நையோபியம் மோனாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நையோபியம் மோனாக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நையோபியம்(II) ஆக்சைடு, கொலம்பியம் மோனாக்சைடு, நையோபியம் ஓராக்சைடு
இனங்காட்டிகள்
12034-57-0 Y
ChemSpider 74751 Y
InChI
  • InChI=1S/Nb.O Y
    Key: BFRGSJVXBIWTCF-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82838
SMILES
  • O=[Nb]
பண்புகள்
NbO
வாய்ப்பாட்டு எடை 108.906 கி/மோல்
தோற்றம் திண்மம், சாம்பல் நிறம்
மணம் மணமற்றது
அடர்த்தி 7.30 கி.செ.மீ3
உருகுநிலை 1,940 °C (3,520 °F; 2,210 K)
கரைதிறன் ஐதரோகுளோரிக் அமிலத்தில் குறைவாகக் கரைகிறது
நைட்ரிக் அமிலத்தில் கரையாது.
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 41.25 யூ/மோல் கெல்வின்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

நையோபியம் மோனாக்சைடு (Niobium monoxide) என்பது NbO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். நையோபியம் ஓராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். சாம்பல் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் உலோகம் சார்ந்த கடத்தும் தண்மையைக் கொண்டுள்ளது[1].

கட்டமைப்பு[தொகு]

பாறை உப்பில் இருப்பதைப் போல வழக்கத்திற்கு மாறான கனசதுர கட்டமைப்பை நையோபியம் மோனாக்சைடு ஏற்கிறது. ஆனால், இங்கு நையோபியம் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் இரண்டும் நான்கு ஒருங்கிணைவு சதுரத்தளத்தில் உள்ளன [1]. மேலும், நையோபியம் மையங்கள் எண்முக வடிவில் அடுக்கப்பட்டுள்ளன, கீழ்நிலை நையோபியம் ஆலைடுகளில் காணப்படும் எண்முக நையோபியம் தொகுதிகள் போன்ற கட்டமைப்பு ஒற்றுமையையும் இது கொண்டுள்ளது [1]. நையோபியம் மோனாக்சைடில் Nb-Nb பிணைப்பின் பிணைப்பு நீளம் 298 பைக்கோ மீட்டர்களாகும். உலோக மையங்களுக்கு இடையில் வலிமையாகவும் கிட்டத்தட்ட சகப்பிணைப்பும் உள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது [2].

1.38 கெல்வின் வெப்பநிலையில் இச்சேர்மம் ஒரு மீக்கடத்தியாகச் செயல்படுகிறது. NbO மணிகளை சூழ்ந்து Nb2O5 அடுக்கு உருவாகியுள்ள மின்தேக்கிகளில் மின்காப்புப் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது [3][4][5].

தயாரிப்பு[தொகு]

நையோபியம் பென்டாக்சைடை ஐதரசன் வாயுவுடன் வினைபுரியச் செய்து நையோபியம் மோனாக்சைடு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக ஒத்தவிகிதசமயிணைப்பு முறை வினையில் இது தயாரிக்கப்படுகிறது [1] More typically, it is prepared by comproportionation:[6]

Nb2O5 + 3 Nb → 5 NbO.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Electronic band structure and bonding in Nb3O3, Physical Review B (Condensed Matter), 48, 23, 1993, 16986-16991 எஆசு:10.1103/PhysRevB.48.16986
  3. C. Nico et al. Sintered NbO powders for electronic device applications The Journal of Physical Chemistry C 2011, Volume 115(11), Pages: 4879–4886 எஆசு:10.1021/jp110672u
  4. C. Nico et al. NbO/Nb2O5 core–shells by thermal oxidation Journal of the European Ceramic Society 2013, Volume 33(15-16), Pages: 3077–3083 எஆசு:10.1016/j.jeurceramsoc.2013.06.020
  5. Kazumi Naito, Isao Kabe,(Showa Denko K.K.) Production method of solid electrolytic capacitor US patent 6882522(2005)
  6. T. B. Reed, E. R. Pollard "Niobium Monoxide" Inorg. Synth. 1995, vol. 30, pp. 108–110. எஆசு:10.1002/9780470132616.ch22

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபியம்_மோனாக்சைடு&oldid=2557410" இலிருந்து மீள்விக்கப்பட்டது