கார்கி (திரைப்படம்)
கார்கி | |
---|---|
இயக்கம் | கௌதம் இராமச்சந்திரன் |
தயாரிப்பு | இரவிச்சந்திரன் இராமச்சந்திரன் தாமஸ் ஜார்ஜ் ஐஸ்வர்யா லட்சுமி கௌதம் இராமச்சந்திரன் |
கதை | அரிஅரன் ராசு கௌதம் இராமச்சந்திரன் |
இசை | கோவிந்த் வசந்தா |
நடிப்பு | சாய் பல்லவி |
ஒளிப்பதிவு | ஸ்ரையந்தி பிரேம்கிருஷ்ணா அக்காட்டு |
படத்தொகுப்பு | ஷபீக் முகமது அலி |
கலையகம் | Blacky, Genie & My Left Foot Productions |
விநியோகம் | சக்தி பிலிம் பேக்டரி 2 டி எண்டர்டெய்ன்மென்ட் Paramvah Studios |
வெளியீடு | சூலை 15, 2022 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கார்கி என்பது அரிஅரன் ராசூ & கௌதம் ராமச்சந்திரன் ஆகியோரால் எழுதப்பட்டு 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் சட்ட நாடகத் திரைப்படமாகும், இது கௌதம் ராமச்சந்திரனால் இயக்கப்பட்டது, பிளாக்கி, செனி & மை லெஃப்ட் ஃபுட் புரொடக்சன் தயாரிப்பில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்.[1][2][3] கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை சிரேயந்தியும் பிரேம்கிருட்டிணா அக்காதும் படத்தொகுப்பை சபீக் முகமது அலி ஆகியோரும் செய்துள்ளனர். கார்கி 15 சூலை 2022 அன்று திரையரங்குகளில் வெளியானது.[4][5]
கதை
[தொகு]கார்கி ( சாய் பல்லவி ) ஒரு பள்ளி ஆசிரியை, பணத்தேவைக்கு சிரமப்படும் அவரது குடும்பத்தில் அவரது தங்கை அசரா நடுநிலைப் பள்ளியில் படிக்கிறார், தந்தை பிரம்மானந்தா ( ஆர்.எஸ். சிவாஜி ) ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் காவலாளியாகவும் தாய் வீட்டில் அரிசி மாவு விற்றும் பிழைப்பு நடத்துகின்றனர். . ஒரு குழந்தையைத் தாக்கியதாக அவரது அப்பா மேலும் 4 ஆண்களுடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டபோது அவர்களின் வாழ்க்கை சிக்கலடைகிறது. கார்கி தன் அப்பாவை நிரபராதி என்பதை நிரூபிப்பதில் உறுதியுடன் இருக்கிறார், ஒரு வக்கிரமான ஆசிரியரிடமிருந்து குழந்தையாக இருந்து அவளைப் பாதுகாத்து, அத்தகைய தீமைக்கு எதிராக நிற்க அவளை ஊக்குவிக்கிறார், அதனால் அவர் இவரின் முன்மாதிரி நாயகனாக திகழ்கிறார்.
இக்குற்றச்சாட்டால் பொது மக்கள் இவர்களை வெறுக்கின்றனர், குடும்ப நண்பரான வெற்றிகரமான வழக்கறிஞராலும் ( ஜெயபிரகாஷ் ) அவர்கள் கைவிடப்படுகிறார்கள். ஆனால், அவரது உதவியாளரும், சொல்லிக்கொள்ளும் படி இல்லாத வழக்கறிஞருமான இந்திரன் கலியபெருமாள் ( காளி வெங்கட் ), அவர் இழப்பதற்கு எந்த நற்பெயரும் இல்லாததால், அவர்கள் சார்பில் வாதாட ஒப்புக்கொள்கிறார். விசாரணையில், விசாரணை அதிகாரியை விசாரிக்கும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதிக அளவிலான பார்பிட்யூரேட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதை இந்திரன் கண்டுபிடிக்கிறார், இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் (பிரம்மானந்தாவை குற்றவாளி என அடையாளம் காட்டுவது) ஏற்றுக்கொள்ள முடியாதது என்கிறார்.
