன்புறுத்துகிறான். நடந்த கைகலப்பில் குப்பி அவன் தலையில் ஒரு பாறாங்கல்லை வீசி கொன்றுவிடுகிறான். குப்பிக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. குப்பியிடமிருந்து பிரிக்கப்பட்ட சரசு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். மருத்துவமனையில் குப்பி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். சிறையிலிருந்த குப்பி சிறப்பு அனுமதியுடன் அவளை மருத்துவமனையில் சந்திக்கிறான். அவர்கள் தங்களின் கடந்த கால மகிழ்ச்சியான தருணங்களை எண்ணி மகிழ்கின்றனர். பிரசவத்திற்குப் பிறகு சரசு இறந்து விடுகிறாள். குப்பியால் அவளது மரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளுக்கு உயிர் கொடுக்க எவ்வளவோ முயற்சிக்கிறான். அதில் அவன் தோல்வியடைகின்றான். புதிதாக பிறந்த குழந்தையை பறித்துக்கொண்ட குப்பி அனைவரையும் பயமுறுத்துகிறான். ஆனால் சிலரால் தடுக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறான். சரசு இறந்த பின் குப்பி ஒருபோதும் யாரிடமும் வாய் பேசாமல் சிரித்துக்கொண்டே இருக்கின்றான். சில ஆண்டுகள் கழித்து சிறையில் குப்பி இறந்துபோகின்றான்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

யார் பைத்தியம் ? எல்லாம் அளவில்தான், இருவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைத்தால் அவர்களுக்கிடையே என்ன கண்டெடுப்பார்கள். உடல்களின் சங்கமத்தை அறிந்திராத நிலையில், ஆதாமும் ஏவாலும் தங்கள் காதலைக் கண்டெடுத்ததைப் போலவே இவர்களும் செய்வார்களா ?.

— பிரதாப் போத்தன்[3]

"மீண்டும் ஒரு காதல் கதை" அறிமுக இயக்குநரான பிரதாப் கே போத்தன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்..[4] அவர் " இக்கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் நானே நடித்தேன்" என்றார். தெலுங்கு படங்களில் எதிர்மறையான பாத்திரங்களை திரைப்படமாக்க நிதியை திரட்டினார்.[5] இத்திரைக்கதை சோமாசுந்தரேசுவரால் எழுதப்பட்டது. பன்னீர் புஷ்பங்கள் (1981) படபிடிப்பின் போது, அவரது திரைக்கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை இயக்கப்போவதாக போத்தன் அவருக்கு உறுதியளித்தார்.[6] இப்படத்தின் ஒளிப்பதிவை பி. சி. ஸ்ரீராம் கவனித்துக்கொண்டார்.[7] இத்திரைப்படம் ஓராண்டில் படமாக்கப்பட்டது.[5] படத்தின் தயாரிப்பின் போது, போத்தன் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர், ஆயினும் அவர்கள் திருமணம் 1986 இல் விவாகரத்தில் முடிந்தது.[8]

ஒலிப்பதிவு[தொகு]

இப்படத்தின் பாடல்களை கங்கை அமரன் எழுத இளையராஜா இசையமைத்தார்.[9]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அதிகாலை நேரமே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:01
2. "ஆத்தாடி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:12
3. "அழகான இந்த"  கங்கை அமரன் 04:36
4. "தேவன் சபையிலே"  கல்யாண் 04:13
5. "குட்டி ஒன்னு"  சாய்பாபா 04:38

வரவேற்பு[தொகு]

இத்திரைப்படம் 32வது தேசியத் திரைப்பட விழாவில் அறிமுக இயக்குநருக்கான விருதினை பெற்றது.[10] 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய திரைப்பட இயக்குனர்களுக்கான திரைப்பட விழாவில் "மீண்டும் ஒரு காதல் கதை"யை போன்ற புத்திசாலித்தனமான் கதையை எடுக்கக்கூடிய அற்புதமான கலையை பிரதாப் போத்தன் கொண்டுள்ளார் என பாரட்டப்பட்டார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dhananjayan 2014, ப. 282.
  2. ரசிகா (17 August 2018). "இயக்குநரின் குரல்: ஜனகராஜைக் கண்டுபிடிக்க சி.ஐ.டி.யாக மாறினேன்!". The Hindu Tamil. https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24707155.ece. 
  3. Shiva Kumar, S. (3 July 1987). "Resurrection". இந்தியன் எக்சுபிரசு: p. 12. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870703&printsec=frontpage&hl=en. 
  4. "பிரதாப் போத்தன் 100 - ஸ்பெஷல் ஸ்டோரி!" (in ta). தினமலர். 17 March 2014 இம் மூலத்தில் இருந்து 15 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181215041218/http://cinema.dinamalar.com/cinema-news/17615/special-report/Prathap-Pothan-100---Special-Report.htm. 
  5. 5.0 5.1 Elias, Eshther (5 April 2014). "The comeback man". தி இந்து. https://www.thehindu.com/features/metroplus/the-comeback-man/article5871642.ece. 
  6. Ramesh, Deepika (6 January 2015). "K. Rajeshwar Interview: Future Perfect". Silverscreen.in. Archived from the original on 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2015.
  7. Umashanker, Sudha (19 November 2001). "Lens view of a life". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 ஆகஸ்ட் 2002 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020815054423/http://thehindu.com/thehindu/mp/2001/11/19/stories/2001111900150200.htm. 
  8. "Heroines who fell for their directors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 15 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Meendum Oru Kaathal Kathai (1985)". Raaga.com. Archived from the original on 25 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  10. "32nd National Film Award" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 December 2016.{{cite web}}: CS1 maint: url-status (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  11. Indian Cinema. திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. 1991. பக். 17. https://books.google.co.in/books?id=zHF1AAAAIAAJ&q=Meendum+Oru+Kadhal+Kathai&dq=Meendum+Oru+Kadhal+Kathai&hl=en&sa=X&ved=0ahUKEwiCwu6q-aDfAhXSbSsKHZG6CpcQ6AEISTAF.