மேலும், இந்திரன் பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பாவை சந்திந்தித்த பொழுது அவர் தான் பிரம்மானந்தாவை (அவரது குற்றத்தில் உறுதியாக இருந்தார்) தன் மகளை அடையாளம் காட்டச்சொன்னார் என்பது தெரிகிறது, ஏனெனில் அவள் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் இருந்தாள். இவை அனைத்தும் ஆதாரங்களை கேள்விக்குள்ளாக்குறள் ஆக்கியதான் காரணமாக பிரம்மானந்தாவுக்கு நிபந்தனை பிணை பெற உதவியது.
குற்றம் நடந்த நாளில் நாள் முழுவதும் வீட்டில் இருந்ததாக முன்னர் கூறிய அவளது அப்பாவின் சக ஊழியர் ( லிவிங்ஸ்டன் ) கவனக்குறைவாக, குடி மயக்கத்தில், உண்மையில் குழந்தை அங்கே கிடப்பதை முதலில் கண்டுபிடித்து, பிரம்மானந்தாவை எச்சரித்ததை அறியாமல் வெளிப்படுத்தினார்., அந்த நேரத்தில் தான் குடித்திருந்ததாக தன் அப்பாவின் கூற்றுகளை கார்கி சந்தேகிக்கத் தொடங்குகிறாள். மீண்டும் குழந்தையைச் சந்தித்து 5வது குற்றவாளியின் படத்தைக் காட்டி தன் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறாள்.
குழந்தை அவரை அடையாளம் கண்டுகொண்டபோது, பிரம்மானந்தா உண்மையில் குற்றவாளி என்பது தெரியவந்தது, இது அவரை கைது செய்து தண்டனை பெற வழிவகுத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுடனும் அவளது தந்தையுடனும் சமரசம் செய்து கொண்டு அவளும் அவளது குடும்பமும் வாழ்க்கையை முன் நடத்துகிறது.
நடிகர்கள்
[தொகு]- சாய் பல்லவி - கார்கி
- காளி வெங்கட் - இந்திரன் கலியபெருமாள்
- ஆர். எஸ். சிவாஜி - பிரம்மானந்தம், கார்கியின் தந்தை
- கவிதாலயா கிருஷ்ணன் - அரசு வழக்கறிஞர்
- சரவணன் - சரவணன்
- சுதா எஸ் - நீதிபதி
- பிரதாப் - எஸ்.ஐ. பென்னிக்ஸ் ஜெயராஜ்
- ராஜலட்சுமி பி - கார்கியின் தாய்
- லிவிங்ஸ்டன் - சாண்ட்ராவின் தந்தை
- ஐஸ்வர்யா லட்சுமி - அகல்யா
- காலேஷ் ராமானந்த் - பழனி
- ஜெயபிரகாஷ் - பானுபிரகாஷ்
- ரெஜின் ரோஸ் - சரவணனின் உறவினர்
- நக்கலைட்ஸ் தனம் - சரவணனின் உறவினர்
- பிகில் சிவா - இளம் கார்கியின் ஆசிரியர்
- பிரஜுனா சாரா - அக்சரா, கார்கியின் தங்கை
வெளியீடு
[தொகு]கார்கி 2022 சூலை 15 அன்று தமிழுடன் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[6][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PICS: Sai Pallavi looks scintillating in a saree during Gargi promotions; Thanks presenter Suriya". PINKVILLA (in ஆங்கிலம்). 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.
- ↑ "Aishwarya Lekshmi breaks out on stage at the 'Gargi' press meet - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.
- ↑ "Aishwarya Lekshmi Breaks Down At 'Gargi' Press Meet" (in ஆங்கிலம்). 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.
- ↑ 4.0 4.1 Today, Telangana (2022-07-03). "Sai Pallavi-starrer 'Gargi' to release on July 15". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.
- ↑ 5.0 5.1 "Sai Pallavi-starrer 'Gargi' set for worldwide release on July 15". English.Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-08.
- ↑ "Watch: Trailer of Sai Pallavi's Gargi hints at legal drama". The News Minute (in ஆங்கிலம்). 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-07